2002 ஆம் ஆண்டில் நான் லாஹுகல கித்துலான தேசிய பூங்காவில் கடமையாற்றினேன். நான் இப்பூங்கா மற்றும் குமண மற்றும் பானம பூங்காவின் பொறுப்பாளராகவும் கடமையாற்றினேன். இப்பூங்கா அனைத்தும் கிழக்கு மாகாணத்தின் அருகருகே இருந்தன.
2002 ஆம் ஆண்டின் இறுதிக் காலத்தில் அக்காலத்தில் இருந்த அரசாங்கம் எல். டீ. டீ. ஈ. யினருடன் சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டது.
சமாதான உடன்படிக்கையுடன் சமாதானம் வந்தது. மூடப்பட்டிருக்கும் பூங்காவைத் திறப்பதற்கு அரசாங்கம் கொள்கைத் தீர்மானமொன்றை எடுத்தது.
சுமார் இருபது வருடங்கள் மூடப்பட்டிருந்த குமண பூங்காவைத் திறப்பதற்கு எனக்கு கிழக்கு உதவிப் பணிப்பாளரிடமிருந்து உத்தரவொன்று கிடைத்தது. இப்பிரதேசம் மிகப் பயங்கரமான பிரதேசமொன்றாகக் கருதப்பட்டது. போக இருந்தாலும் பாதைக்கு தார் இடப்பட்டிருக்கவில்லை. அதனால் எல்லா இடங்களும் காடாகியிருந்தது. கிராம மக்கள் பகல் காலத்தில் விலங்குகளைப் பார்க்கச் செல்வதற்குப் பழகியிருந்தனர். பொத்துவில், அக்கரைப்பற்றுவில் உள்ள மக்கள் காட்டிற்குள்ளே செல்கின்றனர். விலங்குகளைப் பார்வையிடும் போதே காட்டிற்குள் உணவு சமைக்கின்றனர். பொழுதுபோக்கிற்கும் சேர்த்தே உள்ளே செல்கின்றனர். அப்பயணத்திற்கு சமைத்துக் கொண்டு சாப்பிடுதல் என்று பெயரிட்டுக் கொண்டிருந்தனர். இதனால் விலங்குகளுக்கு பாரியளவு தீங்கு ஏற்பட முடியும் என நாம் தெரிந்து கொண்டோம்.
எமக்கு பெரியொரு பணிக்குழு இருக்கவில்லை. வாகன வசதிகள் குறைவு. லாஹுகல கித்துலானவிலிருந்து, முதலாவது நாளில் நான் சைக்கிளில் பானமவிற்குச் சென்றேன். அவ்வீதியில் தார் போடப்பட்டிருக்கவில்லை. அதன் பின்னர் வன விலங்கு கட்டுப்பாட்டாளர் பீ. ஜயவர்தனவின் வீட்டில் இரவு தங்கினோம். அடுத்த நாளில் ஹெதல வீதியால் குமணவுக்குச் சென்றோம். குமண அலுவலகக் கட்டடங்கள் தரைமட்டமாக உள்ளன. இரு கட்டடங்களில் மாத்திரம் சிதைவடைந்த எச்சங்கள் இருந்தன. ஒக்கந்த வாவி இடிந்து விழுந்திருந்தது. மர முந்திரிகை மரம் நன்றாக வளர்ந்திருந்தது. எல்லா இடங்களிலும் மணல் காணப்பட்டது. உண்ணிச்செடியும் நன்றாக வளர்ந்திருந்தது. நான் கிழக்கு உதவிப் பணிப்பாளருக்கு நிலைமையைத் தெளிவுபடுத்தி ஆலோசனை கேட்டேன்.
அனுசரணைப் பணத்தைத் தேடியே எமக்கு வேலை செய்ய வேண்டியிருந்தது. அரச செலவில் குமண பூங்காவுக்கு உள்நுழையும் இடத்தில் நுழைவாயிலான்றை இடுமாறு கூறினோம். பானம தேசிய கிராமிய அபிவிருத்திச் சங்கத்தினால் சிறிய காவல் நிலையமொன்றை மண்ணினால் கட்டினோம். கிராமத்துக்கும் குமண பூங்காவுக்கும் இடையில் இக்காவல் நிலையம் எல்லை அடையாளங்களை இட்டது. காவல் நிலையத்துக்கு அருகில் நுழைவாயிலொன்றை இட்டனர். அங்கு பழயை கிணறொன்று இருந்தது. கிணற்றை துப்புரவு செய்தோம். வேலைகளை ஆரம்பித்த முதலாம் நாளில் கிராமத்தில் போராட்டமொன்று இருந்தது. கருணா அம்மானின் குழுவினர் ஒவ்வொரு இடத்திலும் அரசியல் அலுவலகங்களைத் திறப்பதற்கு எதிராகவேயான போராட்டமாகும்.
2002 ஆம் ஆண்டின் ஒக்டோபர் மாதத்தின் இறுதி அல்லது ஆரம்பத்திலே இச்சம்பவம் இடம்பெற்றது. திகதி சரியாக எனக்கு ஞாபகமில்லை. அக்காலத்தில் எனது வயது சுமார் 23 வருடங்களாக இருக்கலாம். அன்று மாலையில் அமைச்சரின் ஆலோசகர் வந்தார்.
அவர் மயக்க மருந்து வைத்தியர் ரஞ்சன் பிரனாந்து அவர்கள். அவருக்கு லாஹுகல- கித்துலான அலுவலகத்திலிருந்து குமணவுக்குச் செல்வதற்கு வேண்டியிருந்தது. அப்போது நேரம் மாலை சுமார் 3.30 ஆக இருக்கும். அவரும், நானும், சாரதியும், வட்டார பாதுகாவலர் ஜயசேன சில்வாவும் திணைக்களத்தின் லேன்ட்க்ருஷர்ஜீப் வண்டியொன்றில் குமணவிற்குச் செல்வதற்குப் புறப்பட்டோம். ஜீப் வண்டி திணைக்களத்தின் ஆலோசகரின் பாவனைக்கு வழங்கப்பட்டிருந்தது.
சுமார் மாலை4.30 ஆகும் போது குடும்பிகல ஹெலவ பிரதேசத்துக்குச் சென்றோம். தற்போது பெரும் மழையொன்று தொடங்கிற்று. வீதி குறுகியதாக இருந்தது. தெளிவற்றதாக இருந்தது. வீதிக்குக் குறுக்காக நீரோடையொன்று காணப்பட்டது. ஜீப் வண்டி நீரோடைக்குக் குறுக்காகச் செல்ல வேண்டும். நீரோடை சேறு நிறைந்த குழியாக இருந்தது. குடும்பிகலவிலிருந்து ஹெலவ களப்பினால் மோய திசைக்கு ஓடை பாய்கின்றது.
ஜீப்வண்டியை நீரோடைக்கு இடாது பயணம் செய்ய முடியவில்லை. இறுதியில் நீரோடையில் இட்டவுடன் அங்கே இறுகியது. வெளியே எடுக்க முடியவில்லை. நீரோடை பாய்கின்றது. மழையும் அதிகரிக்கின்றது. நீர் மட்டமும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கின்றது. தற்போது ஜீப் வண்டியின் கண்ணாடிக்கும் மேலால் நீர் இருந்தது. என்ஜின் தொடர்ந்தும் செயற்பட்டுக் கொண்டிருந்தது.
வாகனம் சுமார் 20 வினாடிகள் நீரில் இருந்தது.கதவைத் திறக்க முடியவில்லை நீர் அடிக்கிறது. வாகனத்துக்கு “போ வீல்” போடப்பட்டிருந்தது.
சாரதி முயற்சி செய்து, முயற்சி செய்து, அங்கும் இங்கும் வெட்டி, இறுதியில் வாகனத்தைத் திறந்து மேலே எடுத்தார். நாம் நிம்மதி பெருமூச்சு விட்டோம்.
எப்படியாவது நாம் நேரத்துக்கு ஒக்கந்த தேவாலயத்துக்குச் செல்ல முடிந்தது. ஒக்கந்த தேவாலயம் என்பது மக்கள் செல்வதற்குப் பழகியிருந்த தேவாலயமொன்றாகும்.
இக்காலத்தில் நாம் பெரும் முயற்சியுடனும் தியாகத்துடனும் வேலை செய்தோம். 2003 மார்ச் ஆகும் போது குமண பூங்காவை மீண்டும் திறக்கும் பணிகள் நிறைவடைந்தன. வாகனம் நீருக்கிடையில் இறுகிய சம்பவம் எனக்கு மறக்க முடியாத நிகழ்வொன்றாகும்.
*எல். டீ. டீ. ஈ. – தீவிரவாதக் குழுவொன்றாக பெயர் குறிப்பிடப்பட்ட அமைப்பொன்றாகும்.
1998 நவம்பர் மாதம் வன விலங்கு வட்டார பாதுகாவலர் 2 ஆம் தரத்தின் அதிகாரியொருவராக முணசிங்ஹ அவர்கள் வனஜீவராசிகள் திணைக்களத்தில் இணைந்தார்.முன்னர் கதிர்காமம், பூந்தல பிரதேசங்களில் சேவையாற்றியதால் பயிற்சி பெற்றதன் பின்னர் அவர் பின்னர் லாஹுகல- கித்துலான தேசிய பூங்காவுக்கு இணைக்கப்பட்டார். இக்காலத்தினுள் பானம சரணாலயமும் குமண தேசிய பூங்காவினால் மூடப்பட்டிருந்த்தோடு அவற்றின் நிர்வாகமும் லாஹுகல- கித்துலான தேசிய பூங்காவினால் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் முணசிங்ஹ அவர்கள் ஹோர்டன்தென்ன, மொனராகலை, வெல்லவாய பிரதேசங்களிலும் கடமையை நிறைவேற்றினார். அவர்கள் வனஜீவராசிகள் திணைக்களத்தின் மூலம் அனுசரணை வழங்குகின்ற கொழும்பு பல்கலைக்கழகத்தின் டிப்ளோமாவை நிறைவு செய்துள்ளதோடு வெளிநாட்டுப் பயிற்சிகள் பலவற்றுக்கும் பங்கு கொண்டுள்ளார்.
தமது அனுபவத்தினால் பெற்ற அறிவை இயற்கைக் காப்பீடு மற்றும் முகாமைத்துவத்துவத்துக்காகப் பயன்படுத்துவது முணசிங்ஹ அவர்களின் அபிப்பிராயமாகும்.
முணசிங்ஹ அவர்கள் பிள்ளைகள் மூவரின் தந்தையாவார். அவரின் மனைவி அரச தாதியொருவர் ஆவார்.அவரின் பிள்ளைகள் மூவரும் சாதாரண தர மட்டத்தில் கல்வி கற்கின்றனர்.
முணசிங்ஹ அவர்களின் முகவரி ஹக்மன, வேபத இர ஆகும்.
லாஹூகல கித்துலான தேசிய பூங்கா இலங்கையின் சிறிய தேசிய பூங்காக்களுள் ஒன்றாகும். மொத்த நில அளவு சுமார் 1,554 ஹெக்டயார் ஆகும். கிழக்கு கடற்கரையின் பொத்துவில்லில் இருந்து 16 கிலோமீற்றர் நாட்டின் உள்ளே அமைந்துள்ள ஹெதஓயவுக்கு அண்மையில் இப்பூங்கா அமைந்துள்ளது. இப்பூங்கா புராதன நீர்த்தேக்கங்கள் மூன்றான லாஹூகல, கித்துலான மற்றும் செங்கமுவ எனும் வாவிகள் மூன்றினால் உள்ளடக்கியதாகும்.லாஹூகல வாவி சுமார் 243 ஹெக்டயாரான விசாலமான வாவியாகும்.
இலங்கை யானைகள் மற்றும் இலங்கைக்கே உரித்தான பறவைகளுக்கு முக்கியமான வாழிடமான லாஹூகலகித்துலான பிரதேசம் ஆரம்பத்தில் 1996 ஜூலை 01 ஆம் திகதி வனவிலங்கு சரணாலயமொன்றாகப் பெயரிடப்பட்டது. பின்னர் 1980 ஒக்டோபர் 31 ஆம் திகதி இவ்வொதுக்கப் பிரதேசம் தேசிய பூங்காவொன்றாக உயர்த்தப்பட்டது. குமண தேசிய பூங்காவுக்கு அண்மையில் அமைந்துள்ள இப்பூங்கா ஒரு புறத்தில் பொத்துவில்- மொனராகலை பெருந்தெருஆகும். யுத்த மோதலினால் நீண்ட காலமாக காடாகவே இருந்த லாஹூகல – கித்துலான தேசிய பூங்கா அண்மைக் காலத்திலிருந்து மக்களின் சுற்றுப் பயணத்துக்காகத் திறக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள லாஹூகல கித்துலான தேசிய பூங்கா முழுமையாக உலர் வலயத்துக்கு உரித்தானது. இத்தேசிய பூங்கா கொழும்பிலிருந்து 318 கிலோமீற்றருக்கு அண்மித்த தூரத்தில் அமைந்துள்ளது. பிரதேசத்தின் சாதாரண வருடாந்த மழைவீழ்ச்சி சுமார் 1,650 மில்லிமீற்றர் ஆவதோடு வடகீழ் பருவமழையினால் நவம்பர் முதல் டிசம்பர் வரையான காலப் பகுதியினுள் இப்பிரதேசத்துக்கு மழை கிடைக்கின்றது. மே முதல் ஒக்டோபர் வரையும் ஜனவரி முதல் மார்ச் வரையும் வரண்ட காலநிலையொன்று நிலவுகின்றது. வெப்பநிலை 26-29 இடையிலான சென்டிகிரேட் பாகை ஆகும். பூங்காவின் நிலப் பிரதேசம் பாறையுடைய நிலத்துடன் கூடிய தட்டையான வடிவமாகும்.
இரவுக் காட்சி
நீலகிரி தூபி என்று அழைக்கப்படுகின்ற 1 ஆம் நூற்றாண்டு வரை செல்லும் பாரிய புராதன தூபியொன்றினைக் கொண்ட இந்நிலம் வரலாற்று இடமொன்றாகும். 72 அடி உயரமுள்ளதும் 597 அடிசுற்றளவினைக் கொண்ட இப்பெரிய தூபி காவன்திஸ்ஸ மன்னன் (கி.மு. 205-161) இனால் நிர்மாணிக்கப்பட்டதென நம்பப்படுகின்றது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அங்குள்ள பெரும்பாலான மர்மங்களை வெளியிடுவதற்கு முயற்சிப்பதனால் இப்பாதுகாப்பான புராதன இடம் அகழ்வுகளை மேற்கொண்டு புனர்நிர்மாணம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது. மகுல் மகா விகாரை பூங்காவின் வட எல்லையில் அமைந்துள்ள புராதன விகாரையொன்றாகும். அக்காலத்தில் இவ்விகாரை உத்த்ர உத்ர சீவலி பப்பத விகாரை என அழைக்கப்படுகின்றது. மன்னன் விகார மகாதேவியுடன் திருமணம் செய்த இடம் இது என கூறப்படுகின்றது. திருமண வைபவம் இடம்பெற்ற “மகுல் மடுவவின்” அத்திவாரத்தினை இன்னும் விகாரையின் வளாகத்தில் காண முடிகின்றது. இவ்விகாரையின் வளாகம் சுமார் 10,000 ஏக்கர் பிதேசம் பூராகவும் பரந்திருந்ததோடு, மாளிகையொன்று, சந்திரவட்டக்கல்லொன்று, ஆராமையொன்று, அரச மரத்தடியிலுள்ள முற்றமொன்று, தூபி, குளம் போன்றவற்றின் இடிபாடுகளை இடத்துக்கிடம் காண முடிகின்றது. இங்குள்ள சந்திரவட்டக்கல் இந்நாட்டிற்கே சிறப்பானதாக இருப்பது சந்திரவட்டக்கல்லிற்குள் யானைகளும் யானைப் பாகன்கள் நால்வரும் செதுக்கப்பட்டுள்ள ஒரே இடம் இது என்பதனாலாகும்.
இங்குள்ள தாவரங்கள் இலங்கை வரண்ட வலய உலர்ந்த பசுமையான காடுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இங்குதாவர கலவைகளில் பாலை, வீரை, வேம்பு, முதிரை,சாவண்டலை மரம், காட்டுநொச்சி போன்ற தாவர வகைகள் உள்ளன. லாஹூகலவிற்கு அண்மையில் யானைகளின் விருப்பமான உணவொன்றான முதன்மையான புல் இனமொன்றானகப்ஸ்கேல் புல்நிலங்கள் இருப்பதனால் யானைகள் அங்கு அடிக்கடி சுற்றித் திரிகின்றன. இப்பிரதேசம் யானைகளின் உணவுக் களஞ்சியமாகவும் அழைக்கப்படுகின்றது.
கப்ஸ்கேல் புற்களை உண்ணும் யானைகள்
செங்குரங்கு, தேன் கரடி, பொன்னிறக் குள்ளநரி, துரும்பன் பூனை, மீன்பிடிப் பூனை, காட்டுப் பன்றி, ஆசிய யானை, இலங்கைப் புள்ளிமான், மரை, கேளையாடு போன்ற பாலூட்டிகளும், காட்டுக்கோழி, செந்நாரை, மஞ்சள் மூக்கு நாரை,சிறுத்த பெரு நாரை, வெள்ளை வயிறு கொண்ட கடல் கழுகு, சாம்பல் தலை மீன்பிடிக் கழுகு, செம்முகப் பூங்குயில், இலங்கைச் சுண்டங்கோழி போன்ற பறவைகளையும் இங்கு கண்டு கொள்ள முடியும்.
(Bufo atukoralei), (Fejervarya limnocharis) மற்றும் (Polypedates maculatus)எனும் ஈரூடகவாழிகள் பூங்காவினுள் இனங்காணப்பட்டுள்ளன. மலைப்பாம்பு, சாரைப்பாம்பு, இரட்டைப்பட்டை மரப்பாம்பு,இலங்கை பூனைப்பாம்பு, கண்ணாடி விரியன், கறுப்பு ஆமை, பால் ஆமை மற்றும் நட்சத்திர ஆமை என்பன பூங்காவிலுள்ள ஊர்வனவைகளாகும்.
லாஹூகல கித்துலான தேசிய பூங்கா ஒளிந்துள்ள இரத்தினமாகும். அது வனவிலங்குகள் தொடர்பில் உன்னதமான பூங்காவாகும். இப்பூங்கா இலங்கையின் யானைகள் பாரிய எண்ணிக்கைக்கு பிரசித்தமானதோடு, ஜூன் மற்றும் ஆகஸ்ட்டுக்கு இடையிலான காலப் பகுதியினுள் யானைகள் சுமார் 150 இனைக் கொண்ட கூட்டங்களைக் கண்டுகொள்ள முடியும்.
பார்வையாளர்களுக்கு வனவிலங்கு வளங்களை அனுபவிப்பதற்கு உயர்ந்த, காடான்றில் வாழும் உயர்ந்த பட்சமான அனுபவமொன்றை தமது வாழ்க்கைக்கு இணைத்துக் கொள்வதற்கான சுற்றுலாப் பயணிகளின் தங்குமிட வசதிகளுக்காக லாஹூகல மஹவெவக்கு அண்மையில் சுற்றுலா விடுதி அமைக்கப்பட்டுள்ளதோடு அதனை ஒதுக்கிக் கொள்வது கொழும்பில் அமைந்துள்ள வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தினால் இடம்பெறுகின்றது. இயற்கை அழகின் இரசனையை சுதந்திரமாக அனுபவிப்பதற்கு கரந்த ஓயா, கித்துலானல, பண்டாரபட்டியவில் முகாம் நிலங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
Sinhala Names | Tamil Names | English Names | Scientific Name |
ශ්රීලංකා දිවියා | சிறுத்தை | Leopard | Panthera pardus kotiya |
අලියා | ஆசிய யானை | Asian elephant | Elephas maximus |
වලහා | தேன் கரடி | Sloth bear | Melursus ursinus |
නරියා | நரி | Golden jackal | Canis aureus |
වල් ඌරා | காட்டுப்பன்றி | Wild boar | Sus scrofa |
හදුන් දිවියා | மீன்பிடிப்பூனை | Fishing cat | Prionailurus viverrinus |
කොළදිවියා | துரும்பன் பூனை | Rusty spotted cat | Prionailurus rubginosus |
මුවා | இலங்கைப் புள்ளிமான் | Spotted deer | Axis axis ceylonensis |
ගෝනා | மரை | Sambar | Rusa unicolor |
මීමින්නා | கேளையாடு | Indian muntjac | Muntiacus muntjak |
ලංකා වළි කුකුළා | இலங்கை காட்டுக்கோழி | Sri lankaJunglefowl | Gallus lafayetti |
කරවැල් කොකා | செந்நாரை | Purple heron | Ardea purpurea |
ලතු වැකියා | மஞ்சள் மூக்கு நாரை | Painted stork | Mycteria leucocephala |
හීන්මානාවා | சிறுத்த பெரு நாரை | Lesser adjutant | Leptoptilos javanicus |
සුදු පපුව සහිත මුහුදු රාජලියා | வெள்ளை வயிறு கொண்ட கடல் கழுகு | white-bellied sea eagle | Haliaeetus leucogaster |
වැව් රාජාලියා | சாம்பல் தலை மீன்பிடிக் கழுகு | Grey headed fish eagle | Haliaeetus ichthyaetus |
වතරතු මල්කොහා | செம்முகப் பூங்குயில் | Red-faced malkoha | Phaenicophaeus pyrrhocephalus |
හබන් කුකුලා | இலங்கைச் சுண்டங்கோழி | Sri lankaSpurfowl | Galloperdix bicalcarata |
ඇමිබියා (ගෙම්බන්) විශේෂ | எமிபியா (தவளை) இனங்கள் | Amphibians Sps. | Bufo atukoralei |
Fejervarya limnocharis | |||
Polypedates maculatus | |||
පිඹුරා | மலைப்பாம்பு | Sri Lanka phython | Python molurus |
ගැරඬියා | சாரைப்பாம்பு | Rat snake | Ptyas mucosa |
මල්සරා | இரட்டைப்பட்டை மரப்பாம்பு | Banded flying snake | Chrysopelea sps. |
මාපිලා | இலங்கை பூனைப்பாம்பு | Cat snake | Boiga sps. |
තිත් පොළඟා | கண்ணாடி விரியன் | Russell’s viper | Vipera russelli |
ගල් ඉබ්බා | கறுப்பு ஆமை | Hard shelled terrapin | Melanochelys trijuga |
කිරි ඉබ්බා | பால் ஆமை | Soft shelled terrapin | Lissemys punctata |
තාරකා ඉබ්බා | நட்சத்திர ஆமை | Star tortoise | Testudo elegans |
Sinhala Name | Tamil Name | English Name | Scientific Name |
පලු | பாலை | Palu | Manilkara hexandra |
වීර | வீரை | Hedge Box wood | Drypetes sepiaria |
කොහොඹ | வேம்பு | Kohomba | Azadirachta indica |
බුරුත | முதிரை | Satinwood | Chloroxylon swietenia |
මිල්ල | காட்டு நொச்சி | Milla | Vitex altissima |
හල්මිල්ල | சாவண்டலை மரம் | Halmilla | Berraya cordifolia |
බෙරු | கப்ஸ்கேல் புல் | Cupscale grass | Sacciolepis interrupta |
தொகுப்பாளர் – தம்மிகாமல்சிங்ஹ, மேலதிக செயலாளர், வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சு பகுதி, விவசாய மற்றும் வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சு
பூங்கா பற்றிய தகவல்களைத் தொகுத்தவர்– ஹஸினி சரத்சந்திர, பிரதம உத்தியோகத்தர், வன பாதுகாப்புத் திணைக்களம் மஹேக்ஷா சதுராணி பெரேரா,அபிவிருத்தி உத்தியோகத்தர்,வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம்
தமிழ் மொழிபெயர்ப்பு– ஏ.ஆர்.எப். றிப்னா, அபிவிருத்தி உத்தியோகத்தர், (விவ. வனஜீ.வன. வள. பா. அ)
ஆங்கில மொழிபெயர்ப்பு– அசோக பலிஹவடன, மொழிபெயர்ப்பாளர், (விவ. வனஜீ.வன. வள. பா. அ)
இணைய வடிவமைப்பு–என்.ஐ கயத்ரி, அபிவிருத்தி உத்தியோகத்தர், (விவ. வனஜீ.வன. வள. பா. அ) – சீ. ஏ. டீ. டீ. ஏ.கொல்லுரே, முகாமைத்துவ சேவைஉத்தியோகத்தர், (விவ. வனஜீ.வன. வள. பா. அ)
படங்கள்– கோலித நுவன் ஜயசிங்ஹ
Cookie | Duration | Description |
---|---|---|
cookielawinfo-checkbox-analytics | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". |
cookielawinfo-checkbox-functional | 11 months | The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". |
cookielawinfo-checkbox-necessary | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". |
cookielawinfo-checkbox-others | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. |
cookielawinfo-checkbox-performance | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". |
viewed_cookie_policy | 11 months | The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. |