简体中文 ZH-CN English EN Français FR Deutsch DE Italiano IT Português PT සිංහල SI தமிழ் TA
Ministry of Wildlife and Forest Resources Conservation

அத்தியாயம் 18 – சுண்டிக்குளம் தேசிய பூங்கா

Content Image

சிறுத்தையின் முடிவு

2019 ஆம் ஆண்டில் கிளிநொச்சி பிரதேச பொறுப்பு உதவிப் பணிப்பாளராக நான் கடமையாற்றினேன். கிளிநொச்சி பிரதேசத்துக்கு தேசிய பூங்காக்கள் 2 உரித்தாகின்றன. அவை சுண்டிக்குளம் மற்றும் டெலப்ட் என்பனவாகும்.

சுண்டிக்குளம் பிரதேசத்தில் சிறு சிறு வில்லுகள் காணப்படுகின்றன. புலம்பெயர் பறவைகள் முதன்முதலாக கால் வைப்பது சுண்டிக்குளம் பிரதேசத்திலாகும்.  ஆயிரக்கணக்கான புலம்பெயர் பறவைகள் வில்லுகளில் உள்ளன.  மழை காலத்திற்கு இவ்வில்லுகள் நீரினால் நிரம்புகின்றன. அக்காலத்திற்கு ​புலம்பெயர் பறவைகள் மன்னார் வங்காள சரணாலயத்திலும் இருக்கின்றன.

இப்பிரதேசத்தில் கடற்கரையுடன் கடலாமைகள் உள்ளன. விசேடமாக இருப்பது ஒலிவ நிறச் சிற்றாமைகளாகும்.வட கடற்கரையில் மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். கடலாமைகள் வலைகளுக்கு சிக்குகின்றன. கால்யகஞக்கும் தலைக்கும் காயம் ஏற்படுகின்றன. சட்ட விரோதமாக எடுத்துச் செல்லும் சந்தர்ப்பங்களும் உள்ளன. சட்ட விரோதம் என்பதனால் பிடித்து ஒப்படைக்கும் சந்தர்ப்பங்களும் சட்ட நடவடிக்கை எடுக்கும் சந்தர்ப்பங்களும் இருக்கின்றன. அதிகமாகக் கிடைப்பது பொலிஸுக்காகும்.  ஒலிவ நிறச் சிற்றாமைகளுக்கு மேலதிகமாக ஏனைய கடலாமை இனங்களும் எப்போதாவது கிடைக்கின்றன.

ஒருநாள் கிளிநொச்சி அலுவலகத்தில் இருக்கும் போது ஊருக்கு ஒரு சிறுத்தை வந்துள்ளதாக எனக்கு ஒரு தகவல் வந்தது. ஊரின் பெயர் அம்பால குலம். எனது அலுவலகத்திலிருந்து சிறிது தூரத்திலுள்ளது. நான் விரைவாக குழுவொன்றை அவ்விடத்துக்கு அனுப்பினேன். பின்னர் சிறுத்தை ஊருக்குள் சிக்கியுள்ளது நாம் விலங்கு வைத்தியருக்கு அறிவிக்கின்றோம் சிறுத்தைக்கும் காவலிடுகின்றோம் என அவர்களிடமிருந்து எனக்கு தகவலொன்று வந்தது.

பின்னர் இவ்விடத்துக்கு விலங்கு வைத்தியரும் வந்தார். எனினும் விலங்கு வைத்தியர் விலங்கினை மயக்குவதற்கு ஆயத்தமாகிய போது மக்கள் கலகம் போன்று நடந்து கொண்டுள்ளனர். இக்குழப்பத்துக்கு இடையில் சிறுத்தை எமது அதிகாரியொருவரின் மேலுக்குப் பாய்ந்துள்ளது. பின் பக்கத்துக்கு சிறுத்தையின் நகம் குத்தியதனால் தசையைக் கிழித்துக் கொண்டு பலமாகக் கீறப்பட்டிருந்தது. காயப்பட்ட அதிகாரியை இருவர் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றிருந்தனர். மக்களின் குழப்பம் அதிகமாயிற்று. அவர்கள் எமது கடமைக்கு தடங்கல் ஏற்படுத்தினர்.  அதற்கிடையில் மிருகம் மனிதர்களின் பின்னால் துரத்த ஆரம்பித்தது.  அப்போது மக்கள் வாள் கோடாரிகளை எடுத்துக் கொண்டு சிறுத்தையுடன் சண்டைக்குச் சென்றனர்.

அதன்போது எனக்கும் அதற்கு அருகில் வர முடியுமானது.  ​  எனினும் மக்கள் அமைதியின்றி நடந்து கொள்கின்றனர். சிறிது இருங்கள் என பொலிஸார் கூறினர். அதனுடனேயே சிறுத்தையைக் கொன்று விட்டனர் எனத் தகவல் கிடைத்தது.

நாம் செல்லும் போது மக்கள்  ​ வாள் கோடாரிகளினால் மிருகத்திற்கு அடித்திருந்தனர்.  இறந்த சிறுத்தை​யை உடலில் போட்டுக் கொண்டு செல்பி புகைப்படங்களை எடுத்துக் கொண்டுருந்தனர். பெரும் வீரமான செயலொன்றை செய்தது போல் மக்கள் செயற்பட்டனர். ​ அவர்கள் சத்தமாகக் கத்திக் கொண்டிருந்தனர்.

நாம் பொலிஸாருடன் சென்று இறந்த சிறுத்தையின் உடலை  எடுத்தோம். இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவித்தோம். அம்மனிதர்கள் எடுத்த புகைப்படங்களை முகநூலில் பதிவிட்டிருந்தனர். அவற்றையும் எடுத்து நீதிமன்றத்துக்கு அறிவித்தோம். அனை​வரையும் கை​து செய்யுமாறு ​நீதிமன்றம் பொலிஸுக்கு உத்தரவிட்டது.   சுமார் பத்து பதினைந்து பேரை பொலிஸ் கைது செய்தது.

இன்னும் அவ்வழக்கு விசாரணையிலுள்ளது.  சம்பவம் நினைவுக்கு வரும் போது சிறுத்தையை காப்பாற்ற முடியாமல் போனது கவலையாக உள்ளது.

திரு. ஜீ. யூ. சாரங்க அவர்கள்

திரு. ஜீ. யூ. சாரங்க அவர்கள் தள பாதுகாப்பு அதிகாரியொருவராக 1983 இல் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு இணைந்தார். பல்வேறு தேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களில் கடமையாற்றுவதற்கு சாரங்க அவர்கள் அதிஷ்டம் பெற்றார். யால மற்றும் வில்பத்து சரணாலயங்களிலிருந்து அவருக்கு ஆரம்பப் பயிற்சி கிடைத்தது. சீகிரிய சரணாலயத்துக்குப் பொறுப்பாக சேவையாற்றிய அவர் பின்னர் மின்னேரிய தேசிய பூங்காவிலும் பின்னர் 7 வருடங்கள் வஸ்கமுவ தேசிய பூங்காவிலும் சேவையாற்றினார். அவ்வாறே 2004-2005 ஆண்டுகளிலும்  2009-2012  ஆண்டுகளில் அவர் ஹோர்டன் சமவெளி தேசிய பூங்காவில் பூங்காப் பொறுப்பாளராக கடமையாற்றினார். பின்னர் உதவிப் பணிப்பாளர் ஒருவராகவும் பதவியுயர்வு பெற்ற  சாரங்க அவர்கள் கிளிநொச்சி பிரதேச பொறுப்பாளராகவும் பின்னர் அம்பாறை பிரதேச பொறுப்பாளராகவும் கடமையாற்றினார்.

தற்போது அவர் வவுனியா வலய பொறுப்பாளராக சேவையாற்றுகிறார்.

1995 ஆம் ஆண்டில் ​வனஜீவராசிகள் திணைக்களத்தின் மூலம் வழங்கப்படுகின்ற 9 மாத டிப்ளோமா பாடநெறியை நிறைவேற்றிய சாரங்க அவர்கள் அதன் பகுதியாக 3 மாதங்கள் இந்தியாவில் டெஹெராடுன் நகரத்தில் வனஜீவராசிகள் நிறுவனத்தில் பயிற்சி பெற்றார். அவர் கொரியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து போன்ற நாடுகளிலும் குறுகிய பயிற்சிப் பாடநெறியை நிறைவேற்றியுள்ளார்.

சாரங்க அவர்களின் வீடு கண்டி, கடுகஸ்தொடவில் அமைந்துள்ளது.

சுண்டிக்குளம் தேசிய பூங்கா

உயர்ந்த உயிர்ப் பல்வகைத் தன்மையைப் போன்றே தனித்துவமான நீர்வாழ் மற்றும் கடலோர சூழல் அமைப்புகளினாலும் கொண்ட இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாண தீபகற்பத்தை​ நோக்கி களப்பைச் அண்டி அமைந்துள்ள ஈரநில சூழல் தொகுதியொன்றாக   ​​ சுண்டிக்குளம் தேசிய பூங்காவை இனங்காட்ட முடியும்.  19565.33ஹெக்டயார் நில அளவைக் கொண்ட இப்பிரதேசம் 1983 பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி சரணாலயமொன்றாக ஆரம்பத்தில் பெயர் பதிக்கப்பட்டிருந்ததோடு வன விலங்குகள் மற்றும் தாவர பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் விதிமுறைகளின்படி 2015 ஜூன் மாதம் 22 ஆம் திகதி தேசிய பூங்காவொன்றாக பிரகடனப்படுத்தப்பட்டது. பூங்கா புச்சிலைப்பலி மற்றும் கரச்சி பிரதேசங்களுக்கிடையில் அமைந்துள்ளதோடு இதற்கு அண்மையிலான நகரம் கிளிநொச்சியாகும்.

சுண்டிக்குளம் பூங்காவின் நிலம் களப்பு சூழல் அமைப்பொன்றினை அண்டி அமைந்துள்ளமையினால் இங்கு நன்னீர் மற்றும் உவர்நீர் நிலங்களினுடைய குணாதிசயங்களைக் காண முடியும். கடல் மட்டத்துக்குச் சமாந்தரமாக அமைந்துள்ள இது தாழ்நறில உலர் காலநிலைப் பண்புகளைக் காட்டும் பல சூழற் தொகுதிகளின் இணைப்பினால் ஆன சமவெளிப் பிரதேசம் என்பதோடுஇங்கு நீரின் உவர்த்தன்மை காலத்துக்குக்காலம் மாறிதல்களுக்கும் உட்படுகின்றது.  வடகீழ் பருவ மழை மற்றும் வெப்ப ​மழை மூலம் மழை கிடைப்பதோடு வருடத்தில் ஏப்ரல் முதல் செப்டெம்பர் வரையான காலம் வரண்ட காலநிலையொன்றினைக் காட்டுகின்றது.

பல சூழல் அமைப்புக்களினால் ஆன இப்பூங்காவில் உயர் தாவர பன்முகத்தன்மையைக் கண்டு கொள்ள முடிகின்றது.  அதன்படி தாவர இனங்கள் சுமார் 187 ஆனவை​ கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு அவற்றில் பெருமளவு ஈரநிலத்தை அண்டி வளரும் தாவர இனங்கள் ஆகும்.  அவற்றில் சதுப்புநில புதர்கள் இனங்கள் மற்றும் கடற் புட்கள் இனங்களையும் பெருமளவில் கண்டு கொள்ள முடிகின்றது.  சதுப்பு நில இனங்களாக சாம்பல் சதுப்பு நிலம், கறுப்பு சதுப்பு நிலம், கைதை, சிவப்பு சதுப்பு நிலம், கிண்ணை என்பவற்றைக் கண்டு கொள்ள முடிகின்றது.  பாரியளவு தாவரங்களை பூங்காவினுள் காண முடியாவிட்டாலும் அவற்றுள் ஆசியப் பனையை காணலாம். மேலும் நீர்த் தாவர இனங்கள் சுமார் 18 உம் இனங்காணப்பட்டுள்ளன.

ஆசியப் பனை
சிவப்பு சதுப்பு நிலம்
கிண்ணை
கிண்ணை

சுண்டிக்குளம் தேசிய பூங்காவின் நிலம் ஈர மற்றும் உலர் ஆகிய இரு சூழல் அமைப்புகளினயும் கொண்ட நிலமொன்றாவதனால் விலங்குகளின் பன்முகத் தன்மையில் உயர் நிலையில்  உள்ளது. அதாவது இச்சூழல் அமைப்​​புக்களுள் உணவு அதிகமானதும் தமது இனத்தினைப் பெருக்குவதற்கு உகந்த இடங்கள் காணப்படுவதனால் பறவையினங்கள் சுமார் 136 இனங்காணப்பட்டுள்ளதோடு அவற்றினுள் புலம்பெயர் பறவைகளைப் பெருமளவு கண்டு கொள்ளலாம்.  அரிதாகக் காண முடியுமான பறவைகளாக பட்டைவால் மூக்கன், பெரும் பூநாரை, நெடுங்கால் உள்ளான், பழுப்புத்தலை கடற்பறவை, சாதா உள்ளான், பெரிய கோட்டான், பருத்த அலகு ஆலா, சின்ன பச்சைக்காலி, வெள்ளை அரிவாள் மூக்கன் போன்றவை இனங்காணப்பட்டுள்ளன.

பட்டைவால் மூக்கன்
பெரும் பூநாரை
நெடுங்கால் உள்ளான்
பழுப்புத்தலை கடற்பறவை
சாதா உள்ளான்

பாலூட்டி இனங்களாக புலி, தேன்கரடி, மான் மற்றும் இன்னும் சுமார் 26 இனங்கள் இனங்காணப்பட்டுள்ளன, முதலை இனங்களாக ​சதுப்பு முதலைகள், செம்மூக்கு முதலைஎன்பனவற்றைக் குறிப்பிடலாம்.

புலி
தேன் கரடி
சதுப்பு முதலை

அவ்வாறே ஈரூடகவாழ் இனங்கள் 08 உம்,  ஊர்வன இனங்கள் 05 உம், கடலாமை இனமொன்று, வண்ணத்துப்பூச்சி இனங்கள் 34 உம், தும்பி இனங்கள்20 உம், நீர்வாழ் முதுகெலும்பு இனங்கள் 30 மற்றும் நீர்வாழ் முதுகெலும்பற்ற இனங்கள் 17 உம் அண்மையில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளில் இனங்காணப்பட்டன.

கொழும்பிலிருந்து பூங்காவிற்குள் முழு தூர அளவு  361kmஆகும். சுண்டிக்குளம் தேசிய பூங்காவினை அண்மிப்பவருக்கு நீர்கொழும்பு- புத்தளம்- அனுராதபுதம்- ரபேவ- மெதவச்சி- கிளிநொச்சி- அலிமங்கட- அய்யனச்சி சந்தி- குவேனி சந்தியைத் தாண்டி பூங்கவுக்கு நுழைய முடிவது போன்றே நிட்டம்புவ- கெகிராவ- திரப்பனே- மிஹிந்தலை​- ரபேவ- மெதவச்சி- கிளிநொச்சி ஊடாகவும் சென்று பூங்காவினை அடைய முடியும்.

சுற்றுலாவிடுதி

சுண்டிக்குளம் தேசிய பூங்காவினைப் பார்வையிடுவதற்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளின் தங்குமிடத்தைப் பெற்றுக் கொள்வதற்கு கடற்கரையை அண்டியதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தினால் நடத்திச் செல்லப்படுகின்ற சுற்றுலா விடுதிகளில் சுமார் பத்து பேருக்கு தங்குமிட வசதிகளை வழங்க முடிவதோடு அதனை ஒதுக்கிக் கொள்வது கொழும்பில் அமைந்துள்ள வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைமையகத்தினால் மேற்கொள்ளப்படுகின்றது.

சுண்டிக்குளம் தேசிய பூங்காதொடர்பான விளக்கத்தில் காணப்படும் விலங்குகளின் பெயர்ப் பட்டியல்

 Sinhala Names

Tamil Names

English Names

Botanical Name

කොටියා

புலி

Leopard

Panthera pardus kotiya

වලහා

தேன் கரடி

Sloth bear

Ursus ursinus

මුවා           

மான்

Spotted deer

Axis axis ceylonensis

වයිරපෙද ගොහොදුවිත්තා 

பட்டைவால் மூக்கன்

Bar-tailed godwit

Limosa lapponica

රජ සියක්කාරයා 

பெரும் பூநாரை

Greater flamingo

Phoenicopterus roseus

කළු පිය  ඉපල්පාවා

நெடுங்கால் உள்ளான்

Black-winged stilt

Himantopus himantopus

බොරහිස් ගල්වියා 

பழுப்புத்தலை கடற்பறவை

Brown headed gull

Chroicocephalus brunnicephalus

පොදු සිලිත්තා

சாதா உள்ளான்

Common sandpiper

Actitis hypoleucos

යුරාසියා කලිත්තා

பெரிய கோட்டான்

Eurasian curlew

Numenius arquata

ගුලුතුඩු මුහුදුලිහිණියා

பருத்த அலகு ஆலா

Gull-billed tern

Gelochelidon nilotica

වගුරු සිලිබිල්ලා

சின்ன பச்சைக்காலி

Marsh sandpiper

Tringa stagnatilis

හිසකළු කෑදෑත්තා

வெள்ளை அரிவாள் மூக்கன்

Black-headed ibis

Threskiornis melanocephalus

හැල කිඹුලා

சதுப்பு முதலை

Mugger crocodile

Crocodylus palustris

ගැට කිඹුලා

செம்மூக்கு முதலை

Estuarine crocodile

Crocodylus porosus

சுண்டிக்குளம் தேசிய பூங்காதொடர்பான விளக்கத்தில் காணப்படும் மரங்களின் பெயர்ப் பட்டியல்

Sinhala Name

Tamil Name

English Name

Scientific Name

කඩොලාන විශේෂ

சதுப்புநில  புதர்கள் 

Mangrove swamp Sps

 

මුහුදු තණකොළ

கடற் புட்கள்

Sea grass

 

කිරල

கிண்ணை

Mangrove apple

Sonneratia caseolaris

 

තල් ශාකය

ஆசியப் பனை

Palmyra Palm

Borassus flabellifer

මන්ඩා

சாம்பல் சதுப்பு நிலம்

Grey mangrove

Avicennia marina

මහ කඩොල් 

சிவப்பு சதுப்பு நிலம்

Red mangrove

Rhizophora mucronata

 

බේරියා

கறுப்பு சதுப்பு நிலம்

Black mangrove

Lumnitzera littoralis

 

මූදූ කෙයියා

கைதை

Thatch screw pine

Pandanus tectorius

குப்பாளர் – தம்மிகாமல்சிங்ஹ, மேலதிக செயலாளர், வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சு பகுதி, விவசாய மற்றும் வனஜீவராசிகள் மற்றும் வன  வளங்கள் பாதுகாப்பு அமைச்சு

பூங்கா பற்றிய தகவல்களத் தொகுத்தவர்ஹஸினி சரத்சந்திர, பிரதம உத்தியோகத்தர், வன பாதுகாப்புத் திணைக்களம் மஹேக்ஷா சதுராணி பெரேரா(பட்டதாரி பயிற்சியாளர்),வனஜீவராசிகள்  பாதுகாப்புத் திணைக்களம்

தமிழ் மொழிபெயர்ப்புஏ.ஆர்.எப். றிப்னா, அபிவிருத்தி  உத்தியோகத்தர், (விவ. வனஜீ.வன. வள. பா. அ)

ஆங்கில மொழிபெயர்ப்புஅசோக பலிஹவடன, மொழிபெயர்ப்பாளர், (விவ. வனஜீ.வன. வள. பா. அ)

இணய வடிவமப்புஎன்.ஐ கயத்ரி, அபிவிருத்தி  உத்தியோகத்தர், (விவ. வனஜீ.வன. வள. பா. அ) சீ. ஏ. டீ. டீ. ஏ.கொல்லுரே, முகாமைத்துவ சேவை​உத்தியோகத்தர், (விவ. வனஜீ.வன. வள. பா. அ)

படங்கள் இணையம் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்டன.