简体中文 ZH-CN English EN Français FR Deutsch DE Italiano IT Português PT සිංහල SI தமிழ் TA
Ministry of Wildlife and Forest Resources Conservation

அத்தியாயம் 25 – கல்வேஸ்லேண்ட்  தேசிய பூங்கா

Content Image
அன்று இன்னொரு பூங்காவொன்று பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது

2007 ஆம் ஆண்டில் ‘கல்வேஸ் லேன்ட்’ சுற்றுலாப் பயணத்துக்கு மக்களுக்காகத் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதன் போது ‘கல்வேஸ் லேன்ட்’ வனஹீவராசிகள் திணைக்களத்தின் கீழ் இருந்த ஒதுக்கமொன்றாகும். பாரிய அளவில் குறைந்தாலும் விலங்குகளும் தாவரங்களும் அதிகமாக உள்ள இப்பிரதேசம் நுவரெலியாவுக்கு பொதுமக்களுக்கு பார்வையிடுவதற்கு சந்தர்ப்பத்தை வழங்குகின்ற திணைக்களத்துக்குப் போன்றே அக்காலத்திலிருந்த முன்னாள் விடயப் பரப்பு அமைச்சருக்கும் தேவைப்பட்டது. எனக்கு அந்நாட்களில் பூங்காப் பொறுப்பாளரொருவராக கல்வேஸ் லேன்ட்களில் சேவையாற்றினேன். அப்போது தற்போதுள்ள பணிப்பாளர் நாயகம் சூரியபண்டார அவர்கள் இப்பிரதேசப் பொறுப்பு உதவிப் பணிப்பாளர் ஒருவராகசேவையாற்றினார். அவர்களுக்கும் வட்டார பணிப்பாளராக இருந்த முன்னாள் ஏ. என். ஜயசூரிய அவர்களுக்கும் கல்வேஸ் லேன்ட் பொதுமக்களுக்காகத் திறக்கும் நடவடிக்கைக்கு மிகுந்த ஊக்கத்துடன் பணியாற்றினேன்.

கல்வேஸ் லேன்ட்டின் நடுவினால் செல்வதற்கு அடிப் பாதையொன்று இருந்தது. திணைக்களத்தின் பொறியியலாளர் பிரிவு புதிதாக கருங்கல் பிடித்த பாதையாக இப்பாதை நிறுவப்பட்டது. பாதை 2 ½ அடி 3 அடி அகலமானது.

பாதையில் செல்லும் போது எமக்கு மிக அழகாகாத் தெரிகிறது. காடுகள் இல்லாத பகுதிகளில் பிதுருதலாகலவும், நுவரெலியா நகரமும் தெரிகிறது. 35 நிமிடங்கள், 40 நிமிடங்களில் கால்நடை மூலம் செல்கின்றது. பாதை இல்லாத இடங்களில் அமர்ந்து கொள்வதற்கு வாங்குகள் இடப்பட்டுள்ளன.

உள்நுழையும் இடத்தில் நுழைவுச்சீட்டு விநியோகிக்கும் இடமொன்றும் மலசலகூடமொன்றும் அமைக்கப்பட்டது. அவ்விடத்திலும் வாங்குகள் இடப்பட்டுள்ளன.

திறக்கப்பட்ட நாளில் சிறு விழாவொன்று அமைச்சருக்கும், பிரதேசத்தின் அரசியல் அதிகாரியும் ஊடகமும் வந்தது.

தற்போது நுவரெலியாவுக்கு வரும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் ​கல்வேஸ் லேன்ட்டைப் பார்வையிடுவதற்கு மறப்பதில்லை. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என்றால் என்னும் போதாது. நாம்  நுவரெலியா நகரத்திலும் பெயர்ப்பலகையொன்றையும் இட்டோம். சுற்றுலாப் பயண அபிலிருத்தி நடவடிக்கைகளையும் செய்தோம்.

நான் கல்வேஸ் லேன்ட்டில் சேவையாற்றிய காலப் பகுதியிலேயே அதனைப் பொதுமக்களுக்காகத் திறப்பதற்கு கலந்து கொள்வதற்குக் கிடைத்தது மகிழ்ச்சியாகும். முதலில் குறிப்பிட்டவர்களுக்கு மேலதிகமாக தற்போது ஆகும் போது வட்டாரப் பணிப்பாளர்களாக ஓய்வு பெறும் எம். ஜீ. விமலரத்ன மற்றும் கே. ஈ. பியதாஸ போன்றவர்கள் இப்பணிக்கு ஒத்துழைப்பு வழங்கினர் என்பது நினைவிருக்கின்றது.

அதேபோன்று ​கல்வேஸ் லேன்ட்டுக்கு எல்லையாகியது குறைந்த வருமானம் பெறும் தமிழ்க் கிராமமொன்று  கல்வேஸ் லேன்ட் என்பது அவர்கள் எப்போதும் காட்டுக்கு வந்து விறகு உடைப்பதற்கு பழக்கப்பட்ருந்தனர். காடு அழிப்புக்கு கீழே இருந்தது. இது திறக்கப்பட்டதுடன் நாம் கிராம மக்களுக்காக சமூகத்தை அடையும் திட்டம்  (Community Out Reach Program) ஒன்றை மேற்கொண்டோம். திணைக்களத்தின் சகல குடும்பத்துக்கும் வினைத்திறனான விறகடுப்புகளை வழங்கினோம். அவற்றில் சமைக்கும் முறையை பழக்கினோம். அவர்கள் குப்பைகூளங்களையும் கழிவுப் பொருட்களையும் காட்டிற்கு வீசுவதற்குப் பழகியிருந்தனர். நாம் அவர்களுக்கு மீள்சுழற்சிக்காக் கொம்போஸ்ட் பாத்திரமொன்றை வழங்கினோம். அவ்வாறே கிராமத்தின் கோவிலை புனர்நிர்மாணம் செய்து வழங்கினோம். தற்போது அவர்கள் எங்களுடன் நல்லிணக்கத்துடன் பணியாற்றுகின்றனர்.

 திரு. இந்திக கல்பாத அவர்கள்

திரு. இந்திக கல்பாத அவர்கள் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்துக்கு 1998 ஆம் ஆண்டில் இணைந்தார். போட்டிப் பரீட்சையொன்றில் சித்தியடைந்ததன் மூலமேயாகும். உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் உயர் தரத்தில் சித்தியடைந்திருப்பது அவருக்கு இத்தொழிலுக்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.   

கல்பாத அவர்களுக்கு அனுராதபுர மாகாணத்தில் கல்கமுவ வட்டாரத்தில் மீகலேவட்டத்துக்கு முதல் நியமனம் பெற்றார். பின்னர் அவர் மீகலேவ யானைகள் ஒருங்கிணைப்பு நிலையத்தில் சேவையாற்றினார்.

2002- 2007 வில்பத்து தேசிய பூங்காவில் சேவையாற்றுவதற்கு அவருக்கு சந்தர்ப்பமொன்று கிடைத்ததோடு 2003 ஆண்டில் வில்பத்து பொதுமக்களுக்காகத் திறப்பதற்கும் கலந்து கொள்வதற்கு முடிவது தமது வாழ்க்கையில் பெற்ற பெறுமதிமிக்க சந்தர்ப்பமொன்று என அவர் கருதுகிறார்.

2007 ஆம் ஆண்டிலிருந்து கல்வேஸ்லேண்டில் 4 வருடங்கள் சேவையாற்றிய கல்பாத அவர்கள் பின்னர் பொல்கொல்ல வனப் பூங்காவிலும், கம்பஹா உதவிப் பணிப்பாளர் அலுவலகத்திலும் சுமார் 5 வருடங்கள் சேவையாற்றினார். 2017 ஆம் ஆண்டில் குருனாகல் வலய பணிப்பாளர் அலுவலகத்தில் சேவையாற்றியதன் பின்னர் கல்பாத அவர்கள் பத்தரமுல்லை பிரதான அலுவலகத்தில் சட்டப் பிரிவுக்கு இணைக்கப்பட்டார். இதுவரை அவர் இங்கு சேவையாற்றுகிறார்.

2000 ஆம் ஆண்டில் வனஜீவராசிகள் திணைக்களத்தின் மூலம் வழங்கப்படுகின்ற 09 மாத கிரிதலை டிப்ளோமா பாடநெறியை நிறைவு செய்வதற்கும் இந்தியாவில் கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கும் சீனாவில் சுற்றுலாப் பயணம் செய்வதற்கும்  கல்பாத அவர்களுக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது.

அவரின் மனைவி ப்ரமிலா ரவிந்திகா அவர்கள் பிரதேச செயலகத்தில் சேவையாற்றுகிறார். கம்பஹா தக்க்ஷிலா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மகள் மொஹான்ஸா இவ்வருடம் சா.த .பொ. தரப் பரீட்சைக்கு முகம் கொடுப்பதற்கு தயாராகுவதோடு அப்பாடசாலையிலேயே கல்வி கற்கும் மகள் சவிந்து 10 ஆம் தரத்திலாகும்.

கல்பாத அவர்களின் முகவரி

இலக்கம் 106,

பினிகமுவ, கிரிந்திவெல ஆகும்.

அவருடைய தொலைபேசி இலக்கம்- 071 3101687

கல்வேஸ்லேண்ட்  தேசிய பூங்கா

இயற்கையுடன் ஒன்றிணைவதற்கு விருப்பமானவர்களுக்கு மனதைக் கவர்ந்திழுக்கும் சிறு மற்றும் உற்சாகமான பயணத்தை வழங்குகின்ற உயிர்ப் பல்வகைத்தன்மையில் உன்னதமான கல்வேஸ் நில தேசிய பூங்காவின் வரலாறு பிரித்தானிய நிர்வாக யுகம் வரை  செல்கின்றது. இலங்கையில் நுவரெலியா மாவட்டத்தில் அ மைந்துள்ள இது இலங்கையின் நகர மத்தியில் அமைந்துள்ள ஒரே பூங்காவாகும்.  இது பிரித்தானியர் கல்வேஸ் எனும் சாமியொருவரினால்   கிடைத்த நில மொன்று என்பதனால் கல்வேஸ்லேண்ட் எனப்  பெயரிடப்பட்டுள்ளது. 1938  மே 27 ஆம் திகதி 15 ஏக்கரினால் ஆரம்பிக்கப்பட்ட இச்சரணாலயம் வனவிலங்கு மற்றும் தாவர கட்டளைச் சட்டத்தின் விதிமுறைகளின்படி 2006 மே 18 ஆம் திகதி இலக்கம் 1445/18  உ டைய வர்த்தமானிப் பத்திரிகை மூலம் 29.24 ஹெக்டயாரினைக் கொண்ட  தேசிய பூங்காவொன்றாக பெயரிடப்பட்டதோடு இதன் மூலம் மலைநாட்டு சூழல் அமைப்பைப் பாதுகாத்துக்  கொள்ளும் முதல் நோக்கமாகியது.

                                                                                                                 பூங்காவிலுள்ள பெயர்ப்பலகைகள்

இது மலைநாட்டு ஈர வலயத்துக்கு உரியதாக அமைந்துள்ளதனால் ஆண்டின் அதிக காலம் பருவ மழை மற்றும் வெப்பச்சலன மழையினைக் கொண்டதாகும். சுமார் 2400 மில்லிமீற்றர்  மழைவீழ்ச்சியைக் கொண்டதான இங்கு குளிர் காலநிலையொன்று நிலவுவதோடு சாதாரண வெப்ப​நிலை சுமார் 15-16 பாகை செல்ஸியஸ் ஆகும். இந்நிலம் பெரும்பாலும் செம்மண்*பொட்சொலிக் மண்ணுடன், சூரிய ஒளி படுவதும்மிகக் குறைவாக மதிப்பிடப்படும் இடமொன்றாகும்.

ஆண்டின் அதிகமான காலம் ஈரமாக இருக்கும் இங்கு தாவரங்களின் பல்வகைத்தன்மையும் மிக உயர்ந்ததாகும்.  விசேடமாக மலைநாட்டு ஈரநில என்றும் பசுமையான காடுகளில் காணக் கிடைக்கும் கீன, நீர்க்குமளி இனங்களை  இங்கு பொதுவாகக் கண்டு கொள்ள முடியும். பிரித்தானிய காலத்தில் நிறுவப்பட்ட பூங்காவொன்றாவதனால் யூகலிப்டஸ், பைனஸ் எனும் வெளிநாட்டு தாவர இனங்கள் பலவற்றையும் கண்டு கொள்ள முடிகின்றது. கீழ் வளரிகளை அடர்த்தியாகக் கண்டு கொள்ள முடிவதோடு சூரிய ஒளிக்குள் தெறிப்படைவது வரையறுக்கப்பட்டுள்ளமையினால் அதிகளவான தாவர இனங்களின் மத்தி வளர்வது கட்டுப்படுத்தப்படல் மற்றும் உறுதித்தன்மை குறைவதும் அவதானிக்கப்பட்டுள்ளது. அவ்வாறே மலைநாட்டில் அதிகளவு காற்றோட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தாவரங்களில் குற்றிப் பகுதி வளைந்த நிலையில் மேல் நோக்கி வளர்ந்துள்ளதையும் காண முடிகின்றது. அளவில் பாரிய திறந்த விதை மரமொன்றான அரவுக்கேரியா வெளிநாட்டு தாவர இனமும் பன்ன இனமொன்றான சைதியா இனத்தை பூங்காவிற்குள் கண்டு கொள்ள முடியும். உயர்ந்த தாவரமான காட்டுச் சண்பகம், மூங்கிலிரிசி போன்ற தாவரங்களைக் கண்டு கொள்ள முடியும். அவ்வாறே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தோற்றத்தைக் கொண்ட  அழகான பூவினங்களுக்காகவும் பிரபல்யமானது. ஓகிட் இனங்கள் பலவற்றையும் பூங்காவில் கண்டு கொள்ள முடிவதோடு **லய்கன மற்றும் பூஞ்சனங்களும் பெரும்பாலானவையாகும்.

பூங்காவின் நில அளவிற்கு ஒப்பீட்டளவில் உயர்ந்த விலங்கு பல்வகைத்தன்மையையும் காண முடிகின்றது. இங்கு பெரிய அளவில் பாலூட்டிகளைக் காண முடியாவிட்டாலும் சிறிய பாலூட்டி இனங்ளை பலவற்றைக் காண முடிகின்றது. அவ்வினங்களில் ஊதா நிற முகம் கொண்ட இலைக் குரங்கு, பழுப்பு மலை அணில், செம்மான், காட்டுப்பன்றி,  மீன்பிடிப்பூனை,  இந்திய குழி முயல் மற்றும் முள்ளம்பன்றி  என்பன அடிக்கடி தென்படுகின்றன.

ஊதா நிற முகம் கொண்ட இலைக் குரங்கு

ஈரூடக வாழிகளாக இந்திய மரத் தவளை போன்ற இலங்கைக்கே உரித்தான இனமான மரத் தவளை இனமாகும்.  பூங்காவில் உள்ள காலநிலை காரணமாக அங்கு வாழ்கின்ற ஈரூடக இனங்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டிருந்தாலும்  இந்திய நாகம், பாயின் கரடுமுரடான பாம்பைக்கண்டு கொள்ள முடியுமாகும். இலங்கைக்கே உரித்தான ஓணான் இனங்களாக கறுப்புக் கன்ன பல்லி, பிக்மி பல்லி மற்றும் காண்டாமிருகக் கொம்புப் பல்லியையும் எளிதாகக் கண்டு கொள்ள முடியும். இலங்கைக்கே உரித்தான காண்டாமிருகக் கொம்புப் பல்லி மலைநாட்டு ஈர வலயத்தில் கண்டு கொள்ள முடிந்தாலும் அதில் அதிகளவான எண்ணிக்கை கல்வேஸ்லேண்ட் தேசிய பூங்காவில் காணக் கிடைப்பது விசேடமானதாகும்.

கறுப்புக் கன்ன பல்லி

வண்ணத்துப்பூச்சியினங்கள் சுமார் 20 இனை பூங்காவினுள் அவதானிக்க முடிவதோடு ரோசா அழகி, கொன்னை வெள்ளையன், பெரிய முட்டைப்பூச்சி, பெரிய நீலன் இனங்கள் விசேடமானவையாகும்.

பூங்காவிலுள்ள விலங்குகளுள் அதிக எண்ணிக்கையில் காணப்படுவது பறவைகளாகும். நிபுணத்துவர்களால் பறவைகளை அவதானிப்பதற்காக நாட்டில் மிக முக்கியமான இடமொன்றாகக் கருதப்படுகின்ற இங்கு ஒவ்வொரு வருடமும் புலப்பெயர்ந்து வருகின்ற அரிய பறவையினங்கள் சுமார் 20 உள்ளன. சுமார் 7 பறவையினங்கள் இலங்கைக்கே உரித்தாக உள்ளதோடு பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த பறவையினங்களின் எண்ணிக்கை சுமார் 35 ஆகும். அதனால் கல்வேஸ்லேண்ட்  தேசிய பூங்காவில் பறவைகளைப் பார்வையிடும் இடமொன்றாக பிரசித்தி பெற்றது. இலங்கைக்கே உரித்தான பறவையினமாக மஞ்சள் காது புல்புல், இலங்கை விசில் த்ரஷ்,  இலங்கை காட்டுக்கோழி, வலி மரிச்சான் குருவி, வெள்ளைக் கண்ணி போன்றவையாகும். உள்நாட்டுப் பறவையினங்களில் வண்ணாத்திக் குருவி – பாடும் குருவி, சிறிய மின்சிட்டு, கருந்தலை மாங்குயில், மரகதப்புறா எனும் இனங்களும் புலம்பெயர் பறவைகளில் கொடிக்கால் வாலாட்டி, பழுப்புக் கீச்சான் போன்ற இனங்களையும் காண முடியும்.

வலி மரிச்சான் குருவி
இலங்கை காட்டுக்கோழி
மஞ்சள் காது புல்புல்

கல்வேஸ்லேண்ட்  தேசிய பூங்கா சிறிய பூங்காக்களில் ஒன்று எனினும் நகரை அண்டியுள்ள பிரபல்யமான தேசிய பூங்கா பலவற்றில் ஒன்றாகும். பூங்காவிற்கு கொழும்பிலிருந்து வரும் ஒருவருக்கு இங்கு வருவதற்கு பல வழிகள் உள்ளதோடு வசதியான வழியாக கடுவலை-கொஸ்கம- அவிஸ்ஸாவெல்ல- யடியன்தொட- கித்துல்கல- கினிகத்ஹேன-  தலவாக்கலையினூடாக நுவரெலியா நகரத்துக்கு நுழைய முடியும். நுவரெலியா நகரத்திலிருந்து உடுபுஸ்ஸெல்லேவ வழியில் சுமார் ஒரு கிலோமீற்றர் பயணம் செய்யும் போது சந்திக்கின்ற நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்துக்கு அண்மையில் கல்வேஸ் வழியினூடாக மீண்டும் சுமார் ஒரு கிலோமீற்றர் பயணம் செய்யும் போது கல்வேஸ்லேண்ட்  தேசிய பூங்காவின் நுழைவை நெருங்க முடியும்.

பூங்காவுக்கு நுழைவதற்குத் தேவையான நுழைவுச்சீட்டு மற்றும் அறிவுறுத்தல்களை நுழைவாயிலில் பெற்றுக் கொள்ள முடிவதோடு பூங்கா நாளாந்தம் முற்பகல் 6 இலிருந்து பிற்பகல் 6 மணி வரையான காலப் பகுதிக்குள் திறந்திருக்கும். அவ்வாறே வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு முகாம் நிலங்களுக்காக பூங்கா வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு அதற்கான தினத்தை  ஒதுக்குவதற்கு பூங்கா அலுவலகத்தில் அல்லது வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் கொழும்பில் அமைந்துள்ள பிரதான அலுவலகத்தில் மேற்கொள்ள முடியும்.

* Podsoilic soil – soil which is well drained & are leached of clay and organic matter.

தரிசு மண்- நீர் மற்றும் போசணைப் பதார்த்தங்கள் குறைவு.

**  லய்கன இனம்- பூஞ்சை மற்றும் பாசி சயனொபக்றீரியா இடையில் நல்லிணக்கத்  தொடர்பொன்றினால் ஏற்படுகின்றது.

Lichen- Symbiolic relationship between fungi and algae or a cyanobacteria (Photosynthetic bacteria)

கல்வேஸ்லேண்ட்தேசியபூங்காதொடர்பான விளக்கத்தில் காணப்படும் விலங்குகளின் பெயர்ப் பட்டியல்

 Sinhala Names

Tamil Names

English Names

Scientific Name

කළු වදුරා

ஊதா நிற முகம் கொண்ட இலைக் குரங்கு

Purple faced langur

Semnopithecus vetulus

දඩු ලේනා

பழுப்பு மலை அணில்

Giant squirrel

Ratufa macroura

වැලි මුවා

செம்மான்

Barking deer

Muntiacus muntjak

වල් ඌරා

காட்டுப்பன்றி

Wild boar

Sus scrofa

හදුන් දිවියා

மீன்பிடிப்பூனை

Fishing cat

Prionailurus viverrinus

වල් හාවා

இந்திய குழி முயல்

Black naped hare

Lepus nigricollis

ඉත්තෑවා

முள்ளம்பன்றி

Porcupine

Hystrix indica

ලංකා පීතකන් කොණ්ඩයා

மஞ்சள் காது புல்புல்

Sri lanka yellow-eared bulbul

Pycnonotus penicillatus

අරංගයා

இலங்கை விசில் த்ரஷ்

Sri Lanka whistling thrush

Myophonus blighi

ලංකා වළි කුකුළා

இலங்கை காட்டுக்கோழி

Sri lankaJunglefowl

Gallus lafayetti

ලංකා අදුරු නිල් මැසිමරා

வலி மரிச்சான் குருவி

Dusky blue flycatcher

Eumyias sordidus

ලංකා සිතැසියා

வெள்ளைக் கண்ணி

White  eye

Zosterops ceylonensis

පොල්කිච්චා

வண்ணாத்திக் குருவி – பாடும் குருவி

Oriental magpierobin

Copsychus saularis

පුංචි මිණිවිත්තා

சிறிய மின்சிட்டு

Small minivet

Pericrocotus cinnamomeus

කහ කුරුල්ලා

கருந்தலை மாங்குயில்

Black hooded oriole

Oriolus xanthornus

නීල කොබෙයියා

மரகதப்புறா

Emerald dove

Chalcophaps indica

වන හැලපෙන්දා

கொடிக்கால் வாலாட்டி

Forest wagtail

Dendronanthus indicus

බොර සබරිත්තා

பழுப்புக் கீச்சான்

Brown shrike

Lanius cristatu

කදුකර ගස් මැඩියා

மரத் தவளை

Indian Mountain hourglass tree frog

Taruga eques

ඉන්දියානුගස් මැඩියා

இந்திய மரத் தவளை

Tree frog

Polypedates maculatus

නයා

இந்திய நாகம்

Cobra

Naja naja

ලේ මැඩිල්ලා

பாயின் கரடுமுரடான பாம்பு

Boie’s rough-sided snake

Aspidura brachyorrhos

කළු කොපුල් කටුස්සා

கறுப்புக் கன்ன பல்லி

Black-cheeked lizard

Calotes nigrilabris

මහඑළිය කුරු බෝදිලිමා

பிக்மி பல்லி

Mahaeliya pygmy lizard

Cophotis ceylanica

අං කටුස්සා

காண்டாமிருகக் கொம்புப் பல்லி

Rhino horned lizard

Ceratophora stoddartii

සෙව්වන්දියා

ரோசா அழகி

Common rose

Pachliopta aristolochiae

දෙහි සැරියා

கொன்னை வெள்ளையன்

Lemon emigrant

Catopsilia pomona

මහසිවා

பெரிய முட்டைப்பூச்சி

Great eggfly

Hypolimnas bolina

 

රතු කොන්නගියා

பெரிய நீலன்

Red pierrot

Talicada nyseus

கல்வேஸ்லேண்ட்  தேசிய பூங்காதொடர்பான விளக்கத்தில் காணப்படும் மரங்களின் பெயர்ப் பட்டியல்

Sinhala Name

Tamil Name

English Name

Scientific Name

කීනகீனKina

Calophyllum walkeri

දඹநீர்க்குமளிDamba

Syzygium assimile

යුකැලිප්ටස්யூகலிப்டஸ்Eucalyptus

Eucalyptus sps

ෆයිනස්பைனஸ்Pinus

Pinus sps

අරවුකේරියාஅரவுக்கேரியாAraucaria

Araucaria Sps.

ගිණිහොට

சைதியா

Tree fernsCyatheaSps.
වල්සපුகாட்டுச் சண்பகம்

Zenker

Michelia nilagirica

වැල් උණமூங்கிலிரிசிCommon bamboo/Golden bamboo

Bambusa matioter

ඕකිඩ් විශේෂஓகிட் இனங்கள்

Orchid Sps.

Orchidaceae sps.

குப்பாளர்  –  தம்மிகாமல்சிங்ஹ, மேலதிக செயலாளர், வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சு பகுதி, விவசாய மற்றும் வனஜீவராசிகள் மற்றும் வன  வளங்கள் பாதுகாப்பு அமைச்சு

பூங்கா பற்றிய தகவல்களத் தொகுத்தவர்ஹஸினி சரத்சந்திர, பிரதம உத்தியோகத்தர், வன பாதுகாப்புத் திணைக்களம், மஹேக்ஷா சதுராணி பெரேரா,அபிவிருத்தி  உத்தியோகத்தர்,வனஜீவராசிகள்  பாதுகாப்புத் திணைக்களம்

தமிழ் மொழிபெயர்ப்புஏ.ஆர்.எப். றிப்னா, அபிவிருத்தி  உத்தியோகத்தர், (விவ. வனஜீ.வன. வள. பா. அ)

ஆங்கில மொழிபெயர்ப்புஅசோக பலிஹவடன, மொழிபெயர்ப்பாளர், (விவ. வனஜீ.வன. வள. பா. அ)

இணய வடிவமப்புஎன்.ஐ கயத்ரி, அபிவிருத்தி  உத்தியோகத்தர், (விவ. வனஜீ.வன. வள. பா. அ) சீ. ஏ. டீ. டீ. ஏ.கொல்லுரே, முகாமைத்துவ சேவை​உத்தியோகத்தர், (விவ. வனஜீ.வன. வள. பா. அ)

படங்கள் இணையம் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்டன.