简体中文 ZH-CN English EN Français FR Deutsch DE Italiano IT Português PT සිංහල SI தமிழ் TA
Ministry of Wildlife and Forest Resources Conservation

அத்தியாயம் 31 – ஹிக்கடுவை சமுத்திர தேசிய பூங்கா

Content Image

ஹிக்கடுவை சரணாலயம் இவ்வாறுதான் தேசிய பூங்காவாகியது.

ஹிக்கடுவை பிரதேசம் ஆரம்பத்தில் சரணாலயமொன்றாக அறிவிக்கப்படுகின்றது. பின்னர் இயற்கை ஒதுக்கமொன்றாகவும் மூன்றாவதாக தேசிய பூங்காவொன்றாகவும் பிரகடனப்படுத்தப்படுகின்றது.   ஹிக்கடுவை தேசிய பூங்கா, 2022 ஆம் ஆண்டு பூரண சமுத்திர தேசிய பூங்காவொன்றாக நிறுவப்பட்டது.

1998 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஹிக்கடுவையில் திடப்பொருட்கள் 60 க்கு உரிய பவள இனங்கள் 180 க்கும் அதிகமான அளவு காணப்பட்டது. 1998 இல் வந்த “எல்நினோ” எனும் வெப்பம் நீரோட்டங்கள் காரணமாக பவளப் பாறைகள் சேதமடைந்தன.  சில இனங்களின் அடர்த்தி குறைந்தது.

இங்கு விஞ்ஞான உரிமையாண்மை வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு ஒப்படைக்கப்பட்டிருந்தாலும், திணைக்களத்துக்குரிய கட்டடமொன்று இருக்கவில்லை. அலுவலகத்தை நடத்திச் சென்றதும் வாடகைக்கு எடுத்த கட்டடமொன்றிலேயாகும். 2006 ஆம் ஆண்டில் இறுதியில் போன்று ஹிக்கடுவை கூட்டுறவு நிறுவனத் திணைக்களத்துக்குரிய நிலமொன்றை வழங்கினார்கள். அங்கு சிறிய அலுவலகமொன்றை அமைத்தாலும் விஞ்ஞான முகாமைத்துவத்துக்கு அது போதுமானதாக இருக்கவில்லை.

2008 ஆம் ஆண்டின் இறுதியில் எனக்கு யால தேசிய பூங்காவில் இருந்து ஹிக்கடுவை தேசிய பூங்காவின் இடப் பொறுப்பாளராக இடமாற்றமொன்று கிடைத்தது.

இக்காலம் முழுவதும் மிகவும் மிக முறையின்றி மீன்களைக் கொலை செய்யும் பன்னிரண்டு படகுகளை அண்மித்த அளவு நங்கூரமிடப்பட்டிருந்தது. தேசிய பூங்காவின் மூலம் படகுகளினால் கொண்டு வரப்படும் மீன்களை வெளியே எடுத்துச் செல்லப்பட்டது. சுற்றுலாப் பயணிகளுக்கான குளியல், ஸ்னோர்கலின் செய்தல் போன்றே பவளப் பாறைகளைப் பார்வையிடுவதற்காகச் செல்லல் ஆபத்தானது.

நாம் ஆரம்பத்தில் முறையான திட்டமொன்றைத் தயார் செய்தோம். வனஜீவராசிகள் திணைக்களம், கடற்கரை பாதுகாப்பு திணைக்களம் மற்றும் பொலிஸ் இணைந்து சுற்றுலா முகாமைத்துவ திட்டமொன்றைத் தயார் செய்தோம். இப்பணிக்கு பிரதேச குழுவின் உதவியும் கிடைத்தது. அக்காலத்தில் வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எச்.டீ. ரத்நாயக்க அவர்கள் ஆவர்.

இத்திட்டத்தின் பிரகாரம் நாம் ஆரம்பத்தில் பவளப்பாறைகளைப் பார்வையிடும் கண்ணாடி அடிப் படகுகளைப் பதிவு செய்தோம். ஆரம்பத்தில் படகுகள் 53 பதிவு செய்யப்பட்டன. அவ்வாறே மீன்களை மரணிக்கவைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் படகுகளை தேசிய பூங்காவிலிருந்து அகற்றினோம். ஸ்னோர்கலின் செய்வதற்காக வலயமொன்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு குளிப்பதற்கு வலயமொன்றையும் தயார் செய்தோம். அவற்றுடனே இவ்வலயங்களுக்கு வெளியே படகுப் பயணம் செய்யும் பாதையைத் தயரித்தோம். இதன் மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கான பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது.

படகுகளை நிறுத்துவதற்கு வேறாக பிரதேசமொன்றினைத் தயாரித்தோம். இதற்கு எதிர்ப்பும் வந்தது. படகு உரிமையாளர்கள் பல படகுகளை வீதிக்கு இழுத்து காலி, கொழும்பு வீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர்.

அது தொடர்பாக நாம் சட்ட ரீதியான நடவடிக்கையை எடுத்தோம்.

எமது அலுவல நிலத்துக்கு காணியொன்றினை எடுத்திருந்தனர். காலாகாலமாக கடல் கொந்தளிப்புக் காலத்திற்கு படகுகளை இழுத்து இந்நிலத்தில் வைப்பர். 2010 ஆம் ஆண்டில் நாம் இக்காணியில் எமது புதிய அலுவலகத்தை கட்டுவதற்கு ஆயத்தமானோம்.

கட்டடத்தின் அடிப்படையை இடுவதற்கு கிரிதலை பயிற்சிக் குழுக்கள் இரண்டின் அதிகாரிகள் வந்தனர். அவ்வாறே ஹிக்கடுவையில் வனஜீவராசிகள் அலுவலகத்தினதும், பிரதான அலுவலகத்தினதும் மற்றும் கலமெடிய வனஜீவராசிகள் அலுவலகத்தினதும் அதிகாரிகள் வந்தனர். மக்கள் அன்று அங்கே பாரிய போராட்டமொன்றை செய்தனர். கட்டடத்தைக் கட்டுவதற்கு இடத்தை விடவில்லை. நாம் அவ்வேளையில் பின்தள்ளப்பட்டோம். பணியை நிறுத்தினோம்.

அதன் பின்னர் அமைச்சின் உதவியைப் பெற்றுக் கொண்டு மாவட்டக் குழுவிடம் சென்று உதவியைப் பெற்றோம். ஒரு மாதத்தின் பின்னர் மீண்டும் பணிகளை ஆரம்பித்தோம். போராட்டத்துடன் தொடர்புபட்ட பிக்குமார்களே வந்து பிரித் கூறினர்.

இதன்போது வனஜீவராசிகள் அலுவலகத்தின் பணிகள் நிறைவடைந்து முழுமையான கடமைகள் அங்கு நிகழ்ந்தன. எமக்கு வனவிலங்கு அனுமதிப் பத்திரமொன்று வழங்க முடியாமல் இருந்தது. இச்செயன்முறைக்கு அதே நேரத்தில் அனுமதிப் பத்திரமொன்று வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்தோம்.

அனுமதிப் பத்திரத்தை வழங்கிய தினத்தன்றும் போராட்டம் ஏற்பட்டது. பொலிஸும் ஹிக்கடுவை நகர சபையின் குழுக்களின் உதவியும் எமக்குக் கிடைத்தது. எமது அனுமதிப் பத்திரத்துடன் படகுகளின் மூலம் அறவிடப்பட வேண்டிய நூற்றுக்குப் பத்து வீதமான உல்லாச வரியை அறவிடவும் முடிந்தது.இக்காலத்தினுள் அதாவது 2009-2014 வரையான காலத்தில் நான் ஹிக்கடுவை தேசிய பூங்காவில் தங்கியிருந்தேன். மறக்க முடியாத சம்பவங்கள் தொடரொன்று எனது நினைவில் நின்றன.

2023 ஆண்டில் மீண்டும் எனக்கு ஹிக்கடுவைக்கு இடமாற்றமொன்று கிடைத்தது. இவ்வருடம் பவளப் பாறைகள் பற்றிய தரவுகளைச் சேகரிப்பதற்கு ஆரம்பித்தோம். அது அடுத்த ஆண்டில் ஜூலை மாதத்தில் நிறைவு செய்ய முடியும்.

ஹிக்கடுவை தேசிய பூங்காவின் மேம்பாட்டுக்கு பல நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கின்றேன்.

திரு. அசங்க குணவர்தன அவர்கள்

திரு. அசங்க குணவர்தன அவர்கள் 1998 இல் போட்டிப் பரீட்சையொன்றில் தெரிவு செய்யப்பட்டு வனவிலங்கு வன பாதுகாவலர் II ஆம் தரத்தின் அதிகாரியொருவராக வனஜீவராசிகள் திணைக்களத்தில் சேவைக்கு இணைந்தார்.

லுணுகம்வெஹெர, பிரதான அலுவலகம், உடவளவை, மாதுறு ஓயா, யால மற்றும் ஹிக்கடுவை தேசிய வனங்களில் தற்போது அவர் 25 வருட சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்துள்ளார்.

சேவைக்கு இணையும் போது விவசாய டிப்ளோமாவொன்றை நிறைவு செய்திருந்த அசங்க குணவர்தன அவர்கள்வனஜீவராசிகள் திணைக்களத்தின் மூலம் வழங்கப்படும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வனவிலங்கு முகாமைத்துவம் பற்றிய டிப்ளோமா பாடநெறியொன்றையும் நிறைவு செய்துள்ளார்.

அசங்க குணவர்தன அவர்கள் சிறு வயதிலிருந்து உயர் தரம் வரை காலி சாந்த அலோசியஸ் வித்தியாலயத்தில் கல்வியைப் பெற்றார்.

2004 ஆம் ஆண்டில் சந்தமாலி படுவன்துடுவ செல்வியுடன் திருமணம் செய்து கொண்ட அவர் தற்போது மகள் ஒருவரினதும் மகன் ஒருவரினதும் தந்தையாவார்.மனைவி சந்தமாலி அழகுக்கலைத் துறையில் பணியாற்றுகிறார். மகள் காலி சவுத்லேண்ட் வித்தியாலயத்தில் உயர் தரம் படிப்பதோடு மகன் காலி சாந்த அலோசியஸ் வித்தியாலயத்தில் சாதாரண தரம் படிக்கிறார்.

அவரின் முகவரி 551, படுகொட, பூஸ்ஸ ஆகும்.

ஹிக்கடுவை சமுத்திர தேசிய பூங்கா

1979 ஆம் ஆண்டில் மே 18 ஆம் திகதி சரணாலயமொன்றாகவும் 1988 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 14 ஆம் திகதி இயற்கை ஒதுக்கமொன்றாகவும் பிரகடனப்படுத்தப்பட்ட ஹிக்கடுவை பிரதேசம் பவளப் பாறைகளைப் பாதுகாக்கும் பிரதான நோக்கத்துடன் 2002  ஆம் ஆண்டில் ஒக்டோபர் 5 ஆம் திகதி வனவிலங்கு மற்றும் தாவர பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் மூலம் வர்த்தமானி இலக்கம் 1257/14 இன் கீழ் ஹிக்கடுவை சமுத்திர தேசிய பூங்காவாக பிரகடனப்படுத்தப்பட்டது. ஹிக்கடுவை சமுத்திர தேசிய பூங்கா தென் மாகாணத்தில் காலி மாவட்டத்தில் ஹிக்கடுவை பிரதேச செயலாளர் பிரிவுக்குள் அமைந்துள்ளது. 101.58 ஆன சதுர ஹெக்டயாரினைக் கொண்ட இது வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின்படி இலங்கையிலுள்ள பூங்காக்களுள் கடல் உயிரினங்களுடனான சூழல் அமைப்பொன்றைக் காண முடியுமான இலங்கையிலுள்ள  தேசிய சமுத்திர பூங்காக்கள் மூன்றில் ஒன்றாகும். ஏனைய இரண்டு பூங்காக்களும் அதாவது ஆதமின் பாலம் சமுத்திர தேசிய பூங்கா மற்றும் புறாத் தீவுகள் தேசிய பூங்காவுமாகும்.

ஹிக்கடுவைவனஜீவராசிகள் அலுவலகம்

ஹிக்கடுவை தேசிய பூங்காவிடமுள்ள கடற்கரை 4 கிலோமீற்றர் தூரத்துக்கு பரந்துள்ளதோடு குறுகிய அதாவது இங்குள்ள அதாவது பவளப்பாறை கடல் உயிரினங்களின் பெருகும் இடமொன்றாக முக்கிய பணியொன்றை நிறைவேற்றுகின்றது.பவளப்பாறை இயற்கையாக ஏற்படும் கடலோர அரிப்புக்கு எதிராகச் செயற்படுவதனால் அவை இயற்கையாக உடைப்புநீராகவும் இனங்காணப்படுகின்றது.

ஈர வலயத்துக்குரிய இந்நிலம் தென்மேல் பருவக்காற்றினைப் போன்று வடகீழ் பருவக்காற்றினால் மழை கிடைப்பதோடு வெப்பநிலை சுமார் 28oC ஆகும். மத்திய வருடாந்த மழைவீழ்ச்சி 1500 க்கும் 5000 மில்லிமீற்றர் அளவு ஆவதோடு இங்கு வருடத்தில் ஏப்ரல் மாத நடுவிலிருந்து ஜூன் மத்திய கால எல்லை வரை தென்மேல் பருவக்காற்றினால் போசணையடைந்து  நவம்பர் மாதம் வரை ​ வடகீழ் பருவக்காற்று மழையினால் போசணையைப் பெற்று செப்டெம்பர் மாத நடு எல்லையிலிருந்து நவம்பர் மாதம் வரை வடகீழ் பருவ மழை​யினால் போசணையடைகின்றது.  இப்பருவ மழை கிடைக்கும் கால வரையறையினுள் கடல்லைகள் வேகமாகும் ​நிலையினைக் காட்டுகின்றது. ஜனவரியிலிருந்து மார்ச் வரையான காலம் வரண்ட காலநிலையினைக் கொண்டதோடு,  இக்காலம் வனத்தினுள் சுற்றுலாவுக்குப் பொருத்தமான காலமொன்றாகும். இங்கு நீரின் வெப்பநிலை செ. கி. 28o C-30o C வரையாகும்.

இப்பூங்கா கடல் புற்களின் தொகையானதாகும்.Green macro algae (Halimeda Sps.,Sea water algae (Caulerpa Sps.),Sea lettuce -Edible green algae (Ulva Sps.)மற்றும்Small brown algae (Padina Sps.)எனும் பாசி இனம் இங்குஇலகுவாகக் கிடைக்கின்றன. பச்சை நிறமுள்ள உவர்நீர் பாசிகள், அதாவதுGreen macro algae மற்றும்Sea water algaeகடல் ஆழம்  மீற்றர்  5 இலிருந்து 10 வரையான பிரதேசம் முழுவதும் பரந்துள்ளன. கடல் புற்கள் எனும் சமுத்திர உயிரினங்கள் பலவற்றின் உணவு ஆதாரமாகும். கடற் புற்கள் வண்டல் மண்ணை தக்க வைத்து, கடலின் அடிப்பகுதி அரிப்பைத் தடுக்கின்றது. மேலும் அழிவுறும் அச்சுறுத்தலுக்கு முகம்கொடுத்துள்ள கடற் பன்றி மற்றும் ஒதுக்கப்பட்ட விலங்குகளான  கடலாமைகளுக்கும் வாழ்விடங்களை வழங்குகின்றது.

பவளப் பாறைகளை உருவாக்கும் பவளங்கள் பெருமளவு ஆழமற்ற நீரிலே கிடைக்கின்றன. பவளப்பாறையைப் பாதுகாக்கும் நோக்குடன் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இத்தேசிய பூங்காவின், பவளப் பாறைகள், பவளங்களின் தன்மைகளின் பிரகாரம் விளிம்புப் பாறை (Fringing Reef), பெருந்தடுப்புப் பாறை (Barrier Reef) மற்றும் வளைய வடிவப் பாறை (Atolls) என வகைப்படுத்தப்படும்.  மான் கொம்பு பவளப் பாறைகள்Stag Horn Coral (Acropora Sps), மரை கொம்புப் பவளப் பாறைகள்Elk Horn Coral (Acropora Sps.), கோவா வடிவமுள்ள பவளப்பாறைகள்Cabbage Coral (Montipora Sps.), மூளை வடிவமான பவளப் பாறைகள்Brain Coral (Mussidae and merulinidae Sps.),  மேசை வடிவான பவளப் பாறைகள்Table Coral (Acropora Sps.), நட்சத்திர வடிவான பவளப் பாறைகள் Star Coral (Montastraea Sps.)என்றவாறு பல வடிவங்களிலான பவளப் பாறை இனங்கள் 31 க்குரிய இனங்கள் 60 பதியப்பட்டுள்ளன. பவளப் பாறையொன்று உலகில் அதிகமான உற்பத்தித்திறன் உள்ள சூழல் அமைப்பொன்றாக இனங்காணப்பட்டுள்ளதோடு மீனின வகைகள் உட்பட சமுத்திர உயிரினங்கள் பலவற்றுக்கு வாழிடத்தையும் உணவையும் வழங்கும் அதாவதுசமுத்திரத்தில் வாழ்வினை நடத்திச் செல்கின்ற சூழல்  அமைப்பொன்றாகும். நீரின் வெப்பநிலை, கிடைக்கும் ஔயின் அளவு, உணவைப் பெற்றுக் கொள்ளும் வசதி போன்ற வெளி அறிகுறிகளின் பிரகாரமும் பவளப் பாறைகளின் தோற்றம் மற்றும் அளவு மாறுபடுவதற்கு தாக்கம் செலுத்துகின்றது.

                                                                                                                  பவளப் பாறை இனங்கள்

ஹிக்கடுவை தேசிய பூங்காவினுள் 48 இனங்களுக்குரிய மீனினங்கள் 113 உம் வர்ணங்களிலான விருப்புக்குரிய மீனினங்கள் சுமார் 8 உம் பதியப்பட்டுள்ளன.

                                                                                       பவளப் பாறைகளை அண்டிய மீன்கள்

ஹிக்கடுவை தேசிய பூங்காவினுள் 48 இனங்களுக்குரிய மீனினங்கள் 113 உம் வர்ணங்களிலான விருப்புக்குரிய மீனினங்கள் சுமார் 8 உம் பதியப்பட்டுள்ளன.

கடலாமையொன்று

விசேடமாக ஹிக்கடுவை பவளப் பாறைகள் சமுத்திர வாழ் உயிரினங்களின் பெருகும் இடமொன்றாக (Breeding grounds)ஆகவும் அறிமுகப்படுத்த முடியும்.இங்கு கண்ணாடி அடியினைக் கொண்ட படகுகளினால் பவளப்பாறைகளை அவதானிப்பதற்குப் போன்றே ஸ்னோர்க்லின்(Snorkelling),ஸ்கூபா​ டைவின்(Scuba diving)மற்றும் நீச்சல் போன்ற நீர்ச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு சந்தர்ப்பம் உள்ளது.

ஸ்னோர்க்லின் (Snorkelling)
கண்ணாடி அடியினைக் கொண்ட படகுகள் (Bottom Glass Boats)

                                                                                                                           மணற் கடற்கரை

கொழும்பு காலி பிரதான வீதியில் வந்து ஹிக்கடுவை சமுத்திர தேசிய பூங்காவுக்கு வருகை தர முடியும். கொழும்பு காலி அதிவேக நெடுஞ்சாலையில் காலிக்கு வந்து காலியிலிருந்து பழைய காலி வீதி ஊடாக கொழும்பு திசைக்கு வருவதனால் ஹிக்கடுவை சமுத்திர தேசிய பூங்காவுக்கு வர முடியும்.

இலங்கையில் தென் நீள் கடற்கரையில் உள்ள ஆழமற்ற அலங்கார பவளப்பாறைகள் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவர்ச்சியை ஈர்த்துக் கொண்டாலும் இயற்கை ஆபத்துக்கள் மற்றும் மனித செயற்பாடுகள் பவளப்பாறைகள் சேதமடைவதற்கு அதிக தாக்கம் செலுத்தின. டைனமைட் இட்ட மீன்களைப் பிடிப்பதற்கு பெரும்பாலான மீனவர்கள் முற்படுவது மீனினங்களின் தொகை சேதமடைவதற்கு காரணமொன்றாவதோடு  பவளப் பாறைகளின் சேதத்துக்கும் காரணமொன்றாகும். முறைசாரா மீன்பிடி முறைகள் இவ்வாறு கண்கவர் பவளப் பாறைகளை அழிக்கின்றன. சில காலங்களுக்கு முன்பு உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு பவளப் பாறைகளைப் பார்வையிடுவதற்குப் பயன்படுத்தப்படும் கண்ணாடி அடியினைக் கொண்ட படகுகள் (Bottom Glass Boats)  அதிகளவான தடவைகள் பவளப் பாறைகளைச் சார்ந்த சமுத்திர சூழலில் பயணிக்கும் போது அப்படகுகளினால் சூழலுக்கு விடப்படும் எண்ணெய் சார்ந்த ஏனைய கழிவுகளின் மூலம் பவளப் பாறைகளைச் சார்ந்து வாழும் உயிரினங்களுக்கு பல்வேறான அச்சுறுத்தல்கள் ஏற்படுவது போன்றே பவளப் பாறைகளுக்கும் பாரிய தாக்கத்தினைக் கொண்டு வருவதற்கு உள்ளாகியுள்ளது. உள்நாட்டு சுண்ணாம்பு கைத்தொழிலுக்காக பவளப் பாறைகளை உடைப்பதனாலும் அக்காலத்திலிருந்தே பவளப் பாறைகளுக்கு பாரிய சேதம் ஏற்பட்டு இவ்வாறு பவளப் பாறை உயிரினங்கள் பல அழிந்து செல்லும் நிலைமைக்கு உள்ளாகியது. 1998 இல் ஏற்பட்ட வெப்ப நீரோட்டங்களைக் கொண்ட எல்நினோ நிலைமையினால் பவளப் பாறைகள் பாரிய அளவில் சேதத்துக்குள்ளாகியது. சுனாமி போன்ற நிலைகளில் பவளப் பாறைகள் வலுவான தடையாகச் செயற்படுவதனால் பவளப் பாறைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்கு செயற்படுதல் எமது  அனைவரினதும் கடமையாகும்.

அதனால் சிறிதாக இருந்தாலும் அழகான தீவொன்றான இலங்கையில் பெரும் செல்வமொன்றான ஹிக்கடுவை சமுத்திர தேசிய பூங்காவுக்கான சூழலியல் மற்றும் இயற்கையான பெறுமதியை விளங்கி அதனைப் பாதுகாப்பது கட்டாய பணியொன்றாக உள்ளது.

தொகுத்தெடுப்பு-

இலங்கையின் தேசிய வனப் பூங்காக்கள் (பீ. எம்.சேனாரத்ன) கிரந்தம் மற்றும் இணையத்தின் மூலமாகவேயாகும்.

ஹிக்கடுவை சமுத்திர தேசிய பூங்கா தொடர்பான விளக்கத்தில் காணப்படும் விலங்குகளின் பெயர்ப் பட்டியல்

 Sinhala Names

Tamil Names

English Names

Scientific Name

කකුළුවා

நண்டு

crab

Brachyura sps.

කැස්බෑවා

கடலாமை

turtle

Testudine sps.

ඉස්සාஇறால்PrawnsDendrobranchiata sps.

පොකිරිස්සා

பாறை இறால்

lobster

Nephropidae sps.

බෙල්ලා

சிப்பி

oyster

Ostreidae sps.

මුහුදු පණුවා

கடல் புழு

sea worm

Belong to six phyla

මුව අං කොරල්

மான் கொம்பு பவளப் பாறை

Stag Horn Coral

Acropora Sps

ගෝන අං කොරල්

மரை கொம்புப் பாறை

Elk Horn Coral

Acropora Sps.

ගෝවා හැඩැති කොරල්

கோவா வடிவமுள்ள பாறை

Cabbage Coral

Montipora Sps.

මොළ හැඩැති කොරල්

மூளை வடிவமான பவளப் பாறை

Brain Coral

Mussidae and merulinidae Sps.

මේස ආකාර කොරල්

மேசை வடிவான பவளப் பாறை

Table Coral

Acropora Sps.

තාරකා ආකාර කොරල්

நட்சத்திர வடிவான பவளப் பாறை

Star Coral

Montastraea Sps.

ஹிக்கடுவை சமுத்திர தேசிய பூங்கா தொடர்பான விளக்கத்தில் காணப்படும் மரங்களின் பெயர்ப் பட்டியல்

Sinhala Name

Tamil Name

English Name

Scientific Name

  Green macro algae

Halimeda Sps.

  

Sea water algae

Caulerpa Sps.
  

Sea lettuce-Edible green algae

Ulva Sps.
  Small brown algaePadina Sps.

குப்பாளர்  –   தம்மிகாமல்சிங்ஹ, மேலதிக செயலாளர், வனஜீவராசிகள் மற்றும் வன  வளங்கள் பாதுகாப்பு அமைச்சு

பூங்கா பற்றிய தகவல்களத் தொகுத்தவர்ஹஸினி சரத்சந்திர, பிரதம உத்தியோகத்தர், வன பாதுகாப்புத் திணைக்களம் மஹேக்ஷா சதுராணி பெரேரா,அபிவிருத்தி  உத்தியோகத்தர்,வனஜீவராசிகள்  பாதுகாப்புத் திணைக்களம்

தமிழ் மொழிபெயர்ப்புஏ.ஆர்.எப். றிப்னா, அபிவிருத்தி  உத்தியோகத்தர், (வனஜீ.வன. வள. பா. அ)

ஆங்கில மொழிபெயர்ப்புஅசோக பலிஹவடன, மொழிபெயர்ப்பாளர், (வனஜீ.வன. வள. பா. அ)

இணய வடிவமப்புஎன்.ஐ கயத்ரி, அபிவிருத்தி  உத்தியோகத்தர், (வனஜீ.வன. வள. பா. அ) சீ. ஏ. டீ. டீ. ஏ.கொல்லுரே, முகாமைத்துவ சேவை​உத்தியோகத்தர், (வனஜீ.வன. வள. பா. அ)

படங்கள்ரங்க விஜேரத்ன, வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம்