இந்நிகழ்வு 2017 ம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் திகதி இடம்பெற்றது. அப்போது நான் வஸ்கமுவ பூங்காப் பொறுப்பாளராகக் கடமையாற்றனேன்.அப்போது நான் வனஜீவராசிகள் திணைக்களத்தில சேவைக்கு இணைந்து மூன்று வருடங்கள்.
வனஜீவராசிகள் திணைக்களத்தில் சேவையாற்றும் போது ஒவ்வொரு முறையிலும் அடிக்கடி எமக்கு உளவு கிடைக்கும். மரம் வெட்டுதல், மிருகங்களை வேட்டையாடுதல், மாணிக்கம் அகழ்தல் என்பனஉளவுகளுக்குள் முக்கியமானவை. இத்தினத்தில் ஸங்ஸ்தாபிடிய எனும் பிரதேசத்துக்குச் சில நபர்கள் வேட்டையாட வந்ததாக எமக்குத் தகவல் கிடைத்தது. ‘ஸங்ஸ்தாபிடிய’ வஸ்கமுவ உள்ளேயுள்ள பிரதேசமொன்றாகும்இவ்வாறான நேரத்தில் மிருகங்களை வேட்டையாடுவதனை மிக விரைவாக நாம் தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பல்வேறு வகையான விலங்குகளை கொலை செய்ய முடியும். அதனால் விரைவாக எமது குழுவினரும் அவ்விடத்துக்குச் செல்ல ஆயத்தமானோம். என்னுடன் வன விலங்கு வன பாதுகாப்பு அதிகாரி சிந்தன பண்டார, வன விலங்கு காவலர் சந்திரலால் பண்டார, கள உதவியாளர் சாலிய பண்டார, கள உதவியாளர் சந்த சிரியானந்த போன்றோரும் இக்குழுவில் இணைந்தனர். நாம் வஸ்கமுவ பிரதான அலுவலகத்திலிருந்து ஸங்ஸ்தாபிடிய பிரதேசத்திற்கு வாகனத்தில் சென்றோம்.இது போன்ற சுற்றி வளைப்பின் போது தாக்குதல்கள் இடம்பெற முடியும் என்பதனால் நாம் செல்லும் போது ஆயுதங்களையும் எடுத்துச் செல்வோம்.
அன்று நாம் பிரதான அலுவலகத்திலிருந்து வெளியேறும் போது மாலை ஆறு மணி நாற்பத்தைந்து போல் இருக்கும். அப்பகுதி காடாகக் காணப்பட்டது. இருள் கூடிக் கொண்டே இருந்தது. பல வேட்டைக்காரர்கள் வருவதனை நாம் கண்டோம். அங்கே அவர்கள் ஐவர் இருப்பது போல் தென்பட்டது. அவர்கள் நாம் காத்திருந்த பக்கத்திற்கு வந்து கொண்டிருந்தனர். அவர்களின் கையில் இரண்டு துப்பாக்கிகளும் மின்சூள் போன்ற உபகரணங்களும் இருப்பதாகத் தென்பட்டது.
சாதாரணமாக வனஜீவராசிகள் திணைக்களத்தினால் சுற்றிவளைப்பு செய்யும் போது வேட்டைக்காரர்கள் பயப்படுவர். தயக்கமின்றி உடனடியாக அடிபணிவர்.
அன்று நாம் ஒரேயடியாக முன்னால் பாய்ந்து “நாம் வனஜீவராசிகள் திணைக்களத்தினர், நில்லுங்கள்” என அவர்களுக்குக் கட்டளையிட்டோம். அடிபணிவதற்குப் பதிலாக அவசரமாக அவர்கள் எமது பக்கத்திற்கு வெடி வைத்தனர். அது எதிர்பாராத சம்பவமொன்றாகும். எமது உயிர் ஆபத்திலுள்ளது என்று எமக்குத் தெரிந்தது.
அதனுடனே எமது பக்கத்திலிருந்தும் வேட்டைக்காரர்களுக்கு வெடி வைத்தனர். ஒரு வேட்டைக்காரருக்கு வெடி தாக்கியது. தலைக்கு துப்பாக்கிச் சூடு பட்டது போல் தென்பட்டது. வெடி தாக்கியதுடன் இரு புறமிருந்தும் துப்பாக்கிச் சூடு வைப்பது நிறுத்தப்பட்டது. துப்பாக்கிச் சூடு தாக்கிய நபருக்கு வருத்தம் போல் தென்பட்டது.ஏனைய வேட்டைக்காரர்களைக் கைது செய்து துப்பாக்கிச் சூடு தாக்கியவரை அண்மையிலிருந்த வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர்.
வைத்தியசாலையில் விரைவாக இரவு சுமார் எட்டு மணி முப்பது நிமிடமளவில் அவர் இறந்து விட்டார்.இத்தருணத்தில் துப்பாக்கிச் சூடு தாக்கி நாமும் காயப்படுவதற்கு இறப்பதற்கு இடமிருந்தது.
இந்நிகழ்வு தொடர்பாக வனஜீவராசிகள் திணைக்களத்தினால் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தற்போது அவ்வழக்கு விசாரணைக்குட்படுத்தப்படுகின்றது.
(வழக்குத் தொடரப்பட்டுள்ள சம்பமொன்றாகியமையால் வெடி வைப்பது பற்றிய சுருக்கமான விளக்கம் குறிப்பிடப்படவில்லை)
திரு.திலிப் டிலந்த சமரநாயக்க அவர்கள் குமண தேசிய பூங்காவில் பூங்காப் பொறுப்பாளராக தற்போது கடமையாற்றுகிறார். அவர் இலங்கையில் பல்வேறு தேசிய பூங்காக்களில் சேவை செய்துள்ளார். யால, உடவளவை, லுணுகம்வெஹெர, வஸ்கமுவ, பிரதான அலுவலகத்தில் சட்டப் பிரிவு, வளவை இடது கரை (Walawa left bank) எனும் சேவை நிலையம் அவர் சேவைசெய்துள்ள பல சேவைத் தளங்களுள் சிலவாகும்.
திலிப்சமரநாயக்க அவர்கள் இரு மகன்களின் அன்புத் தந்தையாவார். ஹொரண வெல்ல பிடியவில் வசித்து வருகிறார்.
பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு உரித்தாக அமைந்துள்ள வஸ்கமுவ தேசிய பூங்கா இலங்கையில் வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் வியாபித்துள்ளது. வனஜீவராசிகள் வகைகள் 300 க்கு அண்மித்த எண்ணிக்கைகளுக்கு வாழிடத்தை வழங்குகின்ற இத்தேசிய பூங்கா கிழக்கு எல்லை மகாவலி கங்கையினாலும்,மேற்கிலிருந்து வடக்கு வரை கழு மற்றும் அம்பன் எனும் கங்கைகளினாலும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. 1977 ஆம் ஆண்டு துரித மகாவலி யோசனைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது காடுகள் மற்றும் வன விலங்குகளின் இயற்கை வாழிடங்கள் பெருமளவு அழிக்கப்பட்டன. அவ்வாறே மகாவலி அபிவிருத்தி செயற்றிட்டத்தில் இடம்பெயர்ந்த வன விலங்குகளின் பாதுகாப்பு மற்றும் அடைக்கலம் வழங்குவதற்காக அச்செயற்றிட்டத்தின் கீழ் 1984 இல் பிரகடனப்படுத்தப்பட்ட தேசிய பூங்காக்கள் நான்கில் வஸ்கமுவ தேசிய பூங்காவும் ஒன்றாகும். மாதுறு ஓயா,சோமாவதிய மற்றும் மின்னேரிய தேசிய பூங்கா அவ்வாறு பிரகடனப்படுத்தப்பட்ட ஏனைய தேசிய பூங்காக்களாகும்.
வஸ்கமுவ தேசிய பூங்கா 1984 ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டதோடு இதன் பரப்பளவு 37,062.9 ஹெக்டயாருக்கு அண்மித்ததாகும்.கொழும்பிலிருந்து 225 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள இத்தேசிய பூங்கா சூழல் மற்றும் விலங்கு பல்வகைமையினைக் கொண்ட ஓர் அழகான தேசிய பூங்காவாகும்.
நீர்வளம் குறையாது கிடைக்கும் வஸ்கமுவ தேசிய பூங்காவிற்குள் கி.பி.1153 – 1186 இல்முதலாம் பராக்கிரமபாகு மன்னரின் ஆட்சிக் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டதாகக் கருதப்படும் காலிங்க யோத கால்வாய், மாலகமுவ, வில்மிடிய, தாஸ்தொட போன்ற கால்வாய்களின் பாதையில் இடிபாடுகளையும் இன்னும் கண்டு கொள்ள முடிவதுடன் துட்டகைமுனு மன்னருக்கும் எல்லால மன்னருக்கும் இடையில் இடம்பெற்ற போரின் போது முகாமிட்டதாகக் கணிக்கப்படும் போர்க்களம், அப்போர் சாசனத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்குத் தடையாக அமையும் என சந்தேகித்த ஞானமடைந்த பிக்குகள் அதைத் தடுப்பதற்கு உருவாக்கப்பட்ட மலையான ரகனன்மெவூ கந்தவும் வஸ்கமுவ தேசிய பூங்காவிற்குள் அமைந்துள்ளது. சுமார் 1800 வருடங்கள் பழமை வாய்ந்த புத்த பெருமானின் உருவச் சிலையொன்று, பழைய கற்றூண்கள் பலவும் காணப்படுவதுடன் இப்பூங்கா பிரசித்தி பெற்ற கலாச்சாரத் தளமாகவும் கருதப்படுகின்றது.
காலநிலையில் வறண்ட மற்றும் இடைநிலை வலயத்திற்கு உரியதாக உள்ளதோடு பெரும்பாலும் ஒக்டோபர்- பெப்ரவரி மாதங்களில் வடகிழக்கு பருவ மழையின் தாக்கம்காணப்படுகிறது. மார்ச்- மே மாதங்களில் பருவ மழை கிடைப்பதுடன், மழை குறைவாகக் கிடைக்கும் காலங்கள் சுற்றுலாவிற்கு உகந்த காலமாகும். வருடாந்த மழைவீழ்ச்சி வடக்கில் 1750 மில்லிமீற்றரிலிருந்து தெற்கே 2250 மில்லிமீற்றர் வரை உயர்ந்து செல்வதோடு சாதாரண வருடாந்த வெப்பநிலை சுமார் 27 பாகை செல்ஸியஸ் ஆக இருப்பதுடன் வருடாந்தம் முழுவதும் சிறு மாற்றமும் நிகழ்கின்றது. தென்மேற்கு பருவ மழை காலத்தில் மே- ஆகஸ்ட்) மாதங்களில் காற்றின் வேகம் அதிகமாகவும் வறண்டதாகவும், வடகிழக்கு பருவக் காற்று குறைவாகவும் ஈரப்பதமாகவும் இருப்பதனைக் காண முடிகின்றது.
மகாவலி கங்கை, அம்பன் கங்கை மற்றும் களு கங்கை ஆகிய மூன்று வடிகால் படுக்கைகள் இப்பூங்காவினுக் அமைந்திருப்பதுடன் மேலும் கராபன கால்வாய், கிருளே எல,வெந்திகே எல, பலுகக எல, மிதிரனே எல, நவகக எல, வஸ்கமுவ ஓயா போன்ற நீரோடைகளாலும் நீர் வளத்தைப் பெற்றுக் கொள்கிறது. சாதாரணமாக கடல் மட்டத்திலிருந்து சுமார் 470 மீற்றர் உயர்வான கண்கவர் வெள்ளை மலையுடன் தொடர்புடையதாகப் பாய்கின்ற ஆறுகள் மற்றும் நீரோடைகள் பூங்காவிற்கு நீரை வழங்குகின்றன. பூங்காவின் உயர் நீரேந்துப் பிரதேசங்களில் சிவப்பு நிறத்திற்கு சார்ந்த கபில நிற தரையொன்று இருப்பது போன்றே சேறு நிறைந்த மண்ணையும் கொண்டுள்ளதோடு,கொண்டலைட், திருவானை மற்றும் கிரிகருவ போன்று கனிய வளங்களையும் கொண்டுள்ளது. தேசிய பூங்காவில் உயர்ந்த உயர் பல்வகைமைக்கான காரணம், பூங்காவானது நாலா புறங்களாலும் பாய்கின்ற ஆறுகளினைக் கொண்ட காரணத்தினால் மண்ணின் செழிப்பு மற்றும் பன்முகத்தன்மை அதிகரித்துச் செல்கின்றமையாகும்.
வஸ்கமுவையில் காடுகளில், இலங்கையின் வறண்ட வலயத்தில் பசுமையான காடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றதோடு, இப்பூங்காவினுள் முதன்மைக் காடுகள், இரண்டாம் நிலைக் காடுகள், நதிக்காடுகள், புல்வெளிகள், முட்புதர்கள் மற்றும் பாறைப் பகுதிகளையும் கொண்ட இலங்கையின் பாதுகாப்புப் பிரதேசங்களில் உயர் உயிர்ப் பல்வகைமையைக் காட்சிப்படுத்துகின்ற பூங்காவாகும். பூங்காவில் தாவர வகைகள் 150 க்கும் கூடிய அளவில் பதிவாகியுள்ளதோடு,நீர்ச் செடியான கிரிப்டகோரின் வல்கேரி மற்றும் முன்ரோனியா பியுமிலா எனும் பொருளாதார மதிப்பு மிக்க அரிய இரண்டு தாவர வகைகள் ஆகும். காடுகள் அடுக்குகள் பலவற்றை உள்ளடக்கிய காடுகளில் உயர் அடுக்கு தாவரமாக முதிரை, பாலை, வெண்ணங்கு, கருங்காலி, காட்டு நொச்சி, வீரை, சமுளை போன்ற தாவரங்களும் புதர்க் காடுகளுக்கு அருகில் விளா, ரது வா,வெட்புலா போன்ற ஏனைய அடுக்குகளின் தாவரங்களும் காணப்படுகின்றன.
நீர் மற்றும் நீரேந்துப் பகுதிகளுடன் கூடிய காடுகள் பெருமளவு விலங்கு வகைகளுக்கு உதவுவதுடன் வஸ்கமுவ பூங்காவின் உரிமையாளர்களாக பாலூட்டி வகைகள் 23 உம், பறவையினங்கள் 149 உம்,ஈரூடக உயிரினங்கள் 8 உம், ஊர்வன வகைகள்17 உம், வண்ணத்துப் பூச்சியினங்கள் சுமார் 50 உம் வாழ்கின்றன.
இங்கு பாலூட்டி வகைகளில் விசேடமாக 2 வகைகள் இலங்கைக்கு உரித்தாவதோடு, 6 வகைகள் அழிந்து செல்லும் அச்சுறுத்தலுக்கும், பறவை வகைகள் 8 உம் உரித்தாக இருப்பதுடன், 9 வகைகள் அழிவுறும் அச்சுறுத்தலுக்கும், ஊர்வன வகைகளில் 5 உம் உரித்தாக இருப்பதுடன், 8 வகைகள் அழிவுறும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளன.
தேசிய பூங்காவில் இலங்கை காட்டு யானைகள் கூட்டம் 150 ஆக ஆசிய யானைகள், மகாவலி கங்கைப் பகுதியில் உலாவுவதுடன் இவ்யானைகள் குளத்து யானைகள் எனவும் வழக்கில் பயன்படுத்தப்படுகின்றன.
பூங்காவில் அதிகளவில் காட்டு யானைகளைக் கண்காணிக்க முடிகின்றது.
இலங்கைக்கு உரித்தான மந்தி மற்றும் சிறு குரங்கு, நரிகள்,தேவாங்கு, காட்டுப் பன்றிகள், புற்றரைகளை மேய்ந்து உலாவித் திரிகின்ற காட்டு எருமைகள் மற்றும் புள்ளி மான்கள் அவற்றின் அவதானங்கள் பொதுவாகக் காணப்படுவதுடன், அரிய வகைப் புலிகள் மற்றும் கரடிகள் என்பவற்றையும் அரிதாகக்காண முடியும்.
இலங்கைப் பறவை இனங்களில் 143 இனை இப்பூங்காவினுள் கண்டு கொள்ள முடியும். சென்முகப் பூங்குயில், இலங்கைக் காட்டுக் கோழி, சிறுத்த பெரு நாரை, குக்குறுவான், தீக்காக்கை, சின்னக் காட்டுக் கோழி,இலங்கை சாம்பல் இருவாய்ச்சிஎன்பன இவற்றுள் விசேடமானவை.
இலங்கைக்கு உரித்தான மற்றும் அழிவுறும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் ஈரூடக விலங்கு வகைகளாக இலங்கை மரத் தவளை, ஊர்வன வகையான இலங்கை அரணை, ஓணான் வகையான சிவப்பு உதட்டுப் பல்லி மற்றும் பெரிய காது இல்லாத பல்லி, பாம்பு வகையான இலங்கை பறக்கும் பாம்பு என்பன வாழ்வதுடன் உடும்பு, சதுப்பு முதலை, நீர் உடும்பு என்பனவும் இதில் அடங்கும். இங்கு காணப்படும் நீர்த்தேக்கங்களுக்குரிய மீனினங்களாக கல் பாடியாவும், வண்ணத்துப் பூச்சிகள் பலவும் பூங்காவை சுற்றிப் பறப்பதனைக் காண முடிவதுடன், வண்ணத்துப் பூச்சியினங்கள் 50 உம் கிடைக்கப் பெற்றுள்ளன.
தங்குமிட வசதிக்காகப் பூங்காவினுள் கந்துருபிடிய, வவுல்எபே மற்றும் மகாவலிபோன்ற (நதிக்கு அருகில்) சுற்றுலா விடுதிகள் மூன்றும் ஹதரமங் ஹந்திய, மகாவலி 1,மகாவலி 2,மெதபிடிய 1, மெதபிடிய 2,வவுல்எபே மற்றும் உல்பத் 7 என்னும் முகாம்களின் நிலமும் பூங்காவிற்குள் அமைந்திருப்பதுடன் அவற்றை ஒதுக்குவதற்குக் கொழும்பிலுள்ள வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தினால் மேற்கொள்ளப்படும்.
Sinhala name | Tamil name | English name | Scientific name |
අලියා | காட்டு யானைகள் | Asian elephant | Elephas maximus |
මහ වදුරා | மந்தி | Southern Purple faced langur | Semnopithecus senex |
රිළවා | சிறு குரங்கு | Toque Macaque | Macaca sinica |
හිවලා | நரிகள் | Golden jackal | Canis aureus |
උනහපුලුවා | தேவாங்கு | Gray Slender Loris | Loris lydekkerrianus |
වල් ඌරා | காட்டுப் பன்றிகள் | Wild Boar | Susscrofa |
වල් මී හරකා | காட்டு எருமைகள் | Water buffalo | Bubalus bubalis |
තිත් මුවා | புள்ளி மான் | Spotted deer | Axis axis ceylonensis |
කොටියා | புலி | Leopard | Ardeacinerea |
වලසා | கரடி | Sloth bear | Melursus ursinus |
වතුරතු මල්කොහා | சென்முகப் பூங்குயில் | Red- faced malkoha | Phaenicophaeus pyrrhocephalus |
වලි කුකුළා | இலங்கை காட்டுக்கோழி | Sri lanka junglefowl | Gallus lafayetill |
බහුරුමානාවා | சிறுத்த பெரு நாரை | Lesser adjutant | Leptoptilos javanicus |
රන් නළල් කොට්ටෝරුවා | குக்குறுவான் | Yellow-fronted barbet | Megalaima flavifrons |
ශ්රී ලංකා සිළු මහාකවුඩා | தீக்காக்கை | Srilanka trogon | Harpactes fasciatus |
හබන් කුකුලා | சின்னக் காட்டுக் கோழி | Srilanka Spurfowl | Galloperdix bicalcarata |
අළු කෑදැත්තා | இலங்கை சாம்பல் இருவாய்ச்சி | Srilanka grey hornbill | Ocyceros gingalensis |
ලංකා බැදි මැඩියා | இலங்கை மரத் தவளை | Sri Lanka wood frog | Rana gracilis |
ලක්හීරළුවා | இலங்கை அரணை | Sripada forest skink | Lankascincus sp |
තොල විසිතුරු කටුස්සා | சிவப்பு உதட்டுப் பல்லி | Red lipped lizard | Calotes ceylonensis |
දුම්බොන්නා | இந்தியன் ரோலர் | Indian roller | Coracias benghalensis |
පිණුම් කටුස්සා | பெரிய காது இல்லாத பல்லி | Earles’s lizard | Otocryptis wiegmanni |
දගර දණ්ඩා | இலங்கை பறக்கும் பாம்பு | Sri Lanka fling snake | Chrysopelea taprobanica |
තලගොයා | உடும்பு | Land monitor lizard | Varanus bengalensis |
කබරගොයා | நீர் உடும்பு | Asian water monitor | Varanus salvator |
හැල කිඹුලා | சதுப்பு முதலை | Mugger crocodile | Crocodylus palustris |
ගල්පාඩියා | கல்பாடியா | Ceylon logsucker | garra ceylonensis |
Sinhala Names | Tamil Names | English Names | Botanical Name |
පලු | பாலை | Ceylon Iron wood | Manilkara hexandra |
වීර | வீரை | Hedge Boxwood | Drypetes sepiaria |
බුරුත | முதிரை | Satin | Chloroxylon swietenia |
මිල්ල | காட்டு நொச்சி | Milla | Vitex altissma |
වෙලන් | வெண்ணங்கு | Welan | Pterospermum canescens |
හල්මිල්ල | சாவண்டலை மரம் | Halmilla | Berriya cordifolia |
කළුවර | கருங்காலி | Ebony | Diospyros ebenum |
දිවුල් | விளா | Divul | Limonia acidissima |
රතුවා | ரது வா | Rathuwa | Cassia roxburghii |
කටුපිල | வெட்புலா | Katupila | Flueggea leucopyrus |
ஆசிரியர் – டீ .மல்சிங்ஹ, மேலதிக செயலாளர், வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு உதவியாளர்கள்
பூங்கா பற்றிய தகவல்களைத் தொகுத்தவர்– ஹஸினி சரத்சந்திர, பிரதம உத்தியோகத்தர், வன பாதுகாப்புத் திணைக்களம்
தமிழ் மொழிபெயர்ப்பு– ஏ.ஆர்.எப். றிப்னா, அபிவிருத்தி உத்தியோகத்தர், வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு
ஆங்கில மொழிபெயர்ப்பு (ஆவணங்கள்)– அசோக பலிஹவடன, மொழிபெயர்ப்பாளர், வனஜீவராசிகள் மற்றும் வனபாதுகாப்பு அமைச்சு
ஆங்கில மொழிபெயர்ப்பு (கதை)– டீ. மல்சிங்ஹ
இணைய வடிவமைப்பு– என்.ஐகயத்ரி, அபிவிருத்தி உத்தியோகத்தர், வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு
படங்கள்– ரோஹித குணவர்தன,வன பாதுகாப்புத் திணைக்களம்
சிங்கள தட்டச்சும் ஏனைய உதவிகள்– அருணிபலாபத்வல, வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு
Cookie | Duration | Description |
---|---|---|
cookielawinfo-checkbox-analytics | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". |
cookielawinfo-checkbox-functional | 11 months | The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". |
cookielawinfo-checkbox-necessary | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". |
cookielawinfo-checkbox-others | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. |
cookielawinfo-checkbox-performance | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". |
viewed_cookie_policy | 11 months | The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. |