简体中文 ZH-CN English EN Français FR Deutsch DE Italiano IT Português PT සිංහල SI தமிழ் TA
Ministry of Wildlife and Forest Resources Conservation

அத்தியாயம் 32 – ஹொரொவ்பொத்தான தேசிய பூங்கா

Content Image

இலங்கைக்கான யானகள் கணக்கெடுப்பு

இலங்கையில் காட்டு யானைகளின் எண்ணிக்கை பற்றி பல்வேறு மாகாணங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் நாடு முழுவதும் உள்ளடக்கப்படும் வகையில் நாடளாவிய ரீதியில் யானைகள் கணக்கெடுப்பொன்று மேற்கொள்ளப்படவில்லை. அதனால் அக்கணக்கெடுப்பினை  2011 ​ஆகஸ்ட் மாதம் மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டது. 2011 ஆண்டில் நான் வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டதுடன் இக்கணக்கெடுப்பினைத் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.  அக்காலத்தில் முழு இலங்கையும் உள்ளடக்கப்படும் வகையில் அனைவரையும் இணைத்துக் கொண்டுயானைகள் கணக்கெடுப்பொன்றைமேற்கொள்வதற்குத் தேவையான ஆரம்ப திட்டத்தை தயார் செய்தோம்.  யானைகள் கணக்கெடுப்பு எனது மறக்க முடியாத நினைவொன்றாகும்.

இலங்கையில் ஆரம்ப காலத்திலிருந்து யானைகள் வாழ்ந்தன. ஆசிய யானைகள் உப இனங்கள் மூன்றில் ஒன்றான  Elephas maximus maximus இருப்பது இலங்கையில் மட்டுமாகும். இலங்கையில் யானைகள் எவ்வளவு உள்ளன எனக் கூறுவதென்பது எப்போதும் அனுமானமாகும். ஒவ்வொரு காலங்களிலும் யானைகள்15000-10000 இருந்தன எனக் கூறப்படுகின்றமை தவறில்லை. தற்போது யானைகளின் கணக்கெடுப்பு மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டு மாத்திரமே இடம்பெற்றிருந்தது. முன்னர் இலங்கை முழுவதிலும் யானைகள்பரந்திருந்தன.இப்பரம்பல் ஆங்கிலேயர் ஆட்சியின் பின்னர் தோட்டப் பொருளாதாரத்துடன் மாறுபட்டது. மலைநாட்டு வலயத்தில் யானைகள் ஆங்கிலேய அட்சியாளர்களினால் கொல்லப்பட்டதனால் அவ்வலயம் யானைகள் இன்றிய பிரதேசமொன்றாகியது. தற்போது சிரிபா வன வட்டாரத்தில் யானைகள்  பதினெட்டும் சிங்கராஜவுக்கு அருகில் இரண்டும் உள்ளன. எஞ்சிய அனைத்து யானைளும் இருப்பது வரண்ட வலயத்திலும் இடைமத்திய வலயத்திலுமாகும்.

இலங்கையில் காலகாலமாக இருக்கும் யானை–மனித மோதலைத் தீர்ப்பதற்குத் தேவையான தற்காலிக இலங்கையில் யானைகள் எவ்வாறு உள்ளன, எவ்வாறு பரம்பலடைந்துள்ளன? பெண் ஆண் வீதம் என்ன? அவைகளின் எண்ணிக்கை வீதம் எவ்வாறு? பெண் யானைகளின் தொகை வீதம் எவ்வளவு மற்றும் ஆரோக்கியமான யானைகளின் எண்ணிக்கையொன்று உள்ளதா?  போன்ற தகவல்கள் தேவைப்பட்டன. வடகிழக்கு யுத்த சூழ்நிலையினால் அப்பிரதேசங்களில் யானைகள் எவ்வளவு உள்ளன என்பதனைப் பற்றிய தரவுகளைச் சேகரிப்பது சிரமமாக இருந்தது. 2009 ஆண்டில் யுத்தம் நிறைவடைந்தாலும் அப்பிரதேசங்களில் மிதிவெடிகள் போன்ற பிரச்சினைகளினால் காட்டுக்குள் செல்வதற்கு ஆபத்தாக இருந்தது. 2011 ஆண்டாகும் போது பெரும்பாலான மிதிவெடிகள் அகற்றப்பட்டிருந்தன. அதனால் அப்பிரதேசங்களையும் கணிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ள முடிந்தது.

யானைகள் கணிப்பீடு பற்றி திட்டமிடுவதில் நாம் முதலில் இலங்கை முழுவதிலுமுள்ள காட்டுப் பகுதிகளை உள்ளடக்கும் வகையில் கணிப்பீட்டினை மேற்கொள்வதில் கவனம் செலுத்தினோம். இது சாதாரண மக்கள் தொகைக் கணிப்பீட்டையும் விட வித்தியாசம் என்பதனாலும் வனஜீவராசிகள் திணைக்களத்தில்  சேவையிலுள்ள அதிகாரிகள் வரையறுக்கப்பட்டளவு இருந்ததனாலும் வேறு நிறுவனங்களின் அதிகாரிகளையும் சாதாரண மக்களையும் வெளியிலிருந்து தேடிக் கொள்ள வேண்டியேற்பட்டது.  அது சவாலானது. அவர்கள் குறைந்தபட்சம் இரண்டு நாட்களாவது பூரணமாக காட்டுக்குள் செலவழிப்பதற்கு அவசியமாகும். அவ்வாறே யானைகளின் வகைகளை இனங்காணுதல் பற்றிய புரிந்துணர்வும் காணப்பட வேண்டும்.

இக்கணிப்பீட்டினை திட்டமிடும் தினங்களில் வனஜீவராசிகள் திணைக்களத்தின் முழு+ பணிக்குழுவினர் முழுவதும் ஆயிரத்தை அண்டிய அளவாகும். அவர்களிலும் ஒரு பிரிவினரை மாத்திரமே இப்பணியில் ஈடுபடுத்திக் கொள்ள முடிந்தது. அதனால் வெளியிலிருந்து பாரியளவிலான அதிகாரிகளைத் தேடிக் கொள்வதற்குத் தேவையானது.

நாம்சுயேட்சை  அமைப்புக்களுக்கு, கிராமிய அழைப்புக்களுக்கு, முப்படையினருக்கும் பொலிஸாருக்கும் போன்றே பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இதில் கலந்து கொள்ளுமாறு அ​ழைப்பு விடுத்தோம். பெரும்பாலானவர்கள் விருப்பம் தெரிவித்தனர். விசேடமாக சுயேட்சை தொழிலாளர் பங்களிப்பு போன்றே பொருளுதவி வழங்குவதற்கும் விருப்பத்தைத் தெரிவித்தனர். பல்கலைக்கழகங்களிலிருந்தும் பெரிமளவு ஒத்துழைப்பு வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது. யானைகளைப் பற்றி தொடர்ச்சியாக ஆய்வு செய்து பேராசிரியர் சால்ஸ் சன்தியா பிள்ளை மற்றும் பேராசிரியர் எஸ். விஜய மொஹான் போன்றே பேராசிரியர் யூ.கே.ஜீ.கே. பத்மலால் அதிக விருப்பத்துடன் இதற்காக முன்வந்தனர்.

யானைகள் கணிப்பீட்டில் தலைமைத்துவம் அப்போதைய பிரதிப் பணிப்பாளர் ஒருவராக இருந்த என்.ஆர்.பீ. திஸாநாயக அவர்களுக்கு ஒப்படைக்கப்பட்டது. வனஜீவராவசிகள் திணைக்களத்தின் அதிகாரிகளான அப்போதைய பிரதிப் பணிப்பாளர்களாக இருந்த சந்தன சூரியபண்டார, ரன்ஜன் மாரசிங்ஹ, மஞ்சுல அமரரத்ன, டப்.என்.கே. பதிரத்ன, விலங்கு வைத்தியர் தாரக பிரசாத், யூ.எல். தவ்பீக், சாந்தனீ வில்சன் மற்றும் பீ.எம்.யூ. தர்மதிலக போன்ற அதிகாரிகளுக்கு மாகாண ரீதியாக பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டன. அவ்வாறே இதற்காக ஈடுபடுத்தப்படும் முப்படையினரினதும் பொலிஸினதும் அதிகாரிகளுக்கு, கிராம பாதுகாப்பு வீரர்களுக்கு, பல்கலைக்கழக மற்றும் சுயேட்சை அமைப்புக்களினால் கலந்து கொள்பவர்களுக்கு, திணைக்களங்களின் அதிகாரிகளுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்குவது கடினமான பணியொன்றாகியது. எனினும் அவ்வனைத்து பணிகளையும் வெற்றியாக மேற்கொள்வதற்கு எம்மால் முடிந்தது.

2011 ஆம் ஆண்டில் நாம் எதிர்பார்த்தவாறு நீண்ட வரண்ட காலநிலையொன்று காணப்பட்டது. போயா வருவதன் பிரகாரம் சந்திர ஒளி நன்றாகக் கிடைக்கும் தினத்தை இதற்குப் பயன்படுத்திக் கொள்ள எதிர்பார்த்தோம். விலங்குகள் நீர் அருந்தும் இடங்களை அடிப்படையாகக் கொண்ட செயன்முறையின்(Water hole countsmethod) இன் பிரகாரம் விஞ்ஞான ரீதியாக இப்பணிகளை மேற்கொண்டோம். யானை ஒருநாளுக்குள் ஏதாவதொரு நீர்ப் பாவனையை மேற்கொள்வதனால் நாளின் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் நீர் அருந்தும் இடத்திற்கு வரும். அப்போது அவைகளை இலகுவாக கணிப்பீட்டுக்கு உட்படுத்துவோம். நாம் அவ்வாறு நீர் அருந்தும் இடங்கள் 1553 இனைத் தெரிவு செய்தோம். மூன்று நாட்கள் காட்டில் தங்கியிருப்பதற்குத் தேவையான கள கருவிப் பொதியொன்றை அதிகாரிகளுக்கு வழங்கினோம். உலர் உணவு, தேவையான தொடர்பு வசதிகள், மின் விளக்குகள் போன்ற உபகரணங்களைத் தேவையானவாறு வழங்கினோம்.

இது தொடர்பாக விரிவான வெகுசனப் பிரச்சாரமொன்றையும் நாம் வழங்கினோம். எனினும் கணக்கெடுப்புக்கு 2-3 நாட்கள் இருக்கும் போது ஒத்துழைப்பினை வழங்கிக் கொண்டிருந்த பெரும்பாலான சுயேட்சை அமைப்புக்கள் அப்பணியை நிறைவேற்றுவது தொடர்பில் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து அதற்கு கலந்து கொள்வதில்லை என அறிவித்தன.

இச்சந்தர்ப்பத்தில் கணக்கெடுப்பை நிறுத்தினால் மீண்டும் பல வருடங்கள் அது பின்னே செல்கின்றது. செலவு செய்த பணம் வீணாகிச் செல்கின்றது. திணைக்களத்தில் சிரேஷ்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய நாம் உடனடியாக முடிவொன்றை எடுத்தோம். முப்படையினருக்கும் பொலிஸுக்கும், பல்கலைக்கழக மாணவர்களையும் அதிகளவில் இணைத்துக் கொண்டோம். மேலும் மேலதிக நபர்களை இணைத்துக் கொண்டோம்.  அவர்கள் அனைவருக்கும் மீண்டும் துரித பயிற்சி பெறுவதனை வழங்கினோம். வனஜீவராசிகள், வன பாதுகாப்பு திணைக்களங்களுக்குரிய மற்றும் உரித்தாகாத அனைத்து காடுகள், பயிர்ச்செய்கை நிலங்கள், பாதி குடியிருப்பு பகுதிகள் அனைத்தும் உள்ளடக்கப்படுமாறு ஓரிடப்படுத்தினர். திட்டமிட்டவாறு 2011 ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் 11,12 மற்றும் 13 மூன்று நாட்களும் கண்காணிப்பு நிலையங்கள் 1553 இல் இருந்து குறிப்பிட்ட யானைகள் கணக்கெடுப்பினை நாம் மேற்கொண்டோம். கலந்து கொண்டவர்கள் பல்வேறுபட்ட விதத்தில் சிரமங்களுக்கு முகம் கொடுத்தனர். யானைகள் துரத்துதல், வேறு விலங்குகளின் தொந்தரவுகள் போன்றவையாகும். எனினும் எவருக்கும் உடல் ஊனங்கள் இன்றி பணிகளை நிறைவு செய்தனர்.

அனைத்து தகவல்களும் கிரிதலை தேசிய வனவிலங்கு மற்றும் பயிற்சி நிலையத்தில் பரிசீலனை செய்யப்பட்டன. இப்பரிசீலனைக்காக திணைக்களத்தின்அப்போதைய பிரதிப் பணிப்பாளர் திரு. ரன்ஜன் மாரசிங்கஹவும் பேராசிரியர் திருமதி விஜயகோன் அவர்களும் நிறை ஒத்துழைப்பினை வழங்கினர். ஒருநாள் பதிவு செய்யப்பட்ட கூடிய யானைகளின் எண்ணிக்கையை எடுத்தோம். மீண்டும் மீண்டும் கணக்கெடுக்கப்படுவதனை (Repetition) அகற்றினோம். நாம் யானைகள் கணக்கெடுப்பின் குறைந்த எண்ணிக்கையையே எடுத்தோம். பூரணமான தரவுப் பத்திரமொன்றை தயார் செய்தோம். இறுதியாக இலங்கையில் குறைவான யானைகளின் எண்ணிக்கை 5871 எனக் குறிப்பிடப்பட்டது. அதாவது 6000 க்கு அண்ணளவான எண்ணிக்கை இருப்பதென விஞ்ஞான ரீதியாக முடிவு செய்யப்பட்டது. இதனால் சுமார் 67.17% யானைகள் வனவிலங்கு ஒதுக்கங்களிலிருந்தும் சுமார் 29.78% வன ஒதுக்கங்களிலிருந்தும் சுமார் 3.03% ஏனைய ஒதுக்கங்களிலிருந்தும் அப்புறமாக இருந்தன எனக் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்யானைகளில் ஆண் யானைகள் மற்றும் பெண் யானைகளின் வீதம் 1:1.09எனவும் வயதான யானைகள் 3285, இளமையான யானைகள் 1487, குட்டிகள் 731 மற்றும் குழந்தை யானைகள் 376  இனையும் கண்டுபிடிக்கக் கிடைத்தது. அவ்வாறே பெண் யானைகளின் எண்ணிக்கை பற்றியும் தரவுகளை எடுத்தோம். அதன்படி ஆண் விலங்குகளில் 5.3 உம் இளமையான ஆண்களில் 7.7% உம் குட்டிகளில் 8.4% பெண் யானைகள் எனக் கண்டுபிடித்தோம்.

இக்கணிப்பீட்டின்படி காட்டு யானைகள்சுமார் 200 ஒதுக்கங்களிலிருந்து வெளிக் கிராமங்களிலிருந்து அண்மையில் இருப்பதென தேடிக் கொண்டோம். இவ்யானைகள் அடிக்கடி கிராமங்களுக்குள் வந்து சொத்துக்களையும் பயிர்களையும் சேதம் செய்கின்றன. அவைகளை வேறு இடங்களுக்கு எடுத்துச் சென்று விட்டாலும் மீண்டும் முன்பிருந்த இடங்களுக்கே வருகின்றன. அவ்வாறே அவ்யானைகள் எடுத்துச் சென்று விடப்பட்ட இடங்களிலும் மக்களுக்குத் தொந்தரவு செய்கின்றன. அதனால் பிரதேச மக்கள் இதற்கு விருப்பமில்லை. அதனால் ஹொரவப்பொத்தான, மாதுறு ஓயா, லுணுகம்வெஹெர, வில்பத்து, அனுராதபுரவிற்கு அண்மையில் யானைகள் பாதுகாப்பு நிலையங்கள் நான்கை அமைப்பதற்கும் முன்மொழிவு செய்யப்பட்டது.

முதலாவது படிமுறையாக அனுராதபுர மாவட்டத்தில் ஹொரவ்பொதான தேசிய பூங்காவொன்றாகப் பெயரிடப்பட்டு 1000 ஹெக்டயாரான அளவில் 40 காட்டு யானைகளுக்கான  முதலாவது யானைகள் பாதுகாப்பு நிலையத்தினை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டது. அப்போது இருந்த விடப் பொறுப்பு  அமைச்சர், செயலாளர் மற்றும் திணைக்கள அதிகாரிகள் இது தொடர்பாக பாரிய ஒத்துழைப்பினை வழங்கியதோடு அவ்யானைகள் பாதுகாப்பு நிலையத்தின் பணிகளை 2015 இல் நிறைவு செய்வதற்கு முடிந்தது.

திரு. எச். தயாவன் ரத்நாயக அவர்கள்

1996.10.01 திகதி வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு பிரதி பணிப்பாளர் (ஆய்வு மற்றும் பயிற்சி) ஆக இணைந்த திரு. எச். தயாவன் ரத்நாயக அவர்கள் இலங்கை விஞ்ஞான சேவையில் பணிப்பாளர் செயற்பாடு ஆக பதவியுயர்வு பெற்று வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகமாக 2011 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். தற்போது அவர்கள் வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சில் மேலதிக செயலாளரொருவராகக் கடமையாற்றுகிறார். மேலும் அவர் வன பாதுகாப்பு திணைக்களத்தில் பதில் கடமையாற்றும் வன பாதுகாவலர் நாயகமாகவும் குறுகிய காலம் சேவையாற்றியுள்ளார்.

வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தில் சேவையாற்றும் காலத்தினுள்ஹொரொவ்பொதான யானைகள் புனர்வாழ்வு முகாமை நிறுவுதல், யானை வேலிகளை விருத்தி செய்தல், தீ பரவுவதைக் கட்டுப்படுத்தும் முறைகளை அறிமுகப்படுத்துதல், திமிங்கிலங்கள் மற்றும் டொல்பின் விலங்குகளை பார்வையிடுவதில் தேவையான சட்ட திட்டங்களை அறிமுகப்படுத்துதல் மற்றும் அதனூடாக அரசாங்கத்துக்கு பாரிய வருமானத்தை வழங்குதல், கடல் பாலூட்டிகள், யானைகள், கடலாமைகள் மற்றும் பறவைகளுக்கான பாதுகாப்பு முறைகளை அறிமுகப்படுத்துதல். ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் செயற்படுத்தப்பட்ட ஒதுக்கப் பிரதேச முகாமைத்துவம் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு கருத்திட்டப் பணிகளை மேற்கொள்ளல், உலக வங்கி நிதியுதவியின் கீழ் ESCAMP கருத்திட்டத்துக்கான நிதியுதவியைப் பெற்றுக் கொள்வதற்காக ஆரம்ப நடவடிக்கைகளை மேற்கொள்ளல், சமுத்திரவாழ் உயிரின பாதுகாப்பு பணிகளை ஆரம்பித்தல் போன்றே ஆதமின் பாலம், மடுவீதி, சுண்டிகுளம், டெல்ப்ட் போன்ற தேசிய பூங்காக்கள் நான்கு மற்றும் நாககோவில் இயற்கை ஒதுக்கம் 22.06.2015 திகதி நிறுவுவதும் இடம்பெற்றது. மேலும் தீவிரவாத ஆக்கிரமிப்பினால் உடைந்து விழுந்த யால, வில்பத்துகளின் சுற்றுலா விடுதிகள், மரந்தமடு ஓய்வு விடுதி மற்றும் வில்பத்து பூங்கா அபிவிருத்தியும் ஹிக்கடுவை தேசிய பூங்காவின் அலுவலக கட்டடம் உட்பட  அலுவலகத்தை நிறுவுவதும் அலுவலகம் மற்றும் ஓய்வு  விடுதிகள் பலவற்றின் புனர்நிர்மாண நடவடிக்கைகளை மேற்கொள்வதும் நிறுவனத்துக்காக புதிய வாகனங்கள் பலவற்றைக் கொள்வனவு செய்வதற்கும் செயற்படுவது அவரினால் மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறே அவரினால் அதிகாரிகளுக்காக மேற்கொள்ளப்பட்ட நலன்புரி நடவடிக்கைகளும் பலவாறாகும்.

கண்டி தர்மராஜ வித்தியாலயத்தில் பாடசாலைக் கல்வியைப் பெற்ற ரத்நாயக அவர்கள் பேராதனை பல்கலைக்கழகத்தில் தாவர விஞ்ஞான விசேட பட்டதாரியொருவராகும். அவ்வாறே அப்பல்கலைக்கழகத்திலேயே சூழல் விஞ்ஞானம் பற்றிய தத்துவ முதுமாணி பட்டத்தையும், ஐக்கிய இராச்சியத்தில் ‘ரீடன்’ பல்கலைக்கழகத்தில் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவம் பற்றிய விஞ்ஞானமுதுமாணிப் பட்டத்தையும் நிறைவேற்றியுள்ளார். ‘Wild Flowers of Sri Lanka’மற்றும்‘Common way side tree of Sri Lanka’ அவரினால் எழுதப்பட்ட இரண்டு நூல்களுமாகும். அவர் 8  ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.

தயாவன் ரத்நாயக அவர்கள் இர மகள்களின் தந்தையாவார். அவரின் மனைவி டப்.ஆர்.டீ.எம்.யூ.பீ. ரத்நாயக விரிவுரையாளரொருவராகவும், மூத்த மகள் எச். அனூஷி உதங்கா ரத்நாயக மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் பட்டத்தைப் பெற்று திட்ட கலுரொருவராக சேவையற்றுவதோடு இரண்டாவது மகள் எச். டிலூஷி விஷ்வனீ ரத்நாயக ருஹூணு பல்கலைக்கழகத்தில் வைத்திய மாணவியொருவராவார்.

தயாவன் ரத்நாயக அவர்களின் தொலைபேசி இலக்கம் 0714465444 மற்றும் மின்னஞ்சல்  dayawanratnayake@yahoo.comஆகும்.

 

ஹொரொவ்பொத்தான தேசிய பூங்கா

இலங்கையில் நிலவுகின்ற யானை மனித மோதலின் பெறுபேறொன்றாக இனங்காணப்படுகின்ற ஆபத்தான யானைகளை புனர்வாழ்வளிக்கும் நிலையமொன்றாக நடத்திச் செல்லும் ஆரம்ப நோக்குடன் அனுராதபுர மாவட்டத்தில் கிழக்கு எல்லைக்கு ஆகுமாறு அமைந்துள்ள ஹொரொவ்பொத்தான பிரதேச  செயலாளர் பிரிவிற்குள் ஹொரொவ்பொத்தான தேசிய பூங்கா அமைக்கப்பட்டது. மேலும் வனவிலங்கு மற்றும் சூழல் அமைப்பினைப் பாதுகாத்தல், சூழல் அபிவிருத்தி நடவடிக்கைகளின் முன்னேற்றம், அருகிலுள்ள கிராம மக்களின் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளை உயர்த்துதல் எனும் நோக்கங்களோடு 06.12.2011 திகதி வர்த்தமானி இலக்கம் 1735/21 இன் கீழ் 2570 ஹெக்டயாரான நில அளவைக் கொண்ட ஹொரொவ்பொத்தான தேசிய பூங்கா பிரகடனப்படுத்தப்பட்டது.

ஹொரொவ்பொத்தான தேசிய பூங்கா இயற்கைக்கு அன்பு செலுத்துபவர்களினால் கண்டுகொள்வதற்கு விருப்பமான இலங்கையிலுள்ள பிரதான இடங்களுள் ஒன்றாகும்.  இலங்கையில் இயற்கை அழகின் தனியாக வெளிப்படுத்தப்படுகின்ற இன்னொரு நிலமொன்றான இப்பூங்கா இலங்கையில் யானைகள், கரடிகள், சிறுத்தைகள், மான்கள் மற்றும் பெரும்பாலான பறவைகள் உட்பட பல்வேறுபட்ட வனவிலங்குகளுக்கு பாதுகாப்பினை வழங்குகின்ற வாழிடமொன்றாகும். பூங்காவானது யானைகளின் எண்ணிக்கைக்கு பிரசித்திளை வழங்குவதோடு அதிகளவான யானைகளின் எண்ணிக்கை இவ்வியற்கை வாழிடத்தினுள், புல்லை மேய்ந்து ஒவ்வொருவருடனும் இடையிடையே செயற்பட்டு வாழ்வதனைக் கண்டு கொள்ள முடிகின்றது.

அதிகளவான பாலூட்டிகளுக்கு மேலதிகமாக, ஊர்வன, ஈரூடகவாழிகள் மற்றும் பூச்சிகள் உட்பட சிறிய உயிரினங்கள் பாரிய அளவு இப்பூங்காவில் வாழ்கின்றன. மயில் மற்றும் சாம்பல் நாரை உட்பட பூங்காவில் உள்ள பல்வேறுபட்ட பறவைகளிடையேபுலம்பெயர் பறவையினங்கள் சிலவற்றுக்கும் இப்பூங்கா வசிப்பிடத்தை வழங்குகின்றது. இவ்வாறு பூங்காவில் தாவர மற்றும் விலங்கினங்கள் அங்குள்ள சூழல் தொகுதியை அழகுபடுத்துவதற்கும் மேற்பரப்பினை நடத்திச் செல்வதற்கும் பெருமளவில் உதவுகின்றது. இலங்கையில் ஒதுக்கப் பிரதேசங்களின் வலையமைப்பின் பகுதியொன்றான இங்கு பாதுகாப்பானது மிக முக்கியமானதாகும்.  இப்பூங்காவில் சூழல் அமைப்பானது, வலயத்தின் உயிர்ப் பல்வகைத்தன்மைக்கு மிக முக்கியமானதாகும்.

தாவர சமூகமானது  கலப்பு வரண்ட என்றும் பசுமையான காடுகளின் வகையைச் சேர்ந்தது. இப்பிரதேசத்தில் பாலை, முதிரை மற்றும் வீரை பெரும்பாலானளவு கிடைப்பதோடுகருங்காலி, விளா, காட்டு நொச்சி, நாவல் மற்றும் வெடிவேம்பு போன்றே ஆத்தி, வெண்ணங்கு, கொன்றை மற்றும் விடத்தலை தாவரமும் உள்ளன.

நாட்டில் மக்கள் விருத்தியுடன் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி கருத்திட்டங்கள் காரணமாக எண்ணிக்கை குறைந்து யானைகளின் பயண முறையும் மாறுபட்டது. இதனால் யானைகள் கிராமங்களுக்குள் உட்புகுந்து கடுமையான முறையில் நடந்து கொண்டு சொத்துக்களுக்கும் மனித உயிர்களுக்கும் சேதம் விளைவிப்பது அதிகரித்தது. சுமார்2010 ஆண்டாகும் போது இதன் மூலம் யானை – மனித மோதல் கொடூரமான முறையில் உச்ச கட்டமடைந்ததும், அதன் மூலம் அண்ணளவாக மனித உயிர்கள் 100 இலிருந்து 130 வரையும் வருடாந்தம் யானைகள் 200 இலிருந்து 400 வரையான அளவானவை இறப்பதற்கு நேரிட்டன. இதற்கிடையில் பௌதிக, சொத்துக்கள் மற்றும் பயிர்ச் சேதங்கள் பாரிய அளவில் ஏற்பட்டன.

வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் அப்போது இனங்காணப்பட்டிருந்த கடும் சவாலாக, யானை- மனித மோதலை எடுத்துக் காட்ட முடியும்.   இவ்யானை மனித மோதலின் காரணமாக ஏற்படும் உயிர் சொத்து மற்றும் பயிர்ச் சேதங்களைக் குறைத்துக் கொள்ளும் நோக்குடன் வன்முறையான யானைகளைத் தடுத்து வைத்து புனர்வாழ்வளிப்பதற்கு யானைகள் தடுப்பு நிலையமொன்றை நிறுவுவதன் தேவை வலுவாக எழுந்தது. மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகின்ற காட்டு யானைகளைத் தடுத்து வைத்துக் கொண்டு புனர்வாழ்வளிப்பதற்கான முதலாவது கட்டமாக அனுராதபுர மாவட்டத்தில்  ஹொரொவ்பொத்தான தேசிய பூங்காவினுள் காட்டு யானைகளைப் பாதுகாக்கும் நிலமொன்று அமைக்கப்பட்டது.  ஹொரொவ்பொத்தான யானைகள் தடுப்பு நிலம் அமைந்திருக்கும் காடானது இரண்டாம் நிலைத்தன்மையுள்ள கலப்பு மற்றும் வரண்ட பசுமையான  காடொன்றாகும். 2015 இல் நாட்டில் முதலாவது யானைகள் தடுப்பு மைதானம் (EHG)ஆக ஹொரொவ்பொத்தான நிறுவப்பட்டதோடு, நாடு பூராகவுமுள்ள பிரச்சினைகளைக் கொண்ட யானைகள் அங்கு தடுத்து வைக்கப்பட்டன.

நுழைவாயிலொன்று
நுழைவாயிலுக்கு முன் உள்ள பலகையொன்று

ஹொரொவ்பொத்தான யானைகள் தடுப்பு மைதானம் (EHG)என்பது உலகில் முதலாவது யானைகள் தடுப்பு மைதானம் ஆவதோடு இங்கு யானைகள் சுமார் 30 இனைத் தடுத்து வைத்துக் கொள்ள முடியுமாவதோடு அதற்கு மேலதிகமான முறையில் யானைகளைத் தடுத்து வைத்துக் கொள்ளப்படுவது அவற்றுக்குத் தேவையான உணவிகளை வெளியிலிருந்து எடுத்து வழங்க வேண்டும்.  யானைகளுக்குத் தேவையான நீர் மற்றும் உணவை வழங்குவதற்கு 05 குளங்கள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளதோடு புல்நிலங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன.  தடுத்து  வைத்துக் கொள்ளும் யானைகள் வெளியேறுவதைத் தடுப்பதற்காக விசேட பாதுகாப்பு உத்திகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதிலுமிருந்து பிடிக்கப்பட்ட குழப்பமான யானைகளைத் தடுத்து வைத்துக் கொள்ளல் மற்றும் புனர்வாழ்வளிப்பதற்காக அமைக்கப்பட்ட இங்கு ஆரம்பத்திலிருந்தே சுமார் 64 யானைகள் இதுவரை தங்குமிடத்தைப் பெற்றுள்ளன.

                                                                                                                    பாதுகாக்கப்பட்ட யானைகள்

பூங்காவின் முகாமைத்துவம் பூங்காவின் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கும் அங்கு சுற்றுலா வியாபாரத்துக்கிடையில் மென்மையான சமநிலையொன்றை வைத்துக் கொள்வதற்கும் அர்ப்பணிப்புடன் உள்ளது. எம்மால் பூங்காவில் சட்டதிட்டங்களை மதித்து அங்கு இயற்கை அழகினை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாத்து வழங்குவதற்கும் முயற்சியெடுக்க வேண்டும். ஹொரொவ்பொத்தான தேசிய பூங்கா இயற்கைக்கு அன்பு செலுத்துபவர்களுக்கான சிறந்த இடமொன்றாகும். அங்குள்ள அற்புதமான காட்சிகள், பல்வேறுபட்ட விலங்குகள் மற்றும் அவற்றைப் பாதகாப்பதற்காக உள்ள அர்ப்பணிப்பு உங்களுக்கு தனித்துவமானதும் மறக்க முடியாத நினைவுகள் என்பனவாக உருவாகின்றன.  தற்போது சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்படாத ஹொரொவ்பொத்தான தேசிய பூங்காஎதிர்காலத்தில் சுற்றுலாப் பயணிகளுக்காக திறப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஹொரொவ்பொத்தான தேசிய பூங்கா தொடர்பான விளக்கத்தில் காணப்படும் விலங்குகளின் பெயர்ப் பட்டியல்

 Sinhala Names

Tamil Names

English Names

Scientific Name

කොටියා

சிறுத்தை

Leopard

Panthera pardus kotiya

අලියාஆசிய யானைAsian elephantElephas maximus

වලහා

தேன் கரடி

Sloth bear 

Melursus ursinus

මුවාஇலங்கைப் புள்ளிமான்Spotted deerAxis axis ceylonensis
මොනරාமயில்PeafowlPavo cristatus
අළු කොකාசாம்பல் நாரைGrey heronArdea cinerea

ஹொரொவ்பொத்தான தேசிய பூங்கா தொடர்பான விளக்கத்தில் காணப்படும் மரங்களின் பெயர்ப் பட்டியல்

Sinhala NamesTamil NamesEnglish NamesScientific Name
පලුபாலைPalu

Manilkara hexandra

වීරவீரைHedge Box wood

Drypetes sepiaria

බුරුතமுதிரைSatinwood

Chloroxylon swietenia

කළුවරகருங்காலிEbony

Diospyros ebenum

දිවුල්விளாWood apple

Limonia acidissima

මිල්ලகாட்டு நொச்சிMilla

Vitex altissima

දඹநாவல்Damba

Syzgium Sps

හුළං හික්வெடிவேம்புIndian Mahogani

Chukrasia tabularis

මයිලஆத்திMila

Bauhinia racemosa

වෙලන්வெண்ணங்குFishing rod tree

Pterospermum suberifolium

ඇහැලகொன்றைGolden shower tree

Cassia fistula

කටු අන්දරவிடத்தலைSickle bush

Dichrostachys cinerea

குப்பாளர்  – தம்மிகாமல்சிங்ஹ, மேலதிக செயலாளர்,வனஜீவராசிகள் மற்றும் வன  வளங்கள் பாதுகாப்பு அமைச்சு

பூங்கா பற்றிய தகவல்களத் தொகுத்தவர்ஹஸினி சரத்சந்திர, பிரதம உத்தியோகத்தர், வன பாதுகாப்புத் திணைக்களம் மஹேக்ஷா சதுராணி பெரேரா,அபிவிருத்தி  உத்தியோகத்தர்,வனஜீவராசிகள்  பாதுகாப்புத் திணைக்களம்

தமிழ் மொழிபெயர்ப்புஏ.ஆர்.எப். றிப்னா, அபிவிருத்தி  உத்தியோகத்தர், (வனஜீ.வன. வள. பா. அ)

ஆங்கில மொழிபெயர்ப்புஅசோக பலிஹவடன, மொழிபெயர்ப்பாளர், (வனஜீ.வன. வள. பா. அ)

இணய வடிவமப்புஎன்.ஐ கயத்ரி, அபிவிருத்தி  உத்தியோகத்தர், (வனஜீ.வன. வள. பா. அ) சீ. ஏ. டீ. டீ. ஏ.கொல்லுரே, முகாமைத்துவ சேவை​உத்தியோகத்தர், (வனஜீ.வன. வள. பா. அ)

படங்கள்இந்திக விஜேநாயக, வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம்