简体中文 ZH-CN English EN Français FR Deutsch DE Italiano IT Português PT සිංහල SI தமிழ் TA
Ministry of Wildlife and Forest Resources Conservation

அத்தியாயம் 23 – புறாத் தீவு தேசிய பூங்கா

Content Image

புறாத் தீவு தற்போது இன்னும் அழகு

2019 பெப்ரவரி 1 ஆம் திகதி நான் புறாத் தீவு தேசிய பூங்காவில் பூங்கா பொறுப்பாளராக வந்தேன். 1963 இல் சரணாலயமொன்றாக இருந்த புறாத் தீவில் அதனைச் சுற்றியிருந்த பவளப் பாறைகளும் மீனினங்களும் உட்பட பல்லுயிர்களின் முக்கியத்துவம் பற்றி 2003 இல் தேசிய பூங்காவொன்றாக உருவாக்கப்பட்டது. இரண்டு தீவுகள் உள்ள புறாத் தீவு தேசிய பூங்காவுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது படகுகளின் மூலம் திருகோணமலை, எலஸ்வத்த, நிலாவேலி, கோபாலபுரம் போன்ற பிரதேசங்களில் இப்படகுகளின் உரிமையாளர்கள் உள்ளனர். அதற்கு மேலதிகமாக கடற் படையினரின் மூலம் செயற்படுத்தப்படுகின்ற படகுச்  சேவையும் உள்ளது. நான் புறாத் தீவு தேசிய பூங்கா நுழைவுச்சீட்டுகருமபீடங்கள் இரண்டும் உலாப் படகுகள் இரண்டினையும் கொண்டது.

2019 காலத்தில் பவளப் பாறைகளுக்கு மேலால் படகுகள் பயணம் செய்தன. பெப்ரவரி, மார்ச்சில் இருந்து செப்டம்பர், ஒக்டோபர் வரை சுற்றுலாப் பயணிகள் அதிகம். ஒரு நாளைக்கு படகுப் பயணங்கள்  சுமார்  300  400 பவளப் பாறைகளுக்கு மேலால் பயணிக்கின்றன. இதனால் பவளப் பாறைகள், மீன்களுடன் அழகான சூழல் தொகுதியொன்று அழிகின்றது. பவளப் பாறைகளைப் பாதுகாப்பதில்லை என ஆய்வாளர்களும், உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், சூழல் பாதுகாப்பாளர்களும் திணைக்களத்துக்கு குற்றம் சாட்டினர்.

பவளப் பாறைகளைப் பாதுகாப்பதற்காக 2018 இலிருந்து நிதி ஏற்பாடுகள்   ஒதுக்கப்பட்டிருந்தாலும் அது போதுமானதாக இல்லை என பாதுகாப்பு நடவடிக்கைகள்முடங்கிக் கிடந்தன.

நான் பூங்காப் பொறுப்பாளராக புறாத் தீவு தேசிய பூங்காவுக்கு வந்ததன் பின்னர் பவளப் பாறைகளின் பாதுகாப்புக்கு முதலிடம் வழங்கினேன். தற்போதுள்ள பவளப்பாறைகளைப் பாதுகாத்து அபிவிருத்தி செய்வதற்கு போயா கோடொன்றை (buoyancy line– மிதக்கும் குறிகள்)     இடுவதற்கு எமக்குத் தேவையாக இருந்தது.அதனால் நாம் அமைப்பொன்றை உருவாக்கிக் கொண்டோம். ஊர் மக்கள், சூழல் அமைப்புக்கள், படகு உரிமையாளர்கள், சுழியோடிகள், ஹோட்டல் உரிமையாளர்கள், சுய விருப்பத்துடன் வேலை செய்வோர் என்போரை இவ்வமைப்புக்கு இணைத்துக் கொண்டோம். நாம் திணைக்களத்தின் பக்கத்தலிருந்து தொழிநுட்பத்தையும் உழைப்பையும் தருவோம் நீங்கள்ஏற்பாடுகளையும் ஏனைய தேவைகளையும் தாருங்கள் என்றார். அமைப்பு இணக்கம் தெரிவித்தது. பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியாரச்சி அதனை அனுமதித்தது போன்றேபணிப்பாளர் மஞ்சுல அமரரத்ன ஆலோசனை வழங்கினார். இந்நேரத்தில் சமுத்திர பிரிவின் தலைவர் சன்ன சுரவீர. திருகோணமலை வலயப் பொறுப்பு உதவிப் பணிப்பாளர் லலித் குமார.

‘போயா’  இடுவது நீண்ட கால பாதுகாப்புக்காகவேயாகும். மிதக்கும் பிளாஸ்டிக் பந்துகள் இடப்படுகின்றன. அதற்குக் கீழால் கொங்கிரீட் துண்டுகள் போட வேண்டும். கொங்கிரீட் துண்டொன்று 1 ½ * 1 ½* 1 ½ அடி அளவிலும் சுமார் 250 Kg பாரத்தையும் கொண்டது.  மேலே கைப்பிடி ஒன்றுமுள்ளது. கைப்பிடிக்கு கயிறொன்றை இட்டு துண்டை கடலுக்கு இறக்குவர். ஜீ. பீ. எஸ். தொழிநுட்பத்தின் உதவியுடன் சுழியோடிகள் இதனைச் செய்கின்றனர். பொதுவாக சுமார் 20 மீற்றர் தூரத்தில்  கொங்கிரீட் துண்டினை இறக்குகின்றனர். இறுதியில் ஒவ்வொரு கொங்கிரீட் துண்டிலுமுள்ள கயிற்றை நேரான கயிறொன்றில் கட்டுவர். கயிற்றின் மூலைகள் இரு புறங்களிலும் பொருத்துவர். இதற்கு மேலே 2 மீற்றருக்கு மீற்றராக பிளாஸ்டிக் பந்துகள் பொருத்தப்படுகின்றன. அப்போது அது போயா கோடு. போயா கோடு இட்டால் அது எல்லையொன்றாக ஆகின்றது.

எனது கண்காணிப்பின் கீழ்  அமைப்பினால் கொங்கிரீட் துண்டுகள் 50 தயாரிக்கப்பட்டன. கொங்கிரீட் துண்டுகளை உறுதிப்படுத்துவதற்கு 10 மில்லிமீற்றர் அடர்த்தியான அளவில் கம்பி இட்டோம். கைப்பிடிக்கு 16 மில்லிமீற்றர் அடர்த்தியான கம்பியிலான கைப்பிடி கடல் நீரினால் அரிக்கப்படுவதறகு பீ. வீ. சீ. இனால் மூடப்பட்டது.

கொங்கிரீட் துண்டுகளை கடற்கரைக்கும் அங்கிருந்து உரிய இடத்திற்கும் கொண்டு செல்வதே அடுத்த பணியாக அமைந்தது. எமக்கு இயந்திரங்கள் இல்லாமையினால் டிராக்டரில் ஏற்றி அங்கிருந்து கடற்கரைக்கு எடுத்துச் சென்று படகொன்றில் ஏற்றினர். எல்லாம் மனித உழைப்​பினால் இடம்பெற்றது.  மக்கள் இரும்பு குழாய் ஒன்றின் உதவியினால் மூவரும் இரு பக்கத்திலும் இருந்து இவற்றை டிராக்டருக்கும் படகுக்கும் ஏற்றினர்.

படகொன்றில் கொங்கிரீட் துண்டுகள் ஒன்று அல்லது இரண்டை மாத்தரமே கொண்டு செல்ல முடியும். சிரமத்துடன் துண்டினை படகுக்கு ஏற்றிக் கொண்டதன் பின்னர் 3 கிலோமீற்றர் தூரத்துக்கு நாம் அதைக் கொண்டு சென்றோம். 10-15 அடி ஆழமற்ற நீருக்கே கொங்கிரீட் துண்டுகளை இட்டோம். வெற்றுப் பீப்பாவை நீரில் இட்டு அதில் கொங்கிரீட் துண்டுகளை தூக்கி உரிய இடத்தில் சேர்த்தோம். இவ்வேலை எமது சுழியோடிகளைப் போன்றே சுயவிருப்பத்துடன் இணைந்த சுழியோடிகளும் உதவி செய்தனர். கைப்பிடியில் பொருத்தப்பட்டது 12 மில்லிமீற்றர் நைலோன்  கயிறாகும்.

 நாம் போயா கோட்டினை சுமார் ஒரு கிலோமீற்றர்  தூரத்துக்கு தயாரித்தோம். புறா மலையின் இரு பக்கத்திலும் கோடு இட்டோம். மத்தியில் ‘ஸ்நோக்கலின்’ செய்வதற்கு பாதையொன்று இருந்தது. இப்பணிக்காக நாம் மிகவும்  சிரமப்பட்டோம். படகின் ‘என்கர்’ செய்வதற்கு  வேறாக கொங்கிரீட் துண்டுகள் 2 இனை இட்டோம். அதற்கு மேலதிகமாக மிதக்கும்  இறங்குதளம் ஒன்றைத் தயாரிப்பதற்கு முன்மொழியப்பட்டாலும் அதை இன்னும் செய்து கொள்ள முடியவில்லை.

எனினும் இறுதியில் படகுகள் தமது எல்லையில் சென்றன. பவளப் பாறைகளும் பாதுகாக்கப்பட்டன. பேணப்பட்டன. புறாத் தீவினைச் சுற்றிலும் பார்க்க அழகாக இருந்தது. சுற்றுலாப் பயணிகள் அதிகரித்தனர். ஒரு நாளைக்கு 30-40 இலட்சம் வருமானம் கிடைத்தது.

என்னுடன் பணியாற்றிய திணைக்கள பணிக்குழுவினரையும் நினைவுகூற விரும்புகிறேன். வட்டார உதவியாளர் ஜனக சதுரங்க,  வனவிலங்கு பொறுப்பாளர் சிந்தன தஸநாயக்க, சிரேஷ்ட உதவியாளர் கே. நாகலவன், கள உதவியாளர்களான சதுரங்க பெரேரா, ஜயசேகர, அஜித் அமரசிங்ஹ, அஸங்க கருணாரத்ன, தர்மதுங்க, சிசிர குமார போன்றே அலுவலக நடவடிக்கைகளுக்கு உதவி வழங்கிய அபிவிருத்தி உத்தியோகத்தர் வசந்த தர்மசேனவையும் நினைவு கூற வேண்டும்.

இப்பணி 24.10.2019 இல் முடிவடைந்தது. வெற்றிகரமான  பணியொன்றின் பின்னர் எனக்குக் கிடைத்த மன நிறைவு அவ்வளவாகும்.  அம்மன நிறைவு எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவொன்றாகியது.

திரு உபாலி குமாரதுங்க அவர்கள்

உயர் தரத்தில் உயிரியல் விஞ்ஞான பாடத்தில் சித்தியடைந்து வனஜீவராசிகள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட 3 ஆவது தரத்தின் வட்டார பாதுகாப்பு பொறுப்பாளர்களை இணைத்துக் கொள்ளும் பரீட்சைக்கு முகம்கொடுத்து உபாலி குமாரதுங்க அவர்கள் அதில் சித்தியடைந்து தமது தொழிலிலுக்கு 2012 வருடம் ஜூன் மாதம் 07 ஆம் திகதி முதல் நியமனம் பெற்றார்.

உபாலி குமாரதுங்க அவர்கள் பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைப் பட்டத்தையும் சிறீ ஜயவர்தன பல்கலைக்கழகத்தில் வன விஞ்ஞானம் மற்றும் சூழல் முகாமைத்துவம் பற்றிய கருத்திட்ட பட்டத்தையும் பெற்றுள்ளார். பின்னர் அவர் வனஜீவராசிகள் திணைக்களத்தின் மூலம் வழங்கப்படுகின்ற கொழும்பு பல்கலைக்கழகத்தின் வனவிலங்கு முகாமைத்துவம் பற்றிய விசேட டிப்ளோமா பாடநெறியில் விசேட சித்தியொன்றையும் 3 ஆம் இடத்திற்குரிய வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டார்.

‘வனஜீவராசிகள் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற சுற்றிவளைப்பு மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளில் அதிகாரிகளினால் ஏற்படுகின்ற தவறுகள்’ பற்றி மின்னேரிய தேசிய பூங்கா மற்றும் பொலன்னறுவை வட்டார வனத்தில் முடிவடைந்த வழக்கு கோவை 50 சார்பாகவும் 2017, 2018 வருடத்தில்  ஆய்வொன்றை மேற்கொண்ட  உபாலி குமாரதுங்க அவர்கள் அது தொடர்பாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் மூலம் நடாத்தப்படுகின்ற ‘Wildlife Symposium ’ இல் நிர்மாணமொன்றை மேற்கொண்டு சிறப்பான நிர்மாணத்துக்குரிய சான்றிதழையும் பெற்றுக் கொண்டார்.

அவ்வாறே திருகோணமலை களப்பு சார்ந்த நிலங்களை நிரப்புதல் மற்றும் உயிர்ப் பல்வகைத்தன்மைக்கான சேதங்கள் பற்றிய பிரச்சினைகளுக்குத் தீர்வொன்றாக அப்பிரதேச ஒதுக்கமொன்றாக வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கு பாரிய விடயப்பொறுப்பினை மேற்கொண்ட குமாரதுங்க அவர்கள் அது பற்றிய அறிக்கை‘Wildlanka’ சஞ்சிகையில் 2022 ஆம் ஆண்டு பிரசுரிக்கப்பட்டது.

கவுடுள்ள, மின்னேரிய பயணப்பாதை நிலத்தில் சட்ட ரீதியற்ற ஹோட்டல் ஒன்றை நிர்மாணித்தல், சட்டத்துக்கு முன் சென்று நிறுத்துவதற்கு முடிதல் தமது வாழ்வில் பெற்ற வெற்றியொன்றாகும் என அவர் கருதுகின்றார்.

உபாலி குமாரதுங்க அவர்களின் மனைவி தொழிலிலிருந்து நீங்கி தமது குடும்பத்துக்காக பாலத்தை செலவிடுகின்றார். இரண்டு மகள்களில் முதலாவது மகள் கணிதப் பிரிவில் உயர்தரத்தை நிறைவு செய்து  பல்கலைக்கழக நுழைவுக்குத் தயாராக உள்ளதோடு இரண்டாவது மகள் குருனாகல் மலியதேவ பெண்கள் வித்தியாலயத்தில் சாதாரண தரம் கற்றுக் கொண்டிருக்கின்றார்.

அவருடைய முகவரி- இலக்கம் 185/ஏ,  மரலுவெவ, குருனாகல் ஆவதோடு

மின்னஞ்சல் முகவரி- kumarathungaupali1972@gmail.comஆகு

புறாத் தீவு தேசிய பூங்கா

இலங்கையில் 17 ஆவது தேசிய பூங்காவாக இனங்காணப்பட்ட  புறாத் தீவு தேசிய பூங்கா தமிழ்  மொழியில் புறாமலை ஆக அறிமுகப்படுத்தப்படுவதோடு தீவு புறாக்களின் எண்ணிக்கையினால் அதிகரிக்கப்பட்டதனால் புறாத் தீவு எனப்பெயரிடப்பட்டது. பண்டைய அரச காலத்தில் புறாக்களின் மூலம் செய்திகளை அனுப்புவதற்காக பயன்படுத்தப்பட்ட இடமொன்றாக கருதப்படுகின்ற இங்கு இன்றும் ஆயிரக்கணக்கான புறாக்களைக் கண்டு கொள்ள முடியும். புறாத் தீவு தேசிய பூங்காதிருகோணமலை மாவட்டத்தில் குச்சவேலி பிரதேச செயலாளர் பிரிவுக்குரிய வாலை உக்கு கிராமசேவகர் பிரிவினுள் அமைந்துள்ள அழகான காட்சியுள்ள தீவுப் பூங்காவாகும். 04.06.2003 ஆம் திகதி 1291/16 உடைய வர்த்தமானிப் பத்திரிகையின் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டதோடு இது உத்தியோகபூர்வமாக சுற்றுலாப் பயணிகளுக்காக 2011 மே 28 ஆம் திகதி திறக்கப்பட்டது.

இப்பூங்கா 02தீவுகளினைக் கொண்டுள்ளதோடு இதில் பெரிய தீவு புறாத் தீவு என்பதோடு, சிறிய தீவு காக்க தீவு எனவும் அழைக்கப்படுகின்றது. இவ்விரண்டு தீவுகளும் உட்பட ஆழமற்ற பவளப் பாறைகள் கொண்ட பிரதேசத்துடன் 471.4 ஹெக்டயாரான பகுதியொன்று புறாத் தீவு தேசிய பூங்காவுக்கு உரியதாகும். எஞ்சியவை கடல் நீராகும். பெரிய புறாத் தீவுக்கு நாட்டின் தென்மேற்கு மற்றும் வட திசைக்கு ஆகுமாறு சிறிய கடற்கரை இரண்டும் உள்ளன. புறாத் தீவு பவளப் பாறையினால் சுற்றியுள்ளதோடு அது 200 மீற்றர் நீளத்தினையும் 100 மீற்றர் அகலத்தையும் கொண்டதாகும்.  அதன் உயர்ந்த இடத்தின் நடு கடல் மட்டத்தை விட 44.8 மீற்றர் ஆகும். சிறிய தீவு கற்தீவுகளினால் சுற்றி அமைந்துள்ளது.  பூங்கா உலர் கலந்த காடுகளின் தன்மையைக் கொண்டுள்ளது. மத்திய வருடாந்த வெப்பநிலை சுமார் 27 பாகை  செல்ஸியஸ் ஆகும்.  வருடாந்த  மழைவீழ்ச்சி 1000-1700 மில்லிமீற்றர் ஆவதோடு பெரும்பாலும் மழைவீழ்ச்சி கிடைப்பது ஒக்டோபர் முதல் மார்ச்​​  வரை வடகிழக்கு பருவ மழையின் போதாகும்.

இது உயர்ந்த எண்ணிக்கையுடன் மிக உயர்ந்த உயிர்ப் பல்வகைத்தன்மையைக் கொண்ட தீவொன்றாகும். தீவினைச் சுற்றி ஈரநில தாவர சமூகமும் நிலப்பரப்பில் முட் பற்றைகள், புளி, ஆலமரம் போன்ற தாவரங்களும், அரிதான நீர் தாவர இனங்களும் இங்கு கிடைக்கின்றன. தாவர பல்வகைமையை சிறிது குறைந்த அளவில் காட்டுகின்ற இத்தீவினைச் சுற்றி ஈரநில தாவர சமூகத்தையும் கண்டு கொள்ள முடியும். தீப்பரத்தை, தாழை, கந்தல், காட்டரலி, தில்லை போன்ற ஈரநில இனங்களும் கிடைக்கின்றன. நிலப் பகுதியில் உயர்ந்த  தாவர இனங்களாக வேம்பு, புளியமரம், ஆலமரம் என்பவற்றையும் காண முடியும். முட்புதர்களுடன் கூடிய வரண்ட வலய தாவர பல்வகைத்தன்மையைக் காட்டுகின்ற இங்கு அரிதான அளவில் நீர்த் தாவர இனங்களும் கிடைக்கின்றன.

இத்தீவில் நீரின் மேற்பரப்பிலிருந்து வெற்றுக் கண்களால் பல்வேறு வர்ணங்களைக் கொண்ட பவளப் பாறைகளைக் கண்டுகொள்ள முடியுமான இடமொன்றாகும். கடல் உயிர்ப் பல்கைத்தன்மையில் உயர்வான இத்தீவினைச் சுற்றி நீரின் கீழ் உள்ள எல்லையில் பாரிய வலயமொன்று முழுவதும் விலைமதிப்பற்ற பவள தட்டொன்றைக் கொண்டுள்ளதோடு இங்கு பவளப் பாறைகள் சுமார் 100 ஆகும். இப்பவளப் பாறைகளைச் சார்ந்த வாழ்கின்ற மீனினங்கள் சுமார் 300 இனைக் கண்டு கொள்ள முடிவதோடு அதன் காரணமாக பவளச் சூழல் அமைப்பு சுற்றுலாப் பயணிகளுக்கு மனமகிழ்வான காட்சியை வழங்குகின்றது.

Cabbage corals
Staghorn corals

புறாத் தீவு தேசிய பூங்காவில் நீர்நிலைக்கு பல​  கடலாமைகள் வருவதோடு பல்வேறு சுறா இனமொன்றான கட்ட சுறாவை அதிகமாகக் கண்டு கொள்ள முடியும்.  அழுங்காமை, தோணியாமை​, ஒலிவ நிறச் சிற்றாமை எனும் இனங்களையும் இங்கு கண்டு கொள்ள முடியும்.

பவளப் பாறைகளுக்கிடையே உள்ள வண்ணத்துப்பூச்சி மீனினங்கள்

பூங்காவுக்கே உரித்தான  மாடப்புறாவினால் புறா மலை எனும் பெயர் அதற்குக் கிடைத்துள்ளது. வீட்டுப் புறாக்களுடன் கலக்காது மாடப்புறாக்கள் கிடைக்கின்ற நம்பிக்கையான இடம் புறா மலையாகும். தீவில் வசிக்கும் பறவைகள் ஏப்ரல் மாதத்தில் முட்டை இடுகின்றன. இத்தீவு பறவைகளின் இனப்பெருக்கத்துக்கு பொருத்தமான வாழிடமொன்றென்பதனால் பல வருடங்கள் முழுவதும் பறவைகள் இங்கு வாழிடங்களாக அமைத்துக் கொண்டுள்ளன என வனவிலங்கு விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். பூங்கா பல்வேறு காலப் பகுதிகளில் புலம்பெயர் பறவைகளினதும் ஒரு தங்குமிடமாக உள்ளது.

தீவைச் சுற்றியுள்ள ஆழமற்ற தெளிவான நீரைக் கொண்ட நீரின் மேல் வெற்றுக் கண்களால் பல்வேறு நிறங்களினைக் கொண்ட பவளப் பாறை இனங்களைக் கண்டு கொள்ள முடியும். அதற்கி​டையில் ​Acropora,Montipora,Milleporaபேரினங்களுக்குரிய பவளப்பாறைகளும் Brain coral (Faviidae), Stony coral (Mussidae), Lobe and  finger coral (Poritidae)இனத்தைச்  சேர்ந்த பவளப் பாறைகளும் பெருமளவில் கிடைக்கின்றன.  அவ்வாறே Sinularia,Lobophyton, sarcophytonபோன்ற பேரினங்களுக்குரிய மென்மையான பவளப் பாறைகள் உள்ள பகுதிகளையும் அவதானிக்க முடிகின்றது. பவளப் பாறைகள் பெருமளவு முதுகெலும்புள்ள மற்றும் முதுகெலும்பற்ற உயிர்களின் வாழிடத்தைப் போன்றே சிறந்த இனப்பெருக்க நிலையமொன்றாகவும் செயற்படுகின்றது. அவ்வாறே இக்கரை வலயம் கடல்வாழ் உயிரினங்களும் பவளப்பாறை பற்றி  ஆய்வாளர்களுக்கும் சுழியோடிகளுக்கும் போன்றேScuba, Surfing மற்றும் Snorkeling போன்ற செயற்பாடுகளை மேற்கொள்வதற்காகஆர்வம் உள்ளவர்களுக்கான பொருத்தமான சிறந்த  இடமொன்றாகும்.

Scuba diving
Snorkeling

தேசிய பூங்காவினுள் வருகை தருகின்ற சுற்றுலாப் பயணிகளுக்காக இயற்கை வழிகள் 05 உம்  அமைக்கப்பட்டுள்ளன. புறாத் தீவு தேசிய பூங்காவுக்கு கொழும்பிலிருந்து வருபவர் நிட்டம்புவ- குருனாகல்- தம்புள்ளை – சீகிரிய- ஹபரணை – அக்போபுர- கந்தளை ஊடாக 265 கிலோமீற்றர் பயணம் செய்து திருகோணமலை நகரத்துக்கு நுழைய முடியும். அங்கிருந்து 15 கிலோமீற்றர் தூரத்தில் நிலாவெளி கடற்கரைக்கு வர முடியும் என்பதோடு கடற்கரையிலிருந்து படகின் துணையுடன் 2 கிலோமீற்றரான பயணத்தின் பின்னர் புறாத் தீவு தேசிய பூங்காவை நெருங்க முடியும்.

பூங்காவைப் பார்வையிடுவதற்கு உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு நிலாவெளி கடற்கரையில்  அமைந்துள்ள நுழைவுச்சீட்டு கவுன்டரில்  நுழைவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ள முடியும். திரிகோணமலையில் நிலாவெளி கடற்கரையில்  இருந்து சுமார் 2 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள பூங்காவை அடைவதற்கு கடற்கரையிலிருந்து தனியார் படகு சேவையொன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப் பகுதியினுள் செயற்படுகின்றது. மே முதல் செப்டெம்பர் வரை கடல் கொந்தளிப்பு குறைவு என்பதனால் அக்காலத்தினுள் பயணம் செய்வது மிகவும் பொருத்தமாகும்.

தற்காலத்தில் இவ்வழகான தீவுக்கு பவளப் பாறைகளைச் சார்ந்து  மீனவர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற சட்ட ரீதியற்ற டைனமையிட் இடுதல் பலவந்தமான அச்சுறுத்தலாக உள்ளது.

புறாத் தீவுதொடர்பான விளக்கத்தில் காணப்படும் விலங்குகளின் பெயர்ப் பட்டியல்

 Sinhala Names

Tamil Names

English Names

Scientific Name

ගල් පරෙවියා

மாடப்புறா

Blue Rock Pigeon

Columba livia

පොතුකැස්බෑවා

அழுங்காமை

Hawksbill Sea turtle

Eretmochelys imbricata

ගල්කැස්බෑවා

தோணியாமை

Green turtle

Chelonia mydas

බටුකැස්බෑවා

ஒலிவ நிறச் சிற்றாமை

Olive ridley turtle

Lepidochelys olivacea

ගල්පරමෝරා

கட்ட சுறா

Black tip reef shark

Carcharhinus melanopterus

මොන්ටිපෝරා

மொன்டிபோரா

Montipora

A Genus of Scleratinian coral. May exhibit many different growth morphologies with 85 known speices.

මිලිපෝරා

மிலிபோரா

Millepora

Fire coral are a genus of marine organisms that exhibit physical characteristcs similar to that of Coral. Not true corals.

ඇක්රෝපෝරා

எக்ரொபோரா

Acropora

A Genus of small polyp stony coral. Some of its species are known as table coral. Elkhorn coral & Staghorn Coral.

புறாத் தீவுதொடர்பான விளக்கத்தில் காணப்படும் மரங்களின் பெயர்ப் பட்டியல்

Sinhala NameTamil NameEnglish NameScientific Name
සියඹලාபுளிTamarind

Tamarindus indica

නුගஆலமரம்Banyan

Ficus benghalensis

බේරියාதீப்பரத்தைBeriya

Lumnitzera racemosa

වැටකෙයියාதாழை

Screwpine seashoe pandan

Pandanus tectorius

මහ කඩොල්கந்தல்Mahakadol

Rhizophora mucronata

කදුරුகாட்டரலிKaduru

Cerbera manghas

තෙලதில்லைThela

Excoecaria agallocha

කොහොඹவேம்புKohomba 

Azadirachta indica

குப்பாளர் – தம்மிகாமல்சிங்ஹ, மேலதிக செயலாளர், வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சு பகுதி, விவசாய மற்றும் வனஜீவராசிகள் மற்றும் வன  வளங்கள் பாதுகாப்பு அமைச்சு

பூங்கா பற்றிய தகவல்களத் தொகுத்தவர்ஹஸினி சரத்சந்திர, பிரதம உத்தியோகத்தர், வன பாதுகாப்புத் திணைக்களம் மஹேக்ஷா சதுராணி பெரேரா,அபிவிருத்தி  உத்தியோகத்தர்,வனஜீவராசிகள்  பாதுகாப்புத் திணைக்களம்

தமிழ் மொழிபெயர்ப்புஏ.ஆர்.எப். றிப்னா, அபிவிருத்தி  உத்தியோகத்தர், (விவ. வனஜீ.வன. வள. பா. அ)

ஆங்கில மொழிபெயர்ப்புஅசோக பலிஹவடன, மொழிபெயர்ப்பாளர், (விவ. வனஜீ.வன. வள. பா. அ)

இணய வடிவமப்புஎன்.ஐ கயத்ரி, அபிவிருத்தி  உத்தியோகத்தர், (விவ. வனஜீ.வன. வள. பா. அ) சீ. ஏ. டீ. டீ. ஏ.கொல்லுரே, முகாமைத்துவ சேவை​உத்தியோகத்தர், (விவ. வனஜீ.வன. வள. பா. அ)

படங்கள் இணையம் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்டன.