简体中文 ZH-CN English EN Français FR Deutsch DE Italiano IT Português PT සිංහල SI தமிழ் TA
Ministry of Wildlife and Forest Resources Conservation

அத்தியாயம் 9 – உடவலவ தேசிய பூங்கா

Content Image

விசேடமான சந்திப்பொன்று

நான் 1996 இல் வனஜீவராசிகள் பொறுப்பதிகாரியாக வனஜீவராசிகள் திணைக்களத்தில் இணைந்தேன். நான் சுமார் 10 மற்றும் 12 வருடங்களாக வனஜீவராசிகள் பொறுப்பதிகாரியாக தனமல்வில தளம், ஹந்தபானகல தளம், நுவரெலிய சிறீபாத தளம் போன்ற பல இடங்களில் கடமையாற்றினேன். பின்னர் தள உதவியாளராக எனக்குப் பதவுயுயர்வு கிடைத்தது. அதன் பின்னர் 2016 இன் ஆரம்ப காலம் முதல் உடவளவை தேசிய பூங்காவில் நான் நீண்ட காலம் சேவையாற்றினேன். காட்டு யானைகளைப் பார்வையிட முடியுமான இடமொன்றாக் கொழும்புக்கு அருகிலுள்ள ​உடவளவை தேசிய பூங்கா காணப்பட்டது. இங்கு பெருமளவிலான உயிர்ப் பல்வகைத்தன்மையொன்று காணப்பட்டது. காட்டுப் பூனைகள் என்பன அதிகளவு காணப்படுகின்றன. எனினும் சிறுத்தை அவ்வாறு இன்றேல் புலிகள் அரியவை. அங்கு எமக்கு புலிகளைப் பற்றி அதிக உணர்வொன்று காணப்படவில்லை.

எனினும் 2016 ஆம் ஆண்டு இறுதியில் எனக்கு விசித்திரமான சம்பவமொன்று நிகழ்ந்தது. எப்போதும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வீட்டுக்குச் சென்று ஜனவரி மாதம் முதலாம் திகதி கடமைக்குத் திரும்பும் பழக்கம் எனக்கிருந்தது. எனினும் இவ்வருடம் அதிக வேலை காணப்பட்டதன் காரணமாக வீட்டுக்குச் செல்லாது பூங்காவிலே தங்க நினைத்தேன். அவ்வாறு மனதைச் சரி செய்து கொண்டிருக்கும் போது, அப்பா அண்ணா விழுந்து கை ஏதோ நடந்து கையில் ஒரு பெரிய கட்டி வந்து விட்டது என்று எனது இளைய பிள்ளையிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அதனுடனேயே எனக்கு மகனைக் பார்க்கச் செல்ல வேண்டி ஏற்பட்டது.  அதனால் நான் வெளிச் செல்லும் கையொப்பத்தை இட்டு விட்டு எனது பையையும் எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் செல்வதற்காக வீதியில் இறங்கினேன். அலுவலகத்துக்கும் பிரதான வீதிக்கும் இடையிலான தூரம் சுமார் 75 m உம் 100 m போல் இருக்கும். ​​இவ்வீதியின் இரு புறமும் அங்குமிங்கும் தெரியாத அடர்ந்ததேக்கு மரக் காடாகக் காணப்பட்டது. அப்பிரதேசத்தில் எப்போதாவது யானையொன்று நிற்பது அல்லாது வேறு எந்தவொரு விலங்கையும் அங்கு கண்டிருக்கவில்லை.

நான் வீட்டைப் பற்றி நினைத்துக் கொண்டே முன்னே சென்றேன். எனக்குப் பின்னால் ஜீப் ஒன்றின் சத்தமொன்று கேட்டது. அந்நேரத்தில் சுற்றுலாப் பயணிகள் பூங்காவை பார்வையிட்டு முடிந்து மீண்டும் வெளியே செல்லும் நேரமாகும். அங்கிருந்து ஜீப் ஒன்றில் ஏறினால் சில வினாடிகளில் சரியாகப் பேருந்து ஒன்றைப் பிடிக்க முடியுமான சந்தர்ப்பம் அதிகம் எனும் காரணத்தினால் நான் நான் பின் பக்கம் திரும்பி ஜீப் வண்டியில் இடம் உள்ளதா வெற்றாக உள்ளதா  எனப் பார்த்தேன். எனினும் ஜீப் பூரணமாக சுற்றுலாப் பயணிகளால் நிரம்பியிருந்தது. எனினும் நான் ஜீப் இனைப் பார்க்கும் போது ஜீப் வண்டியின் சாரதி அவர்கள் ஒரு கையை வெளியே விட்டு அசைத்து கூச்சலிடுவதனைக் கண்டேன்.  அவ்வாறே வெளிநாட்டவர்களும் மிகப் பயத்தில் கூச்சலிட்டனர். உடனடியாக நான் முன்னே பார்க்கும் போது எனது காலுக்கு சுமார் இரண்டரை அடி தூரத்தில் பெரிய புலியொன்று நின்றது. அது ஐந்தரை அடி ஆறு அடி போல் நீளம் இருக்கும். எனது காலை சிறிது நீட்டினால் புலியின் உடலில் படும் அளவில் அது நின்றிருந்தது. அச்சந்தர்ப்பத்தில் எனக்குப் பயம் ஏற்பட்டாலும் என்ன நினைத்தேன் என்பதனைக் கூற முடியாத உணர்வு ஏற்பட்டது.

நான் எப்போதும் புலியைத் தூரத்திலே பார்த்திருக்கின்றேன். ஆனால் இவ்வளவு அண்மையில் பார்த்ததில்லை. ஆனால் அதனுடனேயே புலி வேகமாகப் பாய்ந்து ஓடியது. ஜீப் இல் இருந்தவர்கள் புலி என் மேல் பாய்ந்திருக்கும் என நினைத்திருப்பார்கள். எனக்கு ஏற்பட்ட உணர்வு குறைந்து இன்னும் மூன்று அடிகள் முன்னே சென்றேன். நிறுத்திய ஜீப்பிலிருந்து பாரிய சத்தமொன்று கேட்டது. அந்நபர்கள் ஏன் மீண்டும் சத்தமிடுகின்றனர் என நான் பின்னே திரும்பிப் பார்த்தேன். பார்க்கும் போது எனது பின்னால் சுமார் ஐந்து அடி தூரத்தில் இன்னொரு புலியொன்று இருந்தது. அதுவும் முன்னைய புலி ஓடிய திசைக்கே ஓ​​டி வீதியைக் கடந்தது. சில வேளை இப்புலி என் மீது பாய்ந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என எனக்கு அந்நேரத்தில் தோன்றியது. எனினும் அவ்வாறான ஒரு நிகழ்வு இடம்பெறவில்லை என்பதனையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.

அந்நேரத்தில் ஜீப்பிலிருந்த சுற்றுலாப் பயணிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பர். ஏனெனில் பூங்காவின் எல்லைக்கு வெளியே இரு புலிகளைக் கண்டமையினாலாகும்.

அனில் சந்திர விதானகே அவர்கள்

அனில் சந்திர விதானகே அவர்கள் அவிஸ்ஸாவெல்ல பிரதேசத்தில் பிறந்தார். கேகல்லை தல்துவை பௌத்த வித்தியாலயத்தில்  ஆரம்ப கல்வியைப் பெற்று எஹெலியகொட  மத்திய மகா வித்தியாலயத்தில் உயர் தரத்தில் சித்தியடைந்தார். அவர் சிவில் பொறியியல் துறையிற்குரிய பாடநெறி ஒன்றினைச் செய்து அதனுடன் தொடர்பான தொழில் செய்து கொண்டிருக்கும் போது அவர் வனஜீவராசிகள் திணைக்களத்தில் தொழில் ஒன்றுக்காக இருந்த விருப்பத்தினாலே தொழில் செய்யும் போதே தேசிய மிருகக்காட்சிச்சாலைத் திணைக்களத்தில் இளைஞர் மிருக ஆர்வலர்களின் அமைப்பில் இணைந்து அங்கு கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டார். விலங்குகள் தொடர்பாக ஆரம்ப அறிவை அவற்றின் மூலமே அவர் பெற்றுக் கொண்டார். பாம்புகள் பற்றிய அதிகளவு பரந்த அறிவைப் பெற்றுக் கொண்டார். இந்த வயதில் அவர் நூலகர் பாடநெறியொன்றையும் நிறைவு செய்தார்.

1996.06.24 ஆம் ஆண்டு தமது ஆசையை நிறைவு செய்து கொண்டதுடன் அனில் சந்திர விதானகே அவர்கள் வனஜீவராசிகள் பொறுப்பதிகாரியாக வனஜீவராசிகள் திணைக்களத்தில் சேவையாற்றுவதற்கு அதிஷ்டம் பெற்றார். முதன் முறையாக ஹந்தபானகல தளத்தில் கடமை புரிவதற்கு சந்தர்ப்பம் கிடைத்த அவருக்கு தனமல்வில, நுவரெலிய போன்ற கஷ்டப் பிரதேசங்களிலும் கடமையாற்றியுள்ளார்.

ஆய்வு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகள் பற்றி கூடியளவு அக்கறை காட்டிய ​​ விதானகே அவர்கள் சிரிபாத தளத்தில் குள்ள யானைகள், வெள்ளை மரைகள் மற்றும் உள்ளூர்ப் பறவைகள் பற்றி பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளதுடன் நீல கடற்கரை ஆலை தாவரத்தின் நிறம் நீலம் என நிரூபித்துக் காட்டுவதற்கும் பங்களிப்புச் செய்துள்ளார்.

சமனல தளத்திலிருந்து பதவியுயர்வு பெற்று ரன்தெம்பெ சரணாலயத்துக்கு அவருக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. அங்கு அவர் இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்ட மிகக் கொடிய ஆக்கிரமிப்புத் தாவரமான Poloniasamantosa ​ஆனது தனியார் துறை மூலம் பரவுவதனைத் தடுப்பதற்காக வனஜீவராசிகள் திணைக்களத்தின் மூலம் சட்ட விதிகளை மேற்கொண்டார். தற்போதுநெத வழக்கு முடிவடையவில்லை. இக்காரணத்தினால் நக்கள்ஸ் வன  ஒதுக்கத்துக்கும் அத்தாவரம் உள்நுழைவதனைத் தடுப்பதற்கும் முடியுமாக உள்ளது.

​​விதானகே அவர்களின் மனைவி ஓர் ஆசிரியத் தாயாவார் ஆவதோடு மகளொன்றையும் மகனொருவரையும் அவரின் குடும்பம் கொண்டுள்ளது. தன்னைப் போன்றே தமது பிள்ளைகளும் வனத்துக்கும் வன விலங்குகளுக்கும் அன்பு காட்டுவதாக விதானகே அவர்கள் கூறுகிறார்கள். தற்போது அவிஸ்ஸாவெல்ல மாதுலுவேயில் வசித்து வருகிறார்.

உடவளவை தேசிய பூங்கா

ஊவா மாகாணத்தில் மொணராகலை மாவட்டத்திற்கும் சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி மாவட்டத்திற்கு எல்லையாக அமையுமாறு அமைந்துள்ள உடவளவை தேசிய பூங்கா, வளவை கங்கை அபிவிருத்தித் திட்டம் காரணமாக வாழிடங்களை இழந்த உயிரினங்களுக்கு பாதுகாப்பை அமைக்கும் பொருட்டு மற்றும் உடவளவை நீர்த்தேக்கத்தின் நீரேந்துப் பிரதேசத்தைப் பாதுகாப்பதனையும் நோக்காகக் கொண்டு 1972 ஜூன் மாதம் 30 ஆம் திகதி வனவிலங்குகள் மற்றும் தாவர பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்டது.

உடவளவை தேசிய பூங்காவின் வரைபடம்

இலங்கையில் அமைந்துள்ள தேசிய பூங்காக்களுள் கொழும்பிற்கு அண்மையில் அமைந்துள்ள தேசிய பூங்காவொன்றாக சுற்றுலாப் பயணிகளின் கவர்ச்சியை வெற்றி கொண்டுள்ள இங்கு முழு நிலப்பரப்பளவு 30821 ஹெக்டயார் ஆகும். பெருமளவு சமவெளியுடனான வெளியே கரடுமுரடான மலைகளைக் காணலாம். வடக்கே அமைந்துள்ள கல்தொ மலைத்தொடர் மற்றும் தியவின்ன எல்ல பூங்காவின் இயற்கை அழகை இன்னும் மெருகூட்டுகிறது.

                                                                                            உடவளவை தேசிய பூங்காவின் நுழைவாயில்​

உடவளவை தேசிய பூங்காஅமைந்துள்ள நிலப்பரப்பு நீண்ட வரலாற்றுக்கு உரிமை கூறுகிறது. கஜபா மன்ன்னினால் நீல மகா  இராட்சதருக்கு வழங்கப்பட்ட ஒரு கிராமமாக வளவை மிடியாவத்தையில் அமைந்துள்ள மிக அழகான கல்தொட பிரதேசம் பிரபல்யமானது.  நீல மகா  இராட்சதர் இப்பிரதேசத்தில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொண்டதற்கு சாட்சியாகும். உடவளவை தேசிய பூங்காவினைச் சுற்றி அமைந்துள்ள சீனுக்கல, முவங்பெலெஸ்ஸ மற்றும் நேபட எனும் கிராமங்கள் கடந்த காலத்தில் வளமான கிராமங்களாக இருந்தன. வெஹெரமங்கட மற்றும் வெஹெரகொல்ல பிரதேசங்களிலிருந்து புராதன கற்றூண்கள் மற்றும் இடிபாடுகள் என்பவற்றின் மூலம் அப்பிரதேசத்தில் குடியிருப்புக்கள் இருந்தன என உறுதிப்படுத்துகின்றன.

பூங்காவின் வழியாகப் பாய்கின்ற இலங்கையின் பிரதானமான கங்கையொன்றான வளவை கங்கைக்குக் குறுக்காக உடவளவை நீர்த்தேக்கம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 1155 சதுர கிலோ மீற்றருக்குப் பரந்துள்ளது. வளவை கங்கை, சமனல தளத்திலிருந்து ஆரம்பித்து இன்னும் பல நீரோடைகளை இணைத்துக் கொண்டு உடவளவை தேசிய பூங்காவிற்கு ஊடாகப் பாய்ந்து அங்கு வாழும் வன விலங்குகளுக்கு அபூர்வமான சூழல் அமைப்பொன்றை ஏற்படுத்தியுள்ளது.  உடவளவை நீர்த்தேக்கத்துக்கு மேலதிகமாக வளவை கங்கை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சந்திரிக்கா வாவி, சமனல வாவி மற்றும் மவு ஆர நீர்த்தேக்கம் உருவாக்கப்படும் போது அநாதரவான வனவிலங்குகளுக்கும் இத்தேசிய பூங்கா மூலம் வாழிடங்கள் கிடைத்தன.

உலர் மற்றும் இடை காலநிலை வலயங்களுக்குரிய வகையில் அ​மை​​ந்துள்ள இப்பூங்காவிற்கு தென்கிழக்கு நீண்ட பருவ மழை மூலம் பிரதானமாக மழை கிடைக்கிறது. வருடாந்த மழைவீழ்ச்சி அண்ணளவாக 1524 மில்லி மீற்றர் மற்றும் சாதாரண வெப்பநிலை சென்டிகிரேட் 32 பாகை செல்ஸியஸ் ஆகும். பூங்காவின் மேற்குப் பகுதியில் ஒரு பகுதி​ இடை வலயத்திற்கு உரித்தானதுடன் ஒப்பீட்டளவில் அதிக மழைவீழ்ச்சியொன்று இப்பிரதேசத்திற்குக் கிடைக்கின்றது. இரத்தினபுரிக்கு அண்மையில் உள்ள எல்லைப் பகுதியில் ஈரநில வலயத்திற்காக பண்புகளையும், மொனராகலையின் ​எல்லைப் பகுதியில் வரண்ட வலய காலநிலையொன்று காணப்படுகின்றது. வருடத்தில் பெப்ரவரி மார்ச்  மாதங்களில் குறுகிய வரண்டகாலநிலையொன்று காணப்படுவதுடன், சில வேளைகளில் இந்த வரண்ட காலநிலை நவம்பர் முதல் ஜனவரி நடுப்பகுதி வரையான காலப்பகுதியில் வடகிழக்கு பருவக்காற்று மழை கிடைக்கிறது. இதற்கு மேலதிகமாக ஏப்ரல் முதல் மே போன்ற காலப் பகுதியிற்குள் வெப்ப மழையும் கிடைக்கின்றது. மே முதல் ஜூலை வரை காற்று வீசும் வேகம் மணிக்கு 5.9 கிலோ மீற்றர் முதல் 6.3 கிலோ மீற்றர் வரை மாறும். அதிகமான காற்றினை ஜூன் மாதத்தில் கண்டு கொள்ளலாம்.​​

​​உடவளவை தேசிய பூங்காவில் முதல்நிலை, இரண்டாம் நிலைக் காடுகள் மற்றும் திறந்த புல்வெளிகள், சவன்னா புல்வெளி, பற்றைக் காடு மற்றும் தேக்குப் பயிர்ச்செய்கை என்பவையும் காணப்படுகின்றன. தேசிய பூங்காவொன்றாக பிரகடனப்படுத்தப்பட முன்பு இப்பிரதேசத்தில்  காணப்பட்ட சேனைப்பயிர்ச்செய்கை காரணமாக இயற்கைத் தாவரங்களை அகற்றும் பணி இடம்பெற்றது. இக்காரணத்தினால் தற்போது திறந்த புல்வெளிகளை அதிகமாகக் கண்டு கொள்ளலாம்.

பூங்காவில் காணப்படுகின்ற தாவர வகைகளைப் பார்க்கும் போது உயரமான தாவரமாக முதிரை, சாவண்டலை மரம், கருங்காலி, மஞ்சக்கடம்பு, காட்டு நொச்சி, பூக்கம், கரிமரம் போன்றவற்றைக் கண்டு கொள்ள முடிவதுடன் பெறுமதிமிக்க மூலிகைத் தாவரமாக நெல்லி, தான்றி என்பன கிடைக்கப் பெற்றுள்ளன. வளவை கங்கையின் இரு மருங்கிலும் வெண்மருது, எருக்கலை போன்ற தாவரங்கள் பிரதானமானவை. புல்நிலப் பகுதிகளில் மானா, தர்ப்பைப் புல், நேப்பியர்ப்புல் போன்ற புல் வகைகளையும் பலிசமரம் போன்ற பற்றை மரங்களும் காணப்படுகின்றன. வன விலங்குகளுக்கு ஏற்றவையல்லாத உண்ணிச் செடி மற்றும் சிறுநெல்லி போன்ற ஆக்கிரமிப்புத் தாவரங்களும் பூங்காவிற்கு அச்சுறுத்தலாய் உள்ளன.

உடவளவை நீர்த்தேக்கம் மற்றும் வளவை கங்கை என்பன ஆண்டு முழுவதும் வனவிலங்குகளுக்குத் தேவையான நீரை வழங்குவதும் அச்சூழல் அமைப்பில் காணப்படும் உணவு மிகுதியாக உள்ளமையினால் உடவளவை தேசிய பூங்காவினுள் அண்ணளவாக ஆசிய யானைகள் சுமார் 250 அளவிலான தொகையினைக் கண்டு கொள்ள முடிவதுடன் ஏனைய விலங்கினங்கள் பலவையும் இங்கு வாழ்கின்றன.

பூங்காவினுள் கிடைக்கக் கூடிய பாலூட்டியினங்களுள் மரை, புள்ளிமான், காட்டுப் பன்றி, காட்டெருமை என்பன பிரதானமானவை என்பதுடன், நரி, ஆசிய மரநாய், செங்குரங்கு, இந்திய குழி முயல் போன்ற சிறிய பாலூட்டி விலங்குகளும் வாழ்கின்றன. காட்டுப் பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுத்தை, துரும்பன் பூனை, மீன்பிடிப் பூனை போன்ற விலங்குகளும் கரடியும் பூங்காவினுள் காணப்படுகின்றன. எனினும் இங்கு தேன் கரடிகளைக் குறைந்த எண்ணிக்கையில் கண்டு கொள்வதற்கான சந்தர்ப்பம் மிகவும் அரிதானது. எலி இனங்கள் 05 உம், பாம்பு இனங்கள் 30 உம், மரநாய் இனங்கள் 03 உம், வண்ணத்துப்பூச்சியினங்கள் 50 உம் என பூங்காவினுள் காணக் கிடைத்துள்ளன. ஊர்வன வகைகளுள் சில பல்லி இனங்களும், சதுப்பு முதலை, நீர் உடும்பு, இந்திய உடும்பு என்பனவும் காணப்படுகின்றன.

பூங்காவில் கிடைக்கும் பறவையினங்களுள் இலங்கைக்கே உரித்தான பறவையான சின்னக் காட்டுக்கோழி, செம்முகப் பூங்குயில், இலங்கை சாம்பல் இருவாய்ச்சி,​​​ காட்டுக்கோழி என்பன விசேடமானவையானதுடன் மலபார் கறுப்பு வெள்ளை இருவாய்ச்சி, சிறிய சீழ்க்கைச்சிரவி, செம்மஞ்சள் மார்புடைய பச்சைப்புறா, குடுமிப் பருந்து போன்ற பறவைகளையும் காணலாம். உடவளவை மற்றும் மவ்ஆர நீர்த்தேக்கத்திலிருந்து அண்மையில் சின்ன நீர்க்காகம் போன்ற நீர்ப் பறவைகள் என்பவற்றைப் பொதுவாகக் காண முடியுமான காட்சியொன்றாகும்.

பறவைகள் இருக்கும் காட்சியொன்று
குடுமிப் பருந்து

இத்தேசிய பூங்காவின் நுழைவுக்குக் கொழும்பிலிருந்துள்ள தூரம் சுமார் 165 கிலோமீற்றர் ஆகும். கொழும்பிலிருந்து பூங்கதவினை அண்மிக்க முடியுமான இலகுவான வழியாக, கொழும்பிலிருந்து இரத்தினபுரி பெல்மடுல்ல ஊடாகப் பயணித்து,  பெல்மடுல்ல – எம்பிலிபிடிய வழியாக திம்பொல்கெடிய சந்தியிலிருந்து இடப்புறமாக உள்ள தனமல்வில வீதியில் பூங்காவின் நுழைவாயில் ஆகும். பூங்காவின் ​​ நுழைவாயில் தனமல்வில வீதியில் 07 வது கிலோமீற்றருக்கு அண்மயில் அமைந்துள்ளது.

உடவளவை தேசிய பூங்காவில் இன்னும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ச்சியை வெற்றி கொண்ட இடமாக “எத் அத்துரு செவன” காணப்படுகின்றது. காட்டில் தாயினால் கைவிடப்பட்ட அல்லது தாய் மரணித்த அல்லது கூட்டத்திலிருந்து விடுபடக்கூடிய சிறிய யானைக் குட்டிகளைக் கொண்டு வந்து வளர்த்து காட்டில் தனியாக வாழ்வதற்கு முடியுமானவாறு பருவமடையும் வரை யானைக் குட்டிகளைப் பாதுகாத்து வளர்க்கும் இடமொன்றாக 1986 ஆம் ஆண்டு உடவளவை தேசிய பூங்காவிற்கு அண்மையில் “எத் அத்துரு செவன” உருவானது.  உடவளவை நீர்த்தேக்கத்தில் அமைந்துள்ள “எத் அத்துரு செவன” இல் வளரும் யானைக் குட்டிகளின் விளையாட்டு இங்கு வருகை தரும் எவரினதும் கண்களையும் மனதையும் கொள்ளை கொள்ளும் காட்சியாகும்.

                                                                                               உடவளவை தேசிய பூங்காவின் நுழைவாயில்​

உடவளவை தேசிய பூங்காவைப் பார்வையிடுவதற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு நுழைவுக் காரியாலயத்திலிருந்து நுழைவுச் சீட்டினைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன்  பயணிகளின் வசதிக்காக பூங்காவிற்குள் மேம்படுத்தப்பட்ட சாலை அமைப்பொன்று காணப்படுகின்றது. காட்டிற்குள் தங்கி நின்று ஒரு முகாம் மைதானத்தில் இரவினைக் கழித்து காட்டினுள் அற்புதமான அனுபவத்தினைப் பெற்றுக் கொள்வதற்கு விருப்பமான ​ சுற்றுலாப் பயணிகளுக்காக பிரங்சதார, அலிமங்கட, பிலிமத்தார, ரேனகல, அலிகடுபெலெஸ்ஸ, ஹதகிரிய போன்ற பிரதேசங்களில் முகாம் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான ​முகாம் மைதானங்களை அமைத்திருப்பது ஒரு தனித்துவமான பிரதேசத்தில் இருப்பதன் மூலம் பார்வையாளர்களுக்கு வனவிலங்கு வளங்களை அனுபவிப்பதற்கு அதிகபட்ச சந்தர்ப்பமொன்றையும் காடொன்றில் வாழ்வதற்கான தனித்துவமான அனுபவம் ஒன்றையும் தமது வாழ்வில் இணைத்துக் கொள்ள முடியும். சுற்றுலாப் பயணிகளுக்காக சகல வசதிகளையும் கொண்ட விடுதிகள் திம்பிரிகஸ்மன்கட வெஹெரகொல்ல, சீனுக்கல, கோனவித்தகல மற்றும் பொகுனுதென்ன போன்ற பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் இங்கு தங்குமிடங்களைப் பெற்றுக் கொள்வதற்காகக் கொழும்பிலிருந்து வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திலிருந்து ஒதுக்கிக் கொள்வதனை முன்னரே மேற்கொள்ள வேண்டும்.​​ ​

கோனவித்தகல சுற்றுலா விடுதி
திம்பிரிகஸ்மன்கட சுற்றுலா விடுதி
சுற்றுலா ஜீப் வண்டியொன்று

உடவளவை தொடர்பான விளக்கத்தில் காணப்படும் விலங்குகளின் பெயர்ப் பட்டியல்

Sinhala name

Tamil name

English name

Scientific name

අලියා

யானை

Asian elephant

Elephas maximus

ගෝනා

மரை

Sambar

Rusa unicolor

තිත් මුවා

புள்ளி மான்

Spotted deer

Axis axis ceylonensis

වල් ඌරා       

காட்டுப் பன்றி

Wild Boar

Sus scrofa

වල් මී හරකා

காட்டெருமை

Water buffalo

Bubalus bubalis

හිවලා

நரி

Golden jackal

Canis aureus

කලවැද්දා

ஆசிய மரநாய்

Toddy cat

Paradoxurus hermaphroditus

රිලවා

சிறு குரங்கு

Toque Macaque

Macaca sinica

හාවා

இந்திய குழி முயல்

Indian hare

Lepus nigricollis

දිවියා

சிறுத்தை

Leopard

Panthera pardus kotiya

කොළ දිවියා

துரும்பன் பூனை

Rusty- spotted cat

Felis rubginosa

හඳුන් දිවියා

மீன்பிடிப் பூனை

Fishing Cat

Prionailurus viverrinus

වලහා

தேன்கரடி

Sri lankaSloth bear

Melurus ursinus

වලි කුකුළා

இலங்கைக் காட்டுக் கோழி

Sri lankajunglefowl

Gallus lafayettii

හබන් කුකුළා

சின்னக் காட்டுக்கோழி

srilankaSpurfowl

Galloperdix bicalcarata

රතු මුහුණැති මල් කොහා

செம்முகப் பூங்குயில்

Red faced malkoha

Phaenicophaeus pyrrhocephalus

අළු කෑදැත්තා

இலங்கை சாம்பல் இருவாய்ச்சி

Sri lanka Grey Hornbill

Ocyceros gingalensis

Sinhala name

Tamil name

English name

Scientific name

පොරෝ දෑකෑත්තා

மலபார் கறுப்பு வெள்ளை இருவாய்ச்சி

Malabar pied horn bill

Anthracoceros coronatus

තඹසේරුවා

சிறிய சீழ்க்கைச்சிரவி

Lesser whistling duck

Dendrocygna javanica

ළය රන් බට ගොයා

செம்மஞ்சள் மார்புடைய பச்சைப்புறா

orange breastedgreen pigeon

Treron bicinctus

පෙරළි කොණ්ඩකුස්සා

குடுமிப் பருந்து

Changeable hawk eagle

Nisaetus cirrhatus

දියකාවා

சின்ன நீர்க்காகம்

Little Cormorant

Phalacrocorax niger

හැල කිඹුලා

சதுப்பு முதலை

Mugger crocodile

Crocodylus palustris

කබරගොයා

நீர் உடும்பு

Asian water monitor

Varanus salvator

තලගොයා

இந்திய உடும்பு

Land monitor lizard

Varanus bengalensis

உடவளவைதொடர்பான விளக்கத்தில் காணப்படும் மரங்களின் பெயர்ப் பட்டியல்

 Sinhala Names

Tamil Names

English Names

Botanical Name

බුරුත

முதிரை

Satinwood

Chloroxylon swietenia

හල්මිල්ල

சாவண்டலை மரம்

Halmilla

Berrya cordifolia

කළුවර

கருங்காலி

ebony

Diospyros ebenum

කොලං

மஞ்சக்கடம்பு

kolon

Haldina cordifolia

මිල්ල

காட்டு நொச்சி

Milla

Vitex altissimia

කෝන්

பூக்கம்

Kon

Schleichera oleosa

කුණුමැල්ල

கரிமரம்

Kunumella

Diospyros ovalifolia

නෙල්ලි

நெல்லி

Nelli

Phyllanthus emblica

බුළු

தான்றி

Bulu

Terminalia bellirica

කුඹුක්

வெண்மருது

kumbuk

Terminalia arjuna

මැන්ඩෝරා

எருக்கலை

Mendora

Hopea cordifolia

මාන

மானா

Mana

Cymbopogon confertiflorum

ඉලුක්

தர்ப்பைப் புல்

Illuk

Imperata cylindrica

පොහොන්

நேப்பியர்ப்புல்

Pohon

Pennisetum polystachion

දමනීය

பலிசமரம்

Damaniya

Grewia tiliifolia

ගදපාන

உண்ணிச் செடி

Gandapana

Lantana camara

කුරටිය

சிறுநெல்லி

Kuratiya

Phyllanthus polyphyllus

 

ஆசிரியர்    –   டீ .மல்சிங்ஹ, மேலதிக செயலாளர், வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு உதவியாளர்கள்

பூங்கா பற்றிய தகவல்களைத் தொகுத்தவர்– ஹஸினி சரத்சந்திர, பிரதம உத்தியோகத்தர், வன பாதுகாப்புத் திணைக்களம்

தமிழ் மொழிபெயர்ப்பு– ஏ.ஆர்.எப். றிப்னா, அபிவிருத்தி  உத்தியோகத்தர், வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு

ஆங்கில மொழிபெயர்ப்பு (ஆவணங்கள்)– அசோக பலிஹவடன, மொழிபெயர்ப்பாளர், வனஜீவராசிகள் மற்றும் வனபாதுகாப்பு அமைச்சு

ஆங்கில மொழிபெயர்ப்பு ​(கதை)– டீ. மல்சிங்ஹ

இணைய வடிவமைப்பு– என்.ஐகயத்ரி, அபிவிருத்தி  உத்தியோகத்தர், வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு

படங்கள்– ரோஹித குணவர்தன,வன பாதுகாப்புத் திணைக்களம்

சிங்கள தட்டச்சும் ஏனைய உதவிகள்– அருணிபலாபத்வல, வனஜீவராசிகள் மற்றும் வன  பாதுகாப்பு அமைச்சு