简体中文 ZH-CN English EN Français FR Deutsch DE Italiano IT Português PT සිංහල SI தமிழ் TA
Ministry of Wildlife and Forest Resources Conservation

அத்தியாயம் 21 – கல்ஓயா தேசிய பூங்கா

Content Image

காப்பாற்றப்பட்ட யானை

எனது நினைவின்படி இச்சம்பவம் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்றது. நான் அப்போது விலங்கு வைத்தியரொருவராக வனஜீவராசிகள் திணைக்களத்தின் கிழக்குப் பகுதியில் கடமையாற்றினேன். அக்காலத்தில் எல். டீ.டீ.ஈ  யுத்தம் காணப்பட்டது. மக்களிடம் துப்பாக்கி காணப்பட்டது. வேட்டைகள் அதிகமாக இருந்தன. யானைகளுக்கும் துப்பாக்கிச் சூடு பட்ட சம்பவங்களும் காணப்பட்டன. அம்பாறைப் பகுதியில் யானைகள் கிழக்குப் பகுதி முழுவதும் நடமாடுகின்றன. யானைகள் கூட்டங்களை நாம் அடிக்கடி சந்திக்கின்றோம்​.

இப்போது  கூறப்படுகின்ற யானைக் குட்டியின் காலுக்கும்  பின் பகுதிக்கும் துப்பாக்கிச் சூடு பட்டிருந்தது. யானைக் குட்டியின் வயது சுமார் 8 வருடங்களாகும். இவ்யானைக் கூட்டம் கல்ஓயா தேசிய பூங்காவில் இருந்தது. எமக்கு செய்தி கிடைக்கும் போது துப்பாக்கிச் சூடு பட்ட யானைக்குட்டி அருகிலிருந்த தீவொன்றில் தங்யிருந்தது. இவ்வாறே யானைகள் கூட்டங்கள் உணவைத் தேடி தீவுகளுக்கு வருகின்றன. நீர் மட்டம் குறையும் போது தீவில் நீருக்கு அமிழ்ந்துள்ள பகுதியில் புல் முளைக்கின்றது. புட்களை உண்டு விட்டு யானைகள் கூட்டங்கள் மீண்டும் பூங்காவுக்கு நீந்துகின்றன. யானைக் கூட்டங்கள் வந்து போவதனை மீனவர்களும் அறிந்திருந்தனர். அக்காலத்தில் அவர்களும் தீவில் வாடி அமைப்பதில்லை. யானைக்குட்டி தங்கியிருந்த தீவுஅந்நேரத்தில் நீர் மட்டத்தின்படி சுமார் 10 ஏக்கரான தீவொன்றாகும். இத்தீவு முழுமையாக நீருக்கு அமிழாத தீவொன்றாகும். நடுவே அடர்ந்த காடு. சுற்றிலும் மைதானம். புல்லை உண்பதற்கு கூட்டத்துடன் வந்தாலும் பின் புறத்திலுள்ள காயத்தினால் மீண்டும் கூட்டத்துடன் நீந்த முடியாமல் குட்டி தீவில் தனித்திருந்தது.

மீனவர்கள் யானைக் குட்டியைப் பற்றி கல்ஓயா தேசிய பூங்காவின் பணிக்குழுவினருக்கு அறிவித்தனர். கல்ஓயா பூங்காவிலிருந்து எமக்கு அறவித்தனர். அந்நேரத்தில் கல்ஓயா பூங்காவின் பொறுப்பாளர் புத்திக விதானகே அவர்கள். என்னுடைய பாடசாலை நண்பன். படகுகள் மற்றும் தேவையானவற்றைத் தந்து யானைக் குட்டிக்கு மருந்துகளை வழங்குவதற்குச் செல்வதற்கு புத்திக அவர்கள் எமக்கு உதவி செய்தார். மேலதிக பணிக்குழுவினரையும் பெற்றுத் தந்தார்.

அப்போது நான் வந்து சுமார் 4 வருடங்களே கழிந்திருந்தது. அனுபவங்கள் குறைவு. தீவொன்றில் இருக்கும் யானையொன்றுக்கு மருந்து செய்வதற்கு எனக்குக் கிடைத்த முதலாவது சந்தர்ப்பமாகும். எனது பணிக்குழுவினரும் இருந்தனர். வனவிலங்கு தள உதவியாளர் லோரன்ஸ் பென்ஜமின், வனவிலங்கு காப்பாளர் சுகத் ஜயதிலக, வன தள உதவியாளர் சமில் பிரசாத், தற்போது காப்பாளரொருவரான சந்துன் ஹேமநாயக்க மற்றும் சாரதி கருணாரத்ன போன்றோர் ஆவர். இச்சாரதி அவர்களும் எப்போதும் மருந்து இடும் பணிகளில் தொடர்புபடுகிறார்.

படகில் சென்று தீவிலுள்ள யானைக்குட்டிக்கு மருத்துவத்தை செய்வது எமக்கு சவாலாக அமைந்தது. மாலை சுமார் 3.00 மணிக்கு யானை மைதானத்துக்கு வருகின்றது. நாம் அனைவரும் யானைக்கு மருத்துவத்தை செய்வதற்கு படகில் செல்வதற்கு வெளியானோம். அங்கு சுமார் 10 பேர் இருந்தனர். நாம் படகிலிருந்து தொலைநோக்கியின் மூலம் பார்த்தோம். சுமார் ஒரு மணித்தியாலயத்தின் பின்னர் யானை மைதானத்துக்கு வந்தது. எமக்கு படகிலிருந்தே மயக்க மருந்தை செலுத்த வேண்டியிருந்தது. படகு அண்மித்தால் யானை காட்டுக்குப் போய்விடும். எமது லோரன்ஸ் பென்ஜமின் படகிலிருந்தே யானைக்கு மருந்தைச் செலுத்துவதற்கு திறம்பட்டார்.

மருந்தைச் செலுத்தியதன் பின்னர் நாம் படகிலிருந்து இறங்கி யானைக் குட்டியின் பாதச் சுவடுகளின் பின்னால் மெது மெதுவாக முன்னே சென்றோம். மரமொன்றுக்குச் சாய்ந்து பாதி மயக்கத்துடன் இருக்கும் யானைக் குட்டி எமக்குக் கிடைத்தது.

கல்ஓய பூங்காவில் எம்முடன் இருந்த பணிக்குழுவினருக்கு இக்காட்சி ஆச்சரியமாய் இருந்தது. நின்று கொண்டே தூங்கும் யானையொன்றை அவர்கள் பார்த்திருக்கவில்லை. எமக்கும் யானைக்கும் இடையில் தூரம் சுமார் 8 அடிகள் இருக்கும் போது நாம் நோய் எதிர்ப்பு மருந்தினை வழங்கினோம். யானை நன்றாகத் தூங்கியதன் பின்னர் நாம் காயத்தை சுத்தம் செய்து மருந்து இட்டோம். முன் பக்கத்தின் காலின் உட்புறத்தில் காயமொன்று இருந்தது. நான் வேண்டாம் என்று கூறியும் எமது சுகத் ஜயதிலக யானையின் கால்களுக்கு இடையில் சென்று காயத்தைச் சுத்தம் செய்தார். சீழ் என்பவற்றை அகற்ற காயத்தை சுத்தப்படுத்திய பின்னர் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. யானைக் குட்டிக்கு நினைவு திரும்பும் மருந்தை வழங்கி விட்டு நாம் படகுக்கு வந்து பார்த்துக் கொண்டிருந்தோம். சிறிது நேரத்தின் பின்னர் யானைக் குட்டி குளத்திற்கு வந்தது.

அதன் பின்னர் பல சந்தர்ப்பங்களில் நாம் யானைக் குட்டிக்கு மருந்து வழங்கினோம். மயக்கமுறச் செய்வதற்கான தேவை ஏற்படவில்லை. அதிகளவு காயப்படும் யானைகள் இறக்கின்றன. இவ்யானைக்குட்டி குணமடைவதை நாம் கண்டோம். யானைக்குட்டி படிப்படியாகக் கொழுத்தது. பின்னர் யானைக்குட்டி தீவிலிருந்து நீந்திச் சென்றது என மீனவர்கள் கூறினர்.

யானைக் குட்டியின் உயிரைக் காப்பாற்றக் கிடைத்ததும், அச்சவாலும் மனதுக்கு மகிழ்ச்சியைத் தருகின்ற மறக்க முடியாத நினைவொன்றாகும்.

பிரமுதித தேவ சுரேந்திர அவர்கள்

பிரமுதித தேவ சுரேந்திர அவர்கள் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு நேரடியாக இணைந்த விலங்கு வைத்தியரொருவராவார். வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு தொடர்புபட முன்னர் தனியார் இடமொன்றில் சேவையாற்றிய அவர் கிடைத்த அனைத்து பொருளாதார நன்மைகளையும் தவிர்த்து  வனவிலங்குகளின் மேல் உள்ள அன்பினால் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு இணைந்தார்.

விலங்கு வைத்தியர் தேவ சுரேந்திர அவர்களுக்கு முதல் நியமனம் உடவளைவையிலுள்ள அத்துரு செவணவுக்குக் கிடைத்தது. 2005  ஆம் ஆண்டிலிருந்து 2006  ஆம் ஆண்டு வரை அவர் உடவளை எத் அத்துரு செவணவில் விலங்கு வைத்தியர் சுஹத ஜயவர்தனவுடன் சேவையாற்றினார். எனினும் அம்பாறை நகரில் காட்டு யானையொன்றினால் நபரொருவரைக் கொன்ற சம்பவமொன்றுடன் விடயப் பொறுப்பு அமைச்சரினால் அவர் அம்பாறைக்கு அழைக்கப்பட்டதோடு அன்றிலிருந்து 2013 ஆம் ஆண்டு வரை அவர் அம்பாறை மாவட்டத்திலே கடமையாற்றினார். 2013 ஆம் ஆண்டிலிருந்து இது வரையும் அவர் பொலன்னறுவை மாவட்டத்தில் சேவையாற்றுகிறார்.

பட்டத்துக்குப் புறம்பாக  விலங்கு வைத்தியர் தேவ சுரேந்திர அவர்கள் பேராதனை பல்கலைக்கழகத்தில் சூழல் விஞ்ஞானம் பற்றிய கலைமாணி பட்டத்தையும் நிறைவேற்றினார். அவர் அமெரிக்காவிலும் தன்சானியாவிலும் குறுகிய பயிற்சிப் பாடநெறியொன்றையும் பெற்றுள்ளார்.

விலங்கு வைத்தியர் தேவ சுரேந்திர அவர்கள் எழுத்தாளர் ஒருவராவார். வன விலங்குகளுக்கு சிகிச்சை அளித்த 13 வருடங்களும் காட்டு யானைகளுக்குச் செய்த சிகிச்சைகள் போன்ற நூல்கள் இரண்டும் அவரினால் 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

தேவ சுரேந்திர அவர்களின் அன்பார்ந்த மனைவி சிரியானி மங்கலிகாவும் விலங்கு வைத்தியரொருவராவார். அவர் வீட்டில் விலங்கு சிகிச்சை மையமொன்றை நடத்திச் செல்கின்றார். மூத்த மகன் குசல் மற்றும் இளைய மகன் மிஸ்ஸக பிலியந்தல மத்திய மகா வித்தியாலயத்தில் கற்றனர்.

அவர்களின் முகவரி 14/5, மகுலு துவ, பிலியந்தல.

கல்ஓயா தேசிய பூங்கா

ஏனைய பூங்காக்களை விட அமைதியான சூழலொன்றில் அமைந்துள்ள கல்ஓயா தேசிய பூங்கா வனவிலங்குகளுக்குப் போன்றே சுற்றுலாப் பயணிகளுக்கும் சுதந்திரமாக சஞ்சரிக்கக் கூடிய அபூர்வமான நிலப் பகுதியாகும்.

இலங்கையின் முதலாவது பிரதமராக நியமனம் பெற்ற டீ. எஸ். சேனானாயக்க அவர்களினால் 1949- 1950 க்கும் இடையிலான காலப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட கல்ஓயா பல்நோக்கு நீர்ப்பாசனத் திட்ட முறையின் கீழ் கல்ஓயாவை மறித்து அமைக்கப்பட்ட நீர்த்தேக்கம் சேனாநாயக்க சமுத்திரம் எனப் பெயர் பெற்றது.  சேனாநாயக்க சமுத்திரத்தை நிர்மாணித்ததன் பெறுபேறாக நீர்த்தேக்கத்துக்கு அண்மையில் நீரேந்துப் பிரதேசத்தில் 25900 ஹெக்டயார் அளவிலான நிலப் பகுதியொன்று 1954 பெப்ரவரி 12 ஆம் திகதி   கல்ஓயா தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டது. இப்பூங்கா நாட்டின் கிழக்குப் பிரதேசத்தில் மொனராகலை மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு உரித்தாக அமைந்துள்ளது.

அப்பிரதேசத்தின் பாதுகாப்பு போன்றே வனவிலங்குகளின் பாதுகாப்பினை நிலையாக நடத்திச் செல்வதற்காக 1954 ஆம் ஆண்டு கல்ஓயா அபிவிருத்தி சபை மூலம் வனவிலங்கு மற்றும் தாவர பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் சேனாநாயக்க சமுத்திரம் மற்றும் சுற்றிலுள்ள நீர்மூலாதாரங்கள் காடுகளுக்கு பாதுகாப்பைப் பெற்றுக் கொள்வதனை அடிப்படையாகக் கொண்டு வனவிலங்கு பாதுகாப்புப் பிரதேசமாக கல்ஓயா தேசிய பூங்கா, சேனாநாயக்க சமுத்திர சரணாலயம், கல்ஓயா பள்ளத்தாக்கு வடகிழக்கு சரணாலயம், கல்ஓயா பள்ளத்தாக்கு தென்மேற்கு சரணாலயமாக வனவிலங்கு பாதுகாப்புப் பிரதேசங்கள் நான்காக நிறுவப்பட்டுள்ளன.

கல்ஓயா தேசிய பூங்கா உள்ளடக்கிய வன பாதுகாப்பு பிரதேசங்கள் நான்கில் ஒன்றுக்கு உரித்தான புத்தங்கல சரணாலயம் கி.மு. 2 வது நூற்றாண்டு வரை செல்லும் தாதுபோபம் மற்றும் ஏனைய கட்டடங்களின் இடிபாடுகளைக் கொண்டது. அம்பாறை நகரிலிருந்து வட திசையில் மல்வத்தை பிரிவுக்கு அண்மையில் புத்தங்கல அரண அமைந்துள்ளது. 200 ஏக்கரான நில  அளவுடைய இவ்வரணத்துக்குரிய இடிபாடுகள் பரந்துள்ளன. புத்த பெருமான் இலங்கைக்கு வந்த இறுதிக் காலத்தில் இங்கு வந்ததாக நம்பப்படுகின்றது. அங்கு மடங்கள், தாகபைகள், கற்றூண்கள், படிக்கட்டு வரிசைகள், சந்திரவட்டக்கல், கொரவக்கல் மற்றும் பூ ஆசனம் போன்றவற்றின் எச்சங்களும் எஞ்சியுள்ளன. இவை தவிர கல்ஓயா தேசிய பூங்காவுக்கு அண்மையில் மகுல் மகா விகாரை, நீலகிரிசாய, தீகவாபி, பியங்கல, புலுகுணாவ போன்ற பௌத்த வணக்கஸ்தலங்கள் மற்றும் இடிபாடுகளையும் கண்டு கொள்ள முடியும். பண்டைய காலத்தில் ஆரிய குடியிருப்புப் பிரதேசமொன்றாக இருந்த கல்ஓயா அக்காலத்தில் திகாமடுல்ல எனும் பெயரில் அழைக்கப்பட்டதோடு பூங்காவுக்கு மேற்குத் திசையில் அமைந்துள்ள மலைப் பிரதேசம் இலங்கையின் ஆதிக்குடிகளின் கிராமமொன்றான ரதுகல- நில்கல கிராமம் அமைந்திருந்தது.

ஆதிவாசியொருவர்

தானிகல, நில்கல மற்றும் உல்பொத மலைகள் உயரமான மலையுச்சி ஆவதோடு உயரமான மலையுச்சி 900 மீற்றர் ஆகும். நாட்டில் வரண்ட வலயத்தில் அமைந்துள்ள இப்பூங்காவுக்கு வடகிழக்கு பருவ மழை​ காலத்தில் மழை கிடைப்பதோடு பொதுவாக வருடாந்த மழைவீழ்ச்சி 1600-1700 மில்லி மீற்றருக்கு இ​டையிலாகும். சேனானாயக்க சமுத்திரத்தை அண்டி அமைந்துள்ள இந்நிலத்தின் மண் செங்கபில நிறத்தினைக் கொண்டது. ​​  ​ 

வரண்ட வலயத்துக்கே உரித்தான இப்பூங்காவில் காணக் கிடைப்பதோடு காட்டில் தாவர வகைகள் மூன்றாகும். காடு, பற்றை மற்றும் புல்நிலம் என இங்கு சுமார் 45% என்றும் பசுமையான காடுகளிலினால் மூடப்பட்டிருப்பதோடு இன்னும் 33% ஆனவை புல் நிலங்களினாலும் மலைப்பகுதி புல்நிலங்கள் 9% இனைக் கொண்டது.   மலையின் அடிவாரத்தில் பள்ளத்தாக்கின் இரு பக்கங்களிலும் மிகச் செழிப்பாக புல் வகைகளும் மூலிகைத் தாவரங்களும் வளர்ந்துள்ளதோடு ஆயுர்வேதத்தின் பிரதான மூலிகை மரங்கள் மூன்றான கடுக்காய், தான்றி, நெல்லி மற்றும் வேங்கை போன்றே மானா, தர்ப்பைப்புல் போன்ற புல் வகைகளும் மிகச் செழிப்பாக வளர்ந்நுள்ளன. இக்காட்டில் உயரமாக ஓங்கி  வளர்ந்துள்ள தாவரமாக சாவண்டலை மரம், காட்டு மா, பதுரங்கலி, வீரை, பாலை, கருங்காலி மற்றும் விளாவும் பற்றைத் தாவரமாக இலந்தை போன்ற உள்நாட்டு மரங்கள் பலவற்றையும் பாரிய அளவு காணக் கிடைக்கின்றது.

பூங்காவில் உயர் வானை அழகுபடுத்தும் பல்வேறு பறவை இனங்களாக 150 இனை அண்மித்த அளவொன்றை நீர்த்தேக்கத்தைச் சுற்றியுள்ள தீவுகளில் கூடு கட்டியுள்ளன. அடர்ந்த பச்சை நிறமான விதானமுடைய பூங்கா பறவைகளின் வாழிடமொன்றாவதோடு சமுத்திரத்துக்கு அண்மையில் கொக்குகள், நீர்க்காகம், சாம்பல் நாரை மற்றும் சிறிய சீழ்க்கைச்சிரவி மற்றும் பருந்து இனங்களும் சேனாநாயக்க நீர்த்தேக்கத்தில் பெருமளவு காணக் கிடைக்கும் பறவைகளுள் அடங்கும். இலங்கையின் பெரிய பறவையானசிறுத்த பெரு நாரை,சாம்பல் கூழைக்கடா, இலங்கை சாம்பல் இருவாய்ச்சி, செம்முகப் பூங்குயில், இலங்கைக் காட்டுக் கோழி, சின்னக் காட்டுக்கோழி, பழுப்புத் தலை​ச் சிலம்பன் போன்றவாறு பறவையினங்களில் நம்ப முடியாதளவு பல்வகைத்தன்மையை பூங்காவில் கண்டு கொள்ள முடியும். கல்ஓயா தேசிய பூங்காவில் வண்ணத்துப்பூச்சி இனங்களுக்குள் இலங்கைக்கு உரித்தான சுதனா இனம் போன்ற இன்னும் பலவும் உள்ளடங்குகின்றன.

                                                                                                                                     கொக்குகள்

தேசிய பூங்காவொன்று வனவிலங்குகளுக்கு மிகவும் நட்பாக இருப்பது வருடம் முழுவதும் நீர் குறையாது இருப்பதினாலும் மரங்களின் பச்சை நிறத்தினால் தொடர்ந்து நிழல் கிடைப்ப​தினாலுமாகும். கல்ஓயா தேசிய பூங்காவின் முக்கிய அம்சமொன்றாக வருடம் முழுவதும் காணக் கிடைக்கின்ற யானைக் கூட்டமாகும். தமது இயற்கை வாழிடத்திற்குச் சமமாக வாழ்கின்ற ஆசிய யானைகளைக் கண்டு கொள்வதற்கு உலகிலுள்ள சிறந்த இடங்களினுள் ஒன்றான கல்ஓயா தேசிய பூங்காவாகும். வனவிலங்குகளுக்கும் சூழலுக்குமிடை​யில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துகின்ற கல்ஓயா தேசிய பூங்காவிலுள்ள அனைத்து பாலூட்டிகளிலும் மிகவும் வலிமையான நீச்சல் வீரராவதும் யானைகளாகும். மார்ச் முதல் ஜூலை வரையான காலப் பகுதியில் படகு சவாரி மூலம் மகா சேனானாயக்க சமுத்திர நீர்த்தேக்கத்தில் ஒரு தீவிலிருந்து இன்னொரு தீவுக்கு நீந்தும் யானைக் கூட்டங்களைக் கண்டு கொள்ள முடியும்.

                                                                                      ஒரு தீவிலிருந்து நீந்திச் செல்லும் யானைக் கூட்டங்கள்

பூங்காவில்  பாலூட்டிகள் 32 இனை அண்மித்த அளவொன்று அறியக் கிடைத்துள்ளதோடு இலங்கை யானை, காட்டெருமை, மரை, இலங்கைச் சிறுத்தை, கரடி, மான், புள்ளி மான், சாம்பல் முகக் குரங்கு, ​செங்குரங்கு மற்றும் காட்டுப் பன்றி என்பன அவற்றுள் உள்ளடங்குகின்றன.

இலங்கைச் சிறுத்தை
செங்குரங்கு
காட்டெருமைகள்
மரைகள்
புள்ளி மான்கள்

பூங்காவின் ஊர்வன  வகைகளுக்குள் சதுப்பு முதலைகள் மற்றும் நட்சத்திர ஆமைகள்,பால் ஆமைகள், கறுப்பு ஆமைகள், மலைப்பாம்பு, நாகப்பாம்பு என்பன உள்ளடங்குகின்றன.

சதுப்பு முதலை

பூமியிலுள்ள உண்மையான தன்மையை அனுபவிக்க முடியுமான மனிதனின் கைகளினால் தீண்டப்படாத இயற்கையாகவே உருவாகியுள்ள இயற்கையின் புகழ் பற்றி தனித்துவமான காட்சியொன்றை உங்களுக்கு வழங்குகின்ற உயிர்களால் நிரம்பியகல்ஓயா தேசிய பூங்கா உண்மையில் சமாதானமான உள்ள அமைதியான இடமொன்றாகும்.சேனானாயக்க சமுத்திர குளத்தின் அமைதியான நீரின் மேலால் நீங்கள் பயணிக்கும் போது, கல்ஓயா தேசிய பூங்காவில் உயிரினங்கள் நிறைந்துள்ளன என்பதனை உங்களால் விரைவாகப் புரிந்து கொள்ள முடியும். பூங்காவிலுள்ள அமைதியான சூழல் சுற்றுப் பிரயாணிகளுக்கு உயர்ந்தபட்ச சுதந்திரமாகப் பார்ப்பதற்கு வழியீட்டிக் கொடுக்கின்றது.

உலர் கலந்த என்றும் பசுமையான பூங்காவொன்றான இந்நிலம் கொழும்பிலிருந்து சுமார் 368 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. பூங்காவின் நுழைவாயில் அம்பாறையிலிருந்து 20கிலோமீற்றர் மேற்காக இங்கினியாகல அமைந்துள்ளது. கல்ஓயா தேசிய பூங்காவுக்கு கொழும்பிலிருந்து இரத்தினபுரி, பெல்மடுள்ள, பலங்கொட, வெல்லவாய, மொனராகலை, சியம்பலாண்டுவ- அம்பாறை பாதையில் 17 ஆவது மைல் கம்பத்தில் திரும்பி இங்கினியாகலைக்கும் அவ்வாறே கொழும்பு, கண்டி, மஹியங்கனை, அம்பாறையினூடாக இங்கினியாகலையையும் நெருங்க முடியும்.

சுற்றுலாப் பயணிகளுக்காக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தினால் வசதிகள் வழங்கப்படுவதோடு சுற்றுலா விடுதிகளில் தங்குமிடத்தைப் பெற்றுக் கொள்வதற்கு பிரதான வனஜீவராசிகள் அலுவலகத்தில் அனுமதியைப் பெற்றுக் கொள்ள முடியும். வனவிலங்கு சுற்றுலா விடுதிகள் இங்கினியாகல, எக்கல் ஓய மற்றும் நில்கலவில் அமைந்துள்ளதோடு சேனானாயக்க சமுத்திரத்துக்கு அண்மையிலும் பரெவியன்ஆர, மஹதொரொவ்வ,கொஸ்ஸபொல எனும் இடங்களில் முகாம் நிலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் முல்லேகமவிலிருந்து கெபெல்லபொக்க வரையும் அலிவங்குவிலிருந்து கொஸ்ஸபொல்ல வரையும் ஜீப் வண்டியில் பயணம் செய்யவும் முடியுமாக உள்ளது.

கல்ஓயா தேசிய பூங்காதொடர்பான விளக்கத்தில் காணப்படும் விலங்குகளின் பெயர்ப் பட்டியல்

 Sinhala Names

Tamil Names

English Names

Scientific Name

ශ්‍රී ලංකා දිවියා

சிறுத்தை

Leopard

Panthera pardus kotiya

වලහා

தேன் கரடி

Sloth bear

Melursus ursinus

ආසියානු අලියා

ஆசிய யானை

Asian elephant

​Elephas maximus

කුළු මී හරකා

காட்டெருமை

Wild buffalo

Bubalus bubalis

ගෝනා

மரை

Sambar

Rusa unicolor

අළු වදුරා

சாம்பல் முகக் குரங்கு

Gray langur

Semnopithecus entellus

ඕලු මුවා

மான்

Barking deer

Muntiacus muntijak

තිත් මුවා

புள்ளி மான்

Spotted deer 

Axis axis ceylonensis

රිළවා

செங்குரங்கு

Toque macaque

Macaca sinica

වල් ඌරා

காட்டுப் பன்றி

Wild boar 

Sus scrofa

කොකා

கொக்கு

Heron family

Ardeidae Sps.

දියකාවා

நீர்க்காகம்

Cormorant

Phalacrocorax fuscicollis

අළු කොකා

சாம்பல் நாரை

Grey heron

Ardea cinerea

තඹසේරුවා

சிறிய சீழ்க்கைச்சிரவி

Lesser whistling duck

Dendrocygna javanica

උකුසු විශේෂ

பருந்து இனங்கள்

 

Family accipitridae sps.

බහුරුමානාවා

சிறுத்த பெரு நாரை

Lesser adjutant

Leptoptilos javanicus

පැස්තුඩුවා

சாம்பல் கூழைக்கடா

Spot-billed pelican

Pelecanus philippensis

ශ්‍රී ලංකා අළුකෑදැත්තා  

இலங்கை சாம்பல் இருவாய்ச்சி

Sri lanka Grey Hornbill

Ocyceros gingalensis

රතු මුහුණැති මල්කොහා

செம்முகப் பூங்குயில்

Sri Lanka red faced malkoha

Phaenicophaeus pyrrhocephalus

වළිකුකුලා

இலங்கைக்காட்டுக்கோழி

Sri Lanka junglefowl

Gallus lafayetii

වත නිල් මල් කොහා

நீல முகச் செண்பகம்

Blue – faced malkoha

Phaenicophaeus viridirostris

ශ්‍රීලංකා මල්  කොට්ටෝරුවා

சின்ன குக்குறுவான்

SL Crimson-Fronted Barbet

Psilopogon rubricapillus

හබන් කුකුලා

சின்னக் காட்டுக்கோழி

Sri Lanka spurfowl

Galloperdix bicalcarata

ලංකා මුදුන් බොර දෙමලිච්චා

பழுப்புத் தலை​ச் சிலம்பன்

Brown capped babbler

Pellorneum fuscocapillus

සමනල විශේෂ – සුදනා

வண்ணத்துப்பூச்சி இனம்-சுதனா

Sri Lanka lesser albatross

Appias galene

හැල කිඹුලා

சதுப்பு முதலை

Mugger crocodile

Crocodylus palustris

තාරකා ඉබ්බා

நட்சத்திர ஆமை

Star tortoise

Testudo elegans

කිරි ඉබ්බා

பால் ஆமை

Flapshell turtle

Lissemys ceylonensis

ගල් ඉබ්බා

கறுப்பு ஆமை

Parker’s black turtle

Melanochelys trijuga

පිඹුරා

மலைப்பாம்பு

Python 

Python molurus

නයා

நாகப்பாம்பு

Cobra

Naja naja

கல்ஓயா தேசிய பூங்காதொடர்பான விளக்கத்தில் காணப்படும் மரங்களின் பெயர்ப் பட்டியல்

Sinhala Name

Tamil Name

English Name

Scientific Name

වීරவீரைHedge Box wood

Drypetes sepiaria

පලුபாலைPalu

Manilkara hexandra

හල්මිල්ලசாவண்டலை மரம்Halmilla

Berraya cordifolia

ඇටඹகாட்டு மாEtamba

Mangifera zeylancia

කලුමැදිරියபதுரங்கலிKalumadiriya

Diospyros quaesita

කළුවරகருங்காலிEbony

Diospyros altissima

දිවුල්விளாDivul 

Limonia acidissima

අරළුகடுக்காய்Aralu

Terminalia chebula

බුළුதான்றிBuluTerminalia bellirica
නෙල්ලිநெல்லிNelli

Phyllanthus emblica

ගම්මාලුவேங்கைGammalu

Pterocarpusmarsupium

මානமானாManaCymbopogon confertiflorus
ඉලුක්தர்ப்பைப்புல்Illuk

Imperata cylindrica

එරමිණියාஇலந்தை Zizyphus sps.

குப்பாளர்  –           தம்மிகாமல்சிங்ஹ, மேலதிக செயலாளர், வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சு பகுதி, விவசாய மற்றும் வனஜீவராசிகள் மற்றும் வன  வளங்கள் பாதுகாப்பு அமைச்சு

பூங்கா பற்றிய தகவல்களத் தொகுத்தவர்ஹஸினி சரத்சந்திர, பிரதம உத்தியோகத்தர், வன பாதுகாப்புத் திணைக்களம் மஹேக்ஷா சதுராணி பெரேரா,அபிவிருத்தி  உத்தியோகத்தர்,வனஜீவராசிகள்  பாதுகாப்புத் திணைக்களம்

தமிழ் மொழிபெயர்ப்புஏ.ஆர்.எப். றிப்னா, அபிவிருத்தி  உத்தியோகத்தர், (விவ. வனஜீ.வன. வள. பா. அ)

ஆங்கில மொழிபெயர்ப்புஅசோக பலிஹவடன, மொழிபெயர்ப்பாளர், (விவ. வனஜீ.வன. வள. பா. அ)

இணய வடிவமப்புஎன்.ஐ கயத்ரி, அபிவிருத்தி  உத்தியோகத்தர், (விவ. வனஜீ.வன. வள. பா. அ) சீ. ஏ. டீ. டீ. ஏ.கொல்லுரே, முகாமைத்துவ சேவை​உத்தியோகத்தர், (விவ. வனஜீ.வன. வள. பா. அ)

படங்கள் இணையம் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்டன.