நான் 1981 நவம்பர் மாதம் வன கட்டுப்பாட்டாளர் ஒருவராக வனஜீவராசிகள் திணைக்களத்தில் இணைந்தேன். முதன்முதலாக வில்பத்துவில் சேவை செய்தேன். அதன் பின்னர் 1983 பெப்ரவரி முதலாம் திகதி குமண தேசிய பூங்காவிற்கு வந்தேன். அக்காலத்தில் குமணவை யால கிழக்கு தேசிய பூங்கா அல்லாவிட்டால் ஹோகந்த தேசிய பூங்கா என்று அழைத்தனர். அங்கு மிகக் கஷ்டமான கடமை ஒன்று காணப்பட்டது . நான் உத்தியோகபூர்வ விடுதியில் தங்கியிருந்தேன். காலியில் எனது வீடு இருந்தது. வீதியில் பேருந்து இல்லை வௌளிக் கிழமைக்கு மாத்திரம் ஓகந்த தேவாலயத்திற்கு பேருந்து ஒன்று வருகின்றது. பேருந்து கிடைக்கா விட்டால் பன்னிரண்டு மைல்கள் பானம இலிருந்து ஹேகந்த தேசிய தலைமையகத்திற்கு கால்நடை மூலமாக செய்ய வேண்டும். இல்லாவிட்டால் டிராக்டர் ஆவது குபோடா டிராடர் ஆவது கிடைத்தால் ஏறிச்செல்வேன்.
1985ம் ஆண்டு எல்.டீ.டீ.ஈ *தீவிரவாதிகள் சக்தி வாய்ந்த்தாக இருந்த காலமொன்றாகும். 1985 மார்ச் மூன்றாம் திகதி எல்.டீ.டீ.ஈ யினர் ஹோகந்தபூங்காவிற்கு தாக்குதல் நடத்தினர். அதன் பின்னர் நாம் அனைவரும் தற்காலிகமாக யாலதேசிய பூங்காவிற்கு இணைக்கப்பட்டோம்.
1988 ஆம் ஆண்டின் ஆரம்ப காலத்தில் ஹோகந்ததேசிய பூங்காவை மீனவர்கள் ஆக்கிரமித்துள்ளனர் என நாம் கேள்வியுற்றோம். மீனவர்கள் குமண வில்லுவில் மோய ஆற்றின் குறுக்கே வாடி அமைத்துக் கொண்டுள்ளனர், ஈரநிலத்தை எரித்து நீரைத் தேக்கி வைத்து மீன்பிடிக் கைத்தொழிலைச் செய்கின்றனர், அதற்குப் புறம்பாக களப்புகளிலும் மீன்பிடிக் கைத்தொழிலை மேறகொள்கின்றனர்போன்றவற்றைக் கேள்வியுற்றோம். இது தொடர்பாக நாம் கவலையடைந்தோம். நாம் குமணவுடன் அதிக அன்பாக இருந்தோம். எவ்வாறாவது குமணவை பரிசோதனை செ ய்ய வேண்டும் என நாம் எண்ணினோம். பிரச்சினைகள் இல்லாத காலத்தில் நாம் பொருட்களை எடுத்துக் கொண்டு தேடல்களுக்குச் செல்வோம். தங்கி நின்று சமைத்து உண்டு தேடல்களை மேற்கொள்வோம். அவை அனைத்தும் நின்று விட்டன.
இதன் போது எல்.டீ.டீ.ஈ* யின் அச்சுறுத்தல் போன்றே ஜே.வி.பி* யினரின் அச்சுறுத்தலும் மிகையாக இருந்தது. அப்போது யால தேசிய பூங்காவின் துப்பாக்கி ஜே.வி.பி யினரால் கைப்பற்றப்பட்டிருந்தது. எமது பாதுகாப்பை நாமே பார்த்துக் கொள்ள வேண்டும் என அரசாங்கம் எமக்குக் கூறியிருந்தது. உயர் அதிகாரிகள் யாருக்கும் வற்புறுத்தப்படுவதில்லை. அக்காலத்தில் யால தேசிய பூங்காவின் பூங்காப் பொறுப்பாளராக இருந்தவர் எட்மன்ட் வில்ஸன் அவர்களாவார். எமக்கு குமணவில் உள்ள மனிதர்களின் நடவடிக்கைகளைப் பார்வையிடச் செல்ல வேண்டும் என நாம் அவரிடம் கூறினோம். நாம் எமது விருப்பத்தலேயே வில்ஸன் அவர்களிடம் குமண மோயாவைப் பரிசோதனை செய்ய வேண்டும் எனக் கோரினோம். துப்பாக்கி எதுவும் இருக்கவில்லை.
அன்று பயணத்திற்கு நாம் பதினொரு பேர் இருந்தோம். எமக்கு நிரந்தர பணிக் குழுவாக இருந்தது தள உதவியாளர் ஆர்.பீ. கருணாசேன, தள கட்டுப்பாட்டாளரான மெனிகா எம். குணதாச மற்றும் நான் மாத்திரமே இருந்தோம். பயணத்திற்கு சாதாரணமானவர்கள் எட்டு பேர் இணைந்தனர். சரத் இந்திரபால, டப்ளுயூ. ரூபசிங்ஹ, எஸ். எம். அனுர பண்டார, நாலக வீரதுங்க, சோமரத்ன ஹெட்டிகொட, பிரேமரத்ன மனம்பேரி, சேபால மனம்பேரி மற்றும் கே. கருணாசேன என்போரே அந்த எட்டு பேருமாவர். எமக்கு 36 ශ්රී 2490 TMTஎன்னும் டிராக்டரிலேயே செல்லக் கிடைத்தது.
அன்று காலை ஐந்து மணியளவில் நாம் பலடுபான தலைமையகத்திலிருந்து புறப்பட்டோம். பிரதேசத்தை அறிந்திருந்த சிலரும் எமக்குள் இருந்தனர். நாம் மாணிக்க கங்கையிலிருந்து கரையேறினோம். பொத்தான, பஹல பொத்தான வீதியினூடா விழுந்திருந்த கிளைகளை ஓரமாகத் தள்ளித் தள்ளி டிராக்டரில் சென்றோம். கஜபாவுக்கு அருகில் செல்லும் போது டிராக்டரின் முன் சில்லு ஒன்றின் காற்று வெளியேறி விட்டது. டிராக்டருக்கு மரக் குற்றியொன்றைப் பொருத்திக் கொண்டு இன்னும் சுமார் மூன்று கிலோ மீற்றர் சென்றோம்.
நாம் காலையுணவைத் தயார் செய்து கொண்டு சென்றிருந்தோம். அவற்றை உண்டதன் பின்னர் கால்நடை மூலம் செல்லத் தொடங்கினோம். கஜபாவிலிருந்து மடமதொடவிற்கு சுமார் ஐந்து கிலோ மீற்றர் இருக்கிறது. நாம் செல்லும் போது வீதியில் விழுந்திருந்த விளாம்பழத்தை உண்ட வண்ணமே சென்றோம். நாம் மடமதொடவிற்குச் செல்லும் போது அங்கு வாடி அமைத்துக் கொண்டிருந்த நபர்கள் பாய்ந்து ஓடினர்.
மடமதொடவிலிருந்து கெபலித்தவிற்குச் செல்லும்வீதியில்சுமார் மூன்று கிலோ மீற்றர்செல்லும்போது சத்தமொன்று கேட்டது. அது இரும்புகளின் சத்தமாகும். அதனைப் பார்க்கும் போது மூன்று பேர் இரத்தினக்கல் அரித்துக் கொண்டிருந்தனர். அந்த மூன்று பேரையும் பிடித்து கைகளைப் பின்னால் கட்டி எம்முடன் பயணிக்க இணைத்துக் கொண்டோம்.
நாம் இன்னும் சுமார் மூன்று மைல்கள் தூரத்தில் ஆற்றின் பாதையின் மேலே கற்சுவர் வரிசை சரியாகச் சென்றது. இப்போது மனிதர்கள் பேசும் சத்தம் கேட்கிறது. அதனைப் பார்க்கும் போது மனிதர்கள் இரண்டு வாடிகளை அமைம்மிருந்தனர். அந்நேரத்தில் பகல் உணவை உண்பதற்கு சுமார்பேர் வந்து சென்றனர். நாம் அவர்களையும் கைது செய்தோம். எமது நபர்கள் இருவரை அங்கு பாதுகாப்புக்காக வைத்து விட்டு மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தோம். கைது செய்த நபர்களின் கைகளை பின்னே கட்டி வைத்தோம். இன்னும் செல்லும் போது ஆற்றின் நேரே பாதையில் மனிதர்கள் சைக்கிள்களில் பொருட்களையும் கட்டிக் கொண்டு வருவதைக் கண்டோம். அங்கு பதினொரு பேரைப் பிடித்தோம். ஒன்பது சைக்கிள்கள் இருந்தன. சைக்கிள்களையும் பிடித்தோம். சிலர் காட்டிற்குத் தப்பியோடினர்.
இன்னும் முன்னே செல்லும் போது நபரொருவர் துப்பாக்கியொன்றையும் எடுத்துக் கொண்டு மரத்துக்கு மேல் சுட்டுக் கொண்டே வந்து கொண்டிருந்தனர். இது குரங்குகள். துப்பாக்கிச் சூடு வையுங்கள். கையிலிருந்தது மஸல் லோடின் துப்பாக்கி ஒன்றாகும். நான் ஔந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அம்மனிதர் ஆற்றங்கரைக்கு ஏறும் போதே காலால் அடித்தேன். அக்காலத்தில் எனது வயது சுமார் இருபத்தாறு வருடங்களாகும். எனக்கு நன்றாகச் சக்தி இருந்தது. அந்நபர் விழுந்து விட்டார். அதனுடனேயே நானே பாய்ந்து பிடித்துக் கொண்டேன். அந்நபருக்கு எத்மலே சுது ராஜா என அழைத்தனர். தடை செய்யப்பட்ட கட்சியொன்றைச் சேர்ந்த ஒருவராவார். அவரையும் கட்டிக் கொண்டு பயணத்துடன் இணைத்தோம்.
இப்போது பசித்தது. அங்கே எவரும் இல்லாத வாடி ஒன்று காணப்பட்டது. அதில் தேசிக்காயும் சீனியும் இருந்தன. நாம் தேசிக்காயைத் தயாரித்து சீனி இட்டு குடித்தோம்.
மீண்டும் பயணத்தைத் தொடரும் போது இரண்டு மாடுகளைப் பூட்டிய வண்டி ஒன்று முன்னே வருகிறது. பொருட்களை நிறைத்துக் கொண்டு நான்கு பேர் வாடிக்கு வருகின்றனர். நாம் பிடித்துக் கொண்டோம். சுமார் நான்கு கிழமைகளுக்குத் தேவையான பொருட்கள் வண்டிகளில் இருந்தன. வண்டியையும் கைப்பற்றினோம்.
இப்போது நேரம் மாலை மூன்று மணி போல் இருந்தது. நாம் மீண்டும் வருவதற்கு வெளியானோம். ஆற்றிலே விதியிலேயே மடொல்தொடவிற்கு வந்தோம். கைது செய்யப்பட்ட நபர்கள் இருபத்தைந்து பேர்களும் நாம் பதினொரு பேரும் இருந்தோம். இப்போது பசிக்கிறது அங்கேயே சோறும் தேங்காய்ச் சம்பலும் பருப்பும் சமைத்து சாப்பிட்டோம்.
புறப்பட ஆயத்தமான போது நேரம் மாலை சுமார் மூன்று மணி இருக்கும். நான்கு பேர் பாய்ந்து ஓடினர். ஏனையவர்களை நாம் கயிற்றினால் கட்டி விட்டோம். ஒருவரின் இடது கை அடுத்தவரின் வலது கையுடன் கட்டப்பட்டிருந்தது. நாம் இருளில் மேலும் சுமார் நான்கு மைல்கள் கஜபாபிடியவில் டிராக்டர் நிறுத்தப்பட்டிருந்த இடத்துக்கு வந்தோம்.
மின் பந்தமொன்றாவது இன்றி எல்.டீ.டீ.ஈ யைப் பற்றி பயந்து கொண்டிருக்கும் போது ஹெலிகப்டர் ஒன்று வானத்தில் சுற்றிச் சென்றது. பின்னர் இந்தியன் படையினர் என அறிந்து கொண்டேன்.
அடுத்த நாள் மாலை ஆறு மணி ஆகும் போது கூட்டத்தினைக் கூட்டிக் கொண்டு நாம் தலைமையகத்திற்கு வந்தோம். கஜபாபிடியவில் எமக்கு இரண்டு மாடுகளையும் மாற்ற வேண்டியேற்பட்டது.
வனஜீவராசிகள் திணைக்களத்தினால் பொதி வண்டியொன்றைக் கைது செய்தமை இதுவே முதலாவது மற்றும் ஒரேயொரு நிகழ்வாகும்.
அன்று நாம் பெற்ற அனுபவம் இரசனையான மறக்க முடியாத நினைவொன்றாகும்.
எல்.டீ.டீ.ஈ – தடை செய்யப்பட்ட தீவிரவாத குழுவாகும்.
ஜே.வி.பி – அந்த காலத்தில் தடை செய்யப்பட்ட அரசியல் கட்சியொன்றாகும்.
1981ம் ஆண்டு நவம்பர் மாதம் 25ம் திகதி சாதாரண உதவி விடுதி பொறுப்பாளர் ஒருவராக கடமைக்கு வந்த ரஞ்சித் சிசிரகுமார அவர்கள் அப்போதைய வனவிலங்கு தள பாதுகாவளர் ஒருவரின் தகைமைளைப் பூர்த்தி செய்திருந்தார். வில்பத்து தேசிய பூங்காவில் சுமார் ஒரு வருடம் கடமையாற்றியதன் பின்னர் குமண தேசிய பூங்காவிற்கு வனவிலங்கு பாதுகாவலர் ஒருவராக பதவியுயர்வு பெற்று அவர் அங்கு சுமார் மூன்று வருடங்கள் சேவையாற்றி யால தேசிய பூங்காவில் ஏழு வருடங்களும் சேவையாற்றினர்.ரன்தெனிகல, இகினியாகல, கதிர்காமத் தளம், ஹிக்கடுவை சமுத்திர தேசிய பூங்கா, கல்பிடிய போன்ற இடங்களில் அவர் கடமை புரிந்த ஏனைய இடங்களுள் சிலவாகும்.
ரஞ்சித் சிசிர குமார அவர்கள் திறமையான வனவிலங்கு தள பாதுகாவலர் போன்றே திறமையான சுழியோடி ஒருவராவார். அவ்வாறே அவர் சுமார் 1200 கைதுகளை மேற்கொண்டுள்ளார். வனவிலங்கு தொடர்பான வழக்குகளை நடத்தும் கருமங்களில் வெற்றியுடன் செயற்பட்டு அதிக வழக்குகளில் வனஜீவராசிகள் திணைக்களத்தை வெற்றியடையச் செய்த ஒருவராவார். அது அதிக விருப்பத்துடன் செய்த செயலாகும்.
இலங்கை திறநத பல்கலைக்கழகத்தில் வனஜீவராசிகள் முகாமைத்துவ சான்றிதழ் பத்திர பாடநெறியில் சித்திடையந்துள்ள ரஞ்சித் சிசிர குமார அவர்கள்திணைக்களத்தினூடாக நடத்தப்பட்ட சான்றிதழ் மற்றும் டிப்ளோமா பாடநெறிகள் மூன்றில் முதலாமவராக சித்தியடைந்து தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ளார். அவ்வாறே நீச்சல் மற்றும் சுழியோடிக்கான சர்வதேச ‘பெடி’ சான்றிதழைப் பெற்றுள்ளதோடு திறமையான வெடி வைப்பாளராகவும் இலங்கை விசேட செயலணியின் (STF) சான்றிதழை வென்றுள்ளார்.
ரஞ்சித் சிசிர குமார அவர்களின் குடும்பம் மனைவி மற்றும் மூன்று மகள்களையும் கொண்டது. அவருடைய வதிவிடம் காலி ஹபராதுவ பிரதேசமாகும்.
உலர் வலயமான கலீ இலங்கையில் காணப்படும் காலநிலை வலயங்களுள் விசேடமான வலயமொன்றாகும். அது, அங்கு அதற்கே உரித்தான உயிர்ப்பல்வகைமை ஒன்று காணப்படுவதாகும். உயிர்ப்பல்வகைமைத் தனமையில் செல்வந்த நாடுகளில் முதன்மை இடமொன்றை இலங்கை பெற்றுக் கொள்வதற்கு காரணமாக அமைந்தது நாடு முழுவதும் விரிந்து பரந்துள்ள வெவ்வேறான சூழல் காலநிலை குணாதிசயங்களைக் கொண்ட வன அமைப்பு ஆகும்.
யால தேசிய பூங்காவிற்குச் சமனான உயிர்ப்பல்வகைமைத் தன்மையின் குணாதிசயங்களை, குமண தேசிய பூங்காவிலும் காண முடியும். இத்தேசியபூங்காக்கள் இரண்டையும் ஒப்பிட்டு நோக்கினால் குமண தேசிய பூங்காவின் நிலங்கள் , சூழல் அமைப்பொன்றைக் காணக் கிடைக்காத நீருடன் தொடர்புடைய சூழல் அமைப்புக்கள் பலவற்றை உள்ளடக்கியது. அதனால் ஈரூடக உயிரினங்களின் போன்றே நீர்வாழ் உயிரினங்களின் அதிக பல்வகைத் தன்மையை குமண தேசிய பூங்காவில் காண முடியும். கிழக்குத் திசையில் இருந்து தென்கிழக்குத் திசைக்கு பரந்த அழகான கடற்கரைகளும் கடற்கரையுடன் இணைந்ததாக அமைந்துள்ள நீல நிறத்தால் நிறைந்த குமண பெரும் காடு பறவைகளின் சுவர்க்கமாகப் பிரசித்தி பெற்றது. இலங்கையில் பறவைகளுக்கான அதி முக்கிய ஓர் இனப்பெருக்கமான இடம் என்பதனால் குமண1938 இல் சரணாலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
குமண தேசிய பூங்காஅம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்கள் இரண்டுக்கும், பொத்துவில் தேர்தல் தொகுதிக்கும் பானம தேர்தல் தொகுதிக்கும் உரித்தாகிறது. 1969 ஆம் ஆண்டில் 265.3 ஹெக்டயாராகவும், 1970 இல் 17,863.4ஹெக்டயார் வரையும் பரந்து வியாபித்தது தேசிய பூங்காவாக உருவானது. 2006 ஜூலை 05 ஆம் திகதி ஆகும் போது 35,665ஹெக்டயார் வரைபரந்துள்ளது.
இயற்கை அழகுள்ள யால தேசிய பூங்காவிலிருந்து பெளதீக ரீதியாக குமண தேசிய பூங்கா கும்புக்கன் ஓயாவினால் பிரிகிறது. குடும்பிகல ஓகந்தவிலிருந்து ஆரம்பமாக கும்புக்கன் ஓயா வரை குமண தேசிய பூங்கா வியாபித்துள்ளதோடு, அங்கிருந்து அப்பால் பரந்திருப்பதுயால தேசிய பூங்காவின் இரண்டாம் இலக்க பகுதியாகும். அதனால், குமண தேசிய பூங்கா யால கிழக்கு பூங்கா எனவும் அடையாளப்படுத்தப்படுகிறது.
இங்கு உயர் மலையுச்சி இல்லை, ஆங்காங்கே அழகான கல் மலைகளைக் காண முடிகிறது. குடும்பிகலை, பம்பரகஸ்தலாவ, பெகுர, கோன்கல, கிரிபொகுணு ஹெல போன்ற கல் மலைகள் வனத்திற்கு வித்தியாசமான அழகைக் கொண்டு வருகின்றன. புல், கடற்கரைத் தாவர அமைப்பு, ஆறுகள், காடுகள், கழிமுகம் மற்றும் முட்புதர்கள் போன்ற அளவு குமண தேசிய பூங்காவிற்கு வடகிழக்கு பருவ மழை மூலம் அதிக மழை கிடைக்கிறது என்பதோடு அதன் முலம் இங்கு அமைந்துள்ள ஓகந்த, துன்முல்ல, திவுல்பல்லம, எரமினியா வெவ, அலுத் வெவ, மற்றும் பக்மீ வெவ போன்ற குளங்கள் நிரம்பி வழிகின்றன. கும்புக்கன் ஓயா கழிமுகத்துக்கு அண்மையில் உருவாக்கப்பட்டுள்ள குமண வில்லு சுமார் 500 ஏக்கர் ஆனது உலக பிரபல்யமான வில்லு ஒன்றாகும். குமண வில்லு கடல் நீரால் அடிக்கடி அமிழ்வதற்கு உட்படுவதோடு பூங்காவிற்குள் பறவை வகைகளின் இருப்புக்கு மிகவும் பொருத்தமாக அமைந்த குளங்கள் களப்புகள் சுமார் 20 மற்றும் நிறைய காடுகளும் அமைந்துள்ளன. களப்புகளின் ஆழம் 2 மீற்றருக்கும் குறைவானது.
கொழும்பிலிருந்து 391 கிலோமீற்றர் தூரத்தில் தென்கிழக்கு கடற்கரை சார்பாக அமைந்துள்ள குமண தேசிய பூங்காவின் சாதாரண வருடாந்த வெப்பநிலை சுமார் 27.30 பாகை செல்ஸியஸ் ஆவதோடு சாதாரண வருடாந்த மழைவீழ்ச்சி சுமார்1300 மில்லிலீற்றர் ஆகும்.
சுமார் மூன்றாம் நூற்றாண்டிற்கு உரித்தான ஒரு பழமையான நாகரிகத்திற்கு உரிமை கூறும் இதன் ஆரம்பம் மாகம இராசதானி முற்பட்ட காலத்திலிருந்து தோன்றி வருகின்றது. 1 ஆம் மற்றும் 2 ஆம் நூற்றாண்டுகளுக்கு உரித்தான ஷீலா கல்வெட்டுக்கள் இப்பிரதேசத்தின் சுற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. குமண தேசிய பூங்கா அமைந்துள்ளது வருடாந்த மற்றும் சம்பிரதாயமாக இந்து பக்தர்கள் பாத யாத்திரையில் ஈடுபடும் கதிர்காமம் இந்துக் கோவில் அமைந்துள்ள வழியிலேயாகும்.
இங்கு உயிர்ப் பல்வகைத்தன்மையை விசாரித்துப் பார்த்தால் சுமார் 223 தாவர வகைகளை காண முடியும். பூக்கம், சாவண்டலை மரம், உகாய், பத்திரி, யானைக் கொழிஞ்சி, செங்காந்தன், பாலை, முதிரை, ஆலமரம், அரச மரம் போன்ற தாவரங்களையும், கடற்கரைக்கு அண்மையான நிலத்தில் வெள்ளெருக்கு, கழிமுள்ளி, அடும்பு போன்ற தாவரங்களும் நன்னீர் நீர்நிலைப் பிரதேசங்களில் நன்றாக வளர்ந்த நெய்தல் மலர், தாமரை போன்ற நீர்த் தாவரங்களை காண முடிவதும் அருமையான காட்சியொன்றாகும்.
குமண தேசிய பூங்கா இலங்கையின் முக்கியமான மற்றும் பிரசித்தமான பறவைகள் தேசிய பூங்காவொன்றாக பிரபலமாவது பிரதானமாக அங்கு வரும் வெவ்வேறான புலம்பெயர் பறவைகளினால் ஆகும். உள்நாட்டு, தங்கியுள்ள மற்றும் புலம்பெயர்பறவைகளைக் கொண்ட 430 க்கும் அதிகமான அளவைக் கொண்ட பறவை வகைகள் இலங்கையிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளன. இங்கு பறவைகள் கண்காணிப்பாளர்களுக்கு 200 க்கும் அதிகமான எண்ணிக்கையுடைய பறவை வகைகளை இலகுவாகக் கண்டு கொள்ள முடியும்.
ஏப்ரல் – ஜூலை காலங்களில் குமணவில் சதுப்பு நிலப் பகுதிக்கு இந்நாட்டில் வாழும் பறவைகள் பல்லாயிரக்கணக்கான முட்டையிடுவதற்கு வில்லுவை நோக்கி சேர்வதுடன், பெரிய கூட்டமாக வரும் உள்நாட்டு நீர்வாழ் பறவைகளான செந்நாரை, பெரிய கொக்கு, இந்திய குளத்துக் கொக்கு போன்றவற்றைக் காண முடிகின்றது. செப்டெம்பர் முதல் மார்ச் வரை புலம்பெயர் பறவைகள் பெரிய எண்ணிக்கையொன்று இலங்கையை நோக்கி பறந்து வருவது வெப்பநிலையைப் பெற்றுக் கொள்வதற்கும் மற்றும் உணவைத் தேடிக் கொள்வதற்குமாகும். புலம்பெயர் பறவைகள் இங்கு வருகின்றன ஆனால் முட்டை இடுவதில்லை. இங்கு பொதுவாகக் கண்டு கொள்ள முடியுமான பறவைகளுள் அரிய வகைப் பறவையொன்றான கறுப்புக் கழுத்து நாரை, சிறுத்த பெரு நாரை, மஞ்சள் மூக்கு நாரை, சாம்பல் நாரை, நீலத் தாழைக் கோழி, வெண் கழுத்து நாரை, சின்ன நீர்க்காகம், சாம்பல் கூழைக்கடா, பெரிய நீர்க்காகம் போன்ற நீர்ப் பறவைகள்பெரிய எண்ணிக்கையில் உள்ளதாகவும் மாமிச பட்சணிகளாகவும் வைரி, செம்பருந்து போன்ற பருந்து வகைகள் சிலவும் கிடைத்துள்ளன.
குமண தேசிய பூங்காவானது புலிகள் (சிறுத்தைகள்) க்கான பிரபலமான தேசிய பூங்கவொன்றாகும். யால, வில்பத்து அளவுக்கு புலிகளைக் காண முடியுமான குமணபூங்காவில் முடியும் என்பதனால் சுற்றுலாப் பயணிகளும், வனவிலங்கு ஆர்வலர்களும், புகைப்படக் கலைஞர்களும் அடிக்கடி குமண தேசிய பூங்காவிற்கு வருகின்றனர். வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலையீட்டினால் குமண தேசிய பூங்கா இன்று புலிகளின் சுவர்க்கமாகி விட்டது. முன்னைய காலத்தில் பறவைகளின் சுவர்க்கமாகப் பிரபலமான இப்பூங்கா இன்று புலிளை நன்கு கண்டு கொள்ள முடியுமான பிரபலமான பூங்காவொன்றாகும்.
புலிகளுக்கு மேலதிகமாக ஆசிய யானை, கரடி, சிவந்த கீரி, இந்திய சாம்பல் கீரிப்பிள்ளை, முள்ளம்பன்றி, செந்நரி, காட்டுப்பன்றி, இந்திய குரைக்கும் மான், காட்டெருமை போன்ற விலங்குகளையும் கண்டு கொள்ள முடியும்.
இப்பூங்காவில் நன்னீர் களப்பு சூழல் அமைப்பிற்குள் மீனினங்களின் பல்வகைமை அருமையானது. மொரெல்லா, உடப்புவா, பூவிரால், கனயா,மஸ்பெதியா இவற்றுள் உள்ளவையாகும். இங்குள்ள சதுப்பு நில அமைப்பினை அண்டி தசக்காலி ஓட்டு மீன்கள், இறால் வகைகளும் களப்பு நண்டுகள் மற்றும் சின்னக் கொக்கு போன்ற ஊணுண்ணி பறவைகளும் தவளை வகைகள் சிலவற்றையும் காண முடியும்.
இலங்கையில் கண்டு கொள்ள முடியுமான பிரதானமான உயிரினங்கள் 7 இன்(Top 7 Wild Sri Lanka) பெயரிடப்பட்ட நீலத் திமிங்கிலம், ஆசிய யானை, சிறுத்தை, செம்மூக்கு முதலை,பேராமை மற்றும் கறுப்புக் கழுத்து நாரை எனும் உயிரினங்கள் 7 இனையும் இத்தேசிய பூங்காவில் கண்டு கொள்ள முடிவது விசேடமாகும்.
குமண கடற்கரைக்கு வரும் ஆமையினங்களின் பாதுகாப்புக்காக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தினால் தேசிய பூங்காவிற்குள் கிரிகல்பே பிரதேசத்தில் பாதுகாப்பு மையமொன்றை அமைத்துள்ளது. அதன் மூலம் ஆமைக் குஞ்சுகள் ஆயிரக்கணக்கினை உருவாக்கி சமுத்திரத்தில் விடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
பொத்துவில் நகரத்திற்கு வலது பக்கத்தில் சுமார் 21 மைல்கள் தூரத்தில் அமைந்துள்ள நுழைவாயில் கொழும்பு, இரத்தினபுரி, உடவளவை, வெல்லவாய, மொனராகலை, சியம்பலாண்டுவ, லாகுகல ஊடாக பொத்துவில் பானம ஓகந்த குடும்பிகலவில் அமைந்துள்ளன. பூங்காவின் நுழைவாயில் உள்ளது பானமய, பூங்காவின் அலுவலகம் அமைந்திருப்பது பானமவிலிருந்து 22 கிலோ மீற்றர் தூரத்திலாகும். சுற்றுலாப் பயணிகளின் தங்குமிட வசதிக்காக தும்முல்ல மற்றும் கிரிகல்பே சுற்றுலா விடுதிகள் இரண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் அதனை ஒதுக்கிக் கொள்வதனை கொழும்பில் அமைந்துள்ளவனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பிரதான அலுவலக்தினால் மேற்கொள்ளப்படுகின்றன. இயற்கை அழகின் இன்பத்தை சுதந்திரமாக அனுபவிப்பதற்காக ஹெரலிகஸ்ஆர, கும்புக 01, கும்புக 02, கல்அமுண, மோயவில் மைதான முகாம்களும் அமைந்துள்ளன.
Sinhala name | Tamil name | English name | Scientific name |
අලියා | ஆசிய யானை | Asian elephant | Elephas maximus |
කොටියා | புலி | Leopard | Panthera pardus kotiya |
තිත් මුවා | புள்ளி மான் | Spotted deer | Axis axis ceylonensis |
වල් ඌරා | காட்டுப் பன்றி | Wild Boar | Sus scrofa |
හිවලා | பொன்னிறக் குள்ள நரி | Golden jackal | Canis aureus |
වලහා | தேன் கரடி | Sloth bear | Ursus ursinus |
වල්හාවා | இந்திய முழி முயல் | Black napedrabbit | Lepus Nigricollis |
ඉත්තෑවා | முள்ளம்பன்றி | Porcupine | Hystr ixindica |
මුවා | இந்திய மான் | Deer | Muntiacus muntijak |
වල් මී හරකා | காட்டெருமை | Water buffalo | Bubalus bubalis |
මුගටියා | இந்திய சாம்பல் கீரிப்பிள்ளை | Mongoose | Herpestes edwardsil |
හෝතම්බුවා | சிவந்த கீரி | Ruddy mongoose | Herpestes smithii |
කරවැල් කොකා | செந்நாரை | Purple heron | Ardea purpurea |
ලතු වැකියා | மஞ்சள் மூக்கு நாரை | Painted stork | Mycteria leucocephala |
ලොකුසුදුකොකා | பெரிய கொக்கு | Great egret | Casmerodius albus |
තිත් හොට පැස්තුඩුවා | சாம்பல் கூழைக்கடா | Spot- billed pelican | Pelecanus philippensis |
Sinhala name | Tamil name | English name | Scientific name |
කණ කොකා | இந்திய குளத்துக் கொக்கு | Indian pond- horon | Ardeola grayii |
අලිමානාවා | கறுப்புக் கழுத்து நாரை | Black-necked stork | Ephippiorhynchus asiaticus |
හීන්මානාවා | சிறுத்த பெரு நாரை | Lesser adjutant | Leptoptilosjavanicus |
අළු කොකා | சாம்பல் நாரை | Grey heron | Ardea cinerea |
පොදු දම් කිතලා | நீலத் தாழைக் கோழி | purple swamphen | porphyrio porphyrio |
පාදලි මානාවා | வெண் கழுத்து நாரை | Woolly-necked stork | Ciconia episcopus |
පුංචි දිය කාවා | சின்ன நீர்க்காகம் | Little Cormorant | Phalacrocorax niger |
මහා දියකාවා | பெரிய நீர்க்காகம் | Great cormorant | Phalacrocorax carbo |
කුරුළු ගොයා | வைரி | Shikra | Accipiter badius |
බ්රහ්මණ උකුස්සා | செம்பருந்து | Brahming kite | Haliastur indus |
පොරෝලුවා | கொண்டலாத்தி | Common hoopoe | Upupa epops |
කස්බියානු මුහුදු ලිහිණියා | கஸ்பியன் ஆலா | Caspian tern | Hydroprogne caspia |
වල් පොල්කිච්චා | சோலைபாடி | White rumpedshama | Copsychus malabaricus |
ඇලි කොකා | சின்னக் கொக்கு | Little egret | Egretta garzetta |
ගැට කිඹුලා | செம்மூக்கு முதலை | Estuarine crocodile | Crocodylus porosus |
දාර කැස්බෑවා | பேராமை | Leatherback Sea Turtle | Demochelys coriacea |
පොතු කැස්බෑවා | அழுங்காமை | Hawks bill | Eretmochelys imbricata |
නිල්තල්මසා | நீலத் திமிங்கிலம் | Blue whale | Balaenoptera musculus |
මොරැල්ලා | மொரெல்லா | Morella | Zenarchopterus dispar |
උඩුප්පුවා | உடப்புவா | Uduppuwa | Butis butis |
ගංආරා | பூவிரால் | Ganara | Channa ara |
කනයා | கனயா | Kanaya | Channa gachua |
මස්පෙතියා | மஸ்பெதியா | Maspethiya | Puntius sarana |
කූනිස්සා | தசக்காலி ஓட்டு மீன்கள் | Shrimp | Shrimp species |
ඉස්සා | இறால் | Prawn | Prawn species |
කලපු කකුළුවා | களப்பு நண்டு | Lagoon crab | Lagoon crab species |
ගෙබි විශේෂ | தவளை வகைகள் | Frog and toad | Frog and toad species |
Sinhala Names | Tamil Names | English Names | Botanical Name |
කෝන් | பூக்கம் | Kon | Sheleichera oleosa |
හල්මිල්ල | சாவண்டலை மரம் | Halmilla | Berrya cordifolia |
මලිත්තන් | உகாய் | Malittan | Salvadora persica |
තිඹිරි | பத்திரி | Thimbiri | Diospyros malabarica |
පුස්වැල් | யானைக் கொழிஞ்சி | Puswel | Entada pursaetha |
නියගල | செங்காந்தன் | Flame lily | Gloriosa superba |
පලු | பாலை | Palu | Manilkara hexandra |
බුරුත | முதிரை | Ceylon Satain wood | Chloroxylon sweietenia |
නුග | ஆலமரம் | Banyan | Ficus benghalensis |
බෝ | அரச மரம் | Sacred fig | Ficus religiosa |
වරා | வெள்ளெருக்கு | Wara | Calotropis procera |
කටු ඉකිළි | கழிமுள்ளி | Katuikill | Acanthus ilicifolius |
බිං තඹුරු | அடும்பு | Bin thaburu | Ipomoea pescaprae |
ඕලු | நெய்தல் மலர் | Olu | Nymphaea nouchali |
නෙළුම් | தாமரை | Lotus | Nelumbo nucifera |
தொகுப்பாளர் – தம்மிகாமல்சிங்ஹ, மேலதிக செயலாளர், வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு
பூங்கா பற்றிய தகவல்களைத் தொகுத்தவர்- ஹஸினி சரத்சந்திர, பிரதம உத்தியோகத்தர், வன பாதுகாப்புத் திணைக்களம்
தமிழ் மொழிபெயர்ப்பு- ஏ.ஆர்.எப். றிப்னா, அபிவிருத்தி உத்தியோகத்தர், வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு
ஆங்கில மொழிபெயர்ப்பு (ஆவணங்கள்)- அசோக பலிஹவடன, மொழிபெயர்ப்பாளர், வனஜீவராசிகள் மற்றும் வனபாதுகாப்பு அமைச்சு
ஆங்கில வியாக்கியானம் (கதை)-தானுக மல்சிங்ஹ
இணைய வடிவமைப்பு- சீ. ஏ. டீ. டீ. ஏ.கொல்லுரே, முகாமைத்துவ சேவைஉத்தியோகத்தர், வனஜீவராசிகள் மற்றும் வனபாதுகாப்பு அமைச்சு
படங்கள்– ரோஹித குணவர்தன,மஹேக்ஷா சதுராணி பெரேரா(பட்டதாரி பயிற்சியாளர்), வனஜீவராசிகள்பாதுகாப்புத் திணைக்களம்
Cookie | Duration | Description |
---|---|---|
cookielawinfo-checkbox-analytics | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". |
cookielawinfo-checkbox-functional | 11 months | The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". |
cookielawinfo-checkbox-necessary | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". |
cookielawinfo-checkbox-others | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. |
cookielawinfo-checkbox-performance | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". |
viewed_cookie_policy | 11 months | The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. |