வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களங்களில் சேவையாற்றும் உத்தியோகப் பற்றுள்ளவர்கள் கடமைகளில் மிகுந்த அர்ப்பணிப்புடன் தமது அலுவலகங்களில் பணியாற்றுகின்றனர். இரையைத் தேடிச் செல்லும் கொடிய விலங்குகளையும்‚ அவற்றிலிருந்து தப்பித்து விரண்டோடும் இரையாகக் கூடிய விலங்குகளும் அடங்கிய வன விலங்குகளின் அபூர்வ நடத்தைகளுடன் கூடிய கற்பனையான வனத்தைப் பாதுகாப்பதற்குத் தோள் கொடுக்கும் வன உத்தியோகத்தர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட சந்தர்ப்பங்கள் பெருமளவு உள்ளன. அவ்வாறான சம்பவங்கள் பற்றி பின்னொரு நாளில் அறிவிப்பதாயின்‚இவ்வாறான சந்தர்ப்பங்களில் உத்தியோகப் பற்றுள்ளவர்கள் தம் உயிரைக் காப்பாற்றிக் கொள்வது அவசியமானதாகும். அது தத்தமது ஆற்றல்‚ பயிற்சி மற்றும் அனுபவம் என்பவற்றில் தங்கியுள்ளது.
அவ்வாறே, கவர்ச்சி மிகு காடானது, வளங்ளைச் சூறையாடுபவர்களையும், வேட்டையாடுபவர்களையும் இழுத்தெடுப்பது துரதிஷ்டவசமான அம்சமாகும். அதன்போது, வன உத்தியோகத்தர்கள் அவ்வாறானவர்களுடன் மோதும் சந்தர்ப்பங்களும் குறைவானதல்ல.
அவ்வாறான சந்தர்ப்பங்களுக்கு முகம் கொடுத்து அர்ப்பணிப்புடன் செயலாற்றிய வனப் பற்றுள்ள உத்தியோகத்தர்களுக்கு கௌரவமும் தைரியமும் ஆக அவர்கள் முகம் கொடுத்த பயங்கரமான சந்தர்ப்பங்களில் ஒரு துளியைப் பற்றி எடுத்துரைத்து, அவர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பு பற்றி வாசகர்களான உங்களை அறிவுறுத்துதல் இதன் நோக்கமாகும்.
எனது நினைவின் பிரகாரம் 1984 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இந்நிகழ்வு நடைபெற்றது. யானைகளைத் தேடிப் பிடிக்கும் நடவடிக்கையொன்று கல்கமுவ ரெஸ்வெஹெர எனும் பிரதேசத்தில் இடம்பெற்றது. யானைகளைப் பிடிப்பது என்பது, யானைகளைப் பிடித்து வாகனமொன்றில் ஏற்றி கொன்று சென்று விடுவிப்பதாகும். இதுவரை இச்சேவைக்கு இணைந்து இரண்டு வருடங்களாகும். நான் யானை விரட்டும் நடவடிக்கைக்குச் சம்பந்தப்பட்டு இருந்தாலும், யானைகளைப் பிடிக்கும் நடவடிக்கைகளுக்குச் சம்பந்தப்பட்டிருக்கவில்லை.
ரெஸ்வெஹெர கஹல்ல பல்லெகெலே ஒதுக்கப்பட்ட வனத்தில் கன்னொருவ வாவிக் கரையில் யானை பிடிக்க வேண்டியிருந்தது. அக்காலத்தில் இப்பிரதேசம் ஒதுக்கப்பட்ட வனமாகப் பெயரிடப்பட்டிருக்கவில்லை. மகாவலிக்கு உரித்தான சரணாலயமாக இருந்தது.
நாம் பிடிக்கச் சென்ற யானை மூன்று, நான்கு மனிதர்களைக் கொன்று, வீடுகளை உடைத்த, பிரதேசமொன்றையேஅழித்த கொடிய யானையொன்றாகும். யானை பிடிக்கச் சென்ற குழுவில் என்னுடன் இருபது பேர் இருந்தனர். எமது குழுவில் பஹமன் மன்ஸுர் எனும் பெயருடைய அனுபவம் வாய்ந்த அதிகாரிகளும் இருந்தனர்.
அந்நாளில் யானை கிராமமொன்றுக்குச் சென்று பயிர்களை அழித்து காட்டுக்குள் நுழைந்திருந்தது. நாம் யானையின் அடிச்சுவற்றைப் பின் தொடர்ந்து சென்றோம். அப்போது யானைக்கு மதம் பிடித்திருந்தது என நாம் அறிந்திருந்தோம். மதம் பிடிக்கும் காலத்தில் யானை மிகவும் பயங்கரமானது.
நாம் யானையின் அடிச்சுவற்றைப் பின் தொடர்ந்து காட்டுக்குள் நுழைந்து விட்டோம். காட்டுக்குள் நுழைந்து சுமார் அரை கிலோ மீற்றர் செல்லும் போது யானை ஒன்றல்ல யானைக் கூட்டமொன்று இருப்பதை அறிய முடிந்தது. அப்பக்கம் இருண்ட காடொன்றாக இருந்தமையால் எதனையும் தெளிவாகக் காண முடியவில்லை. திடீரென மன்ஸுர் என்பவர் “அதோ யானை இருக்கின்றது” எனக் கூறினார்.
இதோ யானை ஐம்பது, அறுபது மீற்றர் தூரத்திலிருந்து எமக்கு முன்னே ஓடி வருகிறது. ஏனெனில் காற்று அசைவு மாறியிருப்பதால் நாம் இருப்பதை யானை கண்டுள்ளது. எம்மோடு இருந்தவர்கள் யானை வெடி போட்டார்கள். என்றாலும் யானை நிற்கவில்லை. யானை முன்னே ஓடி வந்தது. நாம் யானை விரட்டும் நடவடிக்கைக்குச் சென்றிருந்த போது ஒவ்வொருவருக்கும் இடையில் பத்து, பதினைந்து அடி இடைவெளியை வைத்துக் கொண்டோம்.
நான்தான் முன்னால் இருந்தேன். ஓடுவதற்கு எனக்கு இடமிருக்கவில்லை. “பாய்ந்து ஓடுங்கள், பாய்ந்து ஓடுங்கள்” என எல்லோரும் கூறினார்கள். பாய்வதற்கும் இடமிருக்கவில்லை. எனக்கு மரண பீதி வந்தது.
நான் இருந்த இடத்துக்கு அருகில் விழுந்த பெரிய பாலை மரம் ஒன்றிருந்தது. திடீரென நான் பாலை மரத்துக்கு அருகில் கீழே படுத்துக்கொண்டேன். ஓடி வந்த யானை எனது மேலால் பாய்ந்தது போன்று எனக்கு விளங்கிற்று. பெருங் காற்றொன்று அடிப்பது போன்று யானையின் உடம்பில் ஒட்டியிருந்த மண் எனது உடம்பில் விழுந்தது. அந்நேரத்தில் நான் கை நீளமான சேட் ஒன்றை அணிந்திருந்தேன். எனது சேட்டின் ஒரு பகுதி யானைக்கு மிதிபட்டு இறுகுவது போன்று எனக்குத் தோன்றியது. மயிரிழையில் எனது உயிர் பிழைத்தது.
அடுத்த கணத்தில் “ஐயோ, சார் பிடிபட்டார் போலும்” என்று அனைவரும் கூறுவது எனக்குக் கேட்டது. ஆயினும் உயிர் தப்புவதற்கு நான் அதிஷ்டக்காரனாகி விட்டேன். நான் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்தேன்.
மறுநாளே, எங்களுக்கு யானைக்குத் தடுப்பூசி போடக் கிடைத்தது.
இருபது வயதிலும் குறைந்த இளைஞராக 1981 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம் தர வன பாதுகாப்பாளராக வனஜீவராசிகள் திணைக்களத்தில் இணைந்த சஹன்ஜித் வேரகம அவர்கள் தற்போது 2 ஆம் தர மற்றும் 1 ஆம் தர வினைத்திறன் தடைகாண் பரீட்சையைத் தாண்டி அனுராதபுர வலய உதவிப் பணிப்பாளராக பணி புரிந்தார்.
மனைவியையும், மகளொருவரையும், இரு மகன்களையும் கொண்ட வேரகம அவர்களின் அன்பான குடும்பம் கண்டி மாவட்டத்தில் கலகெதர பிரதேசத்தில் வாழ்வதோடு அவர் அனுராதபுரஉத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலிருந்து தம் கடமைகளை நிறைவேற்றுகிறார்.
இலங்கையில் வனவிலங்குகள் பாதுகாப்புப் பிரதேசங்கள் 1938 ஆம் ஆண்டில் வன விலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வனஜீவராசிகள் பாதுகாப்பு ஒதுக்கம் சில பகுதிகளாக அமைந்துள்ளன.
1. தேசிய பூங்கா
2. அதியுயர் இயற்கை பாதுகாப்பு ஒதுக்கம்
3. இயற்கை ஒதுக்கம்
4. சரணாலயம்
இதில் முதல் மூன்று பகுதிகளும் அரச காணிகளுள் மாத்திரம் மாத்திரம் உள்ளடக்கப்பட்டுள்ளதோடு அவை “தேசிய பாதுகாப்பு பூமி” ஆக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சரணாலயம் ஒன்றுக்கு அரசின் காணியும் தனியார் எனும் அளவில் நூற்றுக்கு பதினான்கு “வனஜீவிகள் பாதுகாப்பு ஒதுக்கம்” எனப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பாதுகாப்பு ஒதுக்கப் பிரதேசத்தில பொதுமக்களுக்கு மிகவும் சமீபமானது “தேசிய பூங்கா” ஆகும். அதனில் உயிர்வாழும் விலங்குகளைப் பார்வையிட்டு மகிழ்வதற்குப் பொதுமக்களுக்குத் தேவையான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் தேசிய வனப் பூங்காக்கள் இருபத்தாறு ஆகும். அரச காணிகள் மாத்திரம் உள்ளடக்கப்பட்டுள்ள வில்பத்து பூங்காவும் “தேசிய பாதுகாப்பு பூமியொன்று” எனக் கவனிக்கப்படுகின்றது. கொழும்பிலிருந்து வில்பத்து தேசிய பூங்காவிற்கான தூரம் 180 கி.மீ ஆகும்.
பூங்காவின் நுழைவாயில்
பூங்காவின் தலைமையகம்
பயிர்ச்செய்கை செய்ய முடியாத சதுப்பு நிலம் ‘ வில்லுவ’ ஆகும். உயர்ந்த மதில் போன்று அமைந்துள்ள மத்தி தாழ்வான இந்த வில்லுவ பிரதேசம் மழை காலத்தில் நீர் நிறைந்து காணப்படும்.
‘ பத்துவ’ என்பது பல ஊர்களயும், சில துலான்களையும், சில பிரிவுகளும் ஒன்றாக அமையும் எல்லையாகும். அதன்படி, பல ஏரிகள் சேர்ந்து அமைந்திருப்பதால் இப்பகுதிக்கு “வில்பத்துவ” என்னும் பெயர் உண்டாயிற்று.
கால வில்லு
நிர்வாக வசதிகளுக்காக வில்பத்து இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
I வில்பத்து தேசிய பூங்கா
IIவில்பத்து வட சரணாலயம் என்பனவாகும்.
வில்பத்துதேசிய பூங்காவின் அளவு 131667.1 ஹெக்டயார் ஆகும். வில்பத்து வட சரணாலயத்துக்கு அறுநூற்று இருபத்து நான்கு ஹெக்டயார் ஆகும்.
இந்த நிலங்கள் பொதுவாக புல்வெளிகளாகும். காடுகள்,மணற்றரைகள், நீர்த்தேக்கங்கள், ஏரிகளைக் கொண்ட காடாகும். ஜனவரி-பெப்ரவரி மாதங்களில் உலர் காலநிலையொன்று காணப்படுவதோடு, மார்ச், ஏப்ரல் வரை பருவ மழை கிடைக்கும். மே மாதம் முதல் செப்டெம்பர் ஆரம்பம் வரை ஈரமான வறண்ட காலநிலை தொடங்கி நீண்ட கோடை காலம் காணப்படும். பின்னர் செப்டெம்பர், டிசம்பர் வரை முழு காலத்திலும் மழை பெய்யும். சராசரி வருடாந்த வெப்பநிலை 27 பாகை செல்ஸியஸ் ஆகும். சராசரி வருடாந்த மழைவீழ்ச்சி 1000 மில்லி மீற்றர் ஆகும்.
வில்பத்து பூங்கா சுமார் நாற்பது ஏரிகளை உரித்தாகக் கொண்டுள்ளது. இவற்றுள் பெரும்பாலானவை நன்னீரைக் கொண்டவை.மேற்பரப்புப் பகுதி கடலுடன் தொடர்பில்லாவிட்டாலும் இவற்றுள் சில உவர் தன்மை கொண்டன. வெவ்வேறு வகையான நீர்ப்பறவைகளும் பாலூட்டிகளும் ஒன்று கூடியிருக்கும் ஏரியைச் சுற்றி அமைந்துள்ள பரந்த சாய்வான கடற்கரைகள் மதிப்பு மிக்க “நீர்ப் பிடிப்புப் பகுதிகள்” என்று அழைக்கப்படுகின்றன. இவை பிரதான ஏரிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளன.
வில்பத்து தேசிய பூங்காவில் உள்ள சதுப்பு நிலங்கள் அவ்வப்போது வறண்டு போகும் ஆறுகளிலிருந்து பிரிக்கப்பட்ட வழிந்தோடாத சமவெளியைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. இங்கு கடற்கரையிலிருந்து சுமார் இருபத்து நான்கு கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் காணப்படும் சுண்ணாம்புக் கல்லிலிருந்து வேறுபட்டது என அடையாளம் காணப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளின் மேற்குக் கரைகளும் கடல் மணலால் ஆனவை என்பதோடு அவை வறண்ட பாறைகளால் நிறைந்துள்ளன. பலகத்துறைக்கும் குதிரைமலைக்கும் இடையிலான மணல் மற்றும் சிவப்பு மண் பாறைகளும் இலங்கயின் பிற பகுதிகளில் எளிதில் கிடைக்காதவை. இது மத்தியபிரதேசம் இயற்கை நீரூற்றுக்கள் மற்றும் ஏரிகளைக் கொண்டுள்ளது.
மேற்குக் கரையில் உள்ள மண் மிகவும் வளமற்றதாகவும் தரிசாகவும் சிவப்பு ,மஞ்சள் அம்சங்களையும் கொண்டதாகும். இது கரிம மற்றும் கனியப் பொருட்கள் இல்லாதது. கிழக்குப் பிரதேசத்தின் மண்ணில் தாதுக்கள் நிறைந்துள்ளன. அவை சிவப்பு மற்றும் கபில நிறமாக உள்ளன.
குதிரைமலை முனை
புவியியல் ரீதியாக, இது அனுராதபுரத்திலிருந்து 30 கி.மீ மேற்காக, நீண்ட வடமேற்குக் கரையில் அமைந்துள்ளது. அவ்வாறே வடமேற்கு மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு இடையிலான எல்லைகளைக் கடந்து நீண்டுள்ளது. இது வடக்கே மோதரகம் ஆறு, தெற்கே கலா ஓயா, மேற்கில் போர்த்துக்கேயர் மற்றும் ஒல்லாந்த விரிகுடாக்கள் மற்றும் திறந்த கடல் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது.
இச்சரணாலயம் நாட்டின் வடக்குப் பகுதியில் கடற்கரையிலிருந்து உள்நாட்டில் முழுமையாக அமைந்துள்ளது. அது தேசிய பூங்காவை அண்மித்த மோதரகம் ஆறு மூலம் வேறாக்கப்பட்டுள்ளது.
வில்பத்து இலங்கையர்களின் வரலாற்று நிலமாகக் கணிக்கப்படுகின்றது. அது இளவரசர் விஜயன் வில்பத்துவின் ஓர் எல்லையான தம்பபண்ணி என்னும் குதிரைமலை துறைமுகத்தில் தற்செயலாகத் தரையிறங்கியதன் ஊடாகவே ஆகும். அதன்படி தீவின் குடியிருப்புக்களின் தோற்றம் மட்டுமல்ல, அரச கலாச்சாரத்தின் அடித்தளம் விழுந்திருப்பதும் இப்பகுதியிலாக இருக்கலாம். அனுராதபுரம், புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு உரித்தான வில்பத்துவில் பண்டைய இடிபாடுகள், புனை மற்றும் நாட்டுப் புறக் கதைகள் என்பன நிறைந்துள்ளன.
குவேனியின் அரண்மனையின் இடிபாடுகள்
புராணங்களின்படி, இளவரசர் விஜயனை இழந்த குவேனியின் அரண்மனையின் இடிபாடுகளை இன்று “காளி வில்லு” எனும் பகுதியில் காணலாம். வணக்கத்துக்குரிய எல்லாவல மேதான்ந்த தேரோ அவர்கள் எழுதிய புத்தகத்தின்படி,இன்றைக்கு இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு துட்டகைமுனு மன்னரின் மகன் இளவரசர் சாலியவும் அவருடைய மனைவியுமான அசோகமாலாவும் வாழ்ந்ததாகக் கூறப்படும் அரச மாளிகை, நீர்த்தடாகம், அரச சபை மண்டபம் என்பவற்றின் இடிபாடுகளும் இன்னும் மரதன்மடுவ ஈசான மூலைப் பகுதியில் அமைந்திருக்கும் வீரன்கொடயும் கல்பெந்தி திரய பகுதிகளுக்கு உரித்தானவை. அதாவது சுமார் கி.மு. 161-131 ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்ட விலதாகொட இராசதானியும் அமைந்திருப்பது இப்பிரதேசத்திலாகும். புத்தள- அனுராதபுர பாதையில் சுமார் 17மைல் தூரம் சென்ற போது அகப்படும் அளுத்கம சந்தியில் வில்பத்து சரணாலயத்தின் எல்லையில் இராசதானி அமைந்துள்ளது. இளவரசர் சாலியவினால் நிர்மாணிக்கப்பட்ட “விலதாகொட” விகாரை உட்பட பல வரலாற்று பௌத்த சின்னங்கள் இங்கு காணப்படுவதால் இது சிறப்பு மிக்க ஓர் இடமாகும். மேலும் இப்பிரதேசத்தில் கற்றூண்கள், வெவ்வேறு அளவிலான குகைகள், குகை தரவுத் தளங்கள், பிராமிய எழுத்துக்களிலான ஷீலா கல்வெட்டுக்கள் என்பவற்றைக் காணக் கூடியதாக உள்ளன.
அவ்வாறே பொம்பரிப்புப் பிரதேசமும் வரலாற்று சிறப்பு மிக்க ஓர் இடமாகும். இப்பிரதேசத்தில் அகழ்வுகளை மேற்கொள்வதற்காகத் தேர்ந்தெடுப்பதில் தாக்கம் செலுத்திய முக்கிய காரணிகளாவன,
I இது இந்தியாவிற்கு மிக அண்மையில் அமைந்திருப்பதனாலும் அதனால் துறைமுகம் மற்றும் வட இந்திய கரையிலிருந்து அவ்விரு பகுதிகளுக்குமிடையில் அடிக்கடி இடம்பெற்ற கலாச்சார மற்றும் வியாபாரத் தொடர்புகளினாலும் இத்தீவின் கலாச்சாரத்தில் அவ்வவ் காலப் பகுதிகளுக்குள் இடம்பெற்றவை தொடர்பான நம்பிக்கையான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக மற்றும்
II விவசாய சமூகங்களின் இடப்பெயர்வு மற்றும் குடியேற்றத்திற்கு அடிக்கடி வழிவகுத்த சுற்றுச் சூழல் விஞ்ஞானத்துக்கு சமமாவை.
இப்பிரதேசமானது, தீவின் வட பகுதியின் மேற்குக் கடற் கரைக்கு அருகிலுள்ள பிராக் வரலாற்றுக்கு முந்தைய கல்லறை என்று அழைக்கப்படுகின்றது. இது வறண்ட வலயத்தில் அமைந்துள்ள ஒரே பாதுகாப்பான இடமாகும். புத்தளத்திலிருந்து இளவன்குளம் வரை செல்லும் வீதி ஊடாகவும் இவ்விடத்தை அடைய முடியும். இங்கு தெற்கே கலா ஓயாவும் கிழக்கில் பண்டைய கல்கே விகாரையும் உள்ளன. பொம்பரிப்புவில் பெரும்பாலான கல்லறைகள் பரந்த அளவிலுள்ளன. இவ்வாறு செய்யும் ஆராய்ச்சிகளின் மூலம் அக்கால மக்களின் தொழிநுட்ப அறிவு பற்றிய குறித்த சில கருத்துக்களைப் பெற முடியும்.
மேலே குறிப்பிட்ட தகவல்களின்படி, பல முக்கியமான வரலாற்றுப் பதிவுகள் மற்றும் நிதிச் சின்னக் கல்வெட்டுக்களும், புராதன துறைகள், நினைவுச் சின்னங்கள் மற்றும் மனித கலாச்சாரப் பொருட்கள் நிறைய வில்பத்துப் பகுதியில் மறைந்திருப்தைக் காணலாம். அதனால்,வில்பத்து தேசிய பூங்காவானது, இலங்கையின் பழமையான மற்றும் மிக முக்கியமான பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாகும்.
மேலும் இங்கு தாவரங்கள் மற்றும் விலங்குகள் பற்றிப் பார்த்தால் மேற்குப் பகுதிகளில் காணப்படும் காடுகள், புதர்கள், புல்வெளிகள், தோட்டங்களின் மத்தியில் காணப்படும் ஏரிகள், மற்றும் வடிகாலமைப்பு காரணமாக இவ்வாறான சூழல்களில் பல்லுயிர்களும் சூழலியல் விஞ்ஞான ரீதியில் மதிப்பு வாய்ந்தவை. இங்கு பாலூட்டிகள் இனங்கள் 31 அடையாளம் காணப்பட்டுள்ளதோடு,தேனீக்களும்வௌவால்களும் விசேடமாக வாழ்கின்றன.
இங்கு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் பாலூட்டிகள் விசேடமாக யானை, கரடி, சிறுத்தை, காட்டு மாடுகள் என்பன அடங்கும். தாவர உண்ணிகளில் குறைந்த எண்ணிக்கையிலான அடர்த்தியைக் காட்டுவது ‘யானை’ என்பதுடன் முதலிடத்தில் கருதப்படுவது ‘புள்ளி மான்’ ஆகும். இது எண்ணிக்கையில் 3500 ஆக உள்ளது. இதற்கிடையில் தேசிய பூங்காவின் சரணாலய நிர்வாகத்தின் கீழ், புல் வளர்த்தல் போன்றவற்றால் யானைகளின் வாழ்விடங்கள் அந்த விலங்குகளுக்கு ஏற்றதாக மாற்ற அண்மையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தூங்கிக் கொண்டிருக்கும் ஓர் புலி (panther pardns kotiya)
கரடி (melursus ursinus)
மரை (Rusa unicolor)
இப்பகுதியிலுள்ள தாவரங்களைப் பற்றிக் கருத்தில் கொண்டால், கடலோரத்திற்கு அருகில் அமைந்துள்ள கடலோரப் புல்வெளிகள், தாழ்நிலம் மற்றும் கடலோரத் தாவரங்கள் என மூன்று வகையான தாவரங்கள் உள்ளன. பூங்காவில் சுமார் 73% ஆன காடுகள் அல்லது புட்களைக் கொண்ட காடுகளாகவோ இருப்பதோடு, மீதமுள்ளவை திறந்த வாழ்விடமாக உள்ளன. 5-10 கி.மீ. க்கும் இடையிலான உயரம் குறைந்த கடற்கரை இருப்பதோடு, உள்நாட்டில் மழைக் காடுகள் காணப்படுகின்றன.
பூங்காவில் மேற்குப் பகுதியில் காணப்படும் முக்கிய தாவர இனங்களாக காட்டு ஈச்சம், உங்சி, தெல் கதுரு, கோலங், வேவரண, ஹல்மில்ல, முதிரை, லோல்லு, கழுவர, தலுக், வீர, பாலை, கோன், மஹதன், மில்ல, கிரிகோன் ஆகியவை காணப்படுவதோடு, புதர்களில் ஹீரஸ்ஸ, தமனிய, பூ கொம்பே, கறிவேப்பிலை, நெல்லி, உல்கெந்த,குகுருமான ஆகியவையும் ,புல் மற்றும் மூலிகைகள் என்பவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட தோர,மயுர புல்,மெல்லிய புல் போன்றவற்றையும் அடையாளம் காண முடியும்.
அத்தகைய அழகிய, வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்ட வில்பத்து பூங்காவானது, கடந்த காலங்களில் இடம்பெற்ற பயங்கரவாத நடவடிக்கைகளாலும், இராணுவக் காரணங்களுக்காகக் கட்டப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளான சாலைகள் காரணமாகவும், திட்டமிடப்பட்ட முறையில் இடம்பெறும் சட்ட விரோதமான முறையில் மரங்களை வெட்டுதல் மற்றும் வேட்டையாடுதல் காரணமாகவும் ஓரளவு சேதமடைந்தது. மேலும் பூங்காவுக்கு தொடர்புடைய கிராமங்களும் விரிவாக்கப்படுவதோடு, பூங்காவின் ஒருங்கிணைப்பு அச்சுறுத்தப்பட்டதுடன், புனர் நிர்மாணிக்கப்பட்ட மகா அந்தரகொல்லேவ மற்றும் மகாவெவ நீர்த்தேக்கங்களில் உள்ள தாக்கம் செலுத்தும் தாவரங்கள் அதிகளவு வனவிலங்குகளுக்குத் தீங்கு விளைவிக்கும்.
மேலும் வில்பத்து தேசிய பூங்கா ஹுணுவில கிராமத்திலுள்ள, பூங்கா தலைமையகத்தால் நிர்வகிக்கப்படுவதுடன், சுற்றுச் சூழல், சுற்றுலா நடவடிக்கைகளும் வெற்றிகரமாகச் செயற்படுத்தப்படுகின்றன.
ஆசிரியர் – டீ .மல்சிங்ஹ, மேலதிக செயலாளர், வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு உதவியாளர்கள்
பூங்கா பற்றிய தகவல்களைத் தொகுத்தவர்- ஹஸினி சரத்சந்திர, பிரதம உத்தியோகத்தர், வன பாதுகாப்புத் திணைக்களம்
தமிழ் மொழிபெயர்ப்பு- ஏ.ஆர்.எப். றிப்னா, அபிவிருத்தி உத்தியோகத்தர், வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு
ஆங்கில மொழிபெயர்ப்பு (ஆவணங்கள்)- அசோக பலிஹவடன, மொழிபெயர்ப்பாளர், வனஜீவராசிகள் மற்றும் வனபாதுகாப்பு அமைச்சு
ஆங்கில மொழிபெயர்ப்பு (கதை)- டீ. மல்சிங்ஹ
இணைய வடிவமைப்பு- என்.ஐகயத்ரி, அபிவிருத்தி உத்தியோகத்தர், வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு
படங்கள்- ரோஹித குணவர்தன,வன பாதுகாப்புத் திணைக்களம்
சிங்கள தட்டச்சும் ஏனைய உதவிகள்- அருணிபலாபத்வல, வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு
Cookie | Duration | Description |
---|---|---|
cookielawinfo-checkbox-analytics | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". |
cookielawinfo-checkbox-functional | 11 months | The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". |
cookielawinfo-checkbox-necessary | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". |
cookielawinfo-checkbox-others | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. |
cookielawinfo-checkbox-performance | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". |
viewed_cookie_policy | 11 months | The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. |