简体中文 ZH-CN English EN Français FR Deutsch DE Italiano IT Português PT සිංහල SI தமிழ் TA
Ministry of Wildlife and Forest Resources Conservation

அத்தியாயம் 16 – உடவளவை யானைகள் பாரமரிப்பு நிலையம்

Content Image

அக்காட்சி மகிழ்ச்சியானது

நான் உடவளவை யானைகள் பராமரிப்பு நிலையத்துக்கு 1999 ஆம் ஆண்டு வந்தேன். அதற்கு முன்னர்யானைகள் பராமரிப்பு நிலையத்துக்கு பொறுப்பாளராக இருந்த விலங்கு வைத்தியர் விஜித  அவர்கள் விடுமுறையில் செல்லும் போது அடிக்கடி அதற்குப் பதிலாக யானைகள் பராமரிப்பு நிலையத்தில் சேவையாற்றிய  அனுபவம்  எனக்கு இருந்தது. காட்டு யானைகளுக்கும் மனிதர்களுக்கும் ஒன்றாக இருக்க முடியாது என விஞ்ஞானக் கருத்து உள்ளது. எனினும் நாம் புராதன காலத்திலிருந்தே சூழலுடன் ஒன்றாக இருந்த மனித பரம்பரையொன்றினால் யானைகள் பராமரிப்பு நிலையத்தில் யானைகளும் மனிதர்களும் ஒன்றாக இருக்கின்றனர்.

நான்  யானைகள் பராமரிப்பு நிலையத்துக்கு சேவைக்கு வந்தது மிக விருப்பத்தினாலாகும்.  உண்மையில் சிறிய தீவொன்றில் அதிகரிக்கும் சனத்தொகையுடன் யானைகளைப் பாதுகாப்பது இலகுவான கருமமொன்றல்ல. பொதுவாக நடப்பது  யானை மனித மோதல் உக்கிரமமடையும் போது யானைகளை விரட்டும் செயற்பாட்டினை மேற்கொண்டு யானைகளை மீண்டும் வனத்திற்கு  துரத்தி விட்டதுடன் மயக்கமடையச் செய்து காட்டிற்குச் சென்று விடுவதுடன் சரி. இவ்வாறு செய்யும் போது சில நேரங்களில் குட்டிகள் அநாதரவாகின்றன. இக்குட்டிகளை உரிய முறையில் பாதுகாக்குமாறு 1995 ஆம் ஆண்டில் உடவளவை யானைகள் பராமரிப்பு நிலையம் ​அமைக்கப்பட்டுள்ளது.

ஹந்தபானகலவிலிருந்து யால பூங்காவிற்கு யானைகளை விரட்டுவதற்காக1997 ஆம் ஆண்டில் இவ்வாறான செயன்முறையொன்று இருந்துள்ளது. இச்செயன்முறை முடியும் நேரத்தில் தமது எருமை மாட்டுக் கூட்டமொன்று இருந்த யானைக் குட்டியொன்றைப் பற்றி ‘மத்தா’ எனும் எருமை மாட்டுக் கூட்ட பொறுப்பாளன் வனஜீவராசிகள் பாதுகாவலர் எல். பீ. அனுர அவர்களுக்கு அறிவித்திருக்கிறார். அதன்படி தள பாதுகாவலர் மன்சூர் அவர்கள், வனஜீவராசிகள்  தள உதவியாளர் திஸாநாயக அவர்கள், பாதுகாவலர்களான  எல். பீ. அனுர மற்றும் கருணாசேன சமரநாயக அவர்கள் மற்றும் சாரதி கமல் ஜஸ்மின் அவர்களும் அவ்விடத்துக்குச்  சென்று வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு உரிய ஜே 44 ஜீப் வண்டியில் எடுத்துக் கொண்டு இவ்யானைக் குட்டியை யானைகள் பராமரிப்பு நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளனர். ஹந்தபானகலவிலிருந்து கிடைப்பதனால் அதற்கு “சந்தமாலி” எனப் பெயரிட்டுள்ளனர்.

சந்தமாலி உள்ளிட்ட யானைக் குழு எனக்கு முதலில் கிடைத்தது நான்  யானைகள் பராமரிப்பு நிலையத்திற்கு சேவைக்கு வந்த பின்னராகும். சந்தமாலி தமக்கு இளைய யானைக் குட்டிகளுடன் மிகவும் அன்பாக இருந்தது. அது தாயை இழந்த அக்குட்டிகளுக்கு உண்மையான பாசத்தைக் காட்டியது. மிகச் சிறிய யானைக் குட்டிகள் சந்தமாலியின் அருகில் நெருங்கியிருந்து அதன் காது மடலை உறிஞ்சி அதன் அருகில் தங்கியிருப்பது பொதுவான காட்சியொன்றாகியது.  அது அதன் குட்டிகளுக்கு தாயொன்று அல்லது மூத்த சகோதரியொன்று போல் ஆயிற்று.

நாம் சிறிய குட்டிகளுக்கு சிகிச்சையளிக்கச் செல்லும் போது சந்தமாலிவை தூரத்திற்கு விரட்டுவதனையே முதலில் செய்ய வேண்டியுள்ளது. சந்தமாலி கேட்கக்கூடிய பரிமாணத்திலிருந்து தூரத்திலிருந்து துரத்த வேண்டும். இல்லாவிட்டால் சிகிச்சையைப் பெறும் குட்டிக்கு வேதனையை உணர்ந்து சப்தமிட்டால் சந்தமாலி ஓடி வரும். அது எதிர்ப்பைக் காட்டுவது ‘குரு குரு’ எனும் சத்தத்தினாலாகும். அது குட்டியை வயிற்றின் கீழ்ப் பகுதிக்கு  எடுப்பதற்கு முயற்சிக்கும். சந்தமாலி உண்மையாகவே குழுத் தலைவி போன்று அதன் நண்பியான ஒரே வயதுடைய மத்தலீ யானைக் குட்டிகளின் குழு யானைகள் பராமரிப்பு நிலையத்தில் ஏரியின் மைதானம் முழுவதும் எடுத்துச் சென்றது.

யானைகள் பராமரிப்பு நிலையத்திலுள்ள யானைக் குட்டிகள் சில வருடங்களுக்கு ஒரு  முறை வனத்துக் விடுவிக்கப்படும். 2000 ஆம் ஆண்டில் ஜூலை மாதத்தில் அக்காலத்தில் வனஜீவராசிகள் பணிப்பாளர் ஏ. பீ. ஏ. குணசேகர அவர்கள் மற்றும் யானைகள் பராமரிப்பு நிலையத்தின் ஸ்தாபகரான விலங்கு வைத்திய பிரிவுத் தலைவர் நந்தன அதபத்து அவர்கள் தலைமை தாங்கி யானைகள் பராமரிப்பு நிலையத்திலுள்ள யானைக் குட்டிக் குழுவினை உடவளவை பொரலுவெவ பகுதிக்கு கைவிட்டனர். அக்கூட்டத்தில் சந்தமாலி, கொமலி மற்றும் இசுறு எனும் குட்டிகளுக்கு நாம் ரேடியோ கழுத்துப்பட்டி இட்டோம்.  அது அவைகளை இலகுவாகத் தேடிக் கொள்வதற்கேயாகும்.  இவ்வாறு சுதந்திரமடைந்தால் ​யானைக் குட்டிகள் ஏனைய யானைக் கூட்டங்களுடன்  இணைந்து கொள்ளும். இவ்வாறு யானைக் கூட்டங்களுடன் இணைந்து கொள்ளும் போது சந்தமாலியினதும் மத்தலீயினதும் தலைமைத்துவத்தின் அடையாளமும் அவை இரண்டுக்கும் இடையில் காணப்படும் இணைப்பும் நன்றாக தெரிந்தது.

அதிக வேளைகளில் யானைக் கூட்டங்களிலுள்ள பெண் விலங்குகள் வெளியிலிருந்து வரும் உறுப்பினர்களை பொருட்படுத்துவதில்லை. தமது குழுவிலுள்ள குட்டிகளுக்கு தொல்லை ஏற்படுவதாயின் சந்தமாலி முன்னே வருவதனை எம்மால் கண்காணிக்க முடிந்தது. எமது பின்தொடர்வை தொடர்ந்து மேற்கொண்டோம். சந்தமாலி உள்ளிட்ட குழு உடவளவை தேசிய பூங்காவின் காட்டு யானைகளுடன் நன்றாக ஒன்றாக சேந்ந்துக் கொள்ளும் விதத்தினை நாம் கண்டோம். கோமலீ தவிர்ந்த மற்றவைகள் ஒரே குழுவல் இணைந்திருந்தன.  யானைக் குட்டிகள் குழுவிலிருந்து விடுபட்டு 03 வருடங்கள் சென்றதன் பின்னர் யானைகளின் ரேடியோ கழுத்துப்பட்டியை நாம் அகற்றினோம். எனினும் சந்தமாலி உள்ளிட்ட குழு இருக்கும் பகுதியை உறுதிப்படுத்திக் கொண்டு இருந்தமையினால் எமக்கு அவைகளைத் தேடிக் கொள்வதற்கு கடினமாகவில்லை.

சந்தமாலிக்கு வயது 13 ஆகும் போது அது கர்ப்பமடைந்திருப்பதனை நாம் கண்டோம். சிறு வயதென்பதனால் எமக்கு அது ஆர்வமாய் இருந்தது. எனினும் 2008 அம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் காலையில்  ​உடவளவை தேசிய பூங்காவில் தேக்கு வேலிக்கு அப்பால் இருந்து தேக்கு மானா புதரில் சந்தமாலி உள்ளிட்ட குழுவை நாம் அவதானித்தோம்.

அவைகளை மேலும் நெருங்கும் போது சறிய யானைக் குட்டியொன்று சந்தமாலியிடம் பால் குடிப்பதனைக் கண்டோம். அதற்கருகில் அதன் நண்பி மத்தலீயும் இருந்தது. சுமார் 15 நிமிட காலமொன்று மானா புதரிலிருந்து அவை காணாமல் செல்லும் வரை நாம் பார்த்துக் கொண்டிருந்தோம்.

அக்காட்சி எம்மை உற்சாகப்படுத்தியது. எமது புகைப்படக்கருவி சந்தமாலி உள்ளிட்ட குழுவின் புகைப்படங்களால் நிரம்பியது. அது எனது வனஜீவராசிகள் பாதுகாப்பு காலத்தினுள் கண்ட சிறப்பான திருப்தியான காட்சியாகும்.

கலாநிதி சுகத ஜயவர்தன அவர்கள்

 

கலாநிதி சுகத ஜயவர்தன அவர்கள்1999 இலிருந்து இலங்கையின் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின்  வனஜீவராசிகள்  வனவிலங்கு வைத்தியரொருவராக கடமையாற்றுகிறார்.  அவர் 1997  இல் பேராதெனியபல்கலைக்கழகத்தில் BVSc பட்டத்தைப் பெற்றுள்ளதோடு 2004 இல் பேராதெனியபல்கலைக்கழகத்தில் மீனினங்கள்  மற்றும் வனஜீவராசிகள் முகாமைத்துவம் பற்றிய விஞ்ஞானம் பற்றி கலைமாணி பட்டத்தைப் பெற்றுள்ளார்.

ஒரு தசாப்தத்திற்கு அண்மித்த  காலமொன்று உடவளவை யானைகள் நடமாட்ட இல்ல பொறுப்பதிகாரியாக கடமையாற்றியுள்ளதோடு நாட்டில் தென், கிழக்கு மற்றும் வட-கிழக்கு  வனஜீவராசிகள் வலயங்களில் கடமையாற்றியுள்ளார். 2004 ஆம் ஆண்டில் அவர் தன்சானியாவின் மற்றும் கென்யாவின்  Mwekaவனஜீவராசிகள் கல்லூரியில் வனஜீவராசிகள் நோய்கள் கண்காணிப்பு மற்றும் உள்ளூர் அகற்றல் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

அவர்கள் தேசிய மற்றும் சர்வதேசஆராய்ச்சியப் பட்டறைகளுக்காக வன அநாதை யானைகள் முகாமைத்துவம் மற்றும் ஏனைய வனஜீவராசிகள் மறுவாழ்வு செயற்பாடுகள் பற்றிய ஆராய்ச்சி வெளியீடுகள் பல உள்ளன. இலங்கையில் அநாதை யானைகளை மீண்டும் காட்டிற்கு பழக்கப்படுத்துவது பற்றிய ஆராய்ச்சிப் பத்திரமொன்று வனஜீவராசிகளை வெற்றிகரமாக மறுவாழ்வளித்தல் பற்றிய சர்வதேச மன்றமொன்றான “Back to Wild” இல் வெளியிடப்பட்டது.

2013 இல் அவர் ஈர வலய வகைகளின் மறுவாழ்வுக்காக முன்மொழிவொன்றை சமர்ப்பித்ததோடு 2016 ஆம் ஆண்டில் UNDP, SGP மற்றும் உள்ளூர் அரச சார்பற்ற அமைப்பொன்றான OARM மற்றும் CES இன் ஒத்துழைப்புடன் அத்திடிய ​வனஜீவராசிகள் மறுவாழ்வு மையம் அமைக்கப்பட்டது. தற்போது இலங்கையில் அதிகமான வனஜீவராசி சேதங்கள் எண்ணிக்கையளவில் சேவையை வழங்குகின்ற பெல்லன்வில- அத்திடிய சரணாலயத்தில் வனஜீவராசிகள் மறுவாழ்வு மையத்தின் பொறுப்பாக செயற்படுபவர் கலாநிதி ஜயவர்தனஅவர்கள் ஆவர்.

சுகத ஜயவர்தன அவர்கள் திருமணம் செய்திருப்பது சாமனி குமாரசிங்ஹ அவர்களுடன் என்பதோடு அவரகளின் ஒரே புதல்வி சயுனி ருஹங்ஸி ஆவார்.

உடவளவை யானைகள் பாரமரிப்பு நிலையம்

யானைகளைப் பார்த்தல் மற்றும் தியாகம் செய்தல் தவறில்லை என்று நாட்டுப்புற ரீதியாக வருகின்ற காடுகளிலுள்ள விலங்கு வகைகளில் மக்களின் மனதை மிகக் கவர்ந்திழுத்து வைத்துக் கொள்வதற்கு யானைகளின் செயற்பாடுகள் கடந்து செல்வதனாலாகும். அவ்வாறான மறக்க முடியாத சின்னங்கள் எமது நினைவுகளில் தக்க வைத்துக் கொள்ளப்படுகின்ற பாதுகாப்பினை இழந்த இந்நாட்டு ஆதரவற்ற யானைக் குட்டிகளின் அன்பான தாயாக பாரிய கடமைப் பொறுப்பொன்றை நிறைவேற்றுகின்ற யானைகள் பாரமரிப்பு நிலையம் 2021 ஆம் ஆண்டில்26 வருடங்களைக் கொண்டாடியது. 1995 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அழகான இல்லம் சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி மாவட்டத்தில் எம்பிலிபிட்டிய பிரதேச செயலகப் பிரிவில் மற்றும் உடவளவை  கிராம அதிகாரி பிரிவுக்கு உரியதாக அமைந்துள்ளது. அவ்வாறே அது உடவளவை தேசிய பூங்காவின் மேற்கு எல்லையில் அமைந்துள்ள சுமார் 200 அன நிலத்தில் வியாபித்துள்ள தெற்கே உடவளவை நீர்த்தேக்கதுக்கு எல்லையாகுமாறு இலங்கையில் அமைந்துள்ள ஆசியாவின்  ஒரேயொரு யானைகள் சிறுவர் இல்லமாகும்.

பல்வேறு காரணங்களினால் அநாதையாக மற்றும் பல்வேறு அங்கவீனங்களுக்கு உள்ளாகும் யானைகளுக்கு உதவுவதற்கான நோக்குடன் 1975 ஆம் ஆண்டு பின்னவல யானைகள் சரணாலயம் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தினால் ஸ்தாபிக்கப்பட்டதோடு தற்காலத்தில் இது தேசிய மிருகக்காட்சிசாலை திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றது என்றாலும் இதற்கு மேலதிகமாக யானைகளுக்கு அவைகளின் சுதந்திரமான வாழ்வை பெற்றுக் கொடுக்க வேண்டும் என அதி எண்ணக்கருவுடன் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு தேவைப்பட்டது. அதன்படி,

“மீண்டும் தமது தபயகத்தை நோக்கி கால் வைப்பதற்கு  இடமளியுங்கள்” என்னும் கருப்பொருளின்படி 1995 இல் அப்போது இருந்த வனஜீவராசிகள் சுகாதாரப் பிரிவின் தலைவரை  விலங்கு வைத்தியர் நந்தன அதபத்து அவர்களின் எண்ணக்கருவினை செயற்படுத்தி யானைகள் பராமரிப்பு நிலையம்  (Elephant Transit Home-ETH) ஆரம்பிக்கப்பட்டது. வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் மூலம் நிர்வகிக்கப்படுகின்ற இது ஆசியாவில் ஸ்தாபிக்கப்பட்ட முதலாவது யானைகளின் மறுவாழ்வு மையமுமாகும். இதன் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற அடிப்படையான கடமைப்பொறுப்புக்களாவன பூங்காவினுள் போன்றே அதன் வெளிப்புறங்களில் ஆபத்துக்களுக்கு உள்ளாகி அகால மரணத்துக்குள்ளாகும் ஆதரவற்ற சிறிய யானைக் குட்டிகளின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்று அவைகளை பேணிப் பாதுகாத்து வன வாழ்க்கைக்குப் பழகிய பின்னர் மீண்டும் வனத்துக்கே விடுவிக்கும் செயன்முறையாகும்.

நாட்டின் எப்பகுதியிலிருந்தும் கிடைக்கும் அநாதை யானைக் குட்டிகளை எடுத்து வரும்  இடமாக உடவளவை  யானைகள் பாரமரிப்பு நிலையம்உருவானது. அக்காலத்தில் மிகச் சிறிய மண்டபமொன்றில் இருந்த யானைகள் பாரமரிப்பு நிலையம் இதுவரை காயத்துக்குள்கிய யானைக் குட்டிகளை குணப்படுத்துவதற்காக உள்ள அறுவைச் சிகிச்சை அரங்குகள், வெப்ப அறைகள், யானைகளுக்கானமருத்துவமனை படுக்கைத் தொகுதி, விற்பனையகங்கள், யானைகளைப் பார்வையிடுவதற்கான அரங்குகள் மற்றும் தகவல் மையமொன்றையும் கொண்டதாகும்.

யானைக் குட்டியொன்றுக்கு சிகிச்சையளித்தல்

கைவிடப்பட்ட காட்டு யானைக் குட்டியொன்று கிடைத்த போது விகாரையொன்றுக்கு அல்லது பரம்பரையான குடும்பமொன்றுக்கு ஒப்படைக்கும் அக்காலத்தில் காணப்பட்ட சம்பிரதாயம் ​யானைகள் பாரமரிப்பு நிலையம் உருவானதிலிருந்து மாறியது. கோமலி எனும் சிறிய யானைக் குட்டியொன்றிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்நிலையம் தற்காலம் ஆகும் போது மேலும் மிக அநாதரவான பல யானைக் குட்டிளின் பாதுகாப்பு மையமாகியது. வனவிலங்கு அதிகாரிகளினால் 1998 இல் முதன் முறையாக அனுராத, அனூஷா, கண்டுல, காமினி எனும் யானைக் குட்டிகளுக்கு ‘ரேடியோ கழுத்துப்பட்டி’ அணிவித்து காட்டிற்கு விடுவிக்கப்பட்டதோடு அவை கூட்டத்துடன் இணைந்து கொள்ளும் வரை தொடர்ச்சியாக  கவனமாக மிக அர்ப்பணிப்புடன் கண்காணித்தனர். இந்நிலையத்தில் வளர்ந்து, வன வாழ்க்கைக்கிப் பழகி வாழ்க்கையைக் கொண்டு செல்கின்ற யானைகளின் கழுத்தில் கட்டியுள்ள ரேடியோ சமிக்ஞையை வெளிப்படுத்துகின்ற கழுத்துப்பட்டியின் மூலம் அவைகள் நடமாடுகின்ற பகுதிகள் பற்றி தேடிப் பார்ப்பதற்கும் யானைகளின் பாதுகாப்பு பற்றி அறிந்து கொள்வதற்கும்  உடவளவை  யானைகள் பாரமரிப்பு நிலையத்தின் பணக்குழு இன்றும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

1998 யானைக் குட்டிகள் நான்கினால் ஆரம்பிக்கப்பட்ட யானைகள் பாரமரிப்பு நிலையம்2020 ஆம் ஆகும் போது காட்டு யானைகள் 100 க்கும் அதிகமான அளவொன்று விடுவிக்கப்ட்டுள்ளதோடு தற்போது இங்கு அநாதரவான யானைக் குட்டிகள் 40- 50 ஆன அளவொன்று பாதுகாப்பு பெறுகின்றன.  யானைக் குட்டிகளின் விடுதியொன்று போன்ற யானைகள் பாரமரிப்பு நிலையம் இந்நாட்டு காட்டு யானைகளின் எண்ணிக்கையைப் பாதுகாக்கும் மற்றும் அவைகளின் முன்னேற்றத்திற்கான உண்மையான பங்களிப்பொன்றை வழங்குகின்ற இடமொன்றாகும். காலை, பகல், இரவு காலங்களில் தொடர்ச்சியாக திரவப் பாலை வழங்கி  தமது குழந்தைகளாக பார்த்துக் கொள்ளும் இச்செயற்பணியை நாம் மதிக்க வேண்டும். வரையறுக்கப்பட்ட வளங்களின் மூலம் யானைக் குட்டிகளைப் பார்த்துக் கொள்வதற்காக நாள் பூராகவும் உழைக்கின்ற உலக வெற்றி​யடைந்த யானைகள் பாதுகாப்பு இடமாக இன்று ஆகும் போது ​​​ உடவளவை  யானைகள் பாரமரிப்பு நிலையம் உருவாகியள்ளது.

வளவை கங்கையில் நீராடும் யானைகள் பாரமரிப்பு நிலையத்தின் யானைக் குட்டிகள்

இந்நாட்டு யானைக் குட்டிகளுக்கு எப்போதும் பாதுகாப்பினை வழங்குகின்ற, அவைகளின் பசியைப் போக்கி, வாழும் உரிமையை உறுதிப்படுத்தும் மிக உயர்ந்த செயற்பணிக்கு நீங்களும் ஏதாவதொரு முறையில் பங்களிப்புச் செய்வதற்கு எதிர்பார்ப்பதாயின் யானைக் குட்டிகளின் போசாக்கிற்காக, உடவளவை  யானைகள் பாரமரிப்பு நிலையத்தினுள் செயற்படுத்தப்பட்ட பெற்றோர் பாதுகாவலர் முறைக்காக மனித குணங்களை அடிப்படையாகக் கொண்டு பங்களிப்பு செய்வதற்கான சந்தர்ப்பம் உங்களுக்கும் உள்ளது. நாளொன்றுக்கு பால்மாவுக்காக பாரிய செலவொன்றை ஏற்று நடத்தும் இவ்வுயர் தேசிய கருமம் உங்களுடைய பங்களிப்பின் பலமாகும்.

காலை 6.00 இலிருந்து ​ யானைக் குட்டிகளுக்குபால் கொடுத்தல் ஆரம்பமாகும் யானைகள் பாரமரிப்பு நிலையத்தில் பாலைப் பெற்றக் கொள்வதற்கு வரிசையில் நிற்கும் சுட்டி யானைக் குட்டிகளின் செயற்பாடுகள் அனைவரினதும் கண்களையும் மனதையும் கவர்ந்திழுத்து வைத்திருக்கும். பெல்மடுள்ள – எம்பிலிபிட்டிய பாதையில் உடவளவை சந்தியிலிருந்து தனமல்வில வீதியில்  C.P.D டி சில்வா மாவத்தைக்க வந்து 300 மீற்றர் சென்றால் யானைகள் பாரமரிப்பு நிலையத்திற்கு உங்களால் நெருங்க முடியும்.

யானைக் குட்டிகள் அநாதையாதல் பற்றி நாம் யாரும் கவலைப்பட்டாலும் மற்றுமொரு காலத்தில் இக்குட்டிகள் மீண்டும் காட்டிற்குள் பிரவேசித்து சுதந்திரமாக வாழ்வதற்கு பாக்கியம் கிடைக்கிறது என்பது தோன்றும் போது கிடைக்கும் மகிழ்ச்சி எம் அனைவருக்கும் வழங்கப்படுகின்ற இவ்வாறான இடமொன்று இந்நாடு அமைந்துள்ளமையும், மனதுக்கு ஆறுதலாகும்.

உசாத்துணை நூல்கள்

பாலுக்காக அழுகின்ற யானைக் குட்டிகள் (யானைகள் பாரமரிப்பு நிலையம்– உடவளவை)- விலங்கு வைத்தியர் விஜித பெரேரா

குப்பாளர்  –           தம்மிகாமல்சிங்ஹ, மேலதிக செயலாளர், வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சு

பூங்கா பற்றிய தகவல்களத் தொகுத்தவர்ஹஸினி சரத்சந்திர, பிரதம உத்தியோகத்தர், வன பாதுகாப்புத் திணைக்களம்

மஹேக்ஷா சதுராணி பெரேரா(பட்டதாரி பயிற்சியாளர்),வனஜீவராசிகள்  பாதுகாப்புத் திணைக்களம்

தமிழ் மொழிபெயர்ப்புஏ.ஆர்.எப். றிப்னா, அபிவிருத்தி  உத்தியோகத்தர், வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள்பாதுகாப்பு அமைச்சு

ஆங்கில மொழிபெயர்ப்புஅசோக பலிஹவடன, மொழிபெயர்ப்பாளர், வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள்பாதுகாப்பு அமைச்சு

இணய வடிவமப்புஎன்.ஐ கயத்ரி, அபிவிருத்தி  உத்தியோகத்தர், வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள்பாதுகாப்பு அமைச்சுசீ. ஏ. டீ. டீ. ஏ.கொல்லுரே, முகாமைத்துவ சேவை​உத்தியோகத்தர், வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள்பாதுகாப்பு அமைச்சு

படங்கள்ரோஹித குணவர்தன, வனஜீவராசிகள்பாதுகாப்புத் திணைக்களம்