எனக்கு 1998 ஆம் ஆண்டில் வனவிலங்கு பாதுகாப்பு இரண்டாம் தர அதிகாரியாக மாதுறு ஓயா தேசிய பூங்காவிற்கு முதல் நியமனம் கிடைத்தது. மாதுறு ஓயா பூங்காவின் தலைமையகத்தில் தங்கக் கிடைத்தது.
அக்காலத்தில் பூங்காவின் பொறுப்பாளராக ரஞ்சித் ஜயசிங்க அவர்கள் இருந்தார்கள். அவர் தென்னாபிரிக்காவில் விசேட பயிற்சி பெற்ற அதிக அனுபவமுள்ள அதிகாரியாவார். மேலும் சுமார் ஐந்து காவலர்களும் அங்கிருந்தனர். நான் அங்கு கடமையாற்றச் சென்று இரண்டு மூன்று மாதங்கள் செல்லும் போது அதிகாலை சுமார் ஆறு மணியளவில் வனவிலங்குக் காவலர் பீட்டர் சிங்ஞோ தலைமையகத்துக்கு வந்து பூங்காவின் பிரதான பாதைக்கு அண்மையில் யானையொன்று இறந்திருப்பதாக எமக்குத் தகவல் தந்தார்.
அதன் பின்னர் பூங்காப் பொறுப்பாளரான ரஞ்சித் அவர்கள் அவ்விடத்துக்குச் செல்ல ஆயத்தமானார். நானும் விருப்பத்துடன் அப்பயணத்திற்கு ஆயத்தமானேன். ரஞ்சித் அவர்களும் நானும் பீட்டர் சிங்ஞோவும் கால்நடை மூலமே செல்வதற்கு வெளியானோம். பிரதான பாதையில் சுமார் மூன்று கிலோ மீற்றர் நடந்து சென்று கிளை வீதிக்குத் திரும்பி பற்றையுடனான காட்டுப் பகுதிக்குள் சுமார் இருநூறு மீற்றர் அளவிற்குச் சென்றோம்.
காட்டிற்குள் நிழலுடனான மரமொன்றின் கீழ் கொழுத்த இளமையான யானையொன்று விழுந்து படுத்திருப்பதனை நாம் கண்டோம். அதற்கு சுமார் 25 வயது போல் இருக்கும் என ரஞ்சித் அவர்கள் கூறினார்கள். இப்பகுதியில் பற்றைக் காடே காணப்பட்டது.
யானை இறந்திருப்பதனை அறிந்திருந்தமையினால் அதைத் தொட்டுத் தடவும் அளவிற்கு நெருங்கினோம். யானையின் பின் பக்கத்தில் நானும் ரஞ்சித் அவர்களும் நின்றிருந்தோம். பீட்டர் யானையின் தும்பிக்கையின் பக்கத்திற்குச் சென்றார்.
“இது இறந்து ஒரு நாளை அண்மித்துள்ளது, அதனால்தான் இந்தளவிற்கு வயிறு நிறைந்துள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் வயிறு வெடிக்கும்” என ரஞ்சித் அவர்கள் கூறினார்கள். அவர் தொடர்ந்தும் யானையின் நிலைமையைப் பற்றி என்னிடம் கூறினார்.
இதற்கிடையில் பீட்டர் யானையின் முன்னால் சென்று அதன் காதைப் பிடித்தார். அதனுடனே யானை காதை ஆட்டியது. சார் இது இறந்தில்லை என்று பீட்டர் கத்தினார். அதனுடனே ஒன்றும் நடக்காதது போன்று ஒரேயடியாக யானை எழும்பியது. என்ன நடந்தது என்பதனைச் சரியாக நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. நாம் மூவரும் மூன்று பக்கங்களுக்கு ஓடி விட்டோம். பயத்தின் மிகுதியால் செய்வதறியாது தடுமாறினோம். சுமார் அரை மணி நேரத்தின் பின்னர் சத்தமிட்டு கூச்சலிட்டுத்தான் நாம் ஓரிடத்திற்கு ஒன்று கூடி மீண்டும் வந்தோம்.
யானையின் வயிறு காற்றினால் நிரம்மியிருக்கவில்லை. மாறாக அதன் வயிற்றில் உணவு நிறைந்திருந்தது. இந்த யானை முந்தைய நாள் இரவு அண்மையிலுள்ள கனித்திகல எனும் கிராமத்திற்குள் புகுந்து வயல் நிலங்களிலிருந்தவற்றை சாப்பிட்டு விட்டு மிகவும் செளகரியமாக உறங்கிக் கொண்டிருந்துள்ளது.
இது எனது வாழ்வில், முதலாவது தொழிலில், முதலாவதாகத் தொழில் புரியும் இடத்தில், முதல் அனுபவம் ஆகும். அதன் போது என்னுடயை வயது பத்தொன்பது போல் இருக்கும். இந்நிகழ்வை எனக்கு ஒரு போதும் மறக்க முடியாது.
புபுது ஸுரங்க ரத்நாயக்க அவர்கள் தற்போது வில்பத்து தேசிய பூங்காவில் பூங்காப் பொறுப்பாளராகக் கடமையாற்றுகிறார். 09.11.1998 ஆம் திகதி வனவிலங்கு பாதுகாப்பு இரண்டாம் தர உத்தியோகத்தராக தமது முதல் பதவியிலேயே மாதுறு ஓயா தேசிய பூங்காவிற்கு வந்த அவர் இதுவரை வஸ்கமுவ, உடவளவை, குமண, யால மற்றும் வில்பத்து ஆகிய பூங்காக்களிலும் மற்றும் விக்டோரியா, ரன்தெனிகல, ரன்தெம்பெ போன்ற சரணாலயங்களின் பிரதான தலைமையகங்களிலும் சேவையாற்றியுள்ளார்.
க.பொ.த உயர் தரத்தில் விஞ்ஞானப் பிரிவில் திறமைச் சித்தியுடன் சித்தியடைந்து போட்டிப் பரீட்சையொன்றில் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு வந்த அவர் அச்சந்தர்ப்பத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 24 பேர்களுள் உட்படுவதற்குப் பாக்கியம் பெற்றார். இதுவரைஸுரங்க ரத்நாயக்க அவர்கள் இந்தியாவில் வனஜீவராசிகள் முகாமைத்துவப் பயிற்சியொன்றைப் பெற்றுள்ளதோடு, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலும் பயிற்சி பெற்றுள்ளார்.
தற்காலத்தில் ஸுரங்க ரத்நாயக்க அவர்கள் மகள் ஒருவரின் அன்புத் தந்தையாக இருப்பதுடன், கடுவெல, பியகம பிரதேசத்தில் வசிக்கிறார்.
துரித மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்வதற்கு உட்பட்ட நீர்த்தேக்கம் ஐந்தில் நீரேந்துப் பிரதேசங்களை உள்ளடக்கி 1983 நவம்பர் மாதம் 09 ஆம் திகதி இலங்கையில் ஐந்தாவது தேசிய பூங்காவாக மாதுறு ஓயா தேசிய பூங்கா பிரகடனப்படுத்தப்பட்டது. மாதுறு ஓயா, என்.டீ.கே, உல்ஹிடிய, ரத்கித மற்றும் ஹென்னானிகல நீர்த்தேக்கத்தை அபிவிருத்தி செய்யும் போது இடம்பெயரும் வனவிலங்குச் சமூகத்திற்கு வாழ்விடங்களை அளிப்பதற்கும் அந்த நீர் ஆதாரங்களால் வளம் பெறும் நீரேந்துப் பிரதேசங்களைப் பாதுகாத்தலும் மாதுறு ஓயா தேசிய பூங்கா உருவாவதற்கான பிரதான இலக்காகும்.
மாதுறு ஓயா தேசிய பூங்காவின் நிலம் 58850 ஹெக்டயார் பரப்பளவைக் கொண்டது. வடமேல், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கு உரிய காட்டுப் பகுதி பொலன்னறுவை, அம்பாறை மற்றும் பதுளை மாவட்டங்களுக்குள் அமைந்துள்ளது. முழு காட்டுப் பகுதியும் உலர் வலயத்துக்குள் பரந்துள்ளது. இப்பூங்கா கொழும்பிலிருந்து 288 கிலோ மீற்றர் (179 மைல்) வடகிழக்கில் அமைந்துள்ளது. மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் உருவான தேசிய பூங்காவான வஸ்கமுவ, சோமாவதிய, ஜலகெலும் நிம்ன மற்றும் மாதுறு ஓயா என்பவற்றில் மாதுறு ஓயா தேசிய பூங்கா விசேடமானது.
மாதுறு ஓயா தேசிய பூங்காவின் இலக்கை மென்மேலும் தெளிவுபடுத்துவதாயின் உள்நாட்டு இயற்கை வளங்களையும் சூழல் நடவடிக்கைகளையும் பாதுகாப்பதுடன், பூங்காவினுள் நீரின் தரத்தினையும் நீர்த்தேக்கங்களின் அளவினை உறுதிப்படுத்துவதும், சுற்றுச்சூழல் பயணத்திற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதும் பூங்காவின் புறத்திலுள்ள பிரதேசங்களில் பிரதேச மக்களுக்கு இலாபத்தை ஈட்டிக் கொடுக்கும் நோக்குடன் இப்பூங்கா உருவாக்கப்பட்டது.
மாதுறு ஓயா அமைந்திருப்பது மகாவலி கங்கையின் ஓட்டத்திலிருந்து வெகு தூரத்திலாகும். மகாவலி நீரினால் போசணை பெறும் இரட்டை சகோதரிகளாக இணைந்துள்ள உல்ஹிடிய மற்றும் ரத்கித என இரு நீர்த்தேக்கங்களும் இங்கு பிரதானமாக உள்ளன. மகாவலி நீர் உல்ஹிடிய ஓய ஊடாகப் பாய்ந்து உல்ஹிடிய நீர்த்தேக்கமும், உல்ஹிடிய இரட்டை நீர்த்தேக்கங்களான ரத்கித நீர்த்தேக்கத்தின் முடிவு அமைக்கப்பட்டுள்ள 04 மைல் நீளமான சுரங்கமொன்றினூடாக மாதுறு ஓயா நீர்த்தேக்கத்திற்கு நீரைக் கொண்டு செல்கின்றது. நீர்த்தேக்கத்தில் தேங்கும் நீரின் கொள்ளளவு 46 கோடி கன மீற்றர் 70 லட்சம் போல் இருக்கும்.
அம்பாறை மற்றும் பதுளை மாவட்டங்களுக்குப் போன்றே பொலன்னறுவை மாவட்டத்தின் எல்லையாக அமைந்துள்ள மாதுறு ஓயாதேசிய பூங்கா வறண்ட வலயத்துக்கு உரித்த்தான ஒக்டோபர், பெப்ரவரி மாதங்களில் வடகிழக்கு பருவக்காற்று மழை மூலம் மார்ச் – மே மாதங்களில் தென்கிழக்கு நீண்ட பருவ மழை மூலம் போசணையைப் பெறுவதுடன், சாதாரண மழைவீழ்ச்சி சுமார் 2000 மில்லி மீற்றர் ஆவதோடு, சாதாரண வெப்பநிலை 27 பாகை சென்றிகிரேட்டையும் உடைய பிரதேசமாகும். இங்கு பிரதான நிலப்பரப்பு அம்சஙகளாக பூங்காவின் தென்மேற்குப் பகுதியில் 8 கிலோ மீற்றர் (5.0 மைல்) ஆக நீண்ட பாறை மலைகள் காணப்படுகின்றன. செம்மண்ணை முதன்மையாகக் கொண்டுள்ளதுடன் பூங்கா முழுவதும் ஒரே மாதிரியாகப் பரந்து காணப்படுவதில்லை என்பதுடன் காபன் திரவியங்களைக் கொண்ட இங்குள்ள மண் விரைவாக உலர்வதற்கு உட்படுகின்றது. கவல ஏரி பிரதேசத்தில் காணப்படும்வெந்நீர்க் குமிழிகள் சுற்றுலாப் பயணிகளின் மனதைக் கவரும் இடமொன்றாகும் என்பதனைக் குறிப்பிட முடியும்.
மாதுறு ஓயா அமைந்திருப்பது இயற்கையானதும் மானிட போன்ற சிக்கலான பக்கங்களின் சூழல் அமைப்பாகக் கசாணப்படுவதுடன் அவ்வாறான பாரிய பிரதேசம் சிறு அலகுகளுக்கு அல்லது முகாமைத்துவ வலயங்களாகப் பிரிப்பது அத்தியாவசியமானதாகும்.
அந்த சகலவையும் அங்கு நிர்வாகம், முகாமைத்துவம் மற்றும் பாவனை முறைக்கேற்ப வேறுபடுகின்றன. அனுமதி வழங்கப்பட்டுள்ள மனித நடவடிக்கைகள் ஒரு வலயத்திலிருந்து இன்னொரு வலயத்திற்கு கவனிக்கப்படக் கூடியவாறு வேறுபட முடியும். நிர்வாகத்தின் இலகுக்காக, மாதுறு ஓயா கீழ்வரும் முகாமைத்துவ வலயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை,
1) இயற்கை வலயம்
2) கலாச்சார வளங்கள் வலயம்
3) அபிவிருத்தி வலயம்
4) காட்டு தாழ்வாரம் நடைபாதை அல்லது இயற்கை பாதுகாக்கப்பட்ட பிரதேசம்
5) தூண்டல் வலயம் என்பனவாகும்.
பிரபல்யமானதும் புராதன ஆவணங்களின்படி இப்பிரதேசம் மிக முந்தைய வரலாற்றிலிருந்தே பாதுகாக்கப்பட்ட காடாக அடையாளப்படுத்துவதற்கான காட்டு நிலமாகும். மகாவம்சத்தின்படி கி.பி. 273 இல் மகாசேன மன்னனாலும் கி.பி. 1055 – கி.பி. 1110 வரை ஆட்சி செய்த 1ஆம் விஜயபாகு மன்னனதும் குறையாத பராமரிப்பு மாதுறு ஓயாவிற்கும் கிடைத்துள்ளதாகக் குறிப்பிப்பட்டுள்ளது. பண்டைய மஹாதாரகல்ல என்று அழைக்கப்பட்ட இப்பிரதேசம் பிற்காலத்தில் ஹெல மொழிக்கு ஏற்ப மாதுறு ஓயா என்னும் பெயரில் அடையாளப்படுத்தப்பட்டது. மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் பின்புறத்தில் அமைந்நதுள்ள புராதன சதுப்பு நிலம் பண்டைய வாபி தொழிநுட்ப அறிவிற்கான மௌனமான சாட்சியொன்றுக்கு சமமானதாகும்.
அவ்வாறே தற்போது இலங்கையில் வாழும் பழங்கால வேடர் மக்கள் மாதுறு ஓயா தேசிய பூங்காவிற்கு அருகில் வசிப்பதுடன் அவர்களுக்கும் தேசிய பூங்காவிற்கும் இடையில் நல்லிணக்கமும் காணப்படுகின்றது.
இப்பிரதேசத்தின் பிரதான சூழல் அமைப்பாக வெப்ப மண்டல உலர்ந்த கலப்பு பசுமையான காடுகளாகும். மகாவலியிலிருந்து தொலைவில் அமைந்துள்ள மாதுறு ஓயா தனக்கே உரித்தான அழகைக் கொண்டுள்ள கானகமாகக் குறிப்பிட முடியும். நீர்த்தேக்கத்தைச் சுற்றி மரங்களையுடைய பல தாவரங்களைக் காண முடியும். உலர் வலயக் காடுகளாக வீரை, பாலை, முதிரை, வெண்ணங்கு என்பன முதன்மை வாய்ந்தவை. எனினும் நீர்நிலைகளுக்கு அருகில் நதியின் அம்சங்களைக் கொண்ட வெண்மருது, பத்திரி, இலுப்பை போன்ற தாவரங்களும், ஈரமான மற்றும் உலர்ந்த சூடான பாறைகளுடன் கித்துள், நாகமரம் போன்ற இரண்டாம நிலைக் காடு மற்றும் பாறைகள் நிறைந்த முட் பற்றைகளைக் கொண்ட புல்வெளிகளையும் காணலாம்.
கம்பீரமான யானைகளின் பரம்பரை முதல் சிறிய எறும்பு வரை வறண்ட மண்டலத்தில் மாதுறு ஓயாவில் பல வகையான விலங்குகள் காணப்படுகின்றன. இலங்கைக்கு உரித்தான ஓர் அரிய பறவையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செம்முகப் பூங்குயிலுக்கு மாதுறு ஓயா உணுகிரிகலயைச் சுற்றியுள்ள காடு நடமாடுவதற்கு ஒரு சிறந்த இடமாகும்.
யோத அலிபனாவ என்பது சுற்றுலாக் கவர்ச்சியை வெற்றி கொண்ட ஓர் இடமாகும். அவ்வாறான அவ்விடத்தில் காணப்படும் இரண்டுஆலமரங்களுக்கிடையில் காட்டு யானைகள் எப்போதும் பயணிப்பதும் வெளிப்புற முனைகளில் அரிப்பு காரணமாக சீப்பின் பற்கள் போன்ற அதற்குச் சமமான ஏராளமான ஆலமர விழுதுகள் ஒரு கோட்டில் அமைந்திருப்பது ஒரு பெரிய சீப்பை நினைவூட்டுகிதாக உள்ளது.
பாலூட்டி இனங்கள், ஊர்வன வகைகள், ஈரூடக வாழிகள், வண்ணத்துப் பூச்சியினங்கள் மற்றும்பூச்சிகளின் பன்முகத் தன்மையும் சிறந்த சிறந்த முறையில் பரந்திருப்பதனைக் காண முடிகின்றது. அச்சுறுத்துக்கு உள்ளாகியுள்ள பாலூட்டி இனங்கள், ஊர்வன மற்றும் மீனினங்கள் பூங்காவில் பரவலாகக் காணப்படுகின்றன. அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள விலங்கினக் குழுவாக யானை, சிறுத்தை, செம்முகப் பூங்குயில், நீர் உடும்பு, சதுப்பு நில முதலை, மலைப்பாம்பு என்பனவாகும். மேலும் சிறுத்த பெருநாரை, வெண்கழுத்து நாரை, செம்பருந்து, மஞ்சள் மூக்கு நாரை, மலபார் சாம்பல் இருவாச்சி என்னும் பறவைகளும் மரை, பொன்னிறக் குள்ளநரி, எருமை, இலங்கைப் புள்ளிமான், காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, காட்டுப்பூனை, நட்சத்திர ஆமை, ஓணான் வகைகள், நச்சுப் பாம்புகளாக நாகங்கள், புடையன் பாம்பு வகைகள் என்பனவும் இங்கு வாழ்கின்றன.
கொழும்பிலிருந்து குருநாகல், தம்புள்ளை, ஹபரணை, பொலன்னறுவை மற்றும் மனம்பிட்டியா ஊடாகப் பயணிப்பது எளிதானதும் மிக நடைமுறையானதுமான பாதையாகும். இத்தேசிய பூங்காவை பொலன்னறுவை- மட்டக்களப்பு வழியாகவும், மஹியங்கன- பதியதலாவ வழியாக இத்தேசிய பூங்காவிற்கு அண்மிக்க முடியும்.
அம்பாறை, பதுளை மற்றும் பொலன்னறுவை ஆகிய பிரதேசங்களில் பயணிக்கும் ஒருவருக்கு இலகுவாக அண்மித்து சுற்றுச் சூழல் அழகை அனுபவிக்க முடியுமான மதிப்பு மிக்க ஓர் தேசிய பூங்காவாகக் குறிப்பிடக்கூடிய மாதுறு ஓயா தேசிய பூங்காவில், தற்போது திட்டமிடப்பட்ட முறையில் காலணித்துவத்திற்கு உள்ளாக்குவது அதிகரிப்பதனைக் காட்டுகிறது. இது பூங்காவிலுள்ள வனஜீவராசிகளுக்குக் குறிப்பிடத்தக்க தடையாக இருந்து வருகிறது. மாதுறு ஓயா நீர்த்தேக்கத்துக்கு முன்னால் அமைந்துள்ள எடரு எடமுல்லவில் இரண்டும் மற்றும் ஒரு விடுதியும் காணப்படுகின்றன. இயற்கையை விரும்புபவர்களுக்காக உல்ஹிடிய முகாம் தளத்தைப் பெற்றுக் கொள்ள முடிவதுடன் பூங்காவின் நுழைவாயிலில் நன்கு பராமரிக்கப்படக் கூடிய அருங்காட்சியகமும் ஆகும்.
Sinhala name | Tamil name | English name | Scientific name |
අලියා | காட்டு யானைகள் | Asian elephant | Elephas maximus |
කොටියා | புலி | Leopard | Panthera pardus kotiya |
ගෝනා | மரைகள் | Sambar | Cervus unicolor |
හිවලා | நரிகள் | Golden jackal | Canis aureus |
කුළු හරකා | நீர் எருமை | Water buffalo | Bubalus bubalis |
වල් ඌරා | காட்டுப் பன்றிகள் | Wild Boar | Sus scrofa |
තිත් මුවා | புள்ளி மான் | Spotted deer | Axis axis ceylonensis |
ඉත්තෑවා | முள்ளம்பன்றி | Porcupine | Hystrix indica |
වල් බළලා | காட்டுப்பூனை | Small cat | Felis chaus |
වතුරතු මල් කොහා | செம்முகப் பூங்குயில் | Red-faced malkoha | Phaenicophaeus pyrrhoc |
බහුරුමානාවා | சிறுத்த பெரு நாரை | Lesser adjutant | Leptoptilos javanicus |
පාදිලි මානාවා | வெண்கழுத்து நாரை | Woolly-necked stork | Ciconia episcopus |
බ්රාහ්මන උකුස්සා | செம்பருந்து | Bhaminy Kite | Haliastur indus |
ලතු වැකියා | மஞ்சள் மூக்கு நாரை | Painted stork | Mycteria leucocephala |
Sinhala name | Tamil name | English name | Scientific name |
පොරෝ කෑදැත්තා | மலபார் சாம்பல் இருவாச்சி | Malabar hornbill | Ocyceros griseus |
රජ අළු හිස් මසුකුස්සා | சாம்பல் தலை மீன்பிடிக் கழுகு | Grey headed eagle | Ichthyophaga ichthyaetus |
කබරගොයා | நீர் உடும்பு | Asian water monitor | Varanus salvator |
හැල කිඹුලා | சதுப்பு முதலை | Mugger crocodile | Crocodylus palustris |
තාරකා ඉබ්බා | நட்சத்திர ஆமை | Star tortoise | Testudo elegans |
කටුසු විෂේශ | ஓணான் வகைகள் | LizardSps | |
පිඹුරා | மலைப்பாம்பு | Python | Python molurus |
නාගයා | நாகம் | Cobra | Cobra cobra |
පොලඟා | புடையன் பாம்பு | Viper Sps |
|
Sinhala Names | Tamil Names | English Names | Botanical Name |
පලු | பாலை | Ceylon Iron wood | Manilkara hexandra |
වීර | வீரை | Hedge Boxwood | Drypetes sepiaria |
බුරුත | முதிரை | Satin | Chloroxylon swietenia |
කුඹුක් | வெண்மருது | kumbuk | Terminalia arjuna |
වෙලන් | வெண்ணங்கு | Welan | Pterospermum canescens |
තිඹිරි | பத்திரி | Thimbiri | Diospyros malabarica |
මී | இலுப்பை | Mee | Madhuca longifolia |
කිතුල් | கித்துள் | Fishtail palm | Caryota urens |
නා | நாகமரம் | Na tree | Mesua ferrea |
ஆசிரியர் – டீ .மல்சிங்ஹ, மேலதிக செயலாளர், வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு உதவியாளர்கள்
பூங்கா பற்றிய தகவல்களைத் தொகுத்தவர்– ஹஸினி சரத்சந்திர, பிரதம உத்தியோகத்தர், வன பாதுகாப்புத் திணைக்களம்
தமிழ் மொழிபெயர்ப்பு– ஏ.ஆர்.எப். றிப்னா, அபிவிருத்தி உத்தியோகத்தர், வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு
ஆங்கில மொழிபெயர்ப்பு (ஆவணங்கள்)– அசோக பலிஹவடன, மொழிபெயர்ப்பாளர், வனஜீவராசிகள் மற்றும் வனபாதுகாப்பு அமைச்சு
ஆங்கில மொழிபெயர்ப்பு (கதை)– டீ. மல்சிங்ஹ
இணைய வடிவமைப்பு– என்.ஐகயத்ரி, அபிவிருத்தி உத்தியோகத்தர், வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு
படங்கள்– ரோஹித குணவர்தன,வன பாதுகாப்புத் திணைக்களம்
சிங்கள தட்டச்சும் ஏனைய உதவிகள்– அருணிபலாபத்வல, வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு
Cookie | Duration | Description |
---|---|---|
cookielawinfo-checkbox-analytics | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". |
cookielawinfo-checkbox-functional | 11 months | The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". |
cookielawinfo-checkbox-necessary | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". |
cookielawinfo-checkbox-others | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. |
cookielawinfo-checkbox-performance | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". |
viewed_cookie_policy | 11 months | The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. |