简体中文 ZH-CN English EN Français FR Deutsch DE Italiano IT Português PT සිංහල SI தமிழ் TA
Ministry of Wildlife and Forest Resources Conservation

அத்தியாயம் 24 – அம்பாறை மாவட்டத்தில் உள்ள சரணாலயங்கள்

Content Image

பரீட்சையினால் பெரிய ஆபத்தொன்று தடுக்கப்பட்டது

நான் 2022 ஜனவரி 4 ஆம் திகதி அம்பாறை கிழக்கு பொறுப்பு உதவிப் பணிப்பாளராக அம்பாறை பிரதேசத்துக்கு வந்தேன். அப்போது எனது சேவைக் காலம் 23 வருடங்களாகும். அம்பாறை கிழக்கு பிரதேசத்தில் கவனிக்கப்பட வேண்டிய பாரிய காடுகள் உள்ளன. தேசிய பூங்காக்கள் மூன்றாகும். பிரதான சரணாலயங்கள் 4 ஆகும்.

மாதுறு ஓயா, குமண மற்றும் லாகுகல- கித்துலான என்பன தேசிய பூங்காக்கள் மூன்றுமாகும். குடும்பிகல, சாகம, புத்தங்கல மற்றும் அம்பாறை என்பன பிரதான சரணாலயங்கள் நான்குமாகும்.  குடும்பிகல சரணாலயம் அமைந்திருப்பது குமண தேசிய பூங்காவிற்கு அருகிலாகும். சாகம சரணாலயம் அமைந்திருப்பது லாகுகல பூங்காவிற்கு அருகிலாகும். புத்தங்கல சரணாலயம் அமைந்திருப்பது அம்பாறை சரணாலயத்துக்கு அண்மையிலாகும். புத்தங்கல ஆரண்ய அமைந்திருப்பதுபுத்தங்கல சரணாலயத்துக்கு உள்ளேயாகும். அம்பாறை சரணாலயம் இருப்பது கல்ஓயா வடகிழக்கு சரணாலயத்துக்கெயாகும். அம்பாறை மாவட்டத்தில் பல பிரதேசங்கள் இதற்கு உரித்தாகின்றன. புத்தங்கல பக்கத்திற்கும் மட்டக்களப்பு வெல்லாவேலி பக்கத்திற்கும் யானைகள் பயணம் செய்வது அம்பாறை சரணாலயத்தினூடாகவேயாகும்.

இச்சரணாலயம் ஆரம்பிப்பது கல்ஓயா பூங்காவில் வடகிழக்கு மூலையிலிருந்தாகும். அங்கு மின்வேலியொன்று இடப்பட்டுள்ளது. யானைகள் ஊருக்குள் வருவதைத் தடுப்பதற்காகவேயாகும். எனினும் யானைகள் தந்திரமாக நாமல் ஓயா பக்கத்தினூடாக வந்து கிழக்கு மாகாணத்தின் மின்வேலிகளினூடாக நுழைகின்றன. அம்பாறை பிரதான பாதை அரங்தலாவ ஊடாக விழுகின்றது.

பிள்ளைகளின் பரீட்சை நடக்கும் காலத்தில் காட்டிலிருந்து வெளியெ வரும் யானைக் கூட்டங்கள் பற்றி நாம் கவனமாக இருப்போம். இம்முறை உயர் தரப் பரீட்சை 2023 ஜனவரி மாதத்தில் இடம்பெற்றது. யானைகளைப் பற்றி கவனமாக இருக்குமாறு பணிப்பாளர் நாயகமும் எமக்குக் கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.

எவ்வாறாயினும் பிள்ளைகள் உயர்தரப் பரீட்சைக்குச் செல்லும் போது காலையிலே செல்வர். அன்று ஜனவரி 23 ஆம் திகதி. எமது சஞ்சரிப்புக் குழுக்கள் பல இடத்துக்கிடம் நிலைமையைப் பரீட்சிப்பதற்கு செயற்பட்டனர். நானும் அதிகாலை சுமார் 4 க்கு எமது நபர்களுடன் கெப் வண்டியொன்றில் புறப்பட்டேன். என்னுடன் வனவிலங்கு காவலர் விஷ்மித, கள உதவியாளர் அசான் மற்றும் சாரதி உபுல் சாந்த என்போர் இருந்தனர்.

இந்நாட்களில் கடும் இருள். அதிகாலை ஆறு மணிக்கும் இருளாக இருந்தது. அன்று ஆபத்தான நாளொன்று. பல யானைக் கூட்டங்கள் வெளியெ வந்திருந்தன. யானைகள் 6ம் 7 ம் இருக்கும் கூட்டமொன்றும் ஆண் யானைகள் இரண்டும் ஒன்றாக இருப்பதனை நாம் கண்டோம். ஒன்றாக இருக்கும் ஆண் யானைகள் மிகவும் ஆபத்தானவை. சிறிது நேரத்தில் எமக்கு தூரத்தில் யானை வெடி சத்தமொன்று கேட்டது. அது எமது வேறு குழுவொன்று. அவர்கள் யானைகளை விரட்ட யானை வெடி போட்டிருந்தனர்.

தற்போது நேரம் ஐந்தை நெருங்கியிருந்தது. பரீட்சைக்குச் செல்லும் பிள்ளைகள் வருவதற்கு அண்மித்திருந்தது. எமது வாகனத்திலும் நாமல் ஓயா வாவியின் கட்டின் உயரத்திலிருந்து சுமார் அரை கிலோமீற்றர் இங்கினியாகல அருகில் சென்றோம். அந்தளவுக்கு பெரிய தனி யானையொன்று எமது வாகனத்தில் பட்டும் படாதது போன்று காட்டுப் பக்கத்துக்கு ஓடிச் சென்றது. அது வெளியெ வந்த யானை உள்ளே செல்வதாகும்.

காலை சுமார் 5.15  ஆகும் போது யானைகள் அனைத்தையும் காட்டிற்கு துரத்துவதற்கு எமது குழுக்களுக்கு முடிந்தது. அதன் பின்னரே நிம்மதி கிடைத்தது.

அன்று நாம் பெரிய சேவையொன்றை செய்தோம் என்று நினைக்கிறேன். பிள்ளைகளின் உயிர் அதனால் பாதுகாக்கப்பட்டது. ஒரு பிள்ளைக்காயினும்  யானையொன்றுக்கு அகப்பட்டிருந்தால் பாரிய பாதிப்பொன்று ஏற்படும். அன்றைய நாளை நினைக்கும் போது எனக்கு ஆத்ம திருப்தி ஏற்படுகின்றது.  

திரு. பிரசாந்த லக்பிரிய விமலதாச அவர்கள்

பிரசாந்த லக்பிரிய விமலதாச அவர்கள் 1998.11.09 ஆம் திகதி விஞ்ஞான பட்டதாரியாக பதவிநிலை உத்தியோகத்தர் ஒருவராக வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு இணைந்தார்.

முதலில் அவர் யால தேசிய பூங்காவில் சேவையாற்றினார். அங்கு 4 வருடங்கள் சேவையாற்றியதன் பின்னர் ஹிக்கடுவை தேசிய மாதுறு ஓயா, லுணுகம்வெஹெர, உடவளவை, கவுடுள்ள எனும் தேசிய பூங்காக்களில் பூங்கா பொறுப்பாளராகவும் பெல்லன்வில அத்திடிய சரணாலயத்திலும், கிரிதலை பயிற்சி துறையிலும் கடமையாற்றினார்.

2011 ஆம் ஆண்டில், 2017 இலிருந்து 2019 ஆண்டு வரை ஊவா மாகாணத்தில் 2 வலயங்களுக்குப் பொறுப்பாக பதில் கடமையாற்றும் உதவிப் பணிப்பாளராகவும் கடமையாற்றினார்.

2006 ஆம் ஆண்டில் ஹம்பாந்தோட்டை யானைகள் செற்பாட்டுக்கு தொடர்புபடுவதற்குக் கிடைத்தது பற்றி அவர் மகிழ்ச்சியுடன் நினைவுபடுத்தினார்.

பிரசாந்த விமலதாச அவர்கள் ருஹுணு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பட்டதாரியாவார்.  அவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் வனஜீவராசிகள் முகாமைத்துவம் பற்றிய வனஜீவராசிகள் திணைக்களம் அனுசரணை வழங்கும் முதுமாணி பட்ட டிப்ளோமாவை நிறைவு செய்துள்ளதோடுஇங்தியாவில் வனஜீவராசிகள் முகாமைத்துவம் பற்றி டிப்ளோமாவையும் நிறைவு செய்துள்ளார்.

தறபோது பிரசாந்த அவர்கள் திறந்த பல்கலைக்கழகத்தில் சுற்றாடல் விஞ்ஞானம் பற்றிய கலை முதுமாணிப் பட்டத்தின் இறுதிப் பரீட்சைக்கு விடையளித்துள்ளார்.

பிரசாந்த அவர்களின் மனைவி உத்பலா நிலவல அவர்கள் கேகாலை வித்தியாலயத்தில் விஞ்ஞான ஆசிரியை ஆவார். மகன், புல்மேத் சந்திக விமலதாச கேகாலை வித்தியாலயத்தில் 8 ஆம் தர மாணவனாவார்.

அவரின் முகவரி கெந்தபிட்டிய வத்த, மொலகொட, கேகாலை ஆகும்.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள சரணாலயங்கள்

வனவிலங்கு மற்றும் தாவர பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்ட கிழக்கு வனவிலங்கு வலயத்தில் அம்பாறை மாவட்டத்துக்கு உரிய வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும்தேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்கள் சிலவாகும்.  மாதுறு ஓயா, குமண மற்றும் லாகுகல- கித்துலான எனும் தேசிய பூங்காக்கள் ஆகும். குடும்பிகல- பானம, புத்தங்கல, கல்ஓயா வடகிழக்குப் பகுதியில் உள்ள அம்பாறை, சாகமம் சரணாலயம் ஆகும். இப்பகுதிகளில் தாவர சமூகமானது வரண்ட கலப்புடைய பசுமையான காடாகும் என்பதோடு பாலை, வீரை, விளா​,வேம்பு, முதிரைபோன்ற தாவரங்கள் பிரதானமானவையாகும். கடுக்காய், தான்றி, நெல்லி போன்ற மருத்துவ தாவரங்களும் பட்டு புளியம்பழ தாவரமும் இக்காடுகளில் காணக் கிடைப்பதில்லை. காடுகளில் விசேடமாக ‘பெலெஸ்ஸ’ என அறிமுகப்படுத்தப்படும் சிறிய புல் நிரங்கள் இடத்துக்கிடம் அமைந்திருப்பதாகும். மான, கினியா புல், தர்ப்பைப்புல் மற்றும் நேப்பியர் புல் புல் நிலங்களில் பிரதான தாவரங்களாகும். எலுமிச்சை, மதுக்காரை, கிளா போன்ற பற்றைத் தாவரங்கள் அதிகமாக உள்ளதோடு அவற்றின் பழங்கள் பறவைகளுக்கு ருசியான உணவை வழங்குகின்றன. யானை, மரை, மான், சருகு மான்,கேளையாடு, காட்டுப்பன்றி மற்றும் முள்ளம்பன்றி  பெரும்பாலான பாலூட்டிகளாகும். இக்காடுகளில் சிறுத்தைகள் இருந்தன என்பதற்கு அடிச் சுவடுகள் போன்ற சான்றுகள்இருந்தன எனினும் யாராலும் சிறுத்தைகளைக் கண்டதற்கான பதிவுகள் இல்லை.

‘நீட்டேவர்’ என்றழைக்கப்படும் குள்ள மனிதர்கள் இங்கு வாழ்ந்ததற்கான புரானக் கதைகள் உள்ளன.

பறவையினங்கள் சுமார் 80 இப்பகுதியில் வாழ்கின்றன. நீர்ப்பகுயை அண்டி வசிக்கும் சாம்பல் நாரை, கொக்கு இனங்கள், நீர்க்காகங்கள் போன்றே இலங்கை சாம்பல் இருவாய்ச்சி, நீல முகச் செண்பகம் போன்ற பறவைகளை அவதானிக்க முடிகின்றது. எனினும் புலம்பெயர் பறவைகளைக் கண்டுகொள்ள முடியாமலுள்ளது. அவற்றுள் அரிதாக மட்டும் கண்டுகொள்ள முடியுமான நீலவால் பஞ்சுருட்டான் புலம்பெயர் பறவையொன்றாகும்.

மயில்
கொண்டை பாம்புண்ணிக் கழுகு
நீர்ப் பறவையொன்று

வண்ணத்துப்பூச்சியினங்கள் சுமார் 15-20 இக்காடுகளில் கண்டுகொள்ள முடிவதோடு உவர்நீர் முதலை, பால் ஆமை, கறுப்பு ஆமைமற்றும் நட்சத்திர ஆமை என்பன பொதுவான ஊர்வன இனங்களாகும்.

காடுகளில் நீர்நிலைகள் அதிகமாக அமைந்துள்ளன. அனை அண்டி சிறிதளவாக நன்னீர் மீன்பிடிக் கைத்தொழில் இடம்பெறுகின்றது.  திலாபியா போன்ற இனங்காணப்பட்ட மீன்கள் இந்நீர்நிலைகளில் பெருமளவு கிடைக்கின்றன.

இச்சரணாலயங்கள் அமைந்துள்ள பகுதிகளில் மக்கள் வயல்களில் பயிர்ச்செய்கைகள் மேற்கொள்வது அற்புதமான முறைக்காகவேயாகும். காட்டு யானைகள் பயணிக்கும் பிரதான பாதைகள் வயல் ஊடாக விழுந்துள்ளது. கல்ஓயா பிரதேசத்திலிருந்து சாகமம் சரணாலயத்தினூடாக வந்து புத்தங்கல சரணாலயத்தினை கடந்து செல்லும் காட்டு யானைகள் பின்னர் சம்மாந்துறை மற்றும் வலசாபிட்டிய பிரதேசங்களை கடக்க வேண்டும். இப்பிரதேசம் வயல் பயிர்ச்செய்களை மேற்கொள்ளும் பகுதிகளாகும். தீகவாபி ஊடாக லாகுகலவிற்குச் செல்லும் போது வயல் பயிர்ச்செய்கைகளை செய்யும் பிரதேசமான அக்கரைப்பற்று, திருக்கோவிலைத் தாண்ட வேண்டும். இக்காட்டு யானைகள் வயல் பிரதேசங்களினூடாக பயணம் செய்வது அறுவடை செய்த பின்னராகும். அப்போது வயல்களிலுள்ள களைகளே அவற்றின் உணவாகும். வெற்றிகரமான பயிர்ச்செய்கைகளை ஆரம்பித்துக் கொள்வதற்காக காட்டு யானைகளின் நடமாட்டத்தை அறிந்து கொண்ட விவசாயிகள் முதலில் சரணாலயத்துக்கு அருகிலுள்ள வயல்களையும் பின்னர் சரணாலயத்துக்கு தூரத்தில் உள்ள வயல்களையும் பயிர்செய்யப்பட்டதோடு அறுவடை செய்யப்படுவதும் அதன்படியாகும். அம்முறையில் பயிர்ச்செய்கையைப் பாதுகாத்துக் கொண்டு களைகளை காட்டு யானைகளின் உணவுக்காக வழங்குவதற்கு முடியுமாக உள்ளது. வயல் பயிர்ச்செய்கை செய்யப்படுவது கல்ஓயா வியாபாரத்தின் கீழ் என்பதனால் கண்காணிப்பு அமைப்புக்கு நீரைப் பெற்று அறுவடையை பறித்துக் கொள்வதற்கு விவசாயிகளுக்கு முடிந்தது.  அறுவடையைப் பறித்த இடங்களில் சுமார் 300-400 பிரதேசத்தில் களைனகளை உணவுக்காக எடுப்பதற்கு காட்டு யானைகளுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. பெப்ரவரி, மார்ச், ஏப்ரல், ஜூலை, ஆகஸ்ட், செப்டெம்பர் மாதங்களில் இவ்வாறு யல, மஹ போகங்களில் அறுவடையைப் பறித்து இறுதியாக களைகளை உணவாக எடுக்கும் காட்டு யானைகளை அவதானிக்க முடியுமான காலங்களாகும். இக்கால எல்லைகளில் அக்கரைப்பற்று, நிந்தவூர், கார்தீவு, சம்மாந்துரை வீதி இரு புறங்களிலும் காட்டு யானைகள் சுமார் 30 இனைக் கண்டு கொள்ள முடியும்.

1. பானம- குடும்பிகல சரணாலயம்

இலங்கையில் பிரசித்தமான குமண தேசிய பூங்காவுக்கு அண்மையில் அமைந்துள்ள பானம- குடும்பிகல சரணாலயம் இயற்கை அழகினைக் கொண்ட இடமொன்றாகும்.  பசுமையான தாவரங்கள் மற்றும் இலை குழைகளால் மூடப்பட்டுள்ள இச்சரணாலயம் பல்வேறான பறவைகளினதும் விலங்குகளினதும் வசிப்பிடமாகும். நகரத்தின் நெரிசலிலிருந்து விடுபட்டு இயற்கைக்கு நெருக்கமாக காலத்தை செலவழிப்பதற்கு குடும்பிகல சரணாலயம் அபூர்வமான இடமொன்றாகும். இந்த புண்ணிய பூமி மகா ஞானமடைந்த பிக்குகள் பாரிய அளவு தொட்ட புண்ணிய பூமியொன்றாக கருதப்படுகின்றது.

2006 பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி இலக்கம் 1433/3/79 உடைய வர்த்தமானிப் பத்திரிகை மூலம்  பிரகடனப்படுத்தப்பட்ட ஹெக்டயார் 6533.91 ஆன நில அளவினைக் கொண்டதாகும். இச்சரணாலயத்தில் அமைந்துள்ள குடும்பிகல ஆராமை பூமி கிழக்கு மாகாணத்தில் யால குமண தேசிய பூங்காவிலிருந்து சுமார் 22 கிலோமீற்றர் தூரத்திலிருந்தும் பொத்துவில் அம்பாறையிலிருந்துசுமார் 22 கிலோமீற்றர்தூரத்தில் இயற்கை ஒதுக்கமொன்றின் மத்தியில் அழகான மலையொன்றின் மேல் அமைந்துள்ளது. அங்கு மலையுச்சியில் புண்ணியமான குடும்பிகல ஆராமை அமைந்துள்ளதோடு அதற்குச் செல்லும் பாதை ஓரளவுக்கு

சரிவாக  இருந்தாலும் சவாலாக மலை ஏறுவதற்கு உங்களுக்கு சந்தர்ப்பமொன்றை உருவாக்கும். எவ்வாறாயினும்,  உயரத்தை நெருங்கும் போது அழகான காட்சிகளை நீங்கள் ஏற்றுக் கொள்வதனால் அந்த அனைத்து முயற்சிகளுக்கும் இறுதியில் பெறுமதியையும் சேர்க்கின்றது.

நகரங்களின் நெரிசலிலிருந்து விடுபடுவதற்கு விரும்பும் பௌத்த பிக்குமார்களின் பாதுகாப்பு இடமொன்றாக நிறுவப்பட்டுள்ள இங்கு தியான யோகி பிக்குமார்கள் வாழ்கின்றனர். வாழ்நாளில் ஒரு முறையாவது பார்க்க வேண்டியதுமான வழிபாட்டுத்தலமாகும். காவன்திஸ்ஸ அரசருடைய காலத்தில் மகா சங்கரத்தினருக்கு பூஜை செய்து வழங்கப்பட்டதென கருதப்படும் சேத்திய பப்பத விகாரை குடும்பிகல தபோவன சரணாலயம் ஆகும். அதன் பின்னர் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது துட்டகைமுனு அரசருடன் நாட்டினை ஒன்றிணைப்பதற்கு பங்களிப்பு செய்த நந்திமித்திர சேனாதிபதியால் என ஏற்றுக் கொள்ளப்படுகிறது. கொழும்பிலிருந்து குடும்பிகல சரணாலயத்துக்கு இடையிலான தூரம் 350 கிலோமீற்றர் ஆகும். இங்கு மாலை நேரத்தில் வன விலங்குகள் நிம்மதியாக சஞ்சரிப்பதனால் மாலை 5 மணிக்குப் பின்னர் பார்வையிடுவதற்குப் பொருத்தமற்றது.

குடும்பிகல போன்ற கல் மலைகள் காட்டுக்கு விசித்திரமான அழகைக் கொண்டு வருகின்றன. விசேடமான பிரதேசமொன்றான இங்கு புவியியல், உயிரில் மற்றும் தொல்லியல் அம்சங்கள் இன்னும் உரியவாறு ஆராயப்படவில்லை.  குடும்பிகல சைத்திய, தப்போ வனம் மற்றும் முருகன் கோவில் முக்கியமான தொல்லியல் இடங்கள் ஆகும்.இவ்விடங்கள் உள்ளடங்கலாக இவ்வனத்தின் பகுதியொன்று தொல்லியல் ஒதுக்கமொன்றாக பெயரிடப்பட்டுள்ளது. இச்சரணாலயத்தில் பிரதான புவியியல் அம்சமாக அதன் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள அழகான களப்பாகும். இது தனித்துவமான பல்லுயிர்த்தன்மையுடனான விஞ்ஞான ரீதியாக பொருந்தாத மணல் குன்றுகள் சிலவும் இங்கு காணப்படுகின்றன.

2. கல்ஓயா வடகிழக்குப் பகுதியில் உள்ள அம்பாறை சரணாலயம்

 கல்ஓயா வடகிழக்குப் பகுதியில் உள்ள அம்பாறை சரணாலயம் 1954 பெப்ரவரி 12 ஆம் திகதி 10640 இலக்கம் உடைய வர்த்தமானிப் பத்திரிகை மூலம் சரணாலயமொன்றாக பிரகடனப்படுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் 1998.06.11 அம் திகதி 1031-12 இலக்கம் உடைய வர்த்தமானிப் பத்திரிகை மூலம் அது புதுப்பிக்கப்பட்டது. இச்சரணாலயத்தினால் உள்ளடக்கப்படும் நில அளவு 124.32 ஹெக்டயார் ஆகும். இது நீரேந்துப் பிரதேசமொன்றாகும். அம்பாறை வாவி, பொன்டுவடுவான வாவி, ஹிமி துராவ வாவி மற்றும் கல்ஓயா தேசிய பூங்காவின் ஓரத்தில் அமைந்துள்ள நாமல் ஓயா இங்கு அமைந்துள்ள வாவிகளாகும்.

கல்ஓயா தேசிய பூங்காவிலிருந்து மட்டக்களப்பு திசைக்கு காட்டு யானைகள் பயணிக்கும் பிரதான பயணப்பாதை அம்பாறை சரணாலயத்தினூடாக செல்கின்றது. இச்சரணாலயத்தினூடாக மங்கலகம, அரன்தலாவ நெடுஞ்சாலையினூடாக மட்டக்களப்பு வெல்லாவலி மற்றும் சாந்தாமலை பிரதேசங்களுக்கு காட்டு யானைகள் சுதந்திரமாக பயணம் செய்கின்றன.

3. புத்தங்கல சரணாலயம்

 அம்பாறை பிரதேசத்தில் அமைந்துள்ள இச்சரணாலயம் 1974 நவம்பர் மாதம் 01 ஆம் திகதி இலக்கம் 136 உடைய வர்த்தமானிப் பத்திரிகை மூலம்  பிரகடனப்படுத்தப்பட்ட 1841.3 ஹெக்டயார் நில அளவினைக் கொண்ட சரணாலயமொன்றாகும். கல்ஓயா தேசிய பூங்காவனைக் கொண்ட வன பாதுகாப்பு பிரதேசங்கள் நான்கில் ஒன்றுக்குரிய புத்தங்கல சரணாலயம் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு வரை செல்லும் ஸ்தூபி ஒன்று மற்றும் ஏனைய கட்டட இடிபாடுகளினைக் கொண்டதாகும். அம்பாறை நகரத்திலிருந்து வட திசையில் மல்வத்தை என்னும் பகுதிக்கு அருகில் புத்தங்கல அரண அமைந்துள்ளது. 200 ஏக்கரான நில அளவில் இவ்வரணுக்குரிய இடிபாடுகள் பரந்துள்ளன. புத்த பெருமான் இலங்கைக்கு வருகை தந்த இறுதித் தடவையில் இங்கு வருகை தந்ததாக நம்பப்படுகின்றது.

இக்காடு முழுவதும் மிக அழகாக பரந்துள்ளது. வரண்ட பசுமையான கலப்புக் காட்டில் தாவரங்களும் மிக சமீபமான அமைந்துள்ளன. அவ்வாறே இங்கு தென்கிழக்குப் பிரதேசத்தில்  ‘பெலஸி’  அமைந்துள்ளது. வலனாபிட்டிய பிரதேசத்துக்கு புத்தங்கல ஊடாகச் செல்லும் யானைகள் இந்த பெலஸியைப் பயன்படுத்துகின்றன. பாலை, வீரை, உகாய், விளா, மதுக்காரை பெருமளவு காண உள்ளதோடு புத்தங்கல சரணாலயத்தில் நீர் ஊற்று உயர்ந்தது. இடத்துக்கிடம் வெண்மருது மற்றும் இலுப்பை மரங்களைக் காணக் கிடைக்கின்றது. ஆராண்யவிலுள்ள  பிக்குகள் சுமார் இருபது பேர் புத்தங்கல ஆராண்ண்ய சேனாசனவில் இருப்பதோடு அடிக்கடி அன்னதானம் பூஜை செய்யும் பக்தர்கள் புத்தங்கல ஆரண்யவிற்கு வருகின்றனர்.

4. சாகமம் சரணாலயம்

 அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள இன்னொரு சரணாலயம் சாகமம் சரணாலயமாகும். 1963.06.21 ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்ட 616.4 ஹெக்டயாரான நில அளவினைக் கொண்ட சரணாலயமொன்றாகும். தமக்கே தனித்துவமான அழகினைக் கொண்ட வனமாகும். சாகமம் சரணாலயத்தினூடாக பிரதான யானைகளன் பயணப்பாதைகள் இரண்டு விழுகின்றன. கல்ஓயா தேசிய பூங்கா பகுதியலிருந்து வருகின்ற காட்டு யானைகள் கல்ஓயாவிலிருந்து மட்டக்களப்பு பிரதேசத்துக்கும் புத்தங்கலவினூடாக லாகுகல பிரதேசத்துக்கும் இப்பாதைகள் இரண்டினூடாகவும் பயணம் செய்கின்றன.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள சரணாலயங்கள்தொடர்பான விளக்கத்தில் காணப்படும் விலங்குகளின் பெயர்ப் பட்டியல்

 Sinhala Names

Tamil Names

English Names

Scientific Name

අලියා

யானை

Asian elephant

​Elephas maximus

ගෝනා

மரை

Sambar

Rusa unicolor

මුවා     

புள்ளி மான்

Spotted deer

Axis axis ceylonensis

මීමින්නා

சருகு மான்

Spotted chevrotain

Moschiola meminna

ඕලු මුවා

கேளையாடு

Barking deer

Muntiacus muntijak

වල් ඌරා

காட்டுப்பன்றி

Wild Boar

Sus scrofa

ඉත්තෑවා

முள்ளம்பன்றி

Porcupine

Hystrix indica

දිවියා

சிறுத்தை

Leopard

Panthera pardus kotiya

පෙලිකන්

சாம்பல் நாரை

Spot-billed pelican

Pelecanus philippensis

කොකුන් විශේෂ

கொக்கு இனங்கள்

Heron family

Ardeidae Sps

දියකාවා

நீர்க்காகம்

Cormorant

Phalacrocorax fuscicollis

අළුකෑදැත්තා

இலங்கை சாம்பல் இருவாய்ச்சி

Sri lanka Grey Hornbill

Ocyceros gingalensis

වත නිල් මල් කොහා

நீல முகச் செண்பகம்

Blue – faced malkoha

Phaenicophaeus viridirostris

පෙඳ නිල් බිඟුහරයා

நீலவால் பஞ்சுருட்டான்

Blue tailed bee eater

Merops philippinus

සර්ප උකුස්සා

கொண்டை பாம்புண்ணிக் கழுகு

Crested serpant eagle

Spilornis cheela

මොණරා

மயில்

Peacock

Pavo cristatus

ගැට කිඹුලා

உவர்நீர் முதலை

Estuarine crocodile

Crocodylus porosus

කිරි ඉබ්බා

பால் ஆமை

Sri Lankan flapshell turtle

Lissemys ceylonensis

ගල් ඉබ්බා

கறுப்பு ஆமை

Indian black terrapin/ turtle

Melanochelys trijuga

තාරකා ඉබ්බා

நட்சத்திர ஆமை

Star tortoise

Testudo elegans

තිලාපියා

திலாபியா

Tilapia

 

அம்பாறை மாவட்டத்தில் உள்ள சரணாலயங்கள்தொடர்பான விளக்கத்தில் காணப்படும் மரங்களின் பெயர்ப் பட்டியல்

Sinhala Name

Tamil Name

English Name

Scientific Name

පලු

பாலை

Palu

Manilkara hexandra

වීරவீரைHedge Box wood

Drypetes sepiaria

දිවුල්விளாDivul 

Limonia acidissima

කොහොඹவேம்புKohomba 

Azadirachta indica

බුරුතமுதிரைSatinwood

Chloroxylon swietenia

අරළුகடுக்காய்Aralu

Terminalia chebula

බුළුதான்றிBulu

Terminalia bellirica

නෙල්ලිநெல்லிNelli

Phyllanthus emblica

ගල් සියඹලාபட்டு புளியம்பழம்Gal siyambala

Dialium ovoideum

මානமானாMana

Cymbopogon confertiflorus

ගිනිග්‍රාස්கினியா புல்Guinea grass

Megathyrsus maximus

ඉලුක්தர்ப்பைப்புல்Illuk

Imperata cylindrica

පොහොන්நேப்பியர் புல்Pohon

Pennisetum polystachion

දෙහිஎலுமிச்சைLime

Citrus sps

කුකුරුමානமதுக்காரைKukurumana

Caturunaregam spinosa

කරඹகிளாConker

Carissa carandas

මලිත්තන්உகாய்Malittan

Salvadora persica

කුඹුක්வெண்மருதுKumbuk

Terminalia arjuna

මීஇலுப்பைMee

Madhuca longifolia

குப்பாளர்  –  தம்மிகாமல்சிங்ஹ, மேலதிக செயலாளர், வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சு பகுதி, விவசாய மற்றும் வனஜீவராசிகள் மற்றும் வன  வளங்கள் பாதுகாப்பு அமைச்சு

பூங்கா பற்றிய தகவல்களத் தொகுத்தவர்ஹஸினி சரத்சந்திர, பிரதம உத்தியோகத்தர், வன பாதுகாப்புத் திணைக்களம் மஹேக்ஷா சதுராணி பெரேரா,அபிவிருத்தி  உத்தியோகத்தர்,வனஜீவராசிகள்  பாதுகாப்புத் திணைக்களம்

தமிழ் மொழிபெயர்ப்புஏ.ஆர்.எப். றிப்னா, அபிவிருத்தி  உத்தியோகத்தர், (விவ. வனஜீ.வன. வள. பா. அ)

ஆங்கில மொழிபெயர்ப்புஅசோக பலிஹவடன, மொழிபெயர்ப்பாளர், (விவ. வனஜீ.வன. வள. பா. அ)

இணய வடிவமப்புஎன்.ஐ கயத்ரி, அபிவிருத்தி  உத்தியோகத்தர், (விவ. வனஜீ.வன. வள. பா. அ) சீ. ஏ. டீ. டீ. ஏ.கொல்லுரே, முகாமைத்துவ சேவை​உத்தியோகத்தர், (விவ. வனஜீ.வன. வள. பா. அ)

படங்கள் இணையம் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்டன.