简体中文 ZH-CN English EN Français FR Deutsch DE Italiano IT Português PT සිංහල SI தமிழ் TA
Ministry of Wildlife and Forest Resources Conservation

அத்தியாயம் 11 – சமனல இயற்கை ஒதுக்கம்

Content Image

அந்த அரிய கருஞ்சிறுத்தை

2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நான் நல்லதன்னி  வன வள அலுவலகத்திற்கு  வன விலங்கு தள பாதுகாப்பாளராக இடம் மாறினேன்.  இப்பிரதேசம் மலைப்பாங்கான குளிர் காலநிலையொன்றுள்ள பகுதியாகும். அதாவது நல்லதன்னி ஒதுக்கம் வனத்திற்கு எல்லையாக தேயிலைத் தோட்டங்கள் அமைந்துள்ளன.  தேயிலைத் தோட்டங்களை அண்டி வாழும் அதிகளவானோர் தேயிலைக் கொழுந்து பறிப்பதனையே செய்கின்றனர். அவர்கள் அதிகாலையிலிருந்தே தேயிலைக் கொழுந்து பறிக்க வருகின்றனர். அவ்வாறு வரும் போது அவர்களிடை​யே நாய்கள் திரிகின்றன. நல்லதன்னி பிரதேசத்தில் சிறுத்தைகள் உள்ளன. சிறுத்தைக் குடும்பத்தின் உறுப்பினர்களானதுரும்பன் பூனை மற்றும்மீன்பிடிப் பூனைஅதிகளவில் உள்ளன. பெண் சிறுத்தைகள் குறைவு.

இச்சிறுத்தைகளின் பிரதான உணவு நாய்கள் என்பதனை அறியக் கிடைத்தது. அதன் காரணமாக அப்பகுதி மக்கள் சிறுத்தைகளை எரிச்சலூட்டும் இயல்பு காணப்பட்டது. நாய்களினால் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் மக்கள் சிறுத்தைகளுடன் மோதும் சந்தர்ப்பம் காணப்பட்டது. விசேடமாக நாய்களைக் காப்பாற்றச் செல்லும் போது சிறுத்தைகள் மனிதர்களையும் தாக்கிய பல சந்தர்ப்பங்களும் காணப்பட்டன.

இது பற்றி நாம் சிறுத்தைகளின் பெறுமதி, அவைகளிலிருந்து காப்பாறுவது எவ்வாறு போன்ற விடயங்களைப் பற்றி நாம் மனிதர்களுக்கு அறிவூட்டினோம். சில நாட்கள் செல்லும் போது இப்பிரதேசத்தில் மிக அரிதான கருஞ் சிறுத்தை ஒன்று இருப்பதாக எமக்கு அறியக் கிடைத்தது. இது தொடர்பாகத் திணைக்களத்தின் பணிக்குழு கவனத்துடன் இருந்தது. திணைக்களத்தின்மிருக வைத்தியப் பிரிவும் இது தொடர்பாகச் செயலாற்றியது. உடவளவை மிருக வைத்தியப் பிரிவின் நாலக தலையிட்டு செயற்பட்டார். இச்சிறுத்தையின் அண்மையான புகைப்படம் ஒன்று புகைப்படக்கருவியில் பதிவானது.

மனிதர்கள் சிறுத்தைகளைப் பிடிப்பதற்கு பொறி வைக்கின்றனர். நாம் அவற்றை அகற்றுவோம். மீண்டும் அறிவூட்டுவோம்.

துரதிஷ்டவசமாக எனது 2019 ஆம் ஆண்டின் இறுதியாகும் போது இலங்கை கொவிட் தொற்று நிலைமைக்கு முகம் கொடுக்கிறது. இதனால் எமக்கு மற்றைய நாட்களைப் போன்று அறிவூட்டல்களை மேற்கொள்வதற்கு தொடர்ந்து மனிதர்களுடன் இருப்பதற்கான சந்தர்ப்பம் குறைந்தது. எனினும் மனிதர்கள்தேயிலைக் கொழுந்து பறிப்பதனைத் தொடர்ந்து செய்து கொண்டு சென்றனர். கிராமங்களில் பயிர்ச்செய்கையும் செய்தனர். இதற்கிடையில் ​பயிர்ச்செய்கையைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும் நாய்களைப்  பாதுகாத்துக் கொள்வதற்காகவும் பொறி வைக்க முற்பட்டுள்ளனர்.அறிவூட்டல்கள் கிடைக்காத நபர்கள் இந்நடவடிக்கைகளில் ​ஈடுபட்டமையாகும் இன்னொரு காரணமொன்றாகும். பொறி வைப்பது எமது அவதானத்திலிருந்து உடனடியாக இழந்தது.

2020 ஆம் ஆண்டு மே 20 ஆம் திகதி காலை 9​.45 மணியளவில் கருஞ் சிறுத்தை பொறிக்கு அகப்பட்டது. எமக்கு விரைவாகத் தகவல் கிடைத்தது. சிறுத்தை பிடிபட்டு அரை மணி நேரம் செல்ல  முன்னர் எமக்கு அவ்விடத்துக்குச் செல்ல முடியுமாக இருந்தது.

அது மிகவும் கவலைக்குரிய காட்சியொன்றாகும். விலங்கின் கழுத்திற்கு பொறி விழுந்து விலங்கு சத்தமிட்டுக் கொண்டு துடிக்கிறது. அங்குமிங்கும் பாய்கிறது. மனிதர்கள் சுற்றி வளைத்து சத்தமிட்டுக் கொண்டிருந்தனர். நாம் சென்றவுடன் மனிதர்களை அப்புறப்படுத்தி விட்டு விலங்கிற்கு இருக்க முடியுமான சூழ்நிலையை உருவாக்கினோம்.

அதனுடனே மிருக வைத்தியப் பிரிவின் மிருக வைத்தியர் நாலகவும்  மிருக வைத்தியர் அகலங்க பினிதியவும் உதவியாளர்களுடன் அங்கே வந்தனர். சமனல அடவியவின் தள பாதுகாப்பாளர் பியஸிங்ஹ அவர்களும் வந்தார். மிருகத்தினை மயக்கமாக்காமல் இருப்பதற்கு வழி இருக்கவில்லை. மிருக வைத்தியர்கள் மிருகத்தினை மயக்கமுறச் செய்து பொறியை அகற்றினர். நாம் மிருகத்தை பெட்டியொன்றினுள் போட்டுக் கொண்டோம்.  இந்நேரமாகும் போது மாலை 1.30 போல் ஆயிற்று.

மிருகத்தை நல்லதன்னி அலுவலகத்துடன் இணைந்த கீழேயுள்ள நிலத்தில் வைத்துக் கொண்டு சிகிச்சை அளித்தோம். அலுவலகம் மலையின் மேல் இருந்ததனால் அவ்விடத்துக்குக் கொண்டு செல்ல கடினமாக இருந்தது. இரவு சுமார் ஒன்பது மணி ஆகும் போது  மருகம் சாதாரண நிலையாகி விட்டது.

மேற்படி பரிசோதனைக்காக மிருகத்தை உடவளவை மிருக வைத்தியப் பிரிவிற்குக் கொண்டு செல்வதற்குத் தீர்மானிக்கப்பட்டது. அங்கு தொடர்ச்சியாக சிகிச்சையளிக்கப்பட்டது. மிருகமும் சாதாரண நிலைமையில் இருந்தது. எனினும் நான்கு நாட்களே அவ்வாறு இருந்தது. எமது அரிய கருஞ் சிறுத்தை இறந்து விட்டது.  பொறிக்கு அகப்பட்ட வேளையில் உள்ளக இரத்தக்கசிவு ஏற்பட்டு இருந்தமை மரணத்திற்கான காரணமாகும்.

இக்கருஞ் சிறுத்தைகள் 1815  இல் இராஜசிங்க மன்ன்னின் செல்லப் பிராணிகளுடன் இருந்ததாக அறியக் கிடைத்துள்ளது. அதன் பின்னர் அடிக்கடி அவைகள் அவதானிக்கப்பட்டாலும் மனிதர்களுடன் சில நாட்கள் அல்லது கழித்தது  இக்கருஞ் சிறுத்தை மட்டுமாகும்.

இக்கருஞ் சிறுத்தைக்கு பொறி வைத்த நபரை எம்மால் பிடிக்க முடிந்தது. அவருக்கு எதிராக வழக்கொன்றையும் நாம் பதிவு செய்தோம். வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது.

இக்கருஞ் சிறுத்தையைப் பற்றி விசேட  கவனம் செலுத்தப்பட்டிருந்தாலும் இறுதித் தருணத்தில் எமக்கு அருகில் எடுக்க முடியுமாயினும் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. மிருகம் பொறியில் வேதனையுடன் பயந்து தடுமாறிய விதம் நினைவுக்கு வரும் போது எனக்கு பாரிய  வேதனை ஏற்படுகிறது. கருஞ் சிறுத்தையின் சம்பவம்  எனது வாழ்க்கையைப் பாதித்த சம்பவம் அல்லாவிட்டாலும் எனது கடமை வாழ்க்கைக்கையை உழுக்கிய சம்பவமொன்று என்பதனைக் கூற முடியும்.

பிரபாஷ் அருண கருணாதிலக

 

பிரபாஷ் அருண கருணாதிலக அவர்கள் 2003.06.02 ஆம் திகதி புதிய வன விலங்குப் பொறுப்பாளர் ஒருவராக வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்புத் திணைக்களத்தில் சேவைக்காக நியமிக்கப்பட்டார். யால தேசிய பூங்காவிற்கு தொழிலுக்கு சேர்ந்த  அவர் 2008 ஆம் ஆண்டு வரை அங்கு கடமை புரிந்தார். கம்பஹ உதவிப் பணிப்பாளர் அலுவலகத்தில் மற்றும் யால தேசிய பூங்காவில் மீண்டும் சேவையாற்றியதன் பின்னர்  பிரபாஷ் அருண கருணாதிலக அவர்கள்  2014 ஆம் ஆண்டில் மொரகொல்ல தேசிய வன பூங்காவில் தள உதவிப் பொறுப்பாளராக சேவைக்கு இணைந்தார்.

பிரபாஷ் அருண கருணாதிலக அவர்கள் 2017 ஆம் ஆண்டில்  நல்லதன்னி தள பாதுகாப்பாளர் ஒருவராகப் பதவியுயர்வு பெற்று அங்கு சேவைக்கு வந்தார். அவர் வனஜீவராசிகள்திணைக்களத்தினால் நடத்தப்படும் கிரிதலே பயிற்சி நிலையத்தில் மூன்று மாத கால விடுதிப் பயிற்சியையும், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில்  வனஜீவராசிகள் முகாமைத்துவ பாடநெறியையும் செய்துள்ளார். அவ்வாறே பெலிகுல்ஒய பல்கலைக்கழகத்தில்  பூமிக் காட்சி நிலம் பற்றிய டிப்ளோமாவையும், சிவில் பொறியியல் டிப்ளோமாபாடநெறியையும் செய்து முடித்துள்ளார்.

அவர் மூன்று மகன்மார்களின் அன்புத் தந்தையாவார். அவரது மனைவி சாரிகா தென்னகோன் அவர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவராக விவசாயத்  திணைக்களத்திற்குரிய கன்னொருவை தேசிய வளங்கள் நிலையத்தில் கடமையாற்றுகிறார். அவர்கள் தற்போது H 129, மாவெல, ஹிந்துல எனும் முகவரியில் வசித்து வருகின்றனர்.

சமனல இயற்கை ஒதுக்கம்

“கிரிகோடுத் வந்தவன்ன அபே புதுன் அபி வந்தின்ன பெரலி பெரலி அபி வந்தின்ன” எனக் கூறிக் கொண்டு பக்தர்கள் புத்தபெருமானின் இடது பாதசுவட்டை வழிபடுவதற்கு சமன் மலைஏறுவர். அற்புதமான சூரிய உதயத்தைக் கண்டு கொள்வதற்கும், இயற்கை மலைகளைப் பார்வையிடுவதற்கும் வெளிநாட்டவர்களும் அதிகளவு சிரிபா மலை ஏறுவர். இலங்கையில் மத்திய மலைப்பகுதிகள் எனப்படுவது இலங்கையின் புதிய உலக பாரம்பரியமாகும். 2010 ஜூலை 31 ஆம் திகதி உலக பாரம்பரிய குழுவினால் அதன்படி சமனல தள ஒதுக்கம் உலக  பாரம்பரியமொன்றாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. இது இலங்கையின் 1988 இல் சிங்கராஜ ஒதுக்குக் காடாகப் பெயரிடப்பட்டதன் பின்னர், 22 வருடங்களின் பின்னர் பிரகடனப்படுத்தப்பட்ட முதலாவது உலக பாரம்பரியமாகும்.

                                                                                                           சமனல இயற்கை ஒதுக்கம்

சமனல இயற்கை ஒதுக்கம்22,380 ஹெக்டயார் நில அளவினைக் கொண்டுள்ளதோடு இது 1940 ஒக்டோபர் 25 ஆம் திகதி ஆங்கில அரசாங்கத்தினால் சரணாலயமொன்றாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. பிற்பட்ட காலத்தில் அச்சரணாலயத்தின் முக்கியத’துவம் காரணமாக சமனல தள சரணாலயத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 12979ஹெக்டயார் (32448 ஏக்கர்) 2007 ஆம் ஆண்டு பாதுகாக்கப்பட வேண்டிய அவசியத்தைக் கவனத்தில் கொண்டு இயற்கை ஒதுக்கமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி புனித இடமொன்றாக உள்நாட்டு வெளிநாட்டு யாத்திரிகர்களின் யாத்திரைக்கு உட்படும் சிவனொளிபாத மலை உச்சி மற்றும் சிவனொளிபாதபத்மயஅமைந்துள்ள முற்றம் (உயரம் 2243 மீற்றர்/ அடி 7360) உம்,  சிவனொளிபாத (சமனல மலை) மலையில் பக்தர்களுக்கு ஒதுக்கப்பட்ட பாதை அமைப்பும் போன்ற பொது இடங்களும் உரித்தாவது சமனல தள சரணாலயத்துக்காகும்.

இலங்கையின் மூன்றாவது உயரமான மலையான கூம்பு வடிவமான “சமனல மலை” இரத்தினபுரி மற்றும் நுவரெலியா போன்ற திசைகளுக்கு நடுவில் அமைந்துள்ள சிங்கள பௌத்தர்களின் 2500 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாறொன்றுக்கு உறவினைக் கூறும் புனிதமான இடமொன்றாகும்.

சிவனொளிபாத மலைத்தொடர் முழுமையாக இயற்கை ஒதுக்கத்துக்கு உரித்தாவதோடு அங்கு கிழக்கு எல்லை நடு மலையில் பிதுருதலாகல மலைத்தொடரில் ஹோடன்தென்ன தேசிய பூங்கா வரை தொடர்புபட்டுள்ளது. இந்த  இயற்கை ஒதுக்கம் சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்கள் இரண்டையும் கொண்டிருப்பதோடு நுவரெலியா, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு உரியதாகும். அம்பகமுவ, தெரணியகல,   இரத்தினபுரி, இம்புல்பே, பலாங்கொடை மற்றும் குருவிட போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகள் ஒதுக்கத்திற்கு உரித்தான அதிகாரப் பிரதேசங்களாகும்.நுவரெலியாமாவட்டத்திற்கு 4897ஹெக்டயார்(12243 ஏக்கர்) உம், இரத்தினபுரிமாவட்டத்திற்கு17483ஹெக்டயார்  (43707 ஏக்கர்) உம் ஒதுக்கத்திற்குஉரித்தாவதோடு, கேகாலைமாவட்ட எல்லைகள் சில தூரம் கடந்து ஒதுக்கம் பரந்துள்ளது என 1:50000 வரைபட ஆய்வு மூலம் இனங்கண்டு கொள்ள முடியும்.

மலைக் காடுகள் வகையைச் சேர்ந்த காடுகளால் நிறைந்துள்ள சமனல தளம் மிகவும் உணர்திறனுடைய உயர் நீர்நிலை உயர்ந்த நீரேந்துப் பிரதேசம் ஆகும். இந்த வனத்திலிருந்து களு, வளவை, களனி போன்ற கங்கைகள் மூன்றும் நேரடியாக உருவாவதோடு அவ்கங்கைகளுடன் தொடர்புபடும் சிறிய நீர் ஊற்றுக்கள்295 உம் சமனல தளத்தின் ஊற்றுக்களினால் உயிர் வாழ்கின்றன. மோஹினி நீர்வீழ்ச்சி, லக்‌ஷபான, யகா என்டூ நீர்வீழ்ச்சி, மாபனான நீர்வீழ்ச்சி, மரே நீர்வீழ்ச்சி, காட்மோர் நீர்வீழ்ச்சி, தீயன்  நீர்வீழ்ச்சி, அலபொல  நீர்வீழ்ச்சி போன்ற நீர்வீழ்ச்சிகள்  சிவனொளிபாத தளத்தில் வெவ்வேறான இடங்களிலிருந்து கீழ் நோக்கிப் பாய்கின்ற நீரோடைகளாகும்.

ஆண்டின் ஆறு மாதங்கள் பூராகவும் நன்றாக மழை​வீழ்ச்சியைக் கொண்டுள்ள சமனல தளத்தில் வருடாந்த மழை​வீழ்ச்சி பொதுவாக 5000 மில்லிமீற்றர் ஆவதோடு தென்மேற்குப் பருவமழை காணப்படும் மே- ஜூன்- ஜூலை மாதங்களில் அதிகளவான மழை​வீழ்ச்சியைப் பெறுகிறது. டிசம்பர்- ஜனவரி- பெப்ரவரி வரை கிடைக்கும் வடகிழக்கு பருவமழையில் கிடைக்கும்மழை​வீழ்ச்சி மிகக் குறைவு என்பதனால் காலநிலை தடங்கல்களும் இப்பருவங்களில் குறைவு என்பதனால் சிவனொளிபாத யாத்திரை காலம் உந்துவப் பொசொன் ஆரம்பத்திலிருந்து வெசாக் போயா வரை காணப்படும். தென்மேற்குப் பருவ காலத்தில் கனத்த, பலத்த பனி வீழ்ச்சியை சமனல தளத்தில் கண்டு கொள்ள முடிவதோடு இக்காலத்தில் அதிக குளிர் காலநிலையொன்றை சமனல தளத்தில்மற்றும்  சிவனொளிபாதமுற்றத்திலிருந்தும் அறிவிக்கப்பட்டது. இங்கு வருடாந்த வெப்பநிலை பொதுவாக 15 பாகை சென்டிகிரேட் ஆகும். அங்கு  மே- ஜூன்- ஜூலை காலங்களில் 5-10 பாகை வரை ஆயினும் வெப்பநிலை கீழிறங்க முடியும்.

குருவிக்கூடு கலன்றாவரம்
இரு ராஜ
மஹ ஹெடயாதரை
நாக வகை
ஓக்கிட்

ஈரவலய மலை சூழல் அமைப்பிற்கு உரிய இந்த சிவனொளிபாதசமனல ஒதுக்க எல்லையில் விசேடமான தாவங்கள் அதிகளவு காணப்படுகின்றன. ஓக்கிட் வகைகளும், ஈரலிப்பு அதிகமாக உள்ளதனால் கற்பாறை மேற்பகுதியிலும் ஈரநில மேற்பகுதியிலும் பசுமையான பாசி வகைகள் போன்றே அரிய மருத்துவ தாவரங்கள் அதிகளவும் ஒதுக்கத்திலிருந்து அறியக் கிடைத்துள்ளதோடு இத்தாவர சமூகம் வனத்திற்கு அழகையும் இணைத்துத் தருகிறது.

வண்ணத்துப்பூச்சி இனங்கள் பல இவ்வனத்தில் சுற்றித் திரிவது சமனல தளத்திற்கு அப்பெயர் கிடைப்பதற்குக் காரணமாக இருக்கலாம் என்பதனை சிந்திக்க முடிவதோடு  சிவனொளிபாத காலம் ஆரம்பமாவதுடன் வெவ்வேறு விதமான வண்ணத்துப்பூச்சிகளைக் கண்டு கொள்ள முடிவதனால்  வண்ணத்துப்பூச்சிகள் சிவனொளிபாத யாத்திரை செய்கின்றன என அதிகமானவர்கள் கூறுகின்றனர்.இலங்கை அழகி, இந்திய சிவப்பு அட்மிரல் எனும் வண்ணத்துப்பூச்சிகளைப் போன்றே பூச்சிகள், ஈரூடக வாழிகள், ஊர்வன, பறவைகள் மற்றும் பாலூட்டிகள் உட்பட உள்நாட்டு உயிரினங்கள் சமூகத்திற்கு இது பாதுகாப்பான சரணாலயமொன்றாக இருந்தாலும், அடர்ந்த தாவர மூடுதல் காரணமாகயால போன்ற உலர் வலய பூங்கா போன்று வனவிலங்குகளையும் இங்கு இலகுவாகக் கண்டு கொள்ள முடியாது.இங்கு பொதுவாக கண்டு கொள்ள முடியுமான பாரிய பாலூட்டி உயிரினமாக, இலங்கை சாம்பற் குரங்கு காணப்படுகின்றது.

சமனல தளத்திலிருந்து அறியக் கிடைக்கும் சிறப்பான விலங்குப் பிரிவு பறவைகளாகும். இங்கு பறவையினங்கள் 160 உம் அறியக் கிடைக்கப் பெற்றுள்ளதோடு இலங்கைக்கே உரிய பறவைகள் 34 இல் 25 இனை சமனல ​சிவனொளிபாத பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளது. காட்டுப் பறவைகளின் முக்கியமான பல்வகைமைத் தன்மை ஒன்றை இங்கு காட்டுவதோடு இலங்கைக்கே உரிய பறவைகள், அங்கு வசிக்கும் பறவைகள் மற்றும் புலம்பெயர் பறவைகளும் அதனுள் அடங்குகின்றன. மஞ்சள் காதுள்ள புல்புல், இலங்கை வெள்ளைக் கண், இலங்கை தொங்கும் கிளி, லேயார்டின் கிளி என்பன அவற்றுள் பொதுவாகக் கண்டு கொள்ள முடியுமான பறவைகளாகும். ஓர் ஊக்கமளிக்கும்நிகழ்வாக பறவைகள் பெரும்பாலும் உணவு தேடிச் செல்வதற்காக பறவைக் கூட்டமாகச் செல்லும் நடத்தையைக் காட்டுவதாகும். இவ்வாறான கூட்டமொன்று பெரும்பாலும் துடுப்பு வால் கரிச்சான் மற்றும் ஆரஞ்சு படியாக வாயாடி போன்ற பறவையினங்களைக் கொண்டதாகும். இவ்வாறான கூட்டமொன்றினில் முன்னிலை வகிக்கும் துடுப்பு வால் கரிச்சான் வன்முறை வாய்ந்த பறவையொன்றாகவும் ஆரஞ்சு படியாக வாயாடி சத்தம் மிகுந்த பறவையொன்றாகவும் பிரபலமானது.

கருங்கழுகு
இலங்கை நீலச் செவ்வலகன்
செம்மஞ்சள் மார்பக ப்ளைகேச்சர்
மஞ்சள் நிற பர்பர்ட்

இலங்கையின் ஈரவலயக்காடுகளில் வாழும் யானைகளின் அளவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு யானைகள் சுமார் 10-11சமனல தளத்தில் நடமாடுவதாகக் கணிப்பிடப்படுகின்றது. ஈரவலயத்தில் வாழும் இறுதியான யானைகளின் தொகைக்குரிய ஒரு பகுதி சிங்கராஜ வனத்தினைச் சுற்றி  வாழ்வதோடு எஞ்சிய பகுதியினைக் கண்டு கொள்ள முடியுமாவது சமனல தளத்திலாகும். காட்டுப் பன்றிகளும் சிவனொளிபாத பகுதியில் மற்றொரு பொதுவான வன விலங்காக இருந்தாலும் சிவனொளிபாதவில் யாத்திரை  நடைபெறும் பகுதியில் கண்டு கொள்வதற்குக் கடினமான புலி, மீன்பிடிப் பூனை, பழுப்பு மலை அணில், மரை, செங்குரங்கு, இந்திய சாம்பல் கீரிப்பிள்ளை, காட்டுப்பூனை, துரும்பன் பூனை போன்ற பாலூட்டிகள் பலவும் வாழ்கின்றன.

ஈர மலைநாட்டு வலய விசேடமான ஈரூடகவாழினம் மற்றும் ஊர்வன பல்வகைத்தன்மையும் சமனல தளத்திலும் அவதானிக்க முடியுமாவதோடு ஈரூடக வகைகள் 21 உம் ஊர்வனவகைகள் சுமார் 38 உம் இங்கிருந்து அறியக் கிடைக்கின்றன. பிளைத் பூமிப் பாம்பு, பாயின் கரடுமுரடான பாம்பு, தலவமெடில்லா, இலங்கை கருங்காலி பல்லி, முரட்டு மூக்கு கொம்புப் பல்லி, பொதுவான பச்சை வனப் பல்லி, பொதுவான தோட்டப்பல்லி, ஹம்ப் மூக்குப் பல்லி என்பன இந்தஊர்வனவில் முதன்மை வாய்ந்தவை.

இலங்கை கருங்காலி பல்லி

சமனல தளத்திலிருந்து கிடைக்கும் மீனின வகைகளுள் உள்நாட்டிற்குரிய லே தித்தயா, புலத்ஹபயா போன்ற அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள விசேடமானவையைப் பொதுவாக கண்டு கொள்ள முடியுமான இவ்வாறான அருமையான வளங்களைப் பாதுகாப்பதற்கு வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் பல்வேறான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

கடந்த காலத்தில் அண்மித்த வனத்திலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட விறகின் மூலம் உணவுக் கடைகளில் சமையல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட விதம் இன்று ஆகும் போது வனஜீவராசிகள் பாதுகாப்புப் பிரிவுகளில் தலையீட்டினால் விறகுப் பயன்பாடு பெருமளவு    குறைந்துள்ளது. சீத கங்குலவின்   மேல்            பகுதியில்       கடைகளில்சமையல்களுக்குப்        பயன்படுத்தப்படுவது எரிவாயு மட்டுமாகும்.  அது உரிய பிரிவுகளினால் செயற்படுத்தப்படுகின்ற வெற்றிகரமான ​நடைமுறையொன்றின் பெறுபேறொன்றாகும். மேலும் ​ வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்துக்குரிய சமனல இயற்கை ஒதுக்கத்திற்கு சட்ட ரீதியற்ற முறையில் உள்நுழைவது அங்குள்ள தாவரங்கள் மற்றும் விலங்கு சமூகத்திற்குச் சேதம் விளைவித்தல், சூழல் அமைப்பை துஷ்பிரயோகம் செய்தல் வனவிலங்கு மற்றும் தாவர பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் படி சட்ட விரோத செயலொன்றாகும்.

தோட்ட​ப் பயிர்ச்செய்கையுடன் சுத்திகரிப்பு செய்யப்பட்டுள்ள மலைநாட்டின் அதிகளவான நிலங்களில் எந்த விதமான பாதிப்புக்களுக்கும் உள்ளாகாது பாதுகாப்பாக இருப்பதற்கு சிவனொளிபாத வனப் பகுதிக்கு முடியுமாக இருந்தது. கடந்த காலம் எவ்வளவு அழகாக இருந்தாலும் சிவனொளிபாத தளத்தின் எதிர்காலம் மிக மிக அழகானது. உலக பாதுகாப்பு சங்கம் (IUCN) மேற்கொண்ட ஆய்வுகளின்படி சிவனொளிபாததளத்தில் ​நடை​பெறுகின்ற ​துஷ்பிரயோகங்களினால் மிக அரிய தாவர வகைகள் மற்றும் விலங்கு வகைகள் பலவும் அழிவடைந்து செல்லும் அச்சுறத்தலுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. இலங்கைக்கே உரித்தான பறவை ​ வகைகள்14 உம் அதற்கிடையில் இருப்பதாக (IUCN) அறிக்கைகளில் குறிப்பிடப்படுகின்றன.

அதனால் சிறப்பான உயிர்ப் பல்வகைத் தன்மையைக் கொண்ட இவ்வாறான சூழல் அமைப்பைப் பாதுகாக்கும் கருமங்கள் தற்போது வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தினால் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருப்பதோடு இவ்வாறான சூழல் அமைப்புகளை எதிர்கால சந்ததியினருக்காக வழங்குவதற்காக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் மிகவும் பங்களிப்புச் செய்கிறது.

சமனல இயற்கை ஒதுக்கம் தொடர்பான விளக்கத்தில் காணப்படும் விலங்குகளின் பெயர்ப் பட்டியல்

Sinhala name

Tamil name

English name

Scientific name

අලියා

ஆசிய யானை

Asian elephant

Elephas maximus

කොටියා

புலி

Leopard

Panthera pardus kotiya

හඳුන් දිවියා

மீன்பிடிப் பூனை

Fishing Cat

Prionailurus viverrinus

වල් ඌරා       

காட்டுப் பன்றி

Wild Boar

Sus scrofa

දඬු ලේනා

பழுப்பு மலை அணில்

Grizzled giant Squirrel

Ratufa macroura

ගෝනා

மரை

Sambar

Rusa unicolor

රිලවා

செங்குரங்கு

Toque Macaque

Macaca sinica

වල්බළලා

காட்டுப்பூனை

Jungle cat

Felis chaus

කොළදිවියා

துரும்பன் பூனை

Rusty- spotted cat

Felis rubginosa

ශ්‍රී ලංකා අළු වඳුරා

இலங்கை சாம்பற் குரங்கு

Common langur

Semnopithecus entellus

මුගටියා

இந்திய சாம்பல் கீரிப்பிள்ளை

Common Mongoose

Herpestes edwardsii

පීත­කන්කොණ්‌ඩයා

மஞ்சள் காதுள்ள புல்புல்

Srilanka yelloweared Balbul

Pycnonotus penicillatus

සිතැ­සියා

இலங்கை வெள்ளைக் கண்

Sri Lanka White eye

Zosterops ceylonensis

ගිරා­ම­ලිත්තා

இலங்கை தொங்கும் கிளி

Sri Lanka Hanging parrot

Loriculus beryllinus

අළු­ගි­රවා

லேயார்டின் கிளி

Emerald collared parakeet

Psittacula calthropae

රතුදෙමළිච්චා

ஆரஞ்சு படியாக வாயாடி

Oranger-billed Babbler

Turdoides rufescens

මහ කවුඩා

துடுப்பு வால் கரிச்சான்

Greater racked tailed drongo

Dicrurus paradiseus

කළුකුස්සා

கருங்கழுகு

Black eagle

Ictinaetus malaiensis

කැහිබෙල්ලා

இலங்கை நீலச் செவ்வலகன்

Blue magpie

Urocissa ornata

ටිකල් නිල් මැසිමරා

செம்மஞ்சள் மார்பக ப்ளைகேச்சர்

Orange breasted flycatcher

Cyornis tickelliae

මූකලන් කොට්ටෝරුවා

மஞ்சள் நிற பர்பர்ட்

Yellow fronted barbet

Megalaima flavifrons

මහ කුරුලු පිය පැපිලියා

இலங்கை அழகி

Sri lanka birdwing

Troides darsius

ඉන්දියානු රතු අද්මිරාල්  

இந்திய சிவப்பு அட்மிரல்

Indian red admiral

Vanessa indica

රළු­අං­ක­ටුස්‌සා

இலங்கை கருங்காலி பல்லி

Sri Lankan Kangaroo lizard 

Otocryptis wiegmanni

කඟ­මුව අංක­ටුස්‌සා

முரட்டு மூக்கு கொம்புப் பல்லி

Rough horn lizard 

Ceratophora aspera

පලා කටුස්‌සා

பொதுவான பச்சை வனப் பல்லி

Green Garden Lizard

Calotes calotes

ගරා­ක­ටුස්‌සා

பொதுவான தோட்டப்பல்லி

Common Garden Lizard

Calotes versicolor 

කර­මල් බෝදි­ලිමා

ஹம்ப்மூக்குப்பல்லி

Hump norsed Lizard

Lyiocephalus scutatus

බ්ලයිත්ගේ පෘථිවි සර්පයා

பிளைத் பூமிப் பாம்பு

Blythearth snake

Rhinophis blythii

ලේමැ­ඩිල්ලා

பாயின் கரடுமுரடான பாம்பு

Boie’s rough-sided snake

Aspidura brachyorrhos

දල­ව­මැ­ඩිල්ලා

தலவமெடில்லா

common roughside

Aspidura trachyprocta

ලේ තිත්තයා 

லே தித்தயா

Cherry Barb

Puntius titteya

බුල­ත්හ­පයා

புலத்ஹபயா

Black ruby barb

Puntius nigrofasciatus 

சமனல இயற்கை ஒதுக்கம்தொடர்பான விளக்கத்தில் காணப்படும் மரங்களின் பெயர்ப் பட்டியல்

 Sinhala Names

Tamil Names

English Names

Botanical Name

උඩ­වැ­ඩියා විශේෂ

ஓக்கிட் வகைகள்

Orchid species

 

ඇල්ගී විශේෂ

பாசி வகைகள்

Algae species

 

බිම් උඩ­වැ­ඩියා

தரை ஓக்கிட்

Ground orckid

Spathoglottis plicata

ඉරු රාජ

இரு ராஜ

Iru raja

Zeuxine regia

මහ හැඩයා

மஹ ஹெடயா

Mahahadaya

Hupergia phlegmaria

නා විශේෂ

நாக வகை

Mesuwa spp.na

 

කුරුළු කූඩු මීවණ

குருவிக்கூடு கலன்றாவரம்

Bird nest fern

Asplenium nidus

தொகுப்பாளர் –  தம்மிகாமல்சிங்ஹ, மேலதிக செயலாளர், வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு

பூங்கா பற்றிய தகவல்களைத் தொகுத்தவர்- ஹஸினி சரத்சந்திர, பிரதம உத்தியோகத்தர், வன பாதுகாப்புத் திணைக்களம்

மஹேக்ஷா சதுராணி பெரேரா(பட்டதாரி பயிற்சியாளர்),வனஜீவராசிகள்  பாதுகாப்புத் திணைக்களம்

தமிழ் மொழிபெயர்ப்பு- ஏ.ஆர்.எப். றிப்னா, அபிவிருத்தி  உத்தியோகத்தர், வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு

ஆங்கில மொழிபெயர்ப்பு (ஆவணங்கள்)- அசோக பலிஹவடன, மொழிபெயர்ப்பாளர், வனஜீவராசிகள் மற்றும் வனபாதுகாப்பு அமைச்சு

ஆங்கில வியாக்கியானம் ​(கதை)- தானுகமல்சிங்ஹ

இணைய வடிவமைப்பு-சீ. ஏ. டீ. டீ. ஏ.கொல்லுரே, முகாமைத்துவ சேவை​உத்தியோகத்தர், வனஜீவராசிகள் மற்றும் வனபாதுகாப்பு அமைச்சு

படங்கள்- ரோஹித குணவர்தன, வனஜீவராசிகள்பாதுகாப்புத் திணைக்களம்