简体中文 ZH-CN English EN Français FR Deutsch DE Italiano IT Português PT සිංහල SI தமிழ் TA
Ministry of Wildlife and Forest Resources Conservation

அத்தியாயம் 22 – வெள்ளச் சமவெளி தேசிய பூங்கா

Content Image

எம் இருவருக்கும் ஒன்றாக ஒற்றையடிப் பாதையில் விழுந்தோம்

1998 ஆம் ஆண்டில் வட்டார பாதுகாப்பு தரத்தின் அதிகாரியொருவராக நான் வனஜீவராசிகள் திணைக்களத்தில் இணைந்தேன். 2006 அம் ஆண்டில் பொலன்னறுவைக்கு சேவைக்காக வந்தேன். வெள்ளச் சமவெளி தேசிய பூங்கா பொலன்னறுவைப் பிரதேசத்தில் அமைந்துள்ளது.

அன்று ஞாயிற்றுக்கிழமையொன்று. ஞாயிற்றுக்கிழமையில் விலங்குகளை வேட்டையாடுவது போன்றே அத்தியாவசியமற்ற செயற்பாடுகளும் அதிகமாக இடம்பெறுகின்றன. வெள்ளச் சமவெளி பூங்காவுக்குச் செல்வதற்கு நாம் நான்கு பேர் மனம்பிட்டிய பகுதிக்குச் சென்றோம். என்னுடன் வட்டார பாதுகாவலர் சரத் குமார, வன பொறுப்பாளர் டீ. விஜேசிங்ஹ, பொறுப்பாளர் நிமல் அகியொர் இருந்தனர். நான் குழுவுக்குப் பொறுப்பாக இருந்தேன். எமது கையில் போர 12 துப்பாக்கியே இருந்தது. துப்பாக்கி குண்டுகள் மூன்றும் யானை வெடிகள் சிலவும் மட்டுமாகும்.

காட்டுக்கு உட்பட்டு சுமார் ஒரு கிலோமீற்றர் செல்லும் போது வெள்ளச் சமவெளிக்கு அண்மைக் கிராமமொன்றான முஸ்லிம் கொலணியில் பிள்ளையொருவரை யானை தாக்கி பிள்ளை இறந்து விட்டது என எமக்கு அலுவலகத்திலிருந்து தகவலொன்று வந்தது. சுமார் பன்னிரண்டு வயதான ஆண் பிள்ளையொன்று. நாம் மீண்டும் அலுவலகத்துக்குச் சென்று வர நினைத்தாலும் கிராமத்துக்கு அருகில் இருந்தமையினால் கிராமத்துக்குச் சென்று விட்டு போவதற்கு நினைத்தோம். பொதுவாக இவ்வாறான ஒன்று நடந்தால் மக்கள் வனவிலங்கு அதிகாரிகளுக்கு தொந்தரவு செய்கின்றனர். அதனால் எமக்குத் தெரிந்த கிராமவாசி ஒருவரின் தொலைபேசி இலக்கமொன்றைத் தேடி எடுத்து நிலைமையைப் பற்றிப் பேசிப் பார்த்தோம். முஸ்லிம் சம்பிரதாயத்தின்படி இறந்த உடலை அன்றே அடக்கம் செய்ய வேண்டும் என்பதனால் ஊர் மக்கள் அடக்கம் செய்வதற்காகத் தயார் செய்வதாகவதாக அவர் எமக்கு  அறியத் தந்தார். எமக்கு அந்நபரின் மீது நம்பிக்கை இருந்தது. அவ்வாறே பிள்ளையைக் கொன்ற யானை அண்மையில் இருக்க முடியும் என்பதனால் யானையை அகற்ற வேண்டும் என்னும் உணர்வொன்றும் இருந்தது. நாம் நான்கு பேரும் கால்நடை  மூலமே முஸ்லிம் கொலணியை  அடைந்தோம்.

எமக்கு தொலைபேசி அழைப்பை விடுத்த நபர் கூறிய வகையில் பிரதேச மக்கள் இறந்த வீட்டு சம்பிரதாயங்களில் ஈடுபட்டிருந்தனர். மக்கள் நிறைந்திருந்தனர். நாம் அவ்விடத்தை நெருங்கி யானை எங்கே எனக் கேட்டோம். அவர்கள் சுமார் ஐந்நூறு மீற்றர் தூரத்தில் இருக்கும் காட்டு பகுதியொன்றைக் காட்டினார். நாம் அங்கு செல்லும் போது ஊர் மக்களும் எமக்குப் பின்னால் இருந்தனர்.  இவ்வாறான வேளைகளில் மக்களுக்கு வர வேண்டாம் என்றால் கேட்பதுமில்லை.

காட்டுப் பகுதியில் யானை இருப்பதை நாம் கண்டோம். ஒரு பக்கத்தில் ஏரியொன்று. அதற்கு முந்தைய நாள் நன்றாக  மழை பெய்ததால் ஏரி நிறைந்திருந்தது. இன்னொரு புறத்தில்  நாம்.  ஏரியினூடாக யானையை விரட்டுவது பயங்கரமானது. செல்லாமல் மீண்டும் வர வாய்ப்புள்ளது. ஊர் இருக்கும் பக்கத்திற்கும் யானை இருக்கும் பக்கத்துக்கும் வராதவாறு காட்டிற்கே விரட்ட வேண்டும். ஏரியையும் விட்டு காட்டிற்கே யானையை விரட்டுவதற்கு நாம் எண்ணினோம். நாம் யானை  வெடிகள் இரண்டு மூன்றினை செலுத்தினோம்.

யானை காட்டுக்குச் செல்லாது ஊர் பக்கத்தால் மரண வீட்டுப் பக்கத்துக்குச் செல்கிறது. கூச்சலிட்டு யானையை விரட்டப் பார்த்தோம். சரிவரவில்லை. மக்களுக்கு ஓடுமாறு நாம் கூச்சலிட்டோம். துப்பாக்கி விஜேசிங்ஹவின் கையில் இருந்தது. அவர் யானை இருந்த பக்கத்துக்கு வெடி வைத்தார். அது யானையைத் தாக்கவில்லை. இரண்டாவது வெடியையும் வைத்தார். அது யானையின் காலைத் தாக்கியிருக்கலாம். யானை கத்திக் கொண்டே எமது பக்கத்துக்கு ஓடி வந்தது.

நாம் பாய்ந்து ஓடத் தொடங்கினோம். அது ஒற்றையடிப் பாதை. இரு பக்கங்களிலும்இலந்தை பற்றை இருந்தது. எனக்கு முன்னே இருந்த நிமல் விழுந்தார். யானை வருகிறது. எனக்குப் பின்னால் இருந்த சரத் குமார புதர் ஒன்றினூடாக மற்றப் பக்கத்துக்கு ஓடியது. நிமலுக்கு மேலால் பாய்வதற்கு மட்டுமே எனக்கு இருந்தது. நான் பாய்வதற்கு முற்படும் போதே அவர் எழும்பினார். நாம் இருவரும் ஒருவருக்கொருவர் மோதி கீழே விழுந்தோம்.

ஆச்சரியம். எமது முன்னைய புண்ணியத்துக்கு எமக்கு சுமார் பத்து மீற்றர் தூரத்தில் யானை நின்றிருந்தது. துப்பாக்கியைக் கையில் வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று இன்னொரு புறத்தில் விஜேசிங்ஹ பார்த்துக் கொண்டிருந்தார். அவர் மீண்டும் வெடி வைத்தால் யானை எமக்கு அருகில் வரும். எமக்கு அவ்விடத்திலிருந்து பாய்ந்து மரண வீட்டுப் பக்கத்துக்கு ஓடுமாறு விஜேசிங்ஹ கூறினார்.

நாம் அங்கிருந்து மாறும் போதும் யானைசத்தமிடவில்லை. கீழே பார்த்துக் கொண்டிருந்தது. சுமார் ஒரு மணித்தியாலம் செல்லும் போது யானை காட்டுக்குச் சென்றது. அன்று யானை முன்னே வந்திருந்தால் நாம் முடிந்திருப்போம். துப்பாக்கி புதிய ஒருவரிடம் இருந்திருந்தால் அவர் வெடி வைத்திருப்பார். வெடி வைத்தால் யானை முன்னே வந்து எம்மைத் தாக்கியிருக்கும். துப்பாக்கியைக் கையில் வைத்திருந்த விஜேசிங்ஹவின் அறிவினால் எமது உயிர் பிழைத்தது.

நாம் முகம் கொடுத்த நிகழ்வினைக் கண்டு ஊர் மக்கள் எமக்கு ஒன்றும் கூறவில்லை. நாம் மரண வீட்டிலும் கலந்து கொண்டு விட்டு மீண்டும் சென்றோம். பிள்ளை அதிகாலையில் விளாம்பழங்களை பொறுக்கச் சென்று யானைக்கு அகப்பட்டுள்ளது. விலங்குகள்  என்பவை மனிதர்கள் போல் இல்லை என்பதனையே எனக்குக் கூற வேண்டியுள்ளது. பகைமையை வைத்துக் கொண்டிருப்பதில்லை. இவ்விலங்கிற்கு வெடி பட்டாலும் பகைமையொன்று இருக்கவில்லை என நினைக்கிறேன். இன்றாகும் போது விஜேசிங்ஹ உயிருடன் இல்லை.

திரு. டப்ளியூ. டீ. எம். ஜயதிலக விக்கிரமசிங்ஹ அவர்கள்

டப்ளியூ. டீ. எம். ஜயதிலக விக்கிரமசிங்ஹ அவர்கள் விஞ்ஞான பட்டதாரிகளிடத்தே வட்டார வன பாதுகாப்பு 1 ஆம் தர பதவிநிலை பதவிக்காக நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சையொன்றில் சித்தியெய்திய சிறிய எண்ணிக்கையினருள் ஒருவராகவே வனஜீவராசிகள் திணைக்களத்தில் இணைந்தார்.

தம்முடைய முதலாவது கடமையை எலஹெர- கிரிதலே சரணாலயம் கொண்ட எலஹர வனத்தில் ஆரம்பித்த ​ ஜயதிலக விக்கிரமசிங்ஹ அவர்கள் அம்பாறை வட்டாரம், சமனல  வட்டாரம், பொலன்னறுவை, மாதுறு ஓயா, உடவளவை, வில்பத்து, கிரிதலை பயிற்சி துறை, கொழும்பு பிரதான அலுவலகங்கள் போன்ற இலங்கை முழுவதும் பரந்த பிரதேசங்களில் கடமையை நிறைவேற்றினார். தற்போது அவர் கிரிதலை பயிற்சித் துறையில் உதவிப் பணிப்பாளராகச் சேவையாற்றுகிறார்.

ஜயதிலக விக்கிரமசிங்ஹ அவர்கள் களனி பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானமாணிப் பட்டம், திறந்த பல்கலைக்கழகத்தில் சீழல் விஞ்ஞானம் பற்றியகெலைமாணிப் பட்டம், கன்றுகள் பாதுகாப்பு பற்றிய விஞ்ஞான டிப்ளோமா, கொழும்புப் பல்கலைக்கழகத்துடன் இணைப்புடன் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற டிப்ளோமா போன்றே நில திட்டமிடல் பற்றிய டிப்ளோமா ஒன்றையும் செய்துள்ளார். இதற்குப் புறம்பாக இந்தியாவிலும் வனவிலங்குகளின் பயிற்சி பற்றிய டிப்ளோமா ஒன்றையும் செய்துள்ளார்.

ஜயதிலக விக்கிரமசிங்ஹ அவர்களின் மனைவி திருமதி சஜீவனீ பிரியந்திகா, கேகாலை கல்வி நிறுவனத்தில் தொழிநுட்ப அலுவலராகக் கடமையாற்றுகிறார். மகள் கேகாலை ஜோசப் கன்னியர் மடத்தில் க.பொ. த. (உ.த) கற்கிறார். அவருடைய முகவரி பீ. தேவாலேகம ஆகும்.

வெள்ளச் சமவெளி தேசிய பூங்கா

வெள்ளச் சமவெளி தேசிய பூங்கா வட மத்திய மாகாணத்தில் பொலன்னறுவை மாவட்டத்தில் அமைந்துள்ளதோடுஅது வஸ்கமுவ தேசிய பூங்காவின் வட எல்லையிலிருந்து வட திசைக்கு பரந்துள்ளது. இப்பிரதேசம் 1984 ஆகஸ்ட் மாதம் 07 ஆம் திகதி இலக்கம் 309/4 உடைய வர்த்தமானிப் பத்திரிகை மூலம் அறிவிக்கப்பட்ட 17350 ஹெக்டயார் ஆன நில அளவொன்றைக் கொண்ட தேசிய பூங்காவொன்றாகும். வெள்ளச் சமவெளி தேசிய பூங்கா மகாவலி கங்கை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பெயரிடப்பட்டுள்ள தேசிய பூங்காக்கள் நான்கில் ஒன்றாகும். யானைகளின் பயணப் பாதையொன்று, சுற்றாடல் பாதுகாப்பு பிரதேசமொன்று, சிறப்புயானைகளுக்கு விசேடமான பிரதேசமொன்று மற்றும் இயற்கை ஈரநில அமைப்பொன்றாக ஒதுக்கப் பிரதேசமொன்றில் ஒரு நிலப்பகுதிக்கும் அதிகமான கடமைப் பொறுப்பொன்றை நிறைவேற்றும் தேசிய பூங்காவொன்றாகும். இப்பூங்கா கொழும்பிலிருந்து 225 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.

                                                             வெள்ளச் சமவெளி தேசிய பூங்காவின் நீர்நிலை (வில்லுவ) வின் காட்சி

பூங்காவுக்கு அனுராதபுர இராசதானி வரை செல்லும் வரலாறொன்று உள்ளதோடு, மகாவலி கங்கை புராதன குளங்களின் வலையமைப்பொன்றுடன் தொடர்புபட்டுள்ளது. ஆற்றங் கரையின் வலது கரையில், முதுகல்ல நீர்நிலைக் (வில்லுவ) கரையில் கி. மு. 2 மற்றும் 7 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்துக்குரிய கல்வெட்டுக்களுடன் கூடிய பழமைக் குகையிலான ஆச்சிரமமொன்றின் இடிபாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.

மழையுடனான காலத்தில் காற்றின் வேகம் ஒப்பீட்டளவில் குறைவதோடு சாதாரணமாக சுமார் 1555 மில்லிமீற்றர் ஆகும். வருடாந்த வெப்பநிலை ​ 32 °C ஆகும். நதிக் கால்வாய்கள், ​நதி சார்ந்த சதுப்பு நிலம், நீர்நிலைகள், பருவ காலமாக வெள்ளத்துக்கு உள்ளாகும் புல் நிலங்கள் மற்றும் சதுப்பு வனங்களைக் கொண்ட பல்வேறு சூழல் வலயங்களின் தொகுப்பின் கூட்டொன்றாகும். ஒரு வருடத்தினுள் உச்ச கட்ட  மழைவீழ்ச்சி கிடைக்கும் இரண்டு சந்தர்ப்பங்களுள்ளன. ஒன்று ஏப்ரல் –மே மற்றும் ஏனையது நவம்வர்- டிசம்பர் ஆகும்.

​பூங்காவின் நேராக நடப்பது எப்போதும் மகாவலி ஆற்றங்கரையின் ஊடாக உள்ள அற்புதமான காட்சியைப் பார்ப்பதற்குக் கி​டைக்கும் சிறந்த வாய்ப்பொன்றாகும். வஸ்கமுவ தேசிய பூங்கா மற்றும் தெற்கில் நதியை சார்ந்த தேசிய பூங்கா மற்றும் வடக்கில் அமைந்துள்ள சோமாவதிய பூங்காவுக்கிடையில் அமைந்துள்ளதோடு இது அப்பூங்காக்கள் இரண்டிற்குமிடை​யில் யானைகளின் பயணப் பாதையொன்றாகச் செயற்படுகின்றது. பூங்காவின் இப்பகுதிக்கு நாட்டின் முக்கியமான உள்ளக ஈர நிலம் உள்ளடங்குகின்றது. இவ்ஈர நிலங்களில் பல்வேறு மீன்கள் உள்ளதோடு அது பறவைகளின் வாழ்வுக்கும் முக்கியமானது. தேசிய பூங்காவுக்குள் முக்கியமான ஈர நிலங்கள் 8 உள்ளன. மகாவலி கங்கையைச் சார்ந்துள்ள இவ்ஈர நிலம், சிறப்பு யானைகள் எனும் விசேட யானை வகைக்கு இந்நாட்டில் உள்ள ஒரே பாதுகாப்பாகும். கீழ் ஆற்றுப் படுக்கை மற்றும் கரையோரப் பாதுகாப்பு தொடர்பாக பூங்கா மிக முக்கியமான பணியொன்றை நிறைவேற்றுகின்ற இங்கு வருடத்தில் நீண்ட வரண்ட காலத்திலும் ஆழமற்ற நிலக்கீழ் நீர் உள்ளதோடு, அதனால் சிறந்த தாவர மறைப்புக்கு ஆதாரமாக இருப்பதற்கும் தாவர மற்றும் விலங்கு சமூகத்துக்காக தனித்துவமான சூழலொன்றை வழங்குவதற்கும் அனைத்து வாழிடங்களிலும் தாவர வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்கும் உதவுகின்றது. இவ்வனைத்து காரணிகளினதும் விளைவாக பூங்கா பல்வேறு வலயங்களைக் கொண்டதாகும்.

மகாவலி கங்கையின் கீழ் ஆற்றுப் படுக்கையில் இப்பூங்கா அமைந்துள்ளது. வெள்ளச் சமவெளிகளில் உள்ள பாரிய நீர்நிலைகளைப் போன்றே சதுப்பு காடுகளில் பதியப்பட்டுள்ள தாவர இனங்கள் சுமார் 231 இனங்காணப்பட்டுள்ளன. ​ வெள்ளச் சமவெளி தேசிய பூங்காவில் சிறிய ஏரிகள் உட்பட ஈர நிலங்கள், சிறு நீர் நிலைகளின் (வில்லுவ) மொத்த அளவு சுமார் 2823 ஹெக்டயார் ஆகும். பூங்காவினூடாகப் பாய்கின்ற அனைத்து நீரோடைகளும் மகாவலி கங்கையுடன் தொடர்புடைய சிற்றாறுகளாகும். மழை நீரினால் உருவாகிய நீர் மூலாதாரங்கள் பலவாகும். பிரதான வாழிட வகைகள் ஐந்து உள்ளன, திறந்த விதானமுடைய உயர் காடுகள், திறந்த விதானமுடைய தாழ்வானவை, மத்திய காடுகள், புதர் தாவரங்கள், புல்நிலங்கள் ஆகும். உயர் விதான தாவர அடுக்கில் முதன்மையான தாவர இனமாக வீரை, காட்டு நொச்சி, வெண்ணங்கு, சிறு பியாரி- கருவாலி, வெண்மருது ஆகும். கருங்காலி மற்றும் முதிரை போன்ற சில இனங்கள் உயர் விதான அடுக்கில் அரிதாகவே அவதானிக்கப்படுகின்றது. பாலை, விளா தாவரங்களும் இவற்றுள் அடங்கும்.

யானைக் கூட்டம்

பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, ஈரூடக வாழிகள் போன்ற பிரதான விலங்கு குழுக்கள் இங்கு வாழ்வதோடு செங்குரங்கு, சாம்பல் முகக் குரங்கு, ஆசிய யானை, சிறுத்தை, செந்நரி, காட்டுப்பன்றி, எருமை, புள்ளிமான், முள்ளம்பன்றி போன்றே வெள்ளச் சமவெளி இயற்கை  ஒதுக்கத்தில் யானைகளின் எண்ணிக்கை 50 க்கும் 100 க்கும் இடையிலாகும் என நம்பப்படுகின்றது. பூங்காவில் குரைக்கும் மான்களை விட புள்ளி மான்களே அதிகமாகக் காணக் கிடைக்கும் இனமொன்றாகும். மான் கூட்டம் புல் நிலப் பிரதேசத்துக்கு அடிக்கடி வருகின்றன. குரைக்கும் மானும் திறந்த பிரதேசங்களை விடவும் காட்டு வாழிடங்களுக்கு அதிகமாகக் காண முடிகின்றது.

ஆசிய யானைகள்
எருமை
செங்குரங்கு
புள்ளிமான்
செந்நரி
சாம்பல் முகக் குரங்கு
இந்திய மடல் ஓடு ஆமை
சதுப்பு முதலை

தேசிய பூங்காவினுள் விசேடமாக புலம்பெயர் பறவைகளினாலும் தாயகமபக உள்ளதோடு அதன் மூலம் அங்குள்ள விலங்கினங்களின் பல்வேறு வகைகளினால் வளப்படுத்துகின்றது. சின்ன நீர்க்காகம், சாம்பல் கூழைக்கடா, சாம்பல் நாரை, செந்நாரை, நத்தை குத்தி நாரை, வெண்​ கழுத்து நாரை, மலபார் சாம்பல் இருவாச்சி, சின்ன மரங்கொத்தி, இலங்கை சிறிய  செதில் வயிற்று பச்சை மரங்கொத்தி,  இலங்கை தகைவிலான், சின்னக்கொக்கு  அல்லது சிறு வெண் கொக்கு இங்கு வாழும் பறவைகளாகும்.

மஞ்சள் மூக்கு நாரைகள்
பனங்காடை
வெண்தொண்டைமீன்கொத்தி

இங்கு மதிப்பு மிக்க அழகுடன் கூடிய வன இல்லமாக இருந்தாலும் பொலன்னறுவை வெள்ளச் சமவெளி மனித நடவடிக்கையினால் அழிவினை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கின்றது. பூங்காவினுள் வேட்டையாடுதல், சட்ட விரோதமாக உள் நுழைதல், சட்ட விரோதமாக மரங்களை வெட்டுதல், மரம் அல்லாத தயாரிப்புக்களை சட்ட ரீதியற்ற முறையில் அகற்றுதல், மண்ணை வெட்டுதல் வன விலங்கு மற்றும் தாவர பாதுகாப்பு கட்டளைச் சட்டத்துக்கு விரோதமாக செயற்படுவதன் காரணமாக பூங்காவினுள் இடம்பெறும் இயற்கை வளங்களுக்கு சேதம் ஏற்படுத்துதல் அவை அழிந்து செல்வதற்கு காரணமாக உள்ளன.

பொலன்னறுவை மாவட்டத்தில் அமைந்துள்ள தேசிய பூங்கா சுற்றுலாப் பயணிகளுக்கு மனம்பிட்டிய- யக்குரே சந்தியினூடாக உள்நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.​

வெள்ளச் சமவெளி தேசிய பூங்காதொடர்பான விளக்கத்தில் காணப்படும் விலங்குகளின் பெயர்ப் பட்டியல்

Sinhala Name

Tamil Name

English Name

Scientific Name

දිවියා

சிறுத்தை

Leopard

Panthera pardus kotiya

රිලවා

செங்குரங்கு

Sinica

Toque monkey

ආසියානු අලියා

ஆசிய யானை

Asian elephant

​Elephas maximus

කුළු මී හරකා

காட்டெருமை

Wild buffalo

Bubalus bubalis

අළු වදුරා

சாம்பல் முகக் குரங்கு

Gray langur

Semnopithecus entellus

හිවලා

செந்நரி

Golden jackal

Canis aureus

වැලිමුවා

குரைக்கும்மான்

Barking deer

Muntiacus muntijak

තිත් මුවා

புள்ளி மான்

Spotted deer 

Axis axis ceylonensis

මී හරකා

எருமை

Domestic Water buffalo

Bubalus bubalis

වල් ඌරා

காட்டுப் பன்றி

Wild boar 

Sus scrofa

ඉත්තෑවා

முள்ளம்பன்றி

Porcupine

Hystrix indica

දියකාවා

நீர்க்காகம்

Cormorant

Phalacrocorax fuscicollis

අළු පැස්තුඩුවා

சாம்பல் கூழைக்கடா

Spot-billed pelican

Pelecanus philippensis

අළු කොකා

சாம்பல் நாரை

Grey heron

Ardea cinerea

කරවැල් කොකා

செந்நாரை

Purple heron

Ardea purpurea

ආසියානු විවරතුඩුවා

நத்தை குத்தி நாரை

Asian openbill

Anastomus oscitans

පාදිලි මානාවා

வெண்​ கழுத்து நாரை

Woolly-necked stork

Ciconia episcopus

පොරෝ කෑදැත්තා

மலபார் சாம்பல் இருவாச்சி

Malabar pied hornbill

Anthracoceros coronatus

කෑරලා

சின்ன மரங்கொத்தி

Brown wood pecker

Dendrocopos nanus

ශ්‍රී ලංකා මහරත් කෑරළා

இலங்கை சிறிய  செதில் வயிற்று பச்சை மரங்கொத்தி

Crimson-backed woodpecker

Chrysocolaptes lucidus

ශ්‍රී ලංකා වැහිලිහිණියා

இலங்கை தகைவிலான்

Sri Lanka Swallow

Hirundo hyperthra

ඇලි කොකා

சின்னக்கொக்குஅல்லதுசிறுவெண்கொக்கு

Little egret

Egretta Garzetta

ලතු වැකියා

மஞ்சள் மூக்கு நாரை

Painted stork 

Mycteria leucocephala

දුම්බොන්නා

பனங்காடை

Indian roller

Coracias benghalensis

පිළිහුඩුවා

வெண்தொண்டை​மீன்கொத்தி

White throated kingfisher

Halcyon myrnensis

කිරිඉබ්බා

இந்திய மடல் ஓடு ஆமை

Indian flapshell turtle

Lissemys ceylonensis

හැල කිඹුලා

சதுப்பு முதலை

Mugger crocodile

Crocodylus palustris

வெள்ளச் சமவெளி தேசிய பூங்காதொடர்பான விளக்கத்தில் காணப்படும் மரங்களின் பெயர்ப் பட்டியல்

Sinhala Name

Tamil Name

English Name

Scientific Name

වීර

வீரை

Hedge Box wood

Drypetes sepiaria

පලු

பாலை

Palu

Manilkara hexandra

මිල්ල

சாவண்டலை மரம்

Halmilla

Berraya cordifolia

වේලන්

வெண்ணங்கு

Welang

Pterospermum canescens

පනක්කා

சிறு பியாரி- கருவாலி

Panakka

Pleurostylia opposita

කුඹුක්

வெண்மருது

kumbuk

Terminalia arjuna

බුරුත

முதிரை

Satinwood 

Chloroxylon swietenia

කළුවරகருங்காலி

Ebony

Diospyros altissima

දිවුල්

விளா

Divul

Limonia acidissima

குப்பாளர்  – தம்மிகா மல்சிங்ஹ, மேலதிக செயலாளர், வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சு

பூங்கா பற்றிய தகவல்களத் தொகுத்தவர்ஹஸினி சரத்சந்திர, பிரதம உத்தியோகத்தர், வன பாதுகாப்புத் திணைக்களம் மஹேக்ஷா சதுராணி பெரேரா,அபிவிருத்தி  உத்தியோகத்தர்,வனஜீவராசிகள்  பாதுகாப்புத் திணைக்களம்

தமிழ் மொழிபெயர்ப்புஏ.ஆர்.எப். றிப்னா, அபிவிருத்தி  உத்தியோகத்தர், (வனஜீ.வன. வள. பா. அ)

ஆங்கில மொழிபெயர்ப்புஅசோக பலிஹவடன, மொழிபெயர்ப்பாளர், (வனஜீ.வன. வள. பா. அ)

இணய வடிவமப்புஎன்.ஐ கயத்ரி, அபிவிருத்தி  உத்தியோகத்தர், (வனஜீ.வன. வள. பா. அ), சீ. ஏ. டீ. டீ. ஏ.கொல்லுரே, முகாமைத்துவ சேவை​உத்தியோகத்தர், (வனஜீ.வன. வள. பா. அ)

படங்கள் இணையம் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்டன.