எனக்கு2006 ஆம் ஆண்டில் கலமெட்டிய வட்டார பாதுகாப்பு அலுவலகத்துக்கு இடமாற்றம் கிடைத்தது. கலமெட்டிய வட்டார பாதுகாப்பு அலுவலகத்துக்கு அருகிலேயே உஸ்ஸங்கொட பிரதேசம் இருந்தது. உஸ்ஸங்கொட பிரதேசம் தொல்பொருளியல் திணைக்களத்தினால் பாதுகாக்கப்பட்டது. வன பாதுகாப்பு திணைக்களத்தினால் தூண்டல் பிரதேசமொன்றாக அவ்வொதுக்கத்தைச் சுற்றி பாதுகாத்தது.
உஸ்ஸங்கொட அமைந்திருப்பது அம்பலந்தொட நகரத்துக்கும் ஹுங்கம நகரத்துக்கும் இடையில் செல்லும் பிரதான வீதியில் நோநாகமவிலிருந்து கடல் பக்கத்துக்குச் செல்லும் குறுக்கு வீதியில் சுமார் 2.5 கிலோமீற்றர் தூரத்திலாகும். உஸ்ஸங்கொட பிரதேசத்தில் இரண்டு மலைகளும் பள்ளத்தாக்கு ஒன்றும் புல்விகள் இரண்டும் உள்ளன. இது ஒரு முக்காடாகும். முக்காட்டில் சதுரக்கள்ளி, ஈங்கை, காசன், நாகதாளி, கிளா, பனை, மலைமாதுளை, வெட்புலா போன்ற அரை குறை வரண்ட வலயத்தில் வளரும் முட்புதர் கொண்ட தாவரங்கள் உள்ளன.
முக்காடுகளுக்குத் தூரத்தில் கடலலைகள் வந்து கரையைத் தொடும் விதம் சுவாரிசியமானது. கடல் நீர் நீலக் கல் போன்றது. பகல் காலத்தில் ஆழமற்ற நீரில் அமைதியாக நீந்திக் கொண்டிருக்கின்ற கடலாமைகளை அடிக்கடி காண முடியும். ஐரோவாசியா நத்தைக் குத்திகள், வானம்பாடிகள், மஞ்சள் மூக்கு ஆள்காட்டிகள், சிவப்பு மூக்கு ஆள்காட்டிகள், பனங்காடைகள், பச்சைப் பஞ்சுருட்டான்கள் போன்ற பறவையினங்கள் பலவற்றையும் காண முடியும். அடிவயிற்றுப் பகுதிகள் நிலத்தின் மேல்குழிகளைத் தோண்டி கூடுகளை அமைத்துக் கொண்டிருக்கும் சந்தர்ப்பமொன்றைக் காண முடியும். இப்பிரதேசத்தில் பெரிய இருண்ட நிறப் பல்லி இனமொன்றும் உள்ளது. அதே போன்று முள்ளம்பன்றிகள், புள்ளி மான்கள், புள்ளி சருகுமான்கள், முயல்கள், இந்திய உடும்புகள் போன்ற விலங்குகளும் சில நேரங்களில் வரும் யானைகளையும் காண முடிகின்றது.
உஸ்ஸங்கொட நிலம் தொடர்பாக புராதணக் கதைகள் பல உள்ளன. இராம- இராவணன் கதையில் அனுமான் உஸ்ஸங்கொடயில் ஒளிந்திருந்தார் எனவும் காயத்தை சுகப்படுத்திக் கொள்வதற்கு இந்தியாவிலிருந்து மூலிகைச் செடிகளைக் கொண்டு வந்து நட்டியதாகவும் விஷ்ணுகிராந்தி, சந்திரகிராந்தி போன்ற மூலிகைச் செடிகளே அச்செடிகள் என்பது ஒரு ‘புராணக் கதையாகும்.
இப்பிரதேசம் மங்கல பகவானின் வனம் எனவும் மங்கல பகவானின் வாகனமான ‘மீமா’ தங்கியிருந்த வாவி இங்குள்ள வாவி என்பது இன்னொரு ‘புராணக் கதையாகும். இந்நிலம் பூமியினுள் மாறுபடும் இடமொன்று எனவும் பூமியினுள் மாறுபடும் அடிப்படையில் மதுனாகல வெந்நீர் கிணறு உள்ளதென்பது இன்னொரு ‘புராணக் கதையாகும்.
கலு குமார திஷ்டிய உள்ள பிரதேசமொன்று எனவும் இன்னொரு ‘புராணக் கதையாகும்.
உஸ்ஸங்கொட பிரதேசத்தைப் பார்வையிடுவதற்கு பாடசாலை மாணவர்களும் இளம் ஜோடிகளும் அடிக்கடி வந்தனர். இவர்களின் பணப் பைகள் காதுகள் கழுத்துகளிலுள்ள தங்க ஆபரணங்கள் திருடப்படுவதும் இரவில் வன விலங்குகளை வேட்டையாடுவதும் இடம்பெற்றன. போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்கள் இவற்றை மேற்கொள்வதாகவும் பரவியது. உஸ்ஸங்கொட பிரதேசத்தில் விவசாயக் குழுவின் கூட்டம் அம்பலந்தொட்டை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. நான் அதில் கலந்து கொள்வேன். ஒரு நாள் இக்கூட்டத்தில் பிரதேசப் பொறுப்பு சூழல் அதிகாரி அவர்களினால் உஸ்ஸங்கொட பிரதேசத்தில் சட்ட ரீதியற்ற மனித நடவடிக்கைகளுக்கு இரையாக்கப்பட்ட பிரதேசமொன்றாகப் பதியப்பட்டது. அங்கே அவ்விடத்திலிருந்த விலங்குகள் தாவரங்கள் மற்றும் சூழலின் முக்கியத்துவத்தைப் பற்றி கலந்துரையாடி ரூமஸ்ஸல வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழ் ஒப்படைப்பதற்கு அமைச்சர் உட்பட அனைவரும் தீர்மானித்தோம். பின்னர் வனஜீவராசிகள் திணைக்களத்தின் கலமெட்டிய வன பாதுகாப்பு அலுவலகத்துக்கு ரூமஸ்ஸல பிரதேசத்தின் அண்ணளவான எல்லையொன்றுடன் நிலப் பிரதேசத்தைக் குறிப்பிடுமாறு அறிவிப்பொன்று கிடைத்தது.அதன்படிவனஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருளியல் திணைக்களத்தினால், வன பாதுகாப்புத் திணைக்களத்தினாலும் நில அளவைத் திணைக்களத்தினால் எல்லைகள் கோரப்படுகின்றன. நில அளவைத் திணைக்களத்துக்கு 2 இலட்சங்களைச் செலுத்துமாறு கோருகின்றனர்.
எனினும் எவரிடமிருந்தும் எல்லைகள் கிடைக்கவில்லை. இதற்கிடையில் தனியார்க் கம்பனியொன்றுக்கு ஹோட்டலொன்றைக் கட்டுவதற்கு இவ்விடத்திலிருந்து60 ஏக்கரைக் கேட்டனர். கிராம மக்கள் அதற்கு எதிராகப் போராட்டம் செய்தனர்.
அக்காலத்தில் நான் வனவிலங்கு காப்பாளராக இருந்தேன். தரப்பினரிடையே கடிதங்கள் மாறுவது மட்டுமே. என்னால் என்ன நடக்க வேண்டும் என்பதனை நான் சிந்தித்தேன். நான் தாகத்துக்கு தண்ணீர் போத்தலொன்றை எடுத்துக் கொண்டு ரூமஸ்ஸலவுக்குச் சென்றேன். மூத்த குடிமக்களுடன் கலந்துரையாடி தொல்பொருளியல் திணைக்களத்துக்கும் வன பாதுகாப்புத் திணைக்களத்துக்கும் உரிய எல்லைகளைப் பற்றி அறிந்து கொண்டோம். நான் முட்புதர் வழியாக ஊர்ந்து, கடினமான பாதைகளில் சென்று எல்லைகளைத் தேடினேன். இறுதியாக தொல்பொருளியல் திணைக்களத்துக்குரிய பிரதேசங்கள், வன பாதுகாப்புத் திணைக்களத்துக்குரிய பிரதேசங்களைப் போன்றே இப்பிரதேசங்கள் உள்ளடக்கப்படுகின்ற கிராம அதிகாரிப் பிரிவுகள் இரண்டு காரணமாக அவ்வெல்லையை எனது மனதில் பதிய வைத்துக் கொண்டேன்.
அலுவலகத்தில் நான் இவ்வெல்லைகளைத் தாளொன்றில் வரைந்தேன். உண்மையில் கூறினால் அது ஒரு சித்திரமாகும். நான் மிகவும் சிரமத்துடன் அதனை வரைந்தேன். பின்னர் நான் சித்திரத்தையும் எடுத்துக் கொண்டு வன பாதுகாப்பு அதிகாரி அவர்களைச் சந்திக்கச் சென்றேன். எனினும் அவர்கள் அதனைப் பார்த்து விட்டு எறிந்து விட்டார்கள். வரைபடம் இரண்டாகக் கிழிந்தது. எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. நான் வரைபடத்தின் இரண்டு துண்டுகளையும் எடுத்து ஒட்டி பாதுகாப்பாக வைத்தேன்.
இன்னும் காலம் சென்றது. தற்போது பிரச்சினை உக்கிடமடைந்தது. கிராம மக்கள் போராட்டத் தொடரொன்றைக் கொண்டு செல்கின்றனர். கொழும்பு கதிர்காமம் பிரதான வீதியில் லுணாம பிரதேசத்தினைத் தடுத்தனர். இப்பிரதேசம் தற்பாது வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது என பொறுப்பதிகாரிகள் போராட்டத்தினை நிறைவு செய்தனர்.
அதன் பின்னர் ஒரு நாள் வனஜீவராசிகள் திணைக்களத்தின் உயர் பெண் அதிகாரியொருவர் இன்னொரு குழுவொன்றுடன் விரைவாக வந்தார். உஸ்ஸங்கொட நிலத்தின் எல்லையை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதற்காக உடனடியாக வழங்குமாறு கேட்டார். நில அளவைத் திணைக்களத்துக்கு கடிதங்களை அனுப்பினாலும் பதில்கள் கிடைத்திருக்கவில்லை. நான் வரைந்திருந்த வரைபடத்தைக் கொண்டு வந்து அவர்களுக்குக் காட்டினேன். அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். என்னை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு உஸ்ஸங்கொட நிலத்துக்கு வந்து நிலத்தின் மூலையிலிருந்து ஆரம்பித்து எனது வரைபடத்தின்படி G.P.S.வாசிப்புக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டன.
அன்று பகல் இளநீர் மாத்திரமே எமது உணவாக அமைந்தது. பெண் அதிகாரி அவர்கள் வரைபடத்தினைத் தயார் செய்து கொண்டு கொழும்புக்குப் புறப்பட்டார்.
2010 ம் ஆண்டு மே 06 வியாழக்கிழமை இலக்கம் 1652/49அதிவிசேட வர்த்தமானிப் பத்திரிகை மூலம் 349.077ஹெக்டயாருடன்உஸ்ஸங்கொடதேசியபூங்காவொன்றாகப்பிரகடனப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் எனது பங்களிப்பைப் பற்றி நான் மிகவும் அளவற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.
17 வயதுகளில் 01.12.1983ஆம் திகதி ரஞ்சித் அவர்கள் சிற்றூழியராக நாளாந்த சம்பளத்துக்கு வனஜீவராசிகள் திணைக்களத்தில் இணைந்தார். அப்போதைய நாளாந்த சம்பளம் ரூ.22.50 ஆகும்.
கம்பலகம முகாமொன்றிலிருந்து யானைகளை விரட்டுவதே அவருக்கு ஒப்படைக்கப்பட்ட முதலாவது பொறுப்பாகும்.
அங்கிருந்து வில்பத்து, ஹோர்டன்தென்ன, கதிர்காமம் வட்டார வனம், கல்கே பீட்டு அலுவலகம் போன்ற இடங்களில் அவர் சேவையாற்றினார்.
ரஞ்சித் அவர்கள் 01.12.1988 ஆம் திகதி நிரந்தர ஊழியரொருவராக்கப்பட்டார். அவர் வனவிலங்கு வட்டார உதவியாளரொருவராக 2014 ஆம் ஆண்டு பதவியுயர்வு பெற்றார்.
சேவைக் காலத்தினுள் இந்தியாவின் கல்விச் சுற்றுலாவில் கலந்து கொள்வதற்கு அவருக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது.
ரஞ்சித் அவர்கள் தமது உத்தியோகத்தை அன்பாகவும் பக்தியாகவும் நிறைவேற்றுபவர் ஆவார். தமது உத்தியோகம் பற்றி தான் மிகவும் திருப்தியடைவதாக அவர் கூறுகிறார்.
ரஞ்சித் அவர்கள் மூன்று பிள்ளைகளின் அன்பான தந்தை ஆவார். அவரின் மனைவி தொழில் புரிவதில்லை என்பதோடு மகள் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்கிறார். இரண்டு மகன்களில் ஒருவர் டுபாய் ஹில்டன் ஹோட்டலில் பணி புரிகிறார். அடுத்த மகன் வனஜீவராசிகள் திணைக்களத்தில் வழிகாட்டியொருவராகப் பணியாற்றுகிறார்.
ரஞ்சித் அவர்களின் முகவரி W.D. ரஞ்சித், இல.339, மஹயாய வீதி, மிரிஸ்வத்தை, பெலிஅத்தை ஆகும்.
தேசிய பூங்காவை நிறுவுவதன் நோக்கம் பிரதேசத்தில் உயிர்ப் பல்வகைத்தன்மை, தொல்பொருளியல் ரீதியாகவும் பூகோள மதிப்புக்களுக்காக நீண்ட கால பாதுகாப்பினை வழங்குவதாகும். கிழக்கில் கலமெட்டிய வனவிலங்கு சரணாலயத்துக்கு எல்லையாக இயற்கையின் அபூர்வமான நிர்மாணமொன்றான உஸ்ஸன்கொட இன்று புராணக் கதைகள் பலவற்றுக்கும் உரிமை கோருகின்ற சிறந்த பூமியொன்றைக் கொண்டுள்ளதோடு தொல்பொருளியல் மதிப்பினைக் கொண்ட அரிய சூழல் அமைப்பொன்றாகும். இது இலங்கையின் 21 ஆவது தேசிய பூங்காவாகும். கலமெட்டிய சரணாலயத்தில் உயர்வில் அமைந்துள்ள இப்பிரதேசம் ஆரம்ப காலத்திலிருந்தே உஸ்ஸன்கொட என்னும் பெயரில் அழைக்கப்பட்டது.
உஸ்ஸன்கொட வனமானது தென் இலங்கையில் அமைந்துள்ள விசேடமான சூழல் அமைப்பாகும். இது அமைந்திருப்பது இலங்கைக்கு தென் திசையில் அம்பலந்தொட்டை பிரதேசத்தில் நோநாகம கடற்கரைக்கு அண்மையிலாகும். சுமார் 349.077 ஹெக்டயார்பகுதியில் பரந்துள்ளவரண்ட சுற்றுச்சூழல் அமைப்பொன்றான இது 06.05.2010 ஆம் திகதி வர்த்தமானி இலக்கம் 1652/49இன் கீழ் தேசிய பூங்காவொன்றாகப் பெயரிடப்பட்டது.
உஸ்ஸன்கொட நிலத்தில் உள்ளது கடுஞ் சிவப்பு நிறத்திலான மண் அடுக்காகும். அது பல ஹெக்டயார்கள் பூராக பரந்துள்ளது. ஆனால் இச்சமவெளியில் உள்ள காட்சி என்பதனை வெளிக்காட்டுவது அங்கு பரந்துள்ள கபில நிறத்தைச் சார்ந்த சிவப்பு நிற மண் அடுக்காகும். உஸ்ஸங்காடவைப் பற்றி ஆய்வு செய்யும் விஞ்ஞானிகளின் கருத்தாக இருப்பது சுமார் 15
மில்லியன் வருடங்களுக்கு முன்னே விண்கல்லொன்று உடைந்து விழுந்ததனால் இவ்விசேட நிலம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதாகும். எரிந்ததனால் சிவப்பு நிறத்திலான மண்ணும் உருகிய பாறைகளும் அதற்கு ஆதாரமாக உள்ளன. உஸ்ஸன்கொட அமைந்துள்ள சிவப்பு மண்ணின் மேல் இடத்துக்கிடம் உருகிய இரும்பு எனும் பாறையையும் அதற்கான சாட்சியை வழங்குகின்றது. அவை மிகவும் கனமானவை. விஞ்ஞான ஆய்வுகளின்படி இந்த மண்ணில் பெரிக் ஒக்சைட் 27% மற்றும் சிலிக்கன் ஒக்சைட் 53% அடங்கும். இந்த உலோகத்தின் செறிவு மிக அதிகம் என்பதனால் இங்கு மரங்கள் வளர்வதில்லை. செங்கல் சிவப்பு மண் இதற்கு சாட்சி அளிக்கின்றது. சமவெளியின் மேற்பரப்புக் காட்சியான பாறைப் பகுதிகள் கறுப்பு நிறத்தை அண்டிய கபில- சிவப்பு கலந்த நிறத்தைக் கொண்டுள்ளதோடு உருகி திரவமாக்கப்பட்ட ஒரு வடிவத்தைக் காட்டுகின்றது. விண்கல்லொன்று வெடிக்கும் போது வெளியேற்றப்படும் அதிக வெப்பத்தின் மூலம் பாறைகள் உருகிச் சென்றுள்ளன என நம்பப்படுகின்றது.
இவ்வழகான நிலப் பிரதேசம் கடற்கரைக்கு உயர்வாக அமைந்துள்ள சிறிய மலைகள் இரண்டினையும் புல்வெளிகள் இரண்டினையும் கொண்ட நிலமாகும். சிவப்பு மண்ணினால் தாவரங்கள் வளராத இந்நிலம் முழுவதும் முட்கள் பரந்துள்ளன. ஆங்காங்கே சில இடங்களில் மாத்திரம் பற்றைகள் சிலவையும் வளர்ந்துள்ளன. உஸ்ஸன்கொட தாவரங்கள் மிகக் குறைந்தளவே வளர்கின்றன. கபில நிறத்தினைக் கொண்ட நிலப்பரப்பு முழுவதும் மரங்களைக் காண்பது மிகவும் அரிதானது. அதன் மேல் வளர்ந்திருப்பது மிக விசேடமான புல் இனமொன்று மட்டுமாகும். சிவப்பு மண்ணின் மேல் வேறு மண் அடுக்குகள் படிவதனால் கிளா, நாகதாளி, இலந்தை போன்ற வரண்ட சூழலுக்கு தாக்குப் பிடிக்கும் தாவரங்கள் இடத்துக்கிடம் தோன்றுகின்றது. சதுரக்கள்ளி, ஈங்கை, காசன், பனை, மலைமாதுளை, வெட்புலா, சூரியகிராந்தி, விஷ்ணுகிராந்தி, சந்திரகிராந்தி போன்ற மூலிகைச் செடிகளையும் இந்நிலத்தில் காண முடிகின்றது. இரண்டு புல்வெளிகளையும் பார்வையிடுவதற்கு வருகை தரும் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வெள்ளைப் பஞ்சுருண்டை போன்று கரையை முத்தமிட அலைகள் வரும் வசீகரக் காட்சியும் தெரிகின்றது. நீங்கள் பகல் காலத்தில் ஆழமற்ற நீரில் நீந்தி அமைதியாகத் திரியும் கடலாமைகளை அடிக்கடி கண்டுகொள்ள முடிகின்றது. உஸ்ஸங்கொட ஒரு முனையில் கடல் உள்ளமையினால் அது மிக விரைவாக கடலில் மூழ்கும் பகுதியுமாகும்.
பல பறவையினங்களையும் கண்டுகொள்ள முடிகின்றது. ஐரோவாசியா நத்தைக் குத்திகள், வானம்பாடிகள், மஞ்சள் மூக்கு ஆள்காட்டிகள், சிவப்பு மூக்கு ஆள்காட்டிகள், பனங்காடைகள், பச்சைப் பஞ்சுருட்டான்கள் போன்ற பறவையினங்கள் பெரும்பாலானவையாகும். அங்கு பச்சைப் பஞ்சுருட்டான்கள் நிலத்தின் மேல் குழிகளைத் தோண்டி கூடுகளை அமைத்துக் கொண்டு வாழும் சந்தர்ப்பமொன்றையும் காண முடியும். வனவிலங்குகளாக காட்டுப் பன்றிகள், முள்ளம்பன்றிகள் மிக வரையறுக்கத்தக்க புள்ளி மான்கள், புள்ளி சருகு மான்கள், முயல்கள், இந்திய உடும்புகள் மற்றும் கடற்கரைக்கு அண்மையில் நீர் உடும்புகளையும் கண்டுகொள்ள முடியும்.
வரலாற்று நிகழ்வுகள் பலவற்றுக்குப் போன்றே புராணக் கதைகள் பலவற்றுக்கும் புகலிடமொன்றான உஸ்ஸங்கொடசுமார் ஒரு சதுர கிலோமீற்றான சிறிய நிலப்பரப்பில் இவ்வசாதாரண குணாதிசயங்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ளது. இணையத்தில் செய்மதிப் புகைப்படங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விதத்தில் இந்நிலப்பரப்பு கடற் குதிரையொன்றுக்கு ஒப்பான உருவைக் காட்டுகின்றது.
கொழும்பு–கதிர்காம பிரதான வீதியில் கதிர்காமம் திசைக்கு பயணிக்கும் போது நோநாகம முச்சந்திக்கு முன்னர் வலப்பக்கமாகத் திரும்பி கடல் திசைக்கு சுமார் 2 கிலோமீற்றர் தூரத்தைக் கடந்தது இப்பிரதேசத்தை அடைந்து கொள்ள முடியும். மர்ம மற்றும் ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடிய புராணக் கதைகள் பலவற்றுக்கு அடிப்படையான இப்பிரதேசம் மிக இயற்கையான மனதைக் கவரக் கூடியதைக் காட்டுகின்றது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியும் சமவெளிகள் நாலாபுறமும் நிற்கும் மலைகளில் பரந்து விரிந்து கிடக்கும் சமவெளிகள் அதன் அழகை மேலும் மேலும் மெருகூட்டுகின்றன. உஸ்ஸன்கொட பற்றிய புராணக் கதைகள், தொல்பொருளியல் இடிபாடுகள் போன்றே வரலாற்று தகவல்களும் பலவாகும். அவற்றில் சிலவை இந்நிலத்தில் உள்ள விசேட குணாதிசம்கள் காரணமாக உருவாக்கப்பட்டுள்ளன. எனினும் சில புராணக் கதைகள் ஆரம்ப காலத்தில் நிகழ்ந்த ஏனைய நிகழ்வுகளினால் இந்நிலம் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்து புராணங்களின்படி உஸ்ஸன்கொட இராவண மன்னனின் மயில் வாகனம் தரையிரங்கிய இடம் என நம்பப்படுகின்றது. பிராக் வரலாற்று யுகத்தின் தொல்பொருளியல் இடங்கள் பலவும் காணப்படுகின்றன.
தெற்குப் பிரதேசத்தில் அன்றிலிருந்து இன்று வரை ஒரே மாதிரியான பாரிய சுற்றுலா கவர்ச்சியொன்றுடனான பிரதேசமொன்றான அம்பலங்கொட வெலிபடன்வில பிரதேசத்தில் அமைந்துள்ள உஸ்ஸன்கொட தேசிய பூங்கா கலமெட்டிய வன பாதுகாப்பு அலுவலகத்தினால் நிர்வகிக்கப்படுகின்றது.
Sinhala Names | Tamil Names | English Names | Scientific Name |
වල් ඌරා | காட்டுப் பன்றி | Wild boar | Sus scrofa |
ඉත්තෑවා | முள்ளம்பன்றி | Porcupine | Hystrix indica |
තිත් මුවා | புள்ளி மான் | Spotted deer | Axis axis ceylonensis |
මීමින්නා | புள்ளி சருகு மான் | Spotted chevrotain | Moschiola meminna |
හාවා | முயல் | Indian hare | Lepus nigricollis |
තලගොයා | இந்திய உடும்பு | Iguana | Varanus bengalensis |
කඹරගොයා | நீர் உடும்பு | Water Monitor | Varanus salvator |
ගොළු කිරලා | ஐரோவாசியா நத்தைக் குத்தி | Eurasian thick- Knee | Burhinus oedicnemus |
පඳුරු ගොමරිට්ටා | வானம்பாடி | Jerdon’sbushlark | Mirafra affinis |
හොට කහ කිරළා | மஞ்சள் மூக்கு ஆள்காட்டி | Yellow-wattled lapwing | Vanellus malarbaricus |
හොට රතු කිරළා | சிவப்பு மூக்கு ஆள்காட்டி | Red- wattled lapwing | Vanellus indicus |
දුම් බොන්නා | பனங்காடை | Indian roller | Coracias benghalensis |
පුංචි බිඟුහරයා (කුරුමිණි කුරුල්ලා) | பச்சைப் பஞ்சுருட்டான் | Little green bee eater | Merops orientalis |
Sinhala Name | Tamil Name | English Name | Scientific Name |
මහ කරඹ | கிளா | Bengal thorn karanda/ Jamson | Carissa carandas |
හීන් කරඹ | சிறு கிளா | Bush plum | Carissa spinarum |
පතොක් | நாகதாளி | Cactus | Opuntia dillenii |
එරමිණියා | இலந்தை | – | Ziziphus species |
දළුක් | சதுரக்கள்ளி | Fleshy spurge tree | Euphorbia antiquorum |
හිගුරු වැල් | ஈங்கை | – | Senegalia caesia |
කොරකහ | காசன் | Ironwood tree | Memecylon umbellatum |
අන්දර | பனை | – | Febacea sps |
කුකුරුමාන් | மலைமாதுளை | Spiny randia emetic- nut, false guava | Catunaregam spinosa |
කටුපිල | வெட்புலா | Katupila | Flueggea leucopyrus |
සූර්ය ක්රාන්ති | சூரியகிராந்தி | Sun flower | Helianthus annuus |
විෂ්ණු ක්රාන්ති | விஷ்ணுகிராந்தி | Slender wart morning glory | Volvulus alsinoides |
චන්ද්ර කාන්ති | சந்திரகிராந்தி | Moon flower | Ipomoea alba |
தொகுப்பாளர் – தம்மிகாமல்சிங்ஹ, மேலதிக செயலாளர், வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சு
பூங்கா பற்றிய தகவல்களைத் தொகுத்தவர்– ஹஸினி சரத்சந்திர, பிரதம உத்தியோகத்தர், வன பாதுகாப்புத் திணைக்களம் மஹேக்ஷா சதுராணி பெரேரா,அபிவிருத்தி உத்தியோகத்தர்,வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம்
தமிழ் மொழிபெயர்ப்பு– ஏ.ஆர்.எப். றிப்னா, அபிவிருத்தி உத்தியோகத்தர், (வனஜீ.வன. வள. பா. அ)
ஆங்கில மொழிபெயர்ப்பு– அசோக பலிஹவடன, மொழிபெயர்ப்பாளர், (வனஜீ.வன. வள. பா. அ)
இணைய வடிவமைப்பு–என்.ஐ கயத்ரி, அபிவிருத்தி உத்தியோகத்தர், (வனஜீ.வன. வள. பா. அ) – சீ. ஏ. டீ. டீ. ஏ.கொல்லுரே, முகாமைத்துவ சேவைஉத்தியோகத்தர், (வனஜீ.வன. வள. பா. அ)
படங்கள்– சமந்த விக்ரமரத்ன, வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம்
Cookie | Duration | Description |
---|---|---|
cookielawinfo-checkbox-analytics | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". |
cookielawinfo-checkbox-functional | 11 months | The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". |
cookielawinfo-checkbox-necessary | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". |
cookielawinfo-checkbox-others | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. |
cookielawinfo-checkbox-performance | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". |
viewed_cookie_policy | 11 months | The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. |