நான் ஆதமின் பாலம் தேசிய சமுத்திரப் பூங்காவுக்கு 202 ஜனவரி மாதத்தில் சேவையில் இணைந்தேன். அது வன விலங்கு வட்டார பாதுகாவலர் ஒருவராகவேயாகும். இது எனது முதலாவது நியமனமாகும்.
தீவின் மூலை தலைமன்னார் ஆகும். தலைமன்னாரிலிருந்து இந்தியாவின் ராமேஷ்வரன் வரை சுமார் 17 தீவுகள் உள்ளன. அவற்றுள் இலங்கையின் கடல் எல்லையிலுள்ள தீவுகள் எட்டின் உரிமை இலங்கைக்குரியது. இத்தீவுகளுக்கு அண்மையிலேயே ஆதமின் பாலம் தேசிய சமுத்திர பூங்கா உள்ளது. எஞ்சிய 9 தீவுகளின் உரிமை இந்தியாவுக்கேயுள்ளது.
இங்கே இருப்பது சிறிது கடினமாக சுற்றுச் சூழலொன்றாகும். தலைமன்னார் மக்களில் அதிகளவானோர் தமிழர் மற்றும் முஸ்லிம்களாவர். பொலிஸ் மற்றும் கடற் படையினரைப் போன்றே அரச நிறுவனங்களில் சிங்களவர்களும் உள்ளனர். இப்பகுதியில் யானைகள், புலிகள், கரடிகள் இல்லாமையினால் வனஜீவராசிகள் திணைக்களம் மக்கள்மயப்படுத்தப்படவில்லை.
ஆதமின் பாலம் தேசிய சமுத்திர பூங்காவில் தீவுகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சமுத்திரம் மிக அழகான சூழல் அமைப்பாகும். கடற் புல் வலயமொன்றும் உரித்தாகின்றது. கடற் பன்றிகள், கடலாமைகள் மற்றும் மீன்களும் உள்ளன. கடற் பன்றிகள் மற்றும் கடலாமைகள் ஏனைய இடங்களுக்கு முட்டையிடச் செல்கின்றன. இங்கே இனப்பெருக்கச் செயற்பாட்டுக்கும் உணவைத் தேடிக் கொளவதற்குமே வருகின்றன. அதனால் அவைகளுக்கு சூழல் அமைப்பு முக்கியமானதாகும்.
மணற் தீவுகள் 3, 4, 5 இனை சார்ந்த புலம்பெயர் பறவைகள் ஒரு காலத்திற்கு முட்டையிடுகின்றன. அவை ஆலா இனங்களாகும். ஒரு காலத்திற்கு தீவுகளில் கால் பதித்துச் செல்ல முடியாத அளவுக்கு முட்டை இடுகின்றன. இந்த எட்டு தீவுகளிலும் பறவைகள் சுமார் பத்தாயிரம் உள்ளன. சூரியன் மறையும் நேரத்திற்கு மிக அழகான காட்சியைக் காண முடிகின்றது.
இத்தீவுகளின் அமைப்பு நாளுக்கு நாள் மாறுபடுகின்றது. சுமார் ½ சதுர கிலோமீற்றர் தீவுகள் உள்ளன. 1 வது தீவு மன்னார் தீவுடன் இணைந்துள்ளது. மன்னார் தீவு ஆதமின் பாலத்துக்கு உரித்தானதல்ல.
ஆதமின் பாலம் பூங்காவுக்கே உரித்தான முழுப் பிரதேசமும் சுமார் 18,000 ஹெக்டயார் ஆகும். அதில் நிலம் சிறிதளவானதாகும். மீதி கடலாகும். வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு படகொன்று உள்ளது. நாம் பரிசொதனைக்கு அப்படகிலே செல்வோம். அதனால் கடல் சீற்றமான காலத்துக்குச் செல்வது கடினமானதாகும். கடல் மிதமான காலத்திற்குச் செல்வோம். அக்காலத்தில் புகையிரதத்தில் தலைமன்னாருக்கு வந்து படகில் இந்தியாவின் ராமேஷ்வரன் மற்றும் தனுஷ்கோடி செல்வதற்கு படகு வசதிகள் இருந்துள்ளது. இன்னும் உடைந்த ஜெடிகள் (Piers) 2 உள்ளன.
ஆதமின் பாலம் தொடர்பில் புராதன கதைகள் சிலவும் உள்ளன. இராவணன் மன்னன் சீதையை இலங்கைக்குக் கொண்டு வந்ததன் பின்னர் இராம மன்னனுக்கும் படைக்கும் அனுமானும் வானரப் படை செய்த பாதை என்பதாகும். அது ஒரு புராதன கதையாகும்.
அதற்கு மேலதிகமாக “ஆதம்” மற்றும் “ஏவாள்” பற்றியும் புராதன கதையொன்று உள்ளது. இப்பகுதியில் மிதக்கும் கல் இனமொன்று இருந்ததனால் கல்லுக்குக் கல் பாய்ந்து ஆதமிற்கு ஏவாளைத் தேடிக் கொள்ள முடிந்தது என்பதாகும்.
இந்நிகழ்வு தலைமன்னாரில் “நடு குடா” எனும் பிரதெசத்தில் இடம்பெற்றது. அன்று 12.12.2021 ஆம் திகதி. தேசிய பூங்கா ஊருமலை எனும் பிரதேசத்தில் ஆரம்பிக்கின்றது. எமது அலுவலகம் இருப்பது ஊருமலையில் ஆகும். அங்கிருந்து நடுக்குடாவிற்கு சுமார்15 கிலோமீற்றர் உள்ளது.
இரண்டு மீன்கள் பெரிய வலையொன்றில் சிக்குண்டுள்ளதாக மீனவர் ஒருவரிடமிருந்து அலுவலகத்துக்கு தொலைபேசி அறிவிப்பொன்று கிடைத்தது. நாம் ஆய்வு செய்வதற்கு வெளியாகினோம். நான் வட்டார உதவியாளருடன் மோட்டார்சைக்கிளில் சென்றேன். இன்னும் பாதுகாப்பு உத்தியோகத்தரும் படகு செயற்படுத்துனரும் பஸ்ஸில் வந்தனர்.
நாம் சென்று பார்க்கும் போது பெரிய வலைக்கு அகப்பட்டிருப்பது மீனன்று கடற் பன்றிகள் இரண்டாகும். இலங்கையில் கடற்கரைக்கு அண்மையில் அவை சிலதே உள்ளன. உயிருடனிருக்கும் கடற்பன்றிகளைக் கண்டவர்கள் இங்கு இல்லை. இறந்து கடலில் கரைக்கு ஒதுங்கியவைகளையே நாம் காண்கின்றோம். அதுவும் வருடத்துக்கு ஒன்று.
இங்கிருந்த உயிரினங்கள் ஆணும் பெண்ணுமாகும். பெண் உயிரினம் பெரியது. சுமார் 4 அடி 6 அங்குலமாகும். ஆண் விலங்கு சுமார் 7 அடியாகும். பார்த்தவுடனேயே தாயும் மகனும் என விளங்கிற்று.
நாம் செல்லும் போது மீனவர்கள் பெரிய வலையைக் கழற்றி இரண்டு உயிரினங்களும் கரையில் இருந்தன. தாயிடமிருந்து பால் வடிவதைக் கண்டதும் குட்டி தாயிடம் பால் குடித்துக் கொண்டிருந்திருக்கும் என விளங்கிற்று. சில நேரம் தாய்க்கு வலையைக் கிழித்துக் கொண்டு செல்ல முடியுமாக இருந்திருக்கும். எனினும் குட்டியுடன் தங்கியிருந்திருக்கலாம்.
அதன் பின்னர் நான் உதவிப் பணிப்பாளர் அவர்கள் மற்றும் பிரதான அலுவலகத்துடன் கதைத்து ஆலோசனை கேட்டேன். இரண்டு விலங்குகளையும் பாதுகாக்க வேண்டும் என்று பிரதான அலுவலகத்திலிருந்து ஆலோசனை கிடைத்தது. அதன் பின்னர் நாம் லொறியொன்றில் தலைமன்னாரிற்குஇறந்தவைகளைக் கொண்டு வந்து மீன்களை இடும் குளிரூட்டியில் இட்டோம். டோலர் ஒன்றினாலேயே ஏற்றி இறக்கினோம். உயிரினங்களின் மரண பரிசோதனையை கிளிநொச்சி விலங்கு வைத்தியர் நடாத்தினார். வலைக்கு சிக்கி மூச்செடுக்க முடியாது உயிரினங்கள் இறந்தன என அறிக்கை கிடைத்தது. மரண பரிசோதனையின் பின்னர் உடல் இரண்டையும் பாதுகாப்பதற்கு கல்பிட்டிய வட்டார பாதுகாப்பு அலுவலகத்துக்கு அனுப்பினோம். பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காகவே அங்கு அனுப்பினோம்.
தற்போது பாதுகாப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்து கொண்டுள்ளன.
கடற் பன்றிகள் பாதுகாக்கப்பட்ட அரிய உயிரினங்கள் ஆகும். இவ்வுயிரினங்கள் இரண்டினதும் இறப்பு எனக்குள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனால் இந்நிகழ்வு எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவொன்றாக உள்ளது.
திரு.கே. டப்ளியூ. மல்ஷான் அவர்கள்19.11.2021 ஆம் திகதி வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு சேவையில் இணைந்தார். க.பொ. த. உயர் தரத்தில் உயிரியல் விஞ்ஞான பாடத்தில் சித்தியடைந்துள்ளமையினால் போட்டிப் பரீட்சைக்குத் தோற்றி பின்னர் அதில் சித்தியடைந்து நேர்முகப் பரீட்சையொன்றில் சித்தியடைந்ததன் பின்னர் வனஜீவராசிகள் திணைக்களத்தில் 3 ஆம் தரத்தில் வன விலங்கு வட்டார பாதுகாவலொருவராக அவர் சேவையில் இணைந்தார்.
வில்பத்து வலயம் 4 ஆம் இலக்க தந்திரிமலை வட்டார பாதுகாப்பு அலுவலகம் மற்றும் நல்லதென்ன வட்டார பாதுகாப்பு அலுவலகத்தில் 6 மாத கால பயிற்சியின் பின்னர் மல்ஷான் அவர்கள் முதலாவது நியமனத்தை ஆதமின் பாலம் சமுத்திர சரணாலயத்துக்குப் பெற்றார்.
விலங்குகளுக்கு உள்ள விருப்பத்தினால் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு இணைந்த அவர் தமது கடமையை மகிழ்ச்சியுடனும் அர்ப்பணிப்புடனும் மேற்கொண்டு வருகிறார். தற்போது அவர் வனஜீவராசிகள் திணைக்களத்தில் ஆயுதப் பயிற்சி மற்றும் சட்டம் பற்றிய பயிற்சியைப் பெற்றுள்ளார்.
மல்ஷான் அவர்கள் அனுராதபுரம் மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றுள்ளார்.
இன்னும் திருமணமாகாத அவர், தாய், தந்தை மற்றும் தங்கையுடன் 127, வட வந்தனா வீதி, குட்டம் பொகுண, அனுராதபுரம் எனும் முகவரியில் வசிக்கிறார்.
வரலாற்று, உயிரியல் விஞ்ஞான, சூழல் விஞ்ஞான ரீதியில் முக்கியமான இடமொன்றாக மன்னார் கடல் எல்லைக்குரியதாக அமைந்துள்ள மணற் தீவுகள் சமூகம், ஆதமின் பாலம் சமுத்திர தேசிய பூங்காவாக 2015 ஜூன் மாதம் 22 ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டது. வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் இதுவரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ஒதுக்கப் பிரதேசங்களில் வர்த்தமானிப் பத்திரிகையில் ‘சமுத்திர’ எனும் வசனம் உட்பட பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ஒரேயொரு ஒதுக்கப் பிரதேசமும் இதுவாகும். உவர் சதுப்புநிலச் சூழல் அமைப்பொன்றாக இலங்கையில் வட மாகாணத்தில் மன்னார் மாவட்டத்தில் தலைமன்னார் தீவிலிருந்து இந்தியாவின் தனுஷ்கோடி வரை வியாபித்திருக்கும் மணற் தீவுகளின் எல்லை வரை பிரதான தீவுகள் 08 மற்றும் சுற்றிலுமுள்ள ஆழமற்ற கடற் பிரதேசம் இதற்கு உரித்தாகின்றது. வனவிலங்கு மற்றும் தாவர பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் மொத்த நில அளவு 18990 ஹெக்டயார் முழுவதும் வியாபித்துள்ளது. இலங்கையிலிருந்து இந்தியா வரை செல்லும் தீவுகளின் கூட்டத்துடன் தொடர்புடைய கடல் பகுதி ஆழமற்றதாவதோடு அதற்கு காரணமாக இருப்பது மன்னாரைச் சுற்றிப் பரவியுள்ள பவளப் பாறை அமைப்பாகும்.
கடந்த காலத்திலிருந்து இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையிலான எல்லை ஒரு காலத்தில் நிலப்பரப்பாக ஒன்றிணைந்தும் இன்னொரு முறை கடல் நீரினால் மூழ்கியும் இருந்தன. தொடர்பானது இன்றைக்கு சுமார் 10000-7000 வருடங்கள் முன்னரான ஐஸ் யுகத்தில் இரு நாடுகளின் பிரிவினையுடன் அது முடிவுக்கு வந்தது. இராமாயணத்தில் குயிப்பிடப்பட்டுள்ளவாறு இராவணன் மன்னன் இந்தியாவிலிருந்து சீதா தேவியை கடத்தி லங்காபுரவிற்குக் கொண்டு வருவதற்காக இராம மன்னனுக்கு யுத்த படையை இந்தியாவிலிருந்து இங்கு கொண்டு வருவதற்காக 40000 க்கும் அதிகமான வானரப் படை அமைத்துத் தந்த பாலம் அனுமான் பாலம், இராமன் பாலம் என்பது இந்து பக்தர்களின் நம்பிக்கையாகும். மேலும் முஸ்லிம் பக்தர்களைப் போன்றே கிறிஸ்தவ பக்தர்களினதும் பல்வேறுபட்ட வரலாற்று நம்பிக்கைகள் மற்றும் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு பிற்பட்ட காலங்களில் ஆதமின் பாலம் எனவும் இனங்காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. அதனால் இது கலாச்சார ரீதியாக மிகவும் கௌரவத்துக்குட்பட்ட நிலமொன்றுமாகும்.
ஆதமின் பாலம் தேசிய பூங்காவில் விசேடமான அம்சமாவது தீவுகளாகும். பிரதானமாக உவர்நீர் சதுப்பு நிலமொன்றாக இனங்காணப்பட்டாலும் சில தீவுகளிலுள்ள நீர்த்தேக்கங்களில் உள்ள கடல் நீரில் குறைந்த உவர்த்தன்மையினைக் காண முடிகின்றது. குறிப்பாக காற்று நீரோட்டங்கள் மற்றும் கடலலைகளால் இங்குள்ள தீவுகளின் அமைப்பு அடிக்கடி மாறுதல்களுக்கு உட்படுகின்றது. அரை வறண்ட காலநிலையொன்றைக் காணக் கிடைக்கின்ற இங்கு கடற் காற்றின் காரணமாக பெரும் வெப்பநிலை இருப்பது தெரிவதில்லை.
தீவுகளிலுள்ள நீர்க் குழிகள்
பல்வேறுபட்டதாவரங்களைக்கொண்டசூழல்
விலங்கினங்களில் பிரதானமானவையாக கண்டு கொள்ள முடிவது பறவையினங்களை ஆகும். ஈர நிலங்குக்கு புலம்பெயரும் மற்றும் தங்கி நிற்கும் பறவையினங்கள் சுமார் 38 பதிவு செய்யப்பட்டுள்ளன. தங்கியுள்ள கடல் ஆலா பல இனங்கள் தமது கூடுகளை அமைத்து முட்டையிடும் மிக உணர்திறன்மிக்க இனப்பெருக்க பகுதியொன்றாகும். அவற்றுள் கஸ்பியன் ஆலா, பெரிய கொண்டை ஆலா, சிறிய கொண்டை ஆலா, மீசை ஆலா போன்றதங்கும் ஆலாக்களின் முட்டைக் கூடுகள் ஆயிரக் கணக்கில் இங்கு இருப்பதோடு எமது நாட்டில் பதிவு செய்யப்படுகின்ற ஆலாக்களில் பெரிய இனப்பெருக்க கூடுகள் அமைக்கும் வலயமாக 02, 03, 05 போன்ற தீவுகளைக் காட்ட முடியும். மிக அரிதான ஐரோவாசியா சிப்பி பிடிப்பான், எனும் சேற்று நிலங்களில் மாத்திரம் வாழ்வதற்கு விரும்பும் சிப்பிகளின் மேல் சார்ந்துள்ள பறவையும், தெரக்கு உள்ளான், வெள்ளை உள்ளான், பட்டைவால் மூக்கன், உள்ளான் போன்ற சில அரிய புலம்பெயர் பறவைகளும் இங்கு காணப்படுகின்றன.
கூட்டமாக உள்ள பெரிய கொண்டை ஆலாக்கள்
பூங்காவில் வண்ணத்துப்பூச்சியினங்கள் 08 மற்றும் அந்துப்பூச்சியினங்கள் 06 உம் கிடைப்பதோடு மிகவும் அழகான சிவப்புடல் அழகி வண்ணத்துப்பூச்சியினமும் இங்கு காணப்படுகின்றது. தும்பி இனங்கள் 07 இனையும் இச்சூழலில் கண்டுகொள்ள முடியும். ஊர்வன இனங்களாக பொதுவான தோட்டப்பல்லி மற்றும் நன்னீர் ஆமையினங்கள் 02 உம், தோணியாமை, ஒலிவ நிறச் சிற்றாமை போன்றவற்றையும் கண்டு கொள்ள முடியும்.
பூங்காவில் உயிர்ப் பல்வகைத்தன்மை பறவைகளுக்காக தங்குமிடமாக இருப்பது மற்றும் உணவினை இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடியுமென்பதனால் தங்குகின்ற ஆலா இனங்களின் கூடு கட்டும் இடங்களைப் பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுப்பது முக்கியமானதாகும். அவ்வாறே உலகில் அதிகமான அளவு அழிவுறும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ள கடற் குதிரைகள் எனும் விலங்கினங்களின் வாழிடங்களைப் பாதுகாப்பதற்கும் இலங்கையில் பதிவுசெய்யப்படுகின்ற அனைத்து கடலாமை இனங்களும் இதனைச் சுற்றியுள்ள பிரதேசங்கள்,இனப்பெருக்கப் பரதேசங்களாக பயன்படுத்துவதனாலும் இப்பிரதேசத்தைப் பாதுகாப்பது மிக முக்கியமாகும். இன்னும் புலம்பெயர் பறவைவகள் தீவுக்கு வரும்போதும் தீவிலிருந்து வெளியே செல்லும் போதும் இங்கு நான்காம் தீவு பறவைகளின் தங்குமிடமாகப் பயன்படுத்துவதற்கு பழகியிருப்பதும் விசேடமானதாகும்.
சேது சமுத்திரம், அனுமான் பாலம் மற்றும் ஆதமின் பாலம் என்றவாறான பெயர்களைக் கொண்ட இம்மணற் தீவுகளின் கூட்டம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பொருளாதார, சமூக, கலாச்சார ரீதியாக முக்கியமான பல தொடர்புகளைக் கொண்டமைந்த அற்புதமான இயற்கை வெளியீடாகும். புவியியல் சாட்சியின்படி இப்பாலம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் புராதன நிலத் தொடர்பினைக் கொண்டதாகும்.
வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஆய்வுக் குழுவொன்றினால் இங்குள்ள உயிர்ப் பல்வகைத்தன்மையின் ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டதோடு அங்கு கவனிக்கப்பட வேண்டிய உயிர்ப் பல்வகைத்தன்மையொன்று போன்றே சூழல் முக்கியத்துவமும் உள்ளதென மேலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
Sinhala Names | Tamil Names | English Names | Scientific Name |
කැප්සියා මුහුදුළිහිණියා | கஸ்பியன் ஆலா | Capsian tern | Sterna caspia |
මහ කොණ්ඩ මුහුදුළිහිණියා | பெரிய கொண்டை ஆலா | Great crestedtern | Thalasseus bergii |
හීන් කොණ්ඩ මුහුදුළිහිණියා | சிறிய கொண்டை ஆலா | Lesser crested tern | Thalasseus bengalensis |
අළුපිය කාන්ගුල්ළිහිණියා | மீசை ஆலா | Whiskered tern | Chlidonias hybrida |
යුරාසියා බොලුගුල්ලා | ஐரோவாசியா சிப்பி பிடிப்பான் | Eurasian oystercatcher | Haematopus ostralegus |
ටෙරෙක් සිලිබිල්ලා | தெரக்கு உள்ளான் | Terek sandpiper | Xenus cinereus |
වැලිහින්නා | வெள்ளை உள்ளான் | Sanderling | Calidris alba |
වයිරපෙද ගොහොදුවිත්තා | பட்டைவால் மூக்கன் | Bar-tailed godwit | Limosa lapponica |
දුඹුරු හින්නා | உள்ளான் | Dunlin | Calidris alpina |
සෙව්වන්දියා | சிவப்புடல் அழகி | Crimson rose | Pachliopta hector |
ගරා කටුස්සා | பொதுவான தோட்டப்பல்லி | Common garden lizard | Calotes versicolor |
කොළ කැස්බෑවා | தோணியாமை | Green sea turtle | Chelonia mydas |
බටු කැස්බෑවා | ஒலிவ நிறச் சிற்றாமை | Olive ridley sea turtle | Lepidochelys olivacea |
Sinhala Name | Tamil Name | English Name | Scientific Name |
මුහුදුබිම් තඹුරු | அடும்பு | Bay hops or beach morning glory | Ipomoea pescaprae |
බැරිය | தீப்பரத்தை | White flowered black mangrove | Lumnitzera racemosa |
හීන් තක්කඩ | – | – | Scaevola plumieri |
මහා රාවණ රැවුල | இராவணன் மீசை | Ravan’s moustache | Spinifex littoreus |
தொகுப்பாளர் – தம்மிகாமல்சிங்ஹ, மேலதிக செயலாளர், வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சு
பூங்கா பற்றிய தகவல்களைத் தொகுத்தவர்– ஹஸினி சரத்சந்திர, பிரதம உத்தியோகத்தர், வன பாதுகாப்புத் திணைக்களம் மஹேக்ஷா சதுராணி பெரேரா,அபிவிருத்தி உத்தியோகத்தர்,வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம்
தமிழ் மொழிபெயர்ப்பு– ஏ.ஆர்.எப். றிப்னா, அபிவிருத்தி உத்தியோகத்தர், (வனஜீ.வன. வள. பா. அ)
ஆங்கில மொழிபெயர்ப்பு– அசோக பலிஹவடன, மொழிபெயர்ப்பாளர், (வனஜீ.வன. வள. பா. அ)
இணைய வடிவமைப்பு–என்.ஐ கயத்ரி, அபிவிருத்தி உத்தியோகத்தர், (வனஜீ.வன. வள. பா. அ) – சீ. ஏ. டீ. டீ. ஏ.கொல்லுரே, முகாமைத்துவ சேவைஉத்தியோகத்தர், (வனஜீ.வன. வள. பா. அ)
படங்கள்– ரோஹித குணவர்தன, வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம்
Cookie | Duration | Description |
---|---|---|
cookielawinfo-checkbox-analytics | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". |
cookielawinfo-checkbox-functional | 11 months | The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". |
cookielawinfo-checkbox-necessary | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". |
cookielawinfo-checkbox-others | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. |
cookielawinfo-checkbox-performance | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". |
viewed_cookie_policy | 11 months | The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. |