简体中文 ZH-CN English EN Français FR Deutsch DE Italiano IT Português PT සිංහල SI தமிழ் TA
Ministry of Wildlife and Forest Resources Conservation

அத்தியாயம் 4 – யாலா தேசிய பூங்கா

Content Image

தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூடு

நான் 1996 இல் வனஜீவராசிகள் திணைக்களத்தில் வன விலங்கு காவலராக இணைந்தேன். 2007 ஒக்டோபர் பதினைந்தாம் திகதி இச்சம்பவம்  இடம்பெற்றது. அப்போது நான் யால பூங்காவில் முதலாம் தலைமையகத்தில் 2 ஆம் தர வன விலங்கு வட்டார பாதுகாப்பு உத்தயோகத்தராக கடமையாற்றிக் கொண்டிருந்தேன்.​

யால தேசிய பூங்காவானது ஒவ்வொரு வருடமும் ஒன்றரை மாத காலம் செப்டெம்பர் முதலாம் திகதி முதல் ஒக்டோபர் பதினைந்தாம் திகதி வரை கோடை காலத்திற்கு மூப்படுகிறது. அக்காலத்தில் பணியாளர் குழு சட்ட விரோத வேட்டயாளர்களைப் பிடிப்பதற்கு ரோந்து சேவையில் ஈடுபடுகின்றனர். பூங்காவிற்குள் நீர்க் குழிகள், பாதைகள் போன்றவற்றின் பராமரிப்பு வேலைகள் இடம்பெறுகின்றன. உல்லாச விடுதிகளின் திருத்தற் பணிகளும் நடைபெறுகின்றன. உல்லாச விடுதிகளுக்குத் தேவையான பொருட்களும் வழங்கப்படுகின்றன.

2007 ஒக்டோபர் பதினாறாம் திகதி யால பூங்காவைபார்வையாளர்களுக்காக மீண்டும் திறப்பதற்காக இருந்த நாளாகும். 2007 ஒக்டோபர் பதினைந்தாம் திகதி நாம் உல்லாச விடுதிகளுக்குத் தேவையானவற்றை வழங்குவதற்கு பூங்கா தலைமையகத்திலிருந்து புறப்பட்டோம். நாம் ஐந்து பேர் சென்றோம். வன விலங்கு வட்டார பாதுகாப்பு உத்தயோகத்தர் அஸங்க குணவர்தண, வன விலங்கு காவலர் மஹேந்திர கமகே, நிதி உதவியாளர் டீ.ஜே. லக்மால், சாரதி எச்.ஏ.பீ. சந்தன, என்னுடன் இருந்தனர். நாம் 57-1462 எனும் இலக்க டிபென்டர் வாகனத்தில் சென்றோம்.

அன்று மா​லை சாதாரணமாக மழை இருந்தது. நாம் ‘மஹசீலவ’ உல்லாச விடுதிக்குச் சென்றோம்​​. அடுத்து ‘நவ புதவ’ உல்லாச விடுதிக்குப் போனோம். அதன் பின்னர் ‘தல்கஸ்மங்கட’ விடுதிக்குச் சென்றோம்​​. இந்த உல்லாச விடுதிகளுக்கு யால பூங்காவின் உட்புறத்தினூடாகவே​ செல்ல வேண்டியிருந்தது.

வீதியில் ‘தர்ஷன​ வெவ’ என்றழைக்கப்படும் ஓர் ஏரி காணப்படுகிறது. அந்த ஏரிக்கு ‘கொடா பெந்தி வெவ’ என்றும் கூறுவர். அவ்வேரிக்கு அருகில் செல்லும் போது ‘தல்கஸ்மங்கட’ உல்லாச விடுதியை ‘எல்.டீ.டீ.ஈ’* யினர் சுற்றி வளைத்துத் தாக்குகின்றனர்,போக வேண்டாம் எனத் தகவல் கிடைத்தது. அத்துடனே நாம் ஜீப் வண்டியைத் திருப்பிக் கொண்டு மீண்டும் சென்றோம். எனினும் வரும் போதே​‘எல்.டீ.டீ.ஈ’ யினர் சத்தமிட்டுக் கொண்டே மூன்று பக்கங்களிலிருந்தும் துப்பாக்கிச் சூடு நடாத்தத் தொடங்கினர். அதன்போது நேரம் மாலை சுமார் ஆறு மணி இருக்கும். மழை இருளுடன் கூடிய சற்று இருளாகக் காணப்பட்டது. அப்பக்கம் காடு போல் காணப்பட்டது. ‘எல்.டீ.டீ.ஈ’ யினர் பத்து பன்னிரண்டு பேர் இருப்பது போன்று தென்பட்டது. அவர்கள் துப்பாக்கிச் சரமாரி வைத்தனர்.

நாம் துப்பாக்கி வேட்டு பட்டுக் கொண்டே முதலாம் தலைமையகத்துக்கு வேகமாக வந்தோம். அதன் பின்னர் பார்க்கும் போது வாகனத்தை பதிமூன்று துப்பாக்கி வேட்டுக்கள் தாக்கியிருந்தன.

அந்நேரத்தில் ​‘தல்கஸ்மங்கட’ முகாமில் இராணுவ வீரர்கள் எட்டு பேரைக் கொன்று விட்டனர் எனவும் அவர்களின் ஆயுதங்கள் அனைத்தையும் ‘எல்.டீ.டீ.ஈ’ யினர் கடத்திக் கொண்டு சென்று விட்டனர் என ​ எமக்கு அறியக் கிடைத்தது.​

அதற்கு மேலதிகமாக எமது ​‘தல்கஸ்மங்கட’ விடுதியின் பொறுப்பாளரின் வீட்டிற்கும் தீ வைத்திருந்தனர். அந்நேரத்தில் விடுதியில் இருந்த விடுதி பொறுப்பாளர் கே.எல். சந்திரசிறியும், உதவி  விடுதி பொறுப்பாளர் ஜகத் தேமியபாலவும் காட்டிற்கு ஓடி தப்பித்துக் கொண்டனர்.

நாம் அன்று அதிஷ்டவசமாக உயிர் பிழைத்துக் கொண்டாலும் ‘எல்.டீ.டீ.ஈ’ யினர் அடிக்கடி பூங்காவிற்குத் தாக்குதல் நடாத்தினர். 2009 மே மாதம் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்படும் வரை இந்நிகழ்வு நடைபெற்றது.

2009 ஆரம்பத்தில் எனக்கு கொழும்பு பிரதான அலுவலகத்தில் சட்டப் பிரிவிற்கு இடமாற்றம் கிடைத்தது​.

‘எல்.டீ.டீ.ஈ’ (தமிழ் ஈழ விடுதலைப் புலிகள்) என்பது இலங்கையில் செயற்பட்ட பயங்கர தீவிரவாத இயக்கமொன்றாகும். முப்பது வருட சிவில் யுத்தத்தின் பின்னர் 2009 மே பதினாறாம் திகதி இலங்கை அரசின் இராணுவத்தினரால் ‘எல்.டீ.டீ.ஈ’ இயக்கம் தோற்கடிக்கப்பட்டது.

திலிப் டிலந்த சமரநாயக்க

திரு.திலிப் டிலந்த சமரநாயக்க அவர்கள் குமண தேசிய பூங்காவில் பூங்காப் பொறுப்பாளராக தற்போது கடமையாற்றுகிறார். அவர் இலங்கையில் பல்வேறு தேசிய பூங்காக்களில் சேவை செய்துள்ளார். யால, உடவளவை, லுணுகம்வெஹெர, வஸ்கமுவ, பிரதான அலுவலகத்தில் சட்டப் பிரிவு, வளவை இடது கரை (Walawa left bank) எனும் சேவை​ நிலையம் அவர் ​ சேவைசெய்துள்ள பல சேவைத் தளங்களுள் சிலவாகும்.

திலிப்சமரநாயக்க அவர்கள் இரு மகன்களின் அன்புத் தந்தையாவார். ஹொரண வெல்ல பிடியவில் வசித்து வருகிறார்.

யால தேசிய பூங்கா

வனவிலங்கு சுவர்க்கம் என்று அழைக்கப்படும் ​ யால தேசிய பூங்கா இலங்கையின் வறண்ட வலயத்தில் அமைந்துள்ள பழமையான வனவிலங்கு சரணாலயங்களில் ஒன்றாகும். பூங்காவின் பரப்பளவு 126786 ஹெக்டெயார் என்றாலும், வில்பத்து பூங்காவை விட நிலப்பரப்பில் குறைந்தாலும் உயிர்ப் பல்வகை​மை நிறைந்துள்ளமிகவும் மதிப்பு மிக்க நிலமாகும். இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ​யால தேசிய பூங்கா வடக்கே ஊவா மலைத் தொடரினாலும், கிழக்கு மற்றும் தெற்கே இந்து சமுத்திரத்தினாலும், மேற்கில் மாணிக்க கங்கையின் கிளை ஆற்றினாலும் மற்றும் கதரகம மலைத் தொடரினையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. யால சரணாலயம் வன விலங்குகள் மற்றும் தாவர பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் 1938 பெப்ரவரி 25 ஆம் திகதி தேசிய  பூங்காவாக்கப்பட்டது.

இத்தேசிய  பூங்கா நிர்வாக வசதிகளுக்காக ஐந்து வலயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

I ஆம் பகுதி ஹெக்டயார் 14101    –           ஹம்பாந்தோட்ட மாவட்டத்தைச் சேர்ந்தது.

II ஆம் பகுதி ஹெக்டயார் 9931     –           ஹம்பாந்தோட்ட மாவட்டத்தைச் சேர்ந்தது.

III ஆம் பகுதி ஹெக்டயார் 40775 –           மொனராகலை மாவட்டத்தைச் சேர்ந்தது.

IVஆம் பகுதி ஹெக்டயார் 26418  –           மொனராகலை மாவட்டத்தைச் சேர்ந்தது.

V ஆம் பகுதி ஹெக்டயார் 6656     –           மொனராகலை மாவட்டத்தைச் சேர்ந்தது.

இப் பகுதிகளுக்கு மேரதிகமாக யால அதி இயற்கை பாதுகாப்பு வனம் 28905 ஹெக்டயார்ளைக் கொண்டுள்ளது.

யால புதவ சுற்றுலா விடுதியிலிருந்து தென்படும் ஓர் காட்சி

இரு மாவட்டங்களினைச் சேர்ந்த இத்தேசிய பூங்கா மாறுபட்ட காலநிலையைக்கொண்டுள்தோடு மொனராகலை மாவட்டத்துக்கு உரித்தான மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் வலயங்களில் வருடாந்த மழைவீழ்ச்சி 550-775 மில்லி மீற்றருக்கு இடைப்பட்டதுடன் வெப்பநிலை 23 – 32 பாகை செல்ஸியஸிற்கு இடைப்பட்டதாகும். ஹம்பாந்தோட்ட மாவட்டத்துக்கு உரித்தான முதலாவது மற்றும் இரண்டாம் வலயங்கள் வருடாந்த மழைவீழ்ச்சி 400-500 மில்லி மீற்றருக்கு இடைப்பட்ட அளவாகும்.

மே மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரை வறண்ட காலநிலை நிலவுதோடு அக்காலத்தில் விலங்குகளுக்கு நீர் மற்றும் உணவு பற்றாக்குறையாகும் காலமாகும். இக்காலத்தில் வன விலங்குகளுக்கு அதிக ஓய்வு தேவைப்படுதோடு வறட்சி மிகக்​ கடுமையாக இருக்கும் காலங்களான செப்டெம்பர், ஒக்டோபர் மாதங்களில் பூங்காவானது சுற்றுலாப் பயணிகள் பார்வையிடச் செல்ல முடியாதவாறு மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இப்பூங்கா பொதுவாக ஈரமான பருவ மழை மற்றும் வறண்ட பருவ மழைக் காடுகள், முட்கள், சுற்றுச் சூழல் அமைப்புக்கள், நன்னீர் மற்றும் கடல் ஈரநிலங்கள், சதுப்பு நில சுற்றுச் சூழல் அமைப்புக்கள் மற்றும் பவளப் பாறைகள போன்ற கடல் சுற்றுச் சூழல் அமைப்புக்கள் காணப்படுகின்றன. தீவின் மிகக் குறைந்த சமவெளிகளில் அமைந்துள்ள இப்பூங்காவின் சில பகுதிகள் கடல் மட்டத்தில் மீற்றர் 100 முதல் 125 மீற்றர் வரை உயரமானது. இலங்கையில் 11 மற்றும் 12 ஆவது நீளமான நீரோடை​களான மெனிக் நதி, கும்புக்கன் ஓயா என்பன யால பூங்கா ஊடாக ஓடுகின்றன. விலபலா ஓயா, கோனகல ஓயா, மண்டாகல ஓயா, ஊரணிய ஓயா, மஹசீலவ ஓயா மற்றும் கொரவக்கா ஓயா உட்பட பல ஓயாக்கள் காணப்படுகின்றன.

யால தேசிய பூங்காவில் 41 வகையான பாலூட்டிகள், 133 வகையான உள்ளூர்ப் பறவைகள் மற்றும் 27வகையான புலம்பெயர் பறவைகள் என்பன் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இத்தேசிய பூங்கா உள்ளூர், வெளிநாட்டு வனவிலங்கு ஆர்வலர்களிடம் பரவலாக உள்ளது. ஏனெனில் இங்கு அதிகளவான விலங்குகளை எளிதாகக் கண்டு கொள்ளக் கூடிய தேசிய பூங்காவாக இருப்பதனாலாகும். காட்டு யானைகள், காட்டு எருமைகள், புள்ளி மான்கள் போன்றவற்றை இங்கு எளிதில் கண்டு கொள்ளலாம். வன விலங்குகள் பெரும்பாலும் முதல் வலயத்தில் கடல் பகுதிகளில் காணப்படுகின்றன. பூங்காவின் I மற்றும் II ஆகிய வலயங்கள் சிறுத்தைகளின் சுவர்க்கமாகும். மேலும் கரடிகள், மரைகள், சருகு மான்கள், புனுகுப் பூனைகள், பொன்னிற குள்ள நரிகள், காட்டு பூனைகள், குரங்குகள், ஆசிய மர நாய்கள், முள்ளம்பன்றிகள் போன்றவை இப்பூங்காவில் காணப்படக்கூடிய பிற விலங்குகளாகும். கடலுக்கு அருகில் நட்சத்திர ஆமை​கள், தோட்டப் பல்லிகள்மற்றும் பொதுவான பச்சை வன பல்லி போன்ற ஓணான் இனங்களையும், நீரோடைகளுக்கும் ஆறுகளுக்கும் அண்மையில் சதுப்பு நில முதலை மற்றும் உவர் நீர் முதலை ஆகியவற்றையும் காண முடிகின்றது.

னை கள்
புள்ளி மான்கள்
கரடி

அவ்வப்போது புலம்பெயர்ந்த பறவைகளுக்கு எவ்வித இடைஞ்சலுமின்றி கூடு கட்டுவதற்கு உகந்த இடமாக விளங்கும் இக்காட்டில் தண்ணீருக்குப் பற்றாக்குறை இல்லை​. நீர்வாழ் பறவைகள் மற்றும் பிற விலங்குகளின் நுகர்வுக்காக இங்கு சுமார் 20 ஏரிகள் மற்றும் களப்புக்கள் காணப்படுகின்றன.

இந்த வருடத்தின் ​செப்டெம்பர் மாதம் முதல் அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை இப்புலம்பெயர் பறவைகள் இதனைச் சுற்றியுள்ள மற்றும் அருகிலுள்ள சரணாலயங்களில் தங்கியுள்ளன. சில விசேட புலம்பெயர் பறவைகள்இங்கு நிரந்தரமாகத் தங்குகின்றன. கருங்கழுத்து நாரை அவ்வாறான பறவையொன்றாகும். இலங்கையில் வெளியிடப்பட்ட ‘Top 7 Wild SriLanka’ விலங்குகளிடத்தில் பெரிய பறவையாகக் காணப்படுவது ​​கருங்கழுத்து நாரையாகும்.பறவைகளின் இடப்பெயர்வு காலத்தில், பொதுவான புள்ளிச் செங்கால் உள்ளான், கொட்டிக்கால் வாலாட்டி, பெரும் பூநாரை, கருவால் மூக்கன், இந்திய தோட்டக் கள்ளான், நீலவால் பஞ்சுருட்டான்,கல்பொறுக்கி என்பனவற்றைக் காணலாம். சாம்பல் நாரை, இலங்கைக் காட்டுக் கோழி, சின்னக் காட்டுக் கோழி, சிறியபெரு நாரை, நீளவால் இலைக் கோழி, வெண்கழுத்து நாரை, மஞ்சள் மூக்குநாரை, செந்நாரை போன்ற விசேட பறவையினங்களையும் இங்கு காணலாம்.

கருங்கழுத்து நாரை
நீலவால் பஞ்சுருட்டான்
மயில்

பூங்காவின் இரண்டாம் வலயத்தில் குறைந்தளவு காடுகள் காணப்படுகின்றன. ஆனால் ஏனைய அனைத்து வலயங்கள் மழைக் காடுகளினால் நிறைந்துள்ளன. யால பூங்காவில் உள்ள தாவர அமைப்புக்களில் வறண்ட அல்லது அரை பசுமையான அல்லது முட்காடுகள், ஈரமான இலையுதிர் காடுகள், சதுப்பு நிலங்கள் ஆகியவற்றைக் காண முடியும். பாலை, வீரை, மாவிலங்கம் என்பன முதல் முக்கிய தாவரங்களாக இருப்பதுடன் கொன்றை, ஆவாரம், வேப்பம், விலா போன்ற தாவரங்களும் பரவலாக உள்ளன. பனை, மலை மாதுளை, சிறு கிளா, இலந்தை, வச்சிரவல்லி,வெண் நுனா, காட்டு மல்லிகை, சாதாவாரி என்பன விசேடமாகும். இப்பூங்காவில் முதலாம் வலயத்தில் மாத்திரம் தாவர வகைகள் 300 அளவில் அடையாளம் காணப்பட்டுள்ளன.​

புராதன காலத்தில் இவ்வனத்துடன் தொடர்புடைய குடியிருப்புக்கள் காணப்பட்டன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. தற்போது பயன்படுத்தப்படும் பொதன, பலடுபான, ஹெலவ, ஓகந்த போன்ற பெயர்கள் பண்டைய கால மக்கள் வாழ்ந்த கிராமங்களாகும்.​​ காலப்போக்கில் இக்குடியிருப்புக்கள் காடுகளாக மாறி வன விலங்குகளின் இராசதானியாக மாற்றம் பெற்றது. பலடுபானவிற்கு அருகில் மகுல் மகா விகாரை நிலத்திற்கு உரித்தான மலை உச்சியில் உள்ள ஒரு பாறைக் குகையில் புத்த பெருமானின் சிலை காணப்படுகின்றது. மேலும், பண்டைய மட்பாண்டங்களின் இடிபாடுகள், பிராமிய எழுத்துக்கள், சீலா கலவெட்டுக்கள், புத்தர் சிலைகள் போன்றவற்றின்படி, அக்காலத்தில் பௌத்த விகாரைகளுடன் தொடர்புடைய அம்சங்கள் மிகவும் வளர்ச்சியடைந்திருந்தன என்பதற்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றன. சித்துல் பவ்வ புனித பூமிக்கு அருகே துட்டகைமுனு மன்னரின் ஆட்சி தொடர்பான கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பிம்புராகல மலை​​, கோன கல, ஆகாஷ சைத்ய, விகார கொடெல்ல, ஞானமடைந்த பிக்குகள் வாழ்ந்த சிதுல் பவ்வ ரஜமகா விகாரை மற்றும் கல்குகை, மகுல் ​​​விகாரை ஆகியவையும் இன்றும் பூங்காவின் எல்லைக்குள் அமைந்துள்ள ​பௌத்தர்களின் வழிபாட்டுத் தலங்களாக உள்ளன. யாலவுடன் தொடர்புடைய பல வரலாற்றுக் கதைகள் மற்றும் புனைக் கதைகளும் உள்ளன. இதற்கிடையில் அந்தரேயுடன் தொடர்பான கதைகள் மிகவும் சுவாரிஷ்யமானவை.

பலடுபானவின் ஊடாக யால பூங்காவிற்கான உள் நுழைவு
புதிய புதவ சுற்றுலா விடுதி

நிர்வாக வசதிகளுக்காக பிரிக்கப்பட்டுள்ள ​ யால தேசிய பூங்கா சுற்றுலாப் பிரயாணிகளுக்குப் பார்வையிடுவதற்கு சாலை வசதிகள் உள்ளன. யாலவின் முதலாம் பகுதியைப் பார்வையிடுவதற்கு பலடுபானவின் ஊடாக உள் நுழைய வேண்டும். இப் பூங்கா பலடுபானவில் அமைந்துள்ள பூங்கா தலைமை அலுவலகத்தினால் நிர்வகிக்கப்படுகின்றது. கொழும்பு -கத்தரகம பிரதான பாதையில் அமைந்துள்ள திஸ்ஸமகாராம நகரத்திலிருந்து கிரிந்தவை தாண்டிச் செல்லும் போது 9 ½ கிலோ மீற்றர் சென்ற பின்னர் பலடுபான பிரதான நுழைவாயிலைச் சந்திக்க முடிகின்றது. மேலும் கதரகமயிலிருந்து கடகமுவ, சுற்றுலா விடுதிகள் அமைக்கப்பட்டிருப்பதோடு இங்கு தங்குமிடம் பெற்றுக் கொள்வதற்கு வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தினால் ஒதுக்கிக் கொள்ள முடியும். சுற்றுலாப் பிரயாணிகளுக்கு தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக சுற்றுலாத் தகவல் மையமும் அமைந்துள்ளதோடு அங்கு பூங்காவிற்குள் உயிர் வாழும் புலிகளை அடையாளம் காணும்  மையமும் அண்மையில் நிறுவப்பட்டது.                              

யால தொடர்பான விளக்கத்தில் காணப்படும் விலங்குகளின் பெயர்ப் பட்டியல்

Sinhala name

Tamil name

English name

Scientific name

අලියා

யானைகள்

Asian elephant

Elephas maximus

වලසා

கரடிகள்

Sloth bear

Ursus ursinus

ගෝනා

மரைகள்

Sambar

Rusa unicolor

මීමන්නා

சருகு மான்கள்

Mouse deer

Moscheola meminna

කළවැද්දා

ஆசிய மர நாய்கள்

Palm Civet

Hermophroditus species

උරලෑවා

புனுகுப் பூனைகள்

Ring tailed civet

Viverid species

හිවලා

பொன்னிற குள்ள நரிகள்

Golden jackal

Canis aureus

වල්බළලා

காட்டு பூனைகள்

Jungle cat

Felis chaus

වඳුරා

குரங்குகள்

 Toque monkey

macaca sinica

ඉත්තෑවා

முள்ளம்பன்றிகள்

Porcupine

Hystrix indica

තාරකාඉබ්බා

நட்சத்திர ஆமை​கள்

Star tortoise

Testudo elegans

හැලකිඹුලා

சதுப்பு நில முதலை

Mugger crocodile

Crocodylus palustris

ගැටකිඹුලා

உவர் நீர் முதலை

Estuarine crocodile

Crocodylus porosus

ගරා කටුස්සා

தோட்டப் பல்லிகள்

Oriental garden lizard

Calotes versicolor

පලා කටුස්සා 

பொதுவான பச்சை வன பல்லி

Common green forest lizard

Calotes calotes

අලිමානාවා

கருங்கழுத்து நாரை

Black-necked stork

Ephippiorhynchus asiaticus

කැළෑහැලපෙන්දා

கொட்டிக்கால் வாலாட்டி

 Forest wagtail

Dendronanthus indicus

සියක්කාරයා

பெரும் பூநாரை

Greater flamingo

Phoenicopterus ruber

අළුපැස්තුඩුවා

சாம்பல் நாரை

Spot-billed pelican

Pelecanus philippensis

පෙද කළු ගොහොදු විත්තා

கருவால் மூக்கன்

Blak tailed godwit

Limosa limosa

අවිච්චියා

இந்திய தோட்டக் கள்ளான்

Indian pittah

Pitta brachyura

බිඟුහරයා

நீலவால் பஞ்சுருட்டான்

Bee eater                                       

Merops species

මහාරන් ඔලෙවියා

கல்பொறுக்கி

Golden plower

Pulvialis fulva

පාදිලිමානාවා

வெண்கழுத்து நாரை

Woolly necked stork

Ciconia episcopus

ලතු වැකියා

மஞ்சள் மூக்குநாரை

Painted stork

Mycteria leucocephala

කොකා විශේෂ

சாம்பல் நாரைவகை

Heronspecies

Ardea species

කොකා විශේෂ

பெரிய கொக்கு வகை

Egretspecies

Egretta species

කොකා විශේෂ

மஞ்சள் குருகு வகை

Bitternspecies

Ixobrychus species

සැවුල්පෙද දියසෑනා

நீளவால் இலைக் கோழி

Pheasant tailed jacana

Hydrophasianus chirurgus

බහුරු මානාවා

சிறிய பெரு நாரை

Lesser adjutant

Leptoptilos javanicus

වළි කුකුලා

இலங்கைக் காட்டுக் கோழி

Ceylon jungle fowl

Gallus lafayetti

හබන් කුකුලා

சின்னக் காட்டுக் கோழி

Sri Lanka spur fowl

Galloperdix bicalcarata

සිලිබිල්ලා

பொதுவான புள்ளிச் செங்கால் உள்ளான்

Shanka and Sand pipers

Tringa Species

யால தொடர்பான விளக்கத்தில் காணப்படும் மரங்களின் பெயர்ப் பட்டியல்

 Sinhala Names

Tamil Names

English Names

Botanical Name

පලු

பாலை

 Ceylon Iron wood

Manilkara hexandra 

වීර

வீரை

 Hedge Boxwood

Drypetes sepiaria 

ලුණුවරණ

மாவிலங்கம்

 

Crateva adansonii subsp. odora 

ඇහැල

கொன்றை

Indian Laburnum,Shower of gold

Cassia fistula

රණවරා

ஆவாரம்

Matara Tea

Senna auriculata    

(Synonym- Cassia auriculata)

කොහොඹ

வேப்பம்

Margosa, Neem

Azadirachta indica 

දිවුල්

விலா

Wood apple, Elephant apple

Limonia acidissima

අන්දර

பனை

      –

Many species under family Fabacea

කුකුරුමාන්

மலை மாதுளை

Spiny randia , Emetic – nut, False Guava

Catunaregam spinosa 

හීන්කරඹ

சிறு கிளா

 –

Carissa spinarum

එරමිනියා

இலந்தை

       –

Ziziphus species

හිරැස්ස

வச்சிரவல்லி

Veld(t) grape

Cissus quadrangularis

කිරිවැල්

வெண் நுனா

 –

Families Apocynacea and Rubiacea species

වල්පිච්ච

காட்டு மல்லிகை

      –

Jasminum species

හාතවාරිය

சாதாவாரி

      –

Asparagus racemosus

தொகுப்பாளர் – தம்மிகா மல்சிங்ஹ, மேலதிக செயலாளர், வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு

பூங்கா பற்றிய தகவல்களைத் தொகுத்தவர்- ஹஸினி சரத்சந்திர, பிரதம உத்தியோகத்தர், வன பாதுகாப்புத் திணைக்களம்

தமிழ் மொழிபெயர்ப்பு- ஏ.ஆர்.எப். றிப்னா, அபிவிருத்தி  உத்தியோகத்தர், வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு

ஆங்கில மொழிபெயர்ப்பு (ஆவணங்கள்)- அசோக பலிஹவடன, மொழிபெயர்ப்பாளர், வனஜீவராசிகள் மற்றும் வனபாதுகாப்பு அமைச்சு

ஆங்கில வியாக்கியானம் ​(கதை)- தானுக மல்சிங்ஹ

இணைய வடிவமைப்பு- என்.ஐகயத்ரி, அபிவிருத்தி  உத்தியோகத்தர், வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு

படங்கள்- ரோஹித குணவர்தன,மஹேக்ஷா சதுராணி பெரேரா(பட்டதாரி பயிற்சியாளர்), வனஜீவராசிகள்பாதுகாப்புத் திணைக்களம்