简体中文 ZH-CN English EN Français FR Deutsch DE Italiano IT Português PT සිංහල SI தமிழ் TA
Ministry of Wildlife and Forest Resources Conservation

அத்தியாயம் 8 – புந்தாலா தேசிய பூங்கா

Content Image

பூந்தல பூங்காவில் மரணமொன்று

இச்சம்பவம் 2004 அம் ஆண்டு இடம்பெற்றது போல் எனக்கு நினைவிருக்கின்றது. அதன் போது நான்  கடமைக்கு வந்து இரண்டு வருடங்களாக இருந்தன. நான் அப்போது பூந்தல தேசிய பூங்காவில் வனவிலங்கு பொறுப்பதிகாரியாக இருந்தேன். அது என்னுடைய இரண்டாவது நியமனமாகும்.

பூந்தல தேசிய பூங்கா சிறியது. எனினும் அனைத்துப் பிரிவுகளிலும் சூழல் ரீதியாக பூரணமான ஆய்வுகூடம் போன்றிருந்தது. இவ்விடத்திற்கு பிற புலம்பெயர் பறவைகளும் வருகின்றன. பூந்தல பூங்காவின் ஒரு பக்கத்தில் கடலுக்கு எல்லையாகக் காணப்படுகின்றது. அதனால் அச்சுறுத்தலுக்கு உள்ளான ஐந்து கடலாமை இனங்கள் கடற்கரைக்கு வருகின்றன.

அந்நிய ஆக்கிரமிப்புத் தாவர இனங்களும் உள்ளன. இப்பூங்காவில் கடமை புரியும் போது இவ்விலங்குகள் மற்றும் தாவர இனங்கள் பற்றியும் போன்றே அதனுடன் தொடர்புடைய பாதுகாப்பு முகாமைத்துவச் சட்டம் பற்றியும் சிறந்த அறிவபை பெற்றுக் கொள்ள முடியும்.

வர்த்தமானி மூலம்வன ஒதுக்கமான பூங்காவாகப் பிரகடனப்படுத்தப்பட்ட  பூந்தல பூங்காவிற்கு இணைந்தவாறே வில்மென்ன சரணாலயமும் காணப்படுகின்றது.

பூந்தல தேசிய பூங்காவில் வேட்டை​யாடுதல் மிகவும் குறைவு . எனினும் 2004 ஆம் ஆண்டுல் ஒரு நபர் எப்போதும் பூங்காவில் வேட்டை​யாடுவதாக எமக்குத் தகவல் கிடைத்திருந்தது. அதற்கு மேலதிகமாக அவர் வனவிலங்கு அதிகாருகளுக்குச் சவால் விடுவதாகவும் தகவல் கிடைக்கப் பெற்றிருந்தது.

இந்த சூழல் விரோதச் செயலை நிறுத்துவதற்குச் சோதனை செய்ய நாம் முடிவு செய்தோம். அதன்படி ஒரு நாள் இரவு எட்டு முப்பது மணியளவில் நாம் ​பூந்தல களப்பில் காவலில்  ஈடுபட்டிருந்தோம். சுமார் ஒன்று அல்லது ஒன்றரை மணித்தியாலயங்கள் அவ்விடத்தில் தங்கியிருந்து தடயம் எதுவும் இல்லாததால் அங்கிருந்து வெளியானோம். எமது குழுவானது வன பாதுகாவலர் சமத் லக்ஷ்மன், வன விலங்கு பொறுப்பதிகாரி நிகால் ரத்னபால, வன விலங்கு பொறுப்பதிகாரி வை. டீ. கருணாரத்ன, வன விலங்கு பராமரிப்பாளர் எச். கருணாரத்ன அவர்களுடன் நானும் உள்ளடங்கினேன்.

நாம் அங்கிருந்து வருவதற்கு வெளியான போது இணைந்துள்ள வில்மென்ன சரணாலயத்திலிருந்து வெடிப்புச் சத்தமொன்றுகேட்டது. நாம் உடனே பாதையின் மறுபக்கத்திற்குப் பாய்ந்து வெடி சத்தம் கேட்ட பக்கத்திற்கு நெருங்கினோம்.  எமது நபர்கள் அங்கு செலுல்லும் போது நேரம் சுமார் பத்து மணி போல் இருக்கும். சுற்றிலும் இருளாகக் காணப்பட்டது.  பற்றைக் காடொன்றாகவே இருந்தது. நாம் முன்னே செல்லும் போது ஒரேயடியாக டிராக்டர்  ஒன்று இயங்கும் சத்தம் கேட்டது. டிராக்டரில் மின்விளக்கு ஒன்று திடீரென எரிந்தது. நாம் இருந்த இடத்திலேயே அப்படியே குனிந்து கொண்டோம். டிராக்டரின் என்ஜின் பகுதி மாத்திரம் எமக்கு  முன்னால் வருவது தெரிந்தது. இன்னும் பரிசோதித்துப் பார்க்கும் போது டிராக்டர் வெளிச்சத்துக்கு முன்னால் ஒருவர் துப்பாக்கியையும் கையில் எடுத்துக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தவாறே வந்து கொண்டிருந்தார். அவர் வேட்டைக்கு வருவது தெரிந்தது. அவர் வாட்டசாட்டமான நபர் போன்று தோன்றியது.

நானும் காவலராமன கருணாரத்னவும் டிராக்டரின் பின்பக்கத்திற்குச் செல்வோம் என பின்பக்கத்திற்கு மெதுமெதுவாகச் சென்றோம். பின்புறமாகச் சென்று துப்பாக்கியை இலகுவாக எடுப்பதற்கு முடியும் என்பதனாலும் பாதுகாப்பாக இருப்பதனாலும் நாம் அவ்வாறு சென்றோம். எவ்வாறாயினும் டிராக்டரின் முன்னால் செல்லும் போது எமது ஏனைய நபர்கள் அம்மனிதரின் முன்னே பாய்ந்து துப்பாக்கியை எடுப்பதற்கு முயற்சி செய்தனர். அவரை நிராயுதபாணியாக ஆக்குவதற்கு முயற்சித்தோம். அந்நேரத்தில் துப்பாக்கியைக் கொடுக்காது மற்றவர்களுடன் சண்டையிடுவதனைக் கண்டேன்.

சில வினாடிகளில் ‘பூம்’ என்று துப்பாக்கியொன்றின் வெடி  சத்தம் கேட்டது. எனது அனுபவங்களின்படி துப்பாக்கி ஒன்றிலிருந்து சத்தமொன்று வெளியானதன் பின்னர் வெடில்கள் ஏதாவதொன்றில் படாததையும், வெடில்  ஏதாவதொன்றில் படுவதனயும் இனம் கண்டு கொள்ள முடியும். அந்நேரத்தில் யாருக்காவது அல்லது அருகிலிருக்கும் ஏதாவதொன்றிற்கு வெடி பட்டது போன்று எனக்கு விளங்கியது. அந்நேரத்தில் டிராக்டரின் என்ஜின் நன்று விட்டது. அங்கு வந்து பாரக்கும் போது துப்பாக்கியை எடுத்து வந்த நபர் கீழே விழுந்திருந்தார். இரத்தம் பாய்ந்தோடியது. காதின் அருகில் இருந்து இரத்தம் பாய்வது தெரிந்தது. அவருடைய காதுக்கு அருகில் துப்பாக்கி வெடி  உட்சென்றிருந்தது. அதன்படி அவருக்கு கொடூரமாகக் காயம் ஏற்பட்டிருக்கும் என எனக்கு விளங்கிற்று. நாம் அனைவரும் இரண்டு மூன்று நிமிடங்கள் மிக மௌனமான நிலைக்கு ஆளானோம்.

​வனவிலங்கு பாதுகாப்புக் கட்டளைச் சட்டம் பற்றி எனக்கு அறிவு இருந்தாலும் இவ்வாறான வேளையில் நடந்து கொள்ள வேண்டிய முறை பற்றிய அறிவு காணப்படவில்லை. எனினும் அது பற்றி யோசிக்காமல் நாம் அந்நபரை எமது வாகனத்தில் ஏற்றி உடனடியாக ஹம்பாந்தோட்டை​ வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றோம். டிராக்டரைச் செலுத்திய நபரைக் கைது செய்தோம்.

நானும் சமத் அவர்களும் இன்னொருவரும் காயப்பட்டவரை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றோம். ஏனையவர்கள் மற்றவரை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

​காயப்பட்டவரைவைத்தியசாலையில் சேர்க்கும் போதே அவர் இறந்து விட்டார் என எமக்கு அறிவித்தனர். அதன் பின்னர் நாம் சம்பவம் தொடர்பாக  ஹம்பாந்தோட்டை பொலிஸாருக்கு அறிவித்தோம். நீதிபதி அங்கு வந்து சம்பவம் நடந்த இடத்திலேயே விசாரணை நடத்தினார். வாய்மொழியும் எடுத்தார்.

அந்நபர் அப்பிரதேசத்தில் பெயர் போன வேட்டைக்காரரொருவர் எனவும் குற்றங்களுடன் தொடர்பான கும்பலொன்றின் உறுப்பினர் ஒருவர் என அடுத்த நாள் எமக்குத் தெரிய வந்தது. அதன்படி இரண்டு மூன்று நாட்களாக எமது அலுவலகத் தொலைபேசிக்கு அழைப்பு மிரட்டல் வந்தது. எனினும் நாம் அதற்குப் பயந்து சேவை நிலையத்தை விட்டுச் செல்லவில்லை. மேலும் நாம் அங்கு கடமை புரிந்தோம்.

இச்சம்பவத்தின் பின்னர் நாம் அதாவது வனஜீவராசிகள் பணிக்குழுவிற்கு விசாரணையொன்றும் விசாரணையின் போது கவனத்தில் எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகள் பற்றியும் பெரிய அனுபவமொன்று கிடைத்தது. உதாரணமாக சுற்றி வளைப்பிற்குச் செல்வதாக இருந்தால் வாகனம் அருகில் இருக்க வேண்டும் என்ற விடயங்கள் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது.

நீதிமன்ற நடவடிக்கைகள் பொலிஸாரினால் இடம்பெற்றன. நாம் சந்தேக நபர் பக்கத்தில் இருந்தோம். பின்னர் சரியான முறையில் உண்மை மற்றும் பிழையின்றி சாட்சி வழங்கப்பட்டதனாலும் ஏனைய விடயங்கள் பிழையின்றி முன்வைக்கப்பட்டதினூடாக நாம் விடுதலையானோம்.

இச்சம்பவத்தின் பின்னர் பிரதேசத்தில்  வேட்டையாடுதல் பற்றிய அறிக்கைகள் பெருமளவு குறைந்தன.

அவர் விலங்குகளை வேட்டையாடிய முறையிலேயே அவருக்கும் இறக்க நேரிட்டதோ என எனக்குத் தனிப்பட்ட முறையில் தோன்றுகின்றது.

எம். ரத்னசிரி பெரேரா அவர்கள்       

எம். ரத்னசிரி பெரேரா அவர்கள் தற்போது வனவிலங்கு காவலராக ஹக்கல வனவிலங்குக் காவல் நிலையத்தில் சேவையாற்றுகிறார். 2000 ஆம் ஆண்டில் வனவிலங்கு காவலராகசேவைக்கு இணைந்த அவர் வன உதவியாளராகவும் பின்னர் வனவிலங்கு காவலராகவும் பதவியுயர்வு பெற்றார்.

ரத்னசிரி பெரேரா அவர்கள் 2017 ஆம் ஆண்டில் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் வனஜீவராசிகள் முகாமைத்துவ டிப்ளோமா பாடநெறியை நிறைவு செய்து பேராசிரியர் சரத் தொடகம எனும் பெயரில் வழங்கப்பட்ட அதிசிறந்த துறைக்கான தங்க விருதையும் (Best field performance) வெற்றி கொண்டுள்ள திறமையான அனுபவம் மிக்க ​வனவிலங்கு அதிகாரியொருவராவார். அண்மையில் மலைநாட்டு சிறுத்தைக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்களிலிருந்து சிறுத்தையை விடுவிப்பதற்காக தீர்வுளைத் தேடி வெற்றிகரமான திட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொண்டுள்ளார்.

ரத்னசிரி பெரேரா அவர்கள் மனைவி மற்றும் மகனுடன் வெற்றிகரமான  குடும்ப வாழ்வொன்றை நடத்திச் செல்கிறார். அவருடைய மனைவி மில்லனிய பிரதேச சபையில் கடமையாற்றுவதுடன் ஒரேயொரு மகன் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பௌதிக விஞ்ஞானப் பிரிவில் மூன்றாம் பிரிவில் பட்டத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் ஹொரண பிரதேசத்தில் வசித்து வருகிறார்.

மேலும் அவரட சகல முகாமைத்துவ கற்கை​நெறிகளையும் நிறைவு செய்துள்ளார். வனஜீவராசிகள் திணைக்களத்தின் மூலம் 2001 ஆம் ஆண்டில் வழங்கிய வனவிலங்கு சிறப்புத் திறமை விருதையும் பெற்றுள்ளார்.

     

பூந்தல தேசிய பூங்கா

இந்து ஆசிய பறவை இடம்பெயர்வு பாதையில் கடைசி நிறுத்தங்களில் ஒன்றான பூந்தல மற்றும் அதற்கு அண்மையிலுள்ள களப்பு அமைப்பினைப் பாதுகாத்துக் கொள்வதான பிரதான நோக்கத்துடன் 1969 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி சரணாலயமொன்றாகப் பிரகடனப்படுத்தப்பட்ட பூந்தல வன விலங்கு ஒதுக்கம், 1993 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 04 ஆம் திகதி தேசிய பூங்காவாக மாறியதுடன் பெரிதும் பாதுகாக்கப்பட்டது.  இலங்கையில் தென்கிழக்கு நீண்ட வறண்ட வலயத்தைச் சேர்ந்த இங்கு அமைந்துள்ள ஆழமற்ற களப்பான கொஹொலங்கல, மலல, எம்பிலிகல மற்றும் பூந்தல போன்ற ஈர நிலக் குழுக்கள்  உயர்ந்த பறவை இனங்களின் பன்முகத் தன்மையைக் கொண்டுள்ளதுடன் அதற்குப் புலம்பெயர் பறவைகளும் உள்ளடங்குகின்றன. இக்காரணத்தினால் பூந்தல ஈர நிலம், விசேடமாக   புலம்பெயர் நீர்ப் பறவைகளுக்கு முக்கியமான இலங்கையின்  முதல் சர்வதேச ரம்ஸா ஈரநிலமாக ரம்ஸா சர்வதேச மாநாட்டின் கீழ் 1990 அம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டது. சுமார் 6216 ஹெக்டயார் அளவிலான இத்தேசிய பூங்கா ஏனைய தேசிய பூங்காக்களுடனான ஒப்பீட்டளவில் சிறிய பூங்கா என்றாலும், இது பல சிறப்புக்களைக் கொண்டுள்ளது.

                                                                                             பூந்தலதேசிய பூங்காவின் நுழைவாயில்

ப்ராக் வரலாற்று காலத்துக்கு ஒரு மனிதனின் புதைகுழி ஆதாரங்கள் கிடைத்ததன் பின்னர் பூங்காவிற்குள் காணப்படும் பதிராஜ பிரதேசம் முழுவதும் விஞ்ஞான ரீதியாக மிக முக்கியமான ஓர் இடமாக இனம் காணப்பட்டது. ​பதிராஜ பிரதேசத்திலிருந்து  கிடைத்த விசேடமான பரள் மற்றும் மண் அடுக்குகள் 74000- 64000 க்கும் இடையிலான வருடங்கள் பழமை வாய்ந்தவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. காபன் 14 ஆய்வின்படி இந்த பரள் மண் அடுக்குகள் சாதுர்த்த காலத்தின் இரணைமடு எனும் கலவைக்குரியதாகவும் இப்பரள், அடுக்குகளுக்கிடையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட நுண்ணிய கற்களின் கலவைகளின் படி ஷீலா காலத்தில் இப்பிரதேசத்தில் மனித குடியிருப்பொன்று இருந்ததாக ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டவைகள்  விஞ்ஞானிகளால் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் பூந்தல பிரதேசத்தில் மணல் மேடுகளுக்கு அண்மையில் அரை பிறை வடிவிலும் முக்கோண வடிவிலுமான கற்பொருட்கள் கிடைக்கப் பெற்றதனால் நாட்டில் மனித வரலாறு பற்றி முக்கிய பல தகவல்கள் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. ஐக்கிய நாடுகளின் விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பு (UNESCO)மூலம் ஒரு மனித மற்றும் உயிர்க்கோள வன ஒதுக்கமாக  (Man Biosphere Reserve)​பூந்தல ​தேசிய பூங்கா பிரகடனப்படுத்தப்பட்டது.

பதிராஜ பிரதேசத்தில் பரந்துள்ள மணல்மேடு

பூந்தல  ​தேசிய பூங்கா ஹம்பாந்தோட்ட மாவட்டத்தில் மாகம்பத்துவிற்கு உத்தான பிரதேசத்தில் அமைந்துள்ளது. தென் வலயத்துக்குரிய இங்கு வருடாந்த மழைவீழ்ச்சி 107.4 மில்லி மீற்றர் மற்றும் சாதாரண வெப்பநிலை சுமார் 27°Cஆக உள்ளது. எனினும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வெப்பநிலை அதி கூடுதலாக உள்ளதுடன் பெப்ரவரி முதல் செப்டெம்பர் வரை வறண்ட காலநிலை ஒன்று காணப்படுகின்றது.

பூங்காவில் 1/3 ஆன அளவு பிரதான களப்புக்குள் மூழ்கிக் காணப்படுகின்றது. இதற்குப் புறம்பாக உப்புத் திரவியங்கள், மணல் மேடுகள், சதுப்பு நிலங்கள், புல்வெளிகள் என்பனவற்றைக் கொண்டுள்ளது. இப்பூங்காவில் அமைந்துள்ள பிரதான சூழல் வலயமாக முட்புதர்களைக் கொண்ட பற்றைக் காடுகளும் களப்புக்களுமாகும். இச்சூழல் அமைப்புக்களுக்கு மேலதிகமாக இங்கு கிடைக்கும் ஏனைய ​சூழல் அமைப்புக்களாக வறண்ட வலயக் காடுகள் (பாலை தாவரம் முதன்மையானது), மணல் தரைகளுடனான தாவர வகைகள், கடற்கரைகளுக்கு அண்மையிலான ​​தாவர வகைகள், கடலோரப் புல்வெளிகள், கங்கை காடுகள், களப்புடனான பற்றைக் காடுகள், உப்பு சதுப்பு நிலங்கள், சதுப்பு நிலங்கள் மற்றும் அடிக்கடி நீரில் மூழ்கும் ஏரி மற்றும் குளம் என்பனவாகும்.

இச்சூழல் அமைப்புக்களிலிருந்து பூக்கும் தாவர வகைகள் சுமார் 383 இனைப் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றுள் 06 வகையான தாவரங்கள் உள்நாட்டுக்குரியதாக உள்ளதுடன் 07​வகையானவை அழிவுறும் அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்துள்ளன. உள்நாட்டுத் தாவரங்களாக பாலை, ​உகாய், கொழுஞ்சி, ஆவாரம், வீரை, என்பன முதன்மை வாய்ந்தவை. கடலோரத் தாவரங்களாக பெரிய இராவணன் மீசை, அடும்பு மற்றும் விஷ்ணு கிரந்தி என்பனவாகும். ஆக்கிரமிப்புத் தாவரங்களாக சூழல் அமைப்பு முழுவதிலும் படர்ந்திருக்கும் சீமைக் கருவேலம் மற்றும் நாகதாளி என்பன பூங்காவின் இயற்கை தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் இருப்புக்கு அச்சுறுத்தலாகக் காணப்படுகின்றன.

விலங்கினங்களைக் கவனித்துப் பார்க்கும் போது ஆசிய யானைகள் பிரதான இடத்தைப் பிடித்துள்ளன. நிரந்தர வதிவிட யானைகள் 10 – 15 இற்கு இடையிலான எண்ணிக்கையில்  காணப்படுவதுடன், வருடத்தில் அடிக்கடி பூங்காவிற்குள் வெளியிலிருந்து வரும் சுற்றுலா யானைக் குழுக்கள் 25- 50 இனைக் காண முடிகின்றது.

ஆசிய யானை

ஏனைய பாலூட்டியினங்களாக புள்ளி மான்கள், காட்டுப் பன்றி, பொன்னிறக் குள்ளநரி, சிறு குரங்கு, இந்திய முழி முயல் மற்றும்சாம்பல் முகக் குரங்கு, புலி மற்றும் முள்ளம்பன்றி என்பனவும் ஊர்வன வகைகளான சதுப்பு முதலை, செம்மூக்கு முதலை போன்ற முதலை வகைகள் இரண்டும் பாம்புகளான மலைப்பாம்பு, நாகம் என்பனவும் விசேடமானவையாகும்.

கருங் குரங்கு
சதுப்பு முதலை

உலகில் வாழ்கின்ற ஊர்வனவான ஆமை வகைகளுள் 07 முதல் 05 வகையானவை பூந்தல கடற்கரையில் கிடைக்கப் பெற்றுள்ளன. தோணியாமை, ஒலிவ நிறச் சிற்றாமை, பேராமை,பெருந்தலைக் கடலாமை,அழுங்காமை எனும் இவ்வாமை இனங்களின் முட்டையையும் குஞ்சுகளையும் பாதுகாப்பதற்கு விசேடமாக ஆமை பாதுகாப்புச் செயற்றிட்டமொன்றும் பூந்தல தேசிய பூங்காவில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. ​பூந்தல தேசிய பூங்காவில் கிடைக்கப்பெற்ற அறிக்கையின்படி மீனினங்களின் எண்ணிக்கை 32 ஆக இருப்பதுடன் வண்ணத்துப்பூச்சியினங்கள் 52 உம் காணப்படுவதாக அறிக்கை வழங்கப்ப்டுள்ளது.

இக்களப்பு மற்றும் அதற்கு அண்மையிலுள்ள சதுப்பு நில நீர்ப்பறவைகளுக்கு உகந்த உணவும் பானங்களும் உறைவிடங்களாக உள்ளன. பறவையினங்களாக இலங்கைக் காட்டுக் கோழி, மஞ்சள் மூக்கு நாரை, நீல முகச் செண்பகம், சாம்பல் கூழைக்கடா என்பன பூங்காவில் காணப்படுகின்ற உள்நாட்டுப் பறவைகளாகும்.

                                                                                          அமெரிக்க பூநாரைகளின் அழகான காட்சி

அமெரிக்க பூநாரை, கருவால் மூக்கன் என்பன பூங்காவிற்கு வருகின்ற புலம்பெயர் பறவைகள் சிலவாகும்.  அமெரிக்க பூநாரையின் சுவர்க்க பூமியாக இருந்த இந்நிலப்பகுதி தற்கால மனித நடவடிக்கைகள் காரணமாக களப்பிற்குள் நன்னீர் கலப்பதினூடாக ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறை இப்பறவைகளின் வருகை குறைவதற்கு பாதிப்பாக உள்ளது.

சிறிய சீழ்க்கைச்சிரவி
ஏனைய நீர்ப் பறவைகள்
மஞ்சள் மூக்கு ஆள்காட்டி

கொழும்பிலிருந்து காலி, தங்கல்ல ஊடாக கதிர்காமம் பாதையில் சுமார் 256 கிலோ மீற்றர் தாண்டியதன் பின்னர் வெலிகத்த பிரியும் இடத்தில் வலப்பக்கம் திரும்பி 16கிலோ மீற்றர் இறுதியில் பூங்காவின் தலைமை அலுவலகத்தைச் சந்திக்க முடியும். இதற்கு மேலதிகமாக் கொழும்பு, இரத்தினபுரி பாதையில் எம்பிலிபிடிய, நோனகம சந்தியினூடாக கதிர்காமம் பாதையில் 245 கிலோ மீற்றர் தூரம் சென்று பூந்தல தேசிய பூங்காவை நெருங்க முடியும்.

சுற்றுலா மையமொன்றும், நினைவுச்சின்ன விற்பனை நிலையமொன்றும் அமைந்திருக்கும் பூந்தல தேசிய பூங்காவிற்குள் பறவைகளைப் பார்வையிடுவதற்காக நிர்மாணிக்கப்பட்ட ஒரு சிறப்பு பறவை முற்றமும் காணப்படுகின்றது. விடுதி வசதிகள் இல்லாவிட்டாலும் மைதான முகாம்கள் காணப்படுகின்றன.

                                                                                 சுற்றுலா மையத்தின் முன் பகுதி மற்றும் உட்பகுதி

பூந்தல  தொடர்பான விளக்கத்தில் காணப்படும் விலங்குகளின் பெயர்ப் பட்டியல்

Sinhala name

Tamil name

English name

Scientific name

අලියා

 யானைகள்

Asian elephant

Elephas maximus

තිත් මුවා

புள்ளி மான்

Spotted deer

Axis axis ceylonensis

වල් ඌරා       

காட்டுப் பன்றிகள்

Wild Boar

Sus scrofa

හිවලා

நரிகள்

Golden jackal

Canis aureus

රිලවා

செங்குரங்கு

Toque Macaque

Macaca sinica

හාවා

இந்திகுழி முயல்

Indian hare

Lepus nigricollis

අළු වදුරා

சாம்பல் முகக் குரங்கு

Common langur

Semnopithecus entellus

කොටියා

புலி

Leopard

Panthera pardus kotiya

ඉත්තෑවා

முள்ளம்பன்றி

Porcupine

Hystrix indica

කලු වඳුරා

கருங் குரங்கு

Purple faced langur

Trachypithecus vetalus

වලි කුකුළා

இலங்கைக் காட்டுக் கோழி

Sri lankajungle fowl 

Gallus lafayetill

ලතු වැකියා

மஞ்சள் மூக்கு நாரை

Painted stork 

Mycteria leucocephala

වත නිල් මල් කොහා

நீல முகச் செண்பகம்

Blue – facedmalkoha

Phaenicophaeus viridirostris

තිත් හොට  පැස්තුඩුවා

சாம்பல் கூழைக்கடா

Spot- billed pelican

Pelecanus philippensis

Sinhala name

Tamil name

English name

Scientific name

රජ සියක්කාරයා

அமெரிக்க பூநாரை

Greater flamingo

Phoenicopterus ruber

කළු පෙද ගොහොදු විත්තා

கருவால் மூக்கன்

Black tailed godwit

Limosa limosa

හීන් තඹ සේරුවා                      

சிறிய சீழ்க்கைச்சிரவி

Lesser Whistling duck

Dendrocygna javanica

කහ යටිමල් කිරලා

மஞ்சள் மூக்கு ஆள்காட்டி

Yellow Wattled Lapwing

Vanelius malabaricus

හැල කිඹුලා

சதுப்பு முதலை

Mugger crocodile

Crocodylus palustris

ගැට කිඹුලා

செம்மூக்கு முதலை

Estuarine crocodile

Crocodylus porosus

කොළ කැස්බෑවා

தோணியாமை

green sea turtle

Chelonia mydas

බටු කැස්බෑවා

ஒலிவ நிறச் சிற்றாமை,

Olive ridley sea turtle

Lepidochelys olivacea

දාර කැස්බෑවා

பேராமை

Leatherbacked sea turtle

Demochelys coriacea

ඔලුගෙඩි  කැස්බෑවා

பெருந்தலைக் கடலாமை

Logger head

Caretta caretta

පොතු  කැස්බෑවා

அழுங்காமை

Hawks bill

Eretmochelys imbricata

පිඹුරා

மலைப்பாம்பு

Python 

Python molurus

නයා

நாகம்

Cobra

Naja naja

பூந்தலதொடர்பான விளக்கத்தில் காணப்படும் மரங்களின் பெயர்ப் பட்டியல்

 Sinhala Names

Tamil Names

English Names

Botanical Name

පලු

பாலை

 Ceylon Iron wood

Manilkara hexandra 

වීර

வீரை

 Hedge Boxwood

Drypetes sepiaria 

මලිත්තන්

உகாய்

Malittan

Salvadora persica

කටුපිල

கொழுஞ்சி

Katupila

Tephrosia purpurea

රණවරා

ஆவாரம்

Ranawara            

Cassia auriculata

මහා රාවණ රුවුල

பெரிய இராவணன் மீசை

MahaRawanaRewla

Spinifex littoreus

මුහුදු බිම් තඹුරු

அடும்பு

MuhuduBimthamburu

Ipomoea pescaprae

විශ්ණුක්‍රාන්ති

விஷ்ணு கிரந்தி

Vishnu kranthi

Evolvulus alisinoides

කලපු අන්දර

சீமைக் கருவேலம்

Andara

Prosopis juliflora

පතොක්

நாகதாளி

Cactus

Opuntia dillenii

ஆசிரியர் – டீ .மல்சிங்ஹ, மேலதிக செயலாளர், வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு உதவியாளர்கள்

பூங்கா பற்றிய தகவல்களைத் தொகுத்தவர்– ஹஸினி சரத்சந்திர, பிரதம உத்தியோகத்தர், வன பாதுகாப்புத் திணைக்களம்

தமிழ் மொழிபெயர்ப்பு– ஏ.ஆர்.எப். றிப்னா, அபிவிருத்தி  உத்தியோகத்தர், வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு

ஆங்கில மொழிபெயர்ப்பு (ஆவணங்கள்) – அசோக பலிஹவடன, மொழிபெயர்ப்பாளர், வனஜீவராசிகள் மற்றும் வனபாதுகாப்பு அமைச்சு

ஆங்கில மொழிபெயர்ப்பு ​(கதை)– டீ. மல்சிங்ஹ

இணைய வடிவமைப்பு– என்.ஐகயத்ரி, அபிவிருத்தி  உத்தியோகத்தர், வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு

படங்கள்– ரோஹித குணவர்தன,வன பாதுகாப்புத் திணைக்களம்

சிங்கள தட்டச்சும் ஏனைய உதவிகள்– அருணிபலாபத்வல, வனஜீவராசிகள் மற்றும் வன  பாதுகாப்பு அமைச்சு