நான் ஹோர்டன் சமவெளி வனப் பூங்காவில் 2004- 2005 ஆம் ஆண்டுகளிலும், 2009- 2012 இறுதி வரையும் சேவையாற்றினேன். இலங்கையில் காணப்படுகின்ற அதிக சுற்றுலாப் பயணிகளின் ஈர்ப்பு காணப்படுகின்ற வனப் பூங்காஹோர்டன்சமவெளி ஆகும். வருடத்திற்கு அதிகளவு எண்ணிக்கையானஉள்நாட்டு, வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் இவ்வனப் பூங்காவினைப் பார்வையிட வருகின்றனர். 2009-2012 ஆம் காலங்களில் நான் பூங்காப் பொறுப்பாளராகக் கடமையாற்றினேன். எமது பணிக் குழுவில் சுமார் 25 பேர் இருந்தனர். பூங்காவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நாம் தங்கியிருந்தோம். வனஜீவராசிகள் அதிகாரிகளாக நாம் 24 மணித்தியாலயம் முழுவதும் கடமையில் ஈடுபட்டிருந்தோம்.
ஹோர்டன்சமவெளிவனப் பூங்காவிற்குள் அமைந்துள்ள உலக முடிவினைப் பார்வையிடுவதற்கு அதிகளவானோர் விரும்புகின்றனர். உலக முடிவு அமைந்திருப்பது இயற்கை காட்டு வழியிலாகும். உலக முடிவின் அருகிற்கு அக்காட்டு வழியில் சுமார்7 ½ கிலோமீற்றர் செல்ல வேண்டும். இக்காட்டு வழியில் பார்வையிடுவதற்கான இடங்கள் அதிகளவு காணப்படுகின்றன. சிறியஉலக முடிவு, சிமினிகுளங்கள், பேக்கர்ஸ் நீர்வீழ்ச்சி அவற்றுக்குள் அடங்குகின்றன. கிரிகல்பொத்த, தொடுபலகந்த எனும் இலங்கையின் இரண்டாவது மற்றும் மூன்றாவது உயரமான மலைகள் அமைந்திருப்பது ஹோர்டன்சமவெளி பூங்காவினுள்ளாகும். பாடசாலை மாணவர்கள், மாணவர் படையணிகள், புகைப்படக் கலைஞர்கள், சூழலியலாளர்கள் போன்றவர்கள் மலை ஏறுவதற்கும் வருகின்றனர். நீரேந்துப் பிரதேசமொன்றாக ஹோர்டன்சமவெளி செயற்படுவதனால் குளங்கள், கால்வாய் ஓடைகள் எல்லா இடங்களிலும் அமைந்துள்ளன. மகாவலி, களனி, வளவை கிளையாறுகளின் ஆரம்பம தொடக்கமும் இங்கிருந்து ஆரம்பிக்கின்றது. பெலிஹுல் ஓயவின் ஆரம்பமும் பேக்கர்ஸ் நீர்வீழ்ச்சி போன்றே டயகம பக்கத்தில் அக்ரா ஓயாவும் பாய்கிறது.
ஹோர்டன்சமவெளிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இவ்வழகினால் மகிழ்கின்றனர். சூழல் அழகாக இருந்தாலும் ஆபத்தான இடங்கள் அதிகளவு காணப்படுகின்றன. சுற்றுலாப் பயணிகளுக்கு ஆபத்துக்கள் மறக்கின்றன.
ஒருநாள் அவுஸ்திரேலிய நாட்டு வெளிநாட்டொருவர் உலக முடிவில் ஹோர்டன்சமவெளியிலுள்ள அழகான ஓணான் ஒன்றின் புகைப்படமொன்றை எடுக்கச் சென்றார். அவர் தனது மனைவியுடன் வருகை தந்திருந்தார். பின்னாடியே சென்ற அவர் உலக முடிவிலிருந்து கீழே விழுந்து விட்டார். நாம் பொலீஸாருடனும் பிரதேச மக்களுடனும் சேர்ந்து மிகவும் கஷ்டத்துடன் அவரது உடலைக் கண்டெடுத்தோம். உலக முடிவுக்குக் கீழே இருக்கும் பெரியல்வத்த எனும் பிரதேசத்திலிருந்து மரணித்த உடல் கிடைத்தது.
இன்னொரு நாள் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் குழுவொன்று வந்தது. அவர்களிடையே அழகான ஆண் பிள்ளையொன்று இருந்தது. இப்பிள்ளை எல்லா இடங்களிலும் குளிப்பதற்கு முயற்சி செய்துள்ளது. பேக்கர்ஸ் நீர்வீழ்ச்சிக்கு அருகில் வந்தவுடனேயே அவர் ஒரேயடியாக நீருக்குள் பாய்ந்துள்ளார். பேக்கர்ஸ் நீர்வீழ்ச்சி அதிக குளிராகும். குளிப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. தம்பியொருவர் நீரில் மூழ்கி விட்டார் எனக் கூறிக் கொண்டு இரு பிள்ளைகள் அழுது கொண்டு வந்தனர். நாம் பொலீஸாரினை அறியச் செய்து விட்டு பிள்ளையைத் தேடினோம். எனினும் எம்மால் கண்டு பிடிக்க முடியவில்லை. பின்னர் கடற் படையினர் வந்து கண்டு பிடித்தனர்.
சுற்றுலா செய்யும் போது பொறுப்புடனும், புரிந்து கொண்டும் சுற்றுலா செய்ய வேண்டும். அப்போது இவ்வாறான ஆபத்துக்களைத் தவிர்த்துக் கொள்ள முடியும்.
நான் இன்னொன்றைக் கூற வேண்டும். சுற்றுலா செய்ய வருகின்ற இளைஞர் குழுக்கள் பூக்கள், செடிகளைப் பறிக்கின்றனர். இப்பூக்கள் செடிகள் வேறு சூழலில் வளர்வதில்லை. நாம் அவற்றைப் பாதுகாக்க வேண்டும். ஹோர்டன்சமவெளியின் அழகினைப் பாதுகாக்க வேண்டும்.
திரு. ஜீ. யூ. சாரங்க அவர்கள் தள பாதுகாப்பு அதிகாரியொருவராக 1983 இல் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு இணைந்தார். பல்வேறு தேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களில் கடமையாற்றுவதற்கு சாரங்க அவர்கள் அதிஷ்டம் பெற்றார். யால மற்றும் வில்பத்து சரணாலயங்களிலிருந்து அவருக்கு ஆரம்பப் பயிற்சி கிடைத்தது. சீகிரிய சரணாலயத்துக்குப் பொறுப்பாக சேவையாற்றிய அவர் பின்னர் மின்னேரிய தேசிய பூங்காவிலும் பின்னர் 7 வருடங்கள் வஸ்கமுவ தேசிய பூங்காவிலும் சேவையாற்றினார். அவ்வாறே 2004-2005 ஆண்டுகளிலும் 2009-2012 ஆண்டுகளில் அவர் ஹோர்டன் சமவெளி தேசிய பூங்காவில் பூங்காப் பொறுப்பாளராக கடமையாற்றினார். பின்னர் உதவிப் பணிப்பாளர் ஒருவராகவும் பதவியுயர்வு பெற்ற சாரங்க அவர்கள் கிளிநொச்சி பிரதேச பொறுப்பாளராகவும் பின்னர் அம்பாறை பிரதேச பொறுப்பாளராகவும் கடமையாற்றினார்.
தற்போது அவர் வவுனியா வலய பொறுப்பாளராக சேவையாற்றுகிறார்.
1995 ஆம் ஆண்டில் வனஜீவராசிகள் திணைக்களத்தின் மூலம் வழங்கப்படுகின்ற 9 மாத டிப்ளோமா பாடநெறியை நிறைவேற்றிய சாரங்க அவர்கள் அதன் பகுதியாக 3 மாதங்கள் இந்தியாவில் டெஹெராடுன் நகரத்தில் வனஜீவராசிகள் நிறுவனத்தில் பயிற்சி பெற்றார். அவர் கொரியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து போன்ற நாடுகளிலும் குறுகிய பயிற்சிப் பாடநெறியை நிறைவேற்றியுள்ளார்.
சாரங்க அவர்களின் வீடு கண்டி, கடுகஸ்தொடவில் அமைந்துள்ளது.
பெரும் மலைத் தொடர்களினால் அமைந்த கற்குகைகளினூடாக செல்லும் புகையிரதம் ஜன்னலினால் தூரத்தே தென்படுகின்ற அமைதியான தேயிலைத் தோட்டத்தின் அழகினை இரசித்துக் கொண்டு பயணிக்க முடியுமான புகையிரத பயணத்தின் பின்னர், உள்நாட்டு வெளிநாட்டு யாவரினதும் கண்களையும் மனதையும் கவர்ந்த இலங்கையில் அமைந்துள்ள அழகுமிக்க நிலமொன்றான ஹோர்டன்தென்னவிற்கு நாம் இப்போது நெருங்கி விட்டோம்.
எல்லையினைக் கண்டு கொள்ள முடியாத இது உயிர்ப் பல்வகைத்தன்மையைப் போன்றே தொல்லியல் ரீதியாக பெறுமதி அடிப்படையில் கூட அதி விசேட சிறப்பு மிக்க தேசிய பூங்காவொன்றாகும். இலங்கையின் ஈர வலயத்தில் அமைந்துள்ள ஒரே தேசிய பூங்காவான ஹோர்டன்தென்ன பெரும் ஒளி எனும் பெயரில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டதோடு இது இலங்கையில் அமைந்துள்ள உயரமான மலை அமைந்துள்ள சமவெளியான நிலமாகும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 2100-2300 மீற்றர் உயரத்தில் மத்திய மலைநாட்டில் அமைந்துள்ள நிலப் பிரதேசமொன்றான இது 3.169 பூராக பரந்துள்ள அழகான நிலப் பிரதேசமொன்றாகும். 1920 ஆம் தசாப்தத்தில் ஆங்கில தேசிய கப்டன் வில்லியம் பிஷர், கர்னர் எல்பர்ட் வொட்சன் எனும் இருவருக்கும் ஹோர்டன்தென்னஅதிகாரபூர்வமாக தெரிவு செய்யும் கௌரவம் கிடைப்பதோடு திரு ரொபர்ட் ஹோர்டன் ஆளுனரின் விஜயத்தின் பின்னர் அதற்கு ஹோர்டன்தென்ன எனும் பெயர் பயன்படுத்தப்பட்டது. 1969 டிசம்பர் 05 ஆம் திகதி இவ்வனம் இயற்கை ஒதுக்கமொன்றாக பெயரிடப்பட்டதோடு சிவனொளிபாத மலைக்கு எல்லையாக அமைந்துள்ள இப்பூங்காவிலுள்ள இருப்பிட மதிப்பு காரணமாக 1988 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆம் திகதி தேசிய பூங்காவொன்றாகியது. 2010 ஜூலை மாதம் இது உலக சொத்துக்களின் பட்டியலுக்கு உள்ளடக்கப்பட்டது.
ஹோர்டன்தென்ன மத்திய மாகாணத்தில் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள அதி சிறந்த அழகுமிக்க நிலமொன்றாகும். நுவரெலியா மற்றும் ஹப்புத்தளகைகு இடையில் மத்திய மலைநாட்டு பூராகவும் வியாபித்துள்ள இப்பிரதேசத்துக்கு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை கிடைக்கின்றது. பெரும் ஒளியில் சராசரி வருடாந்த மழைவீழ்ச்சி 2500 மில்லி மீற்றருக்கும் அதிகமானதோடு பொதுவாக இப்பிரதேசத்துக்கு ஆண்டு முழுவதும் மழை காணப்பட்டாலும் ஜனவரியிலிருந்து மார்ச் வரை அதிக வரட்சி காலமொன்று நிலவுகிறது. அவ்வாறே ஹோர்டன்தென்ன பிரதேசத்தின் சாதாரண வெப்பநிலை சுமார் 13 பாகை செல்ஸியஸ் ஆவதும் சில காலங்களில் இரவு நேரத்தில் 5 பாகை செல்ஸியஸ் வரையான அளவுக்கு கீழிறங்குவதோடு அதிகாலையில் நிலத்தில் உறைபனி டிசம்பரிலிருந்து பெப்ரவரி வரை பொதுவாகக் காணவும் கிடைக்கிறது.
இலங்கையில் உயரமான பீடபூமியான ஹோர்டன் பீடபூமிக்கு வடக்கே சுமார் 2357 மீற்றர் உயரமாக தொடுபல மலையும் மேற்கே சுமார் 2389மீற்றர் உயரத்திலான கிரிகல்பொத்த மலையும் பிரதான மலைகளாக அமைந்துள்ளன. ஹோர்டன்தென்ன இலங்கையில் அதிக குளிர் மற்றும் காற்று அதிகமான இடமொன்றாவதோடு இந்நிலப் பிரதேசத்தினூடாக அதிகமாக காற்று வீசுவதனால் தாவரங்களின் வளர்ச்சி குன்றியிருக்கும் விதத்தினையும் அவதானிக்க முடிகின்றது. இம்மலை என்றும் பசுமையான காடுகள், புல்நிலங்கள், சதுப்பு நிலங்கள் மற்றம் நீர் சூழல் அமபைபினைக் கொண்டதோடு சுமார் 7000 ஏக்கர் நிலத்திலிருந்து சுமார் 4000 ஏக்கரான அளவு புல் நிலங்கள் மிகச் செழிப்பாக வளர்ந்துள்ள விதத்தினையும் கண்டு கொள்ள முடிகின்றது. இலங்கயில் அதிகமான முக்கிய நீரேந்துப் பிரதேசமொன்றாக காணப்படும் இது மகாவலி, களனி, வளவை போன்ற கங்கைகளின் நீரேந்துப் பிரதேசம் போன்றே பெலிகுல் ஓயா, கிரிகெடி ஓயா, உமா ஓயா போன்றே பகவன்தலாவ ஓயாகளுக்கான நீர்ப் போசணையையும் வழங்குகின்றது.
1992 இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி இங்கு தாவர வகைகள் சுமார் 101 காணப்படுகின்றன. அவற்றில் 49 இலங்கைக்கு மாத்திரம் உரித்தானவை ஆகும். பெரும்பாலானவை ஹோர்டன்தென்னவிற்கு மாத்திரம் உரித்தானவை ஆவது விசேடமாகும். மழைக் காடுகளுக்கு உரித்தான தாவரங்களை இங்கு காணக் கிடைப்பதோடு அழகான சிவப்பு நிறமான பூவாகப் பூக்கும் மகா ரத்மல், உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே அதிக பிரபலமான தாவரமொன்றாகும். மகா ரத்மல் மத்திய மாகாண மலரொன்று என்பதோடு பொதுவாக ஏப்ரல் மாதத்திலிருந்து ஜூலை மாதம் வரை இச்சூழலில் மகா ரத்மல் இனைக் கண்டு கொள்ள முடியும். மேலும் ரது மிஹிரிய, கின, வல் குருந்து, வல் சபு, பினர ஆகிய தாவரங்களும் இவற்றுள் அடங்குகின்றன.
இலங்கைக்கே உரித்தான விலங்கு வகைகள் பாரிய அளவொன்று காணக் கிடைப்பதோடு ஹோர்டன்தென்ன சூழல் அமைப்பில் இந்நாட்டிற்கு உரித்தான பறவை வகைகள் 98 உம், பாலூட்டி வகைகள் 14 உம், ஈரூடக வாழி வகைகள் 16-20 அளவும், வண்ணத்துப்பூச்சி வகைகள் 40 உம் தற்போது இனங்காணப்பட்டுள்ளன. நான்கு கால்களையுடயை விலங்குகளில் பாரிய அளவொன்று காட்டுவது மரை பரம்பரையாகும். அதற்கு மேலதிகமாக மீன்பிடிப் பூனை, குரைக்கும் மான், பழுப்பு மலை அணில், புலி, முயல், காட்டுப் பன்றி, முள்ளம்பன்றி, நீர் நாய், சிவப்பு மெல்லிய லொரிஸ், ஊதா முக இலங்கை குரங்கு போன்ற பாலூட்டிகள் இச்சூழல் அமைப்புக்குள் கண்டு கொள்ள முடியும். ஈரூடக வாழிகளாக இலை கூடு புதர் தவளை, இலங்கை தவளைவாயன், இலங்கையின் குறுகிய வாய் கொண்ட தவளை, காண்டா மிருகக் கொம்புப் பல்லி போன்ற பல்வேறு வண்ணத்துப்பூச்சி வகைகளும் ஊர்வன வகைகள் பலவும் ஹோர்டன்தென்னவில் வாழ்கின்றதென்றாலும் பாரிய பாலுட்டிகள் ஹோர்டன்தென்னவில் கண்டு கொள்ள முடிவது அரிதிலாகும்.
தேசிய பூங்காவுக்கு உரித்தான பறவை வகைகள் சுமார் 12 வாழ்வதோடு கீழே குறிப்பிடப்படும் பறவகைள் அறியக் கிடைப்பது ஹோர்டன்தென்னவிற்காக மாத்திரமாகும். இலங்கை நீலச் செவ்வலகன், வெளிர் நீல ஈப்பிடிப்பான், இலங்கை வெள்ளைக்கண் மற்றும் இலங்கை மரப் புறா, சின்னக் காட்டுக்கோழி,இலங்கைக் காட்டுக் கோழி, இலங்கை விசில் த்ரஷ், மஞ்சள் காது புல்புல் மற்றும் இலங்கை புஷ் போர்ப்லர் போன்ற பறவைகள் இப்பூங்காவில் கண்டு கொள்ள முடிவதோடு இது வண்ணத்துப்பூச்சிகளின் சுவர்க்கமாகும்.
சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா செல்வதற்கு விருப்பப்படும் இடங்களில் நுவரெலியா விசேடமாகும். சிறந்த காலநிலை மட்டுமன்று, அற்புதமான பயண நிகழ்வுகள் பலவும் நுவரெலியா நகருக்கு அண்மையில் அமைந்துள்ளன. அவ்இனிமையான நிகழ்வுகளுக்கு ஹோர்டன்தென்ன உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் ஈர்ப்பு குறையாது வெற்றி கொண்டுள்ள இடமொன்றாகும். அவ்வாறே அதி உயர்ந்த உயிர்ப் பல்வகைத்தன்மையினைக் கொண்டுள்ளதோடு கல்வி மற்றும் ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்காக மிகப் பெறுமதி வாய்ந்த இடமொன்றாகும்.
ஈர வலய என்றும் பசுமையான வனமொன்றான ஹோர்டன்தென்ன, பெருமளவு மரங்களைக் கொண்ட மலையுச்சிகள் தொடர்ந்து பனியால் மூடப்பட்டுள்ள வசீகரமான நிலமொன்று என்பதோடு இங்கு உங்களுக்குப் பார்க்க முடியுமான அழகான இடங்கள் பலவும் ஆகும். ஹோர்டன்தென்ன பூங்காவில்வலது மூலைக்கு ஆகுமாறு அமைந்துள்ள அழகினைக் கொண்ட இடமொன்றான உலக முடிவும், அதற்கு முன்னர் சந்திக்கும் சிறு உலக முடிவும், அழகான பெலிகுல் ஓயவின் அழகிய காட்சியுடைய பேக்கர்ஸ் நீர் வீழ்ச்சியும் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் அழகான சுவர்க்கங்களாகும்.
ஹோர்டன்தென்னவிற்கு நுழைவதற்காக 3 வழிகள் இருப்பதோடு அதில் பிரதானமான பாதையாவது நுவரெலியா, அம்பேவல மற்றும் பட்டிபொல ஊடாகவேயாகும் (32 கி.மீ). பொதுவாக சுற்றுலாப் பயணிகள் அதிகளவானோர் ஹோர்டன்தென்னவிற்கு நுழைவதற்குப் பயன்படுத்துவது இப்பயணப் பாதையையாகும். அவ்வாறே ஹப்புத்தளை வெலிமடை, பொரலந்த ஒஹிய ஊடாக (38 கி.மீ) ஊடாக விழுந்துள்ள பயணப் பாதை ஊடாகவும் ஹோர்டன்தென்னவிற்கு நெருங்க முடியும். வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகின்ற சுற்றுலா விடுதிகள் பலவும் ஹோர்டன்தென்னவில் உள்ளன. நவீனமயப்படுத்தப்பட்ட கிணிஹிரிய (என்டர்ஸன்) மற்றும் பெரும் ஒளி விடுதி போன்றே சூழலுக்கு இணக்கமானவர்களுக்கு இயற்கைச் சூழலிலேயே விடுமுறையைக கழிக்க முடியுமானவாறு முகாம் நிலங்கள் 3 உம் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 50 பேர் வரையினருக்கான சுற்றுலாக் குழுக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள கானக வீடும் இயற்கை அழகைக் காண முடியுமான வகையில் அழகான சூழலொன்றில் அமைந்துள்ளது. இச்சுற்றுலா விடுதிகள் மற்றும் முகாம் நிலங்கள் கொழும்பு பத்தரமுல்லவில் அமைந்துள்ள வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திலிருந்து ஒதுக்கிக் கொள்ள முடியும்.
அவற்றில் உலக சொத்தொன்று, இயற்கை ஒதுக்கமொன்று மற்றும் பூங்காவொன்றாக பெயரிடப்பட்டது இது அதிக பெறுமதி வாய்ந்த, அதி விசேட சூழல் அமைப்பொன்றினாலாகும். அதனால் ஹோர்டன்தென்னசூழல் அமைப்பைப் பாதுகாத்துக் கொள்வது எமது யாவரினதும் பொறுப்பாக வேண்டும்.
Sinhala Name | Tamil Name | English Name | Scientific name |
ගෝනා | மரை | Sambar | Rusa unicolor |
හඳුන් දිවියා | மீன்பிடிப் பூனை | Fishing Cat | Prionailurus viverrinus |
වැලි මුවා | குரைக்கும் மான் | Barking Deer | Barking Deer |
වල් ඌරා | காட்டுப் பன்றி | Wild Boar | Sus scrofa |
කොටියා | புலி | Leopard | Panthera pardus kotiya |
හාවා | இந்திகுழி முயல் | Indian hare | Lepus nigricollis |
ඉත්තෑවා | முள்ளம்பன்றி | Porcupine | Hystrix indica |
දඬු ලේනා | பழுப்பு மலை அணில் | Giant squirrel | Ratufa macroura |
දියබල්ලා | நீர் நாய் | Eurasian otter | Lutra lutra ceylonica |
උණහපුලුවා | சிவப்பு மெல்லிய லொரிஸ் | Gray Slender Loris | loris lydekkerrianus |
වලස් වඳුරා (කළු වඳුරා) | ஊதா முக இலங்கை குரங்கு | Purple-faced langur | Semnopithecus vetulus monticola |
පළා පදුරු මැඩියා | இலை கூடு புதர் தவளை | Leaf-nesting shrub frog | Pseudophilautus femoralis |
ලංකා කඳුකර මැඩියා | இலங்கை தவளைவாயன் | Srilanka frog | Fejervarya greeni |
ලංකා මුව පටු මැඩියා | இலங்கையின் குறுகிய வாய் கொண்ட தவளை | Sri Lanka Narrow-mouth Frog | Microhyla zeylanica |
අං කටුස්සා | காண்டா மிருகக் கொம்புப் பல்லி | Rhino horned lizard | Ceratophora stoddartii |
වලි කුකුළා | இலங்கைக் காட்டுக் கோழி | Sri lanka junglefowl | Gallus lafayettii |
ශ්රී ලංකා කැහිබෙල්ලා | இலங்கை நீலச் செவ்வலகன் | Sri Lanka blue magpie | Urocissa ornata |
ශ්රී ලංකා අනු මැසිමාරා | வெளிர் நீல ஈப்பிடிப்பான் | Dusky blue flycatcher | Eumyias sordidus |
ශ්රී ලංකා අනු මැසිමාරා | வெளிர் நீல ஈப்பிடிப்பான் | Dusky blue flycatcher | Eumyias sordidus |
මයිල ගොයා | இலங்கை மரப் புறா | Sri Lanka wood pigeon | Columba torringtoniae |
හබන් කුකුළා | சின்னக் காட்டுக்கோழி | srilankaSpurfowl | Galloperdix bicalcarata |
ශ්රී ලංකා අරංගයා | இலங்கை விசில் த்ரஷ் | Sri Lanka Whistling Thrush | Myophonus blighi |
ශ්රී ලංකා පීතකන් කොණ්ඩයා | மஞ்சள் காது புல்புல் | Sri Lanka Yellow-eared Balbul | Pycnonotus penicillatus |
ශ්රී ලංකා වන රැවියා | இலங்கை புஷ் போர்ப்லர் | Sri Lanka Warbler | Elaphrornis palliseri |
Sinhala Names | Tamil Names | English Names | Botanical Name |
මහරත්මල් | மகா ரத்மல் | Rhododendron | Rhododendron arboreum |
රතු මිහිරිය | ரது மிஹிரிய | Ratumihiriya | Adinandra lasiopetala |
කින | கின | Kina | Calophylem walkeri |
වල් කුරුදු | வல் குருந்து | walkurudu | Cinnamomum ovalifolium |
වල් සපු | வல் சபு | walsapu | Michelia nilagirica |
බිනර | பினர | Binara | Exacum trinerva macranthum |
தொகுப்பாளர் – தம்மிகாமல்சிங்ஹ, மேலதிக செயலாளர், வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள பாதுகாப்பு அமைச்சு
பூங்கா பற்றிய தகவல்களைத் தொகுத்தவர்– ஹஸினி சரத்சந்திர, பிரதம உத்தியோகத்தர், வன பாதுகாப்புத் திணைக்களம் மஹேக்ஷா சதுராணி பெரேரா(பட்டதாரி பயிற்சியாளர்),வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம்
தமிழ் மொழிபெயர்ப்பு– ஏ.ஆர்.எப். றிப்னா, அபிவிருத்தி உத்தியோகத்தர், வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள்பாதுகாப்பு அமைச்சு
ஆங்கில மொழிபெயர்ப்பு– அசோக பலிஹவடன, மொழிபெயர்ப்பாளர், வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள்பாதுகாப்பு அமைச்சு
இணைய வடிவமைப்பு–என்.ஐ கயத்ரி, அபிவிருத்தி உத்தியோகத்தர், வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள்பாதுகாப்பு அமைச்சு – சீ. ஏ. டீ. டீ. ஏ.கொல்லுரே, முகாமைத்துவ சேவைஉத்தியோகத்தர், வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள்பாதுகாப்பு அமைச்சு
படங்கள்– ரோஹித குணவர்தன, வனஜீவராசிகள்பாதுகாப்புத் திணைக்களம்
Cookie | Duration | Description |
---|---|---|
cookielawinfo-checkbox-analytics | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". |
cookielawinfo-checkbox-functional | 11 months | The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". |
cookielawinfo-checkbox-necessary | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". |
cookielawinfo-checkbox-others | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. |
cookielawinfo-checkbox-performance | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". |
viewed_cookie_policy | 11 months | The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. |