简体中文 ZH-CN English EN Français FR Deutsch DE Italiano IT Português PT සිංහල SI தமிழ் TA
Ministry of Wildlife and Forest Resources Conservation

அத்தியாயம் 36 – சோமாவதிய தேசிய பூங்கா

Content Image

வரலாற்று சோமாவதிய புண்ணிய பூமியை மத்தியாகக் கொண்டு அமைந்துள்ள சோமாவதிய தேசிய பூங்கா, கவுடுள்ள தேசிய பூங்கா, வௌளச் சமவெளி தேசிய பூங்கா மற்றும்  திரிகோணமடுதேசிய பூங்காக்களுக்கு  மத்தியாக அவற்றுக்கு எல்லையாக அமைந்துள்ளது.  திருகோணமலை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களினுள் அமைந்துள்ள 37645 ஹெக்டயாரான  பரப்பளவினைக் கொண்ட சோமாவதிய தேசிய பூங்கா1986  ஆண்டு செப்டெம்பர் மாதம்  02 திகதி சரணாலய நிலையிலிருந்து தேசிய பூங்காவொன்றாக உயர்த்தப்பட்டது.

 

 தம்புள்ளவிலிருந்து ஹபரணை சந்தி ஊடாக வரும்போது கந்தளை பாதையினூடாக பயணிப்பது போன்றே ஹபரணை சந்தியிலிருந்து பொலன்னறுவை திசைக்கு பயணிக்கும் போதிலும் மின்னேரிய நகரத்திலிருந்து திரும்பி ஹிங்குரக்கொட ஊடாகவும் சோமாவதிய தேசிய பூங்காவுக்கு நுழைவதற்கு முடியுமாக உள்ளது.

 

சோமாவதிய தேசிய பூங்காவுக்கு வேறாக பூங்கா தலைமையகமொன்று அமைக்கப்படவில்லை என்பதனால் கந்தளை மற்றும் சுங்காவிலவில் அமைந்துள்ள வட்டார பாதுகாப்பு அலுவலகத்தின் மூலம் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதோடு   கவுடுள்ள தேசிய பூங்காவுக்கு இணைந்து அமைந்துள்ள பிரதேசம் கவுடுள்ள தேசிய பூங்காவின் மூலம்  கண்காணிக்கப்படுகின்றது. கவுடுள்ள தேசிய பூங்காவின் தலைமையகத்தின்  அதிகாரிகளுடையதைப் போன்றே மெதிரிகிரிய பீட்டு அலுவலகத்தின் அதிகாரிகளின் தொடர்ச்சியான அவதானத்துக்கு சோமாவதிய தேசிய பூங்காவின் பக்கத்துக்கு செலுத்தப்பட்டிருந்தமை தனித்துவமிக்க விசேடமான சூழல் முக்கியத்துவங்களைக் கொண்டதான காரணத்தினாலும்   சட்ட விரோதமான செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்குமான அதிக  கவனத்தைச் செலுத்துவதற்கும் ஏற்பட்டிருந்தமையினால் ஆகும். ‌‌

 

அதனால் சிறிதளவோ அல்லது ஓய்வொன்று கிடைத்தவுடனேயே சோமாவதிய தேசிய பூங்காவுக்குச் செல்வதற்கு என்னைப் போன்றே எனது பணிக்குழுவில் அதிகமானோர் அதிக விருப்பத்துடன் இருந்தனர். அவர்களில் வட்டார பாதுகாவலர் சதுர குணரத்ன மற்றும் வட்டார உதவியாளர் சமிந்த, இந்திக உட்பட அதிகாரிகளைப் போன்றே சிவில் பாதுகாப்பு படையின் அசித, நிமல் மற்றும் சஞ்ஜீவயும் இது தொடர்பாக மிக அன்புடன் கடமையாற்றினர். தற்போது உயிருடன் இல்லாவிட்டாலும் கள உதவியாளர் கெகுலந்தர சோமாவதியவனே பாதுகாப்புக்கு  ஆற்றிய பணியைப் பாராட்ட வேண்டும்.

 

சோமாவதிய தேசிய பூங்காவின் விசேட இடங்களினுள் பெருவில பிரதேசத்திலும் அதனைச் சுற்றி அமைந்துள்ள  வில்லு தொகுதி எம் அனைவரினதும் மனதை அதிகளவு வென்ற இடமொன்றாகியது. கவுடுள்ள பூங்காவின் தலைமையகத்திலிருந்து பூங்காவினூடாக மெதிரிகிரியவிற்குச் சென்று அங்கிருந்து சோமாவதிய பக்கத்துக்கு யத்ம யானைத் தலை சந்தி சந்திக்கின்றது. அதற்கு அப்பெயர் வைக்கப்பட்டிருப்பது இறந்த காட்டு யானையொன்றின் மண்டையோடொன்று அச்சந்தியின் நடுப்பகுதிக்கு ஆகுமாறு வைக்கப்பட்டிருந்தமை என்றவாறு இருந்திருக்க முடியும். இன்னும் முன்னே செல்லும் போது சந்திக்கின்ற மிக கடினமான ஒற்றைப் பாதையில்வாகனமொன்றுக்கு பயணிக்க முடியாமையினால் நாம் அனைவரும் வாகனத்தை நிறுத்தி அங்கிருந்து கால்நடை மூலம் பயணிப்பதற்கு பழக்கப்பட்டிருந்தோம்.மகாவலி கங்கையை முன்னே கொண்ட நீரோடைகள் வனவிலங்குகளைப் போன்றே காடுகளினால் நிரம்பிய சோமாவதிய தேசிய பூங்கா நான் சென்றுள்ள காடுகளில் மிகவும் மனதைக் கொள்ளை  கொண்ட இடமொன்றாகும்.

 

இன்றைக்கு சுமார் 12 வருடங்களுக்கு முன்னர் நான் கவுடுள்ள  தேசிய பூங்காவில் சேவைக்கு வந்த தினத்திலேயே திட்டமிட்டவாறு சோமாவதிய தேசிய பூங்காவின் முதலாவது காவல் பயணமொன்று  திட்டமிடப்பட்டது சட்ட விரோத நடவடிக்கைகளைத்  தேடிப் பார்ப்பதனை விடவும் சோமாவதிய தேசிய பூங்காவில்  நடப்பதற்கு உள்ள ஆசையினால் ஆகும்.

 

அன்று பகல் உணவை எடுத்ததன் பின்னர் முன்னர் திட்டமிட்டவாறு எமது குழு கவுடுள்ள பூங்காத் தலைமையகத்திலிருந்து மெதிரிகிரிய ஊடாக  PA-2058 கெப் வாகனத்தில் தேவையான  பொருட்கள் போன்றவற்றையும் எடுத்துக் கொண்டு சோமாவதியவை நோக்கி புறப்பட்டோம். சோமாவதியவுக்கு உட்பட்டு கால்நடையாக நடந்து களைப்புக்கு உள்ளாகியிருந்த நாம் சந்தித்த பெருவில பிரதேசத்தில் அமைந்துள்ள  இடிந்திருந்த பெரிய இரண்டு மாடி பங்களாவை சிறிதாகிய எமது உள்ளத்தில் கற்பனையில் இருந்த பேய் பங்களாவுக்கு உயிரூட்டக் கூடிய உதாரணமொன்றாகத் தோன்றியது.

 

திட்டமிட்டவாறு இருள் ஏற்படுவதற்கு முன்னர் இரவினைக் கழிப்பதற்கு இடமொன்றைத் தேடிக் கொண்டிருந்த எமக்கு அது பெரும் ஆறுமலாக இருந்தது. அது எமக்குள் உள்ளேட்பட்டதுடன் அதற்குள் இருந்த வயதினால் முதிர்ச்சியடைந்த முடி மற்றும் தாடியை வளர்த்துக் கொண்டிருந்த நன்கு வளர்ந்த நபரொருவர் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து நாம் இருந்த திசைக்கு அடியொன்று முன்னே வந்தமை சிறிது பயந்த சுபாவத்துடனேயாகும். அவருக்கு எம்மை இனங்கண்டு கொள்வதற்கு  ஒரு கணம் மாத்திரமே சென்றது. வனவிலங்கு அதிகாரிகள் அவரின் வாழ்க்கையில் அடிக்கடி சந்திக்கின்ற பழக்கமான நபர்களானமையினால் இருந்திருக்கலாம்

இப்பகுதியில் யானைகள் இருக்கின்றனவா?நாம் கதையை ஆரம்பித்தோம்.

ஆம் ஐயா.இன்று இங்கே தங்குங்கள் இங்கிருந்து அங்கே செல்ல முடியாது யானைகள் இருக்கின்றன

அவர் பதில் கூறினார். . நிரம்பி வழிந்து சென்ற பாசி கட்டிய இடிந்து விழுந்த கட்டடத்தின் கீழே வெளிப்புறத்தை நோக்கி அமைந்துள்ள   றையில் உடைந்து சென்ற சீமெந்துக் கலவையின் மேல்நாம் அனைவரும் உட்கார்ந்தோம். ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் போது இரவு சாப்பாட்டுக்குக் கொண்டு சென்ற பாணிலிருந்து ஒரு பகுதியை அவருக்குக் கொடுத்து விட்டு மீதிப் பகுதியை எமக்கிடையில் பகிர்ந்து கொள்வதற்கு ஆயத்தமானோம். இரவு உணவை சமைப்பதற்கு முறையொன்று இருக்கவில்லைஎனினும் மீன் குழம்பொன்றின் வாசணை பரவியது. எமது விருந்தினரினால் பக்கத்தில் வளர்ந்திருந்த குளத்து மீன் சட்டியிலிருந்து சிறிதளவை எடுத்து எமக்கு உபசரித்தார். சூடான மீன் குழம்புடன் பாண் துண்டொன்றின் ருசியைச் சுவைப்பதற்கு எமக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அவ்வாறான  உபசரிப்பு இக்காட்டின் மத்தியில் எதனையும் எதிர்பார்க்காமையினால் நாம் ஆச்சரியத்துக்கு உள்ளானோம்.

இதுதான் இனி திரு. டீ. எஸ். சேனாநாயக்க அக்காலத்தில் இங்கே வந்தால் தங்கியிருந்த இடம்

அவர் மீண்டும் கதையை ஆரம்பித்தார்.நான்கு பக்கங்களையும் இருள் சூழ்ந்து கொண்டதோடு வனவிலங்குகளின் சத்தம் மற்றும் அவரின் குரல் விடுபடும் போது வேறு எந்தவொரு சத்தமும்கேட்கவில்லை என்பதனால் அக்கதையை தொடர்ந்து கூறிக்கொண்டு செல்வதற்குநாம் தடங்கல்களை ஏற்படுத்தவில்லை. .

 

ஐயா எனதுபெயர் விக்டர்..நான் முன்னைய காலத்திலிருந்தே விலங்குகளைக் கொன்றேன். வேட்டையாடினேன். அக்காலத்தில் எனது தொழில் வேட்டையாடுதல் ஆகும்.  எனினும் தற்போது அப்பாவமாக காரியத்தை செய்வதில்லை. நான் ஒரு நாள் விலங்கொன்றைக் கொன்ற வேளையில் வனஜீவராசிக்கு அகப்பட்டேன். அந்த ஐயா ஓர் கடவுள். சிறிய ஐயா எனக்கு அடிக்க முற்படும் போது   பெரிய ஐயா அடிக்க விடவில்லை. எனக்கு நிறைய விடயங்களைக் கூறினார்.  அன்றிலிருந்து இன்று வரை நான் விலங்குகளைக் கொல்வதில்லை. அவ்வாறே ரலபனாவ வாவியில் பெட்டிக் கிளைகளை இட்டு விலங்குகளைக் கொன்றேன். எனினும் அவற்றைப் பற்றி தற்போது நினைப்பது கூட இல்லை

அவர் கூறிக் கொண்டே சென்றார்.“ தற்போது செய்வது மீன் பிடிப்பது மட்டுமாகும்.  அதனாலேயே வாழ்கின்றேன் அவரின் சுவையான கதைகளுக்கு  இழுபட்டுச் சென்ற மனங்களுடன் நாம் அனைவரும் அன்றிரவு அப்பாழடைந்த பங்களாவைக் கடத்தினோம். அடுத்த நாள் பாழடைந்தபங்களாவுக்கு அருகிலிருந்த நீர்க் குழியொன்றில் முகத்தைக் கழுவிக் கொணட நாம் எமது உல்லாசப் பயணத்துடன் இணைந்த காவல் பயணத்தையும் ஆரம்பிப்பதற்கு ஆயத்தமாகும் போது விக்டர் எமக்கு பிரியாவிடை தந்து விட்டு அவரின் மீன்பிடித் தொழிலுக்காக புறப்பட்டமை சிறிது கவலையான உணர்வொன்றை எம் அனைவரிலும் உருவாக்கியது.

 

சுமார் ஒரு வருடத்துக்குப் பின்னர் ஓர் இரவில் தெரியாத் தொலைபேசி இலக்கமொன்றிலிருந்து அழைப்பினைப் பெற்ற நான் ஆச்சரியமடைந்தமை அக்குரல் விக்டரின் என்பதினாலாகும். பின்னர் விக்டர் அடிக்கடி எனக்கு அழைப்புக்களை விடுத்ததோடு அதில் அதிகளவானளவு அவர் மதுபோதையில் இருக்கும் இரவு நேரங்களில் எடுத்தமை என்பதனை அறிந்து கொள்வதற்கு  சிரமமாக இருக்கவில்லை.  அதற்கிடையில் அவரின் நோய் வறுமை போன்றே  சுவையான அனுபவங்களையும் என்னுடன் பகிர்ந்து கொள்வதற்கு மறக்கவில்லை.பல மாதங்களின் பின்னர் தொலைபேசி அழைப்பினை விடுத்து அன்று பெருவிலவில் கதைத்தவை மனதைத் தாக்கியதெனவும் மீன் தொழிலிலிருந்தும் அகன்று பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதெனவும் கூறினார்.

 

நான் அவருக்கு தொலைபேசி அழைப்பினை விடுத்தாலும் தொடர்ச்சியாக பல வருடங்கள் தொலைபேசியில் கதைப்பதற்கு அவர் பழக்கப்பட்டிருந்தார்.  அது அவரின் மாற்றம் காரணமாக மிக மகிழ்ச்சிக்கு உள்ளாகியிருப்பது நான் என அவர் விளங்கியமையினால் இருக்கலாம்.  காலம் செல்லும் போது சுமார் நான்கு வருடங்களிலிருந்து  அவரிடமிருந்து தொலைபேசி அழைப்புக்கள்  ஏன் வரவில்லை என நான் இன்னும் அறியாதுள்ளேன்.

 

எவ்வாறாயினும் எனது முதல் நியமனத்துடன்  அறிமுகமில்லாதவராகசந்திக்கின்ற விக்டர் வனவிலங்கு அதிகாரிகள் என்பதனால் முழுமையாக விலங்குகளைக் கொலை செய்வதனை விட்டு விடுதல் எனது மனதை மிகவும் பாதித்தது. அவரைப் பற்றிய நினைவுகள் எனது மனதில் இவ்வாறு பதியப்பட்டுள்ளது.

 

 

 

திரு எரந்த கமகே அவர்கள்

திரு எரந்த கமகே அவர்கள் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரியொருவர் என்பதோடு கொழும்பு பல்கலைக்கழகத்தில் தகவல் தொழிநுட்பப் பிரிவில் முதுமாணிப் பட்ட டிப்ளோமாவையும் அப்பிரிவிலேயே முதுமாணிப் பட்டத்தையும் நிறைவு செய்துள்ளார். அவ்வாறே இந்தியாவில் வனவிலங்கு முகாமைத்துவம் பற்றி முதுமாணி முதுமாணி டிப்ளோமாவையும் நிறைவு செய்துள்ளார்.

2004 ஆண்டில் திட்டமிடல் மற்றும் தகவல் தொழிநுட்ப பிரிவு, 2012 ஆண்டில் கிரிதலை வனவிலங்கு பயிற்சி நிலையம், 2013 ஆண்டிலிருந்து 2018 ஆண்டு வரைஇயற்கை முகாமைத்துவ பிரிவு எனும் பிரிவுகளைப் போன்றே கவுடுள்ள தேசிய பூங்கா மற்றும் புத்தளம் வனவிலங்கு வலயம் போன்ற இடங்களிலும் கடமையாற்றி தற்போது எரந்த கமகே அவர்கள் 20 வருடங்களுக்கு மேற்பட்ட சேவைக் காலத்தை வனஜீவராசிகள் திணைக்களத்தினுள் தமது கடமைப் பணியினை நிறைவேற்றி வருகிறார்.

 

 

திரு எரந்த கமகே அவர்களின் தொலைபேசி இலக்கம் 0714465420ஆகும்.

சோமாவதிய தேசிய பூங்கா

இலங்கையில் கிழக்கு, திருகோணமலைக்கு தெற்காக அமைந்துள்ள சோமாவதிய தேசிய பூங்கா 1986 செப்டெம்பர் 12 ஆம் திகதி வர்த்தமானி இலக்கம் 417/5 கீழ் தேசிய பூங்காவொன்றாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. இதற்கு முன்னர் 1966 ஆகஸ்ட் 09 ஆம் திகதி சரணாலயமொன்றாக இது பெயரிடப்பட்டிருந்தது. சோமாவதிய தேசிய பூங்கா கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் பரந்துள்ளதோடு 37645.5 ஹெக்டயாரான பரப்பளவைக் கொண்டதாகும். கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் கொட்டியார்பத்துவிலும் வடமேல் மாகாணத்தில் பொலன்னறுவை மாவட்டத்தில்  ஏகொடபத்துவையும் எல்லையாகக் கொண்டு மகாவலி நிலப் பிரதேசத்தில் சோமாவதிய பூங்கா அமைந்துள்ளது. சோமாவதிய தேசிய பூங்காவினுள் வரலாற்று சோமாவதி சைத்தியம் அமைந்திருப்பது இத்தேசிய பூங்காவுக்கு வரும் போது அடையாளப்படுத்துவதற்கு காரணமாக இருந்திருக்கலாமோ என எண்ண முடிகின்றது.

சோமாவதிய சரணாலயத்திற்குள் இடிபாடான சோமாவதிய சைத்தியம் சுமார் 1940 களில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. மகாவலி கங்கையில் இடது கரைக்கு அண்மையில் அமைந்துள்ள வரலாற்று சோமாவதி சைத்தியம் காவன்திஸ்ஸ மன்னனின் சகோதரி மற்றும் பிரதேச நிர்வாகி அபய இளவரசனின் மனைவியான சோமாவதி இளவரசியின் பெயரில் கட்டப்பட்டதென குறிப்பிடப்படுகின்றது. அவ்வாறே மிஹிந்து மகா ஞானமடைந்த பிக்குவிடமிருந்த புத்த பெருமானின் வலது பல்லை வைப்பதற்கு அபய இளவரசரினால் இத்தூபம் கட்டப்பட்டதென கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படுகின்றன. முதலாம் நூற்றாண்டிலிருந்து நான்காம் நூற்றாண்டு வரையான காலப் பகுதிக்குள் சோமாவதிய சைத்தியத்தை புனர்நிர்மாணம் செய்த மன்னர்கள் பலரின் பெயர்கள் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

சோமாவதிய தேசிய பூங்கா மகாவலி அபிவிருத்தி கருத்திட்டத்தில் நிர்க்கதியான வனவிலங்குகளின் பாதுகாப்பு மற்றும் பேணுதலை ஒழுங்குபடுத்துவதற்காக அக்கருத்திட்டத்தின் கீழ் 1984 இல’ பிரகடனப்படுத்தப்பட்ட தேசிய பூங்காக்களுள் ஒன்றாகும். வஸ்கமுவை தேசிய பூங்கா, மாதுறு ஓயா மற்றும் வெள்ளச்  சமவெளி அவ்வாறு பிரகடனப்படுத்தப்பட்ட ஏனைய தேசிய பூங்காக்களாகும். இச்சோமாவதிய தேசிய பூங்கா  வெள்ளச்  சமவெளி   தேசிய பூங்காவுக்கும் திரிகோணமடு இயற்கை ஒதுக்கத்துக்கும் இணைப்பாக அமைந்துள்ள மேலதிக வில்லுகளைக் கொண்ட நிலமொன்றாகும். இங்கு கங்கை நீரோடை ஏரிகளினால் சுற்றியுள்ள நீர்த்தேக்கங்கள் 20க்கும் மேற்பட்ட அளவில் அமைந்துள்ளன.  யானைகளின் விருப்பமான உணவான பெரு எனும் புல்லினத்தையும் இவ்வில்லுகளில் காண முடிகின்றது. மகாவலி கங்கையை அண்டியுள்ள இவ்வாறான வில்லுகள் அதனை அண்டி வாழ்கின்ற தாவர உண்ணிகள் பலவற்றின் பாதுகாப்பான வாழிடமாக உருவாகியுள்ளது.

பொலன்னறுவையிலிருந்து 20 கிலாமீற்றர் வடகிழக்குத்  திசையில் அமைந்துள்ள சோமாவதிய தேசிய பூங்கா கொழும்பிலிருந்து ஈசான திசையில் 266 கிலாமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. சோமாவதி வரை நீண்டு செல்கின்ற பாதை பொலன்னறுவையிலிருந்து ஆரம்பிப்பதோடு மின்னேரியாவிலிருந்தும் ஆரம்பிக்கின்றது. பயணப் பாதைகள் இரண்டும் சுங்காவிலவில் சந்திக்கின்றன. அகநுவரவிலிருந்து நெருங்க முடியுமான பாதைகளாவன கொழும்பு, குருனாகல், ஹபரணை, பொலன்னறுவை, வைத்தியசாலை சந்தி, சுங்காவில  என்பனவாகும். தூர அளவுகள் சுமாராக 165 மைல்களாகும்.

வடகீழ் மற்றும் தென்மேல்பருவ மழையின் காரணமாகப் பெருக்கெடுக்கும் வெள்ளத்தினால் இப்பூங்கா வருடத்துக்கு இரு முறை மூழ்கின்றது.  இங்கு நீருக்கு தாக்குப் பிடிக்கின்ற புல்லினங்கள் மற்றும் நீர்த் தாவரங்களை அதிகளவில் கண்டுகொள்ள முடியும். இவற்றிடையில் பொன்னாங்காணி,  கங்குங், கருங்குவளை எனும் நீர்தாவரங்களாகும். அதிகளவாகப் பெரிதும் பரந்துள்ள புல்லினங்களாவன,  எருமைப்புல்,  கடற்குதிரை பஸ்பம் மற்றும்  அரிசிப் புல் ஆகும்.  சிறிது ஆழமான நீரில், மிதக்கும் நீர்த்தாவரங்கள் ஆகும்.  நீல அல்லி மற்றும் நீரினால் அமிழ்ந்த நீர்த் தாவரமாகும். தாவரங்களுள் வெண்மருது,  இலுப்பை, அரட்டம்,  நீர்க்கடம்ப மரம், முள்முருக்கு என்பனவாகும்.

பூங்காவின் சூழல் முக்கியத்துவத்துக்கு பிரதானமாக காரணமாக இருப்பது யானைகள் போன்ற விலங்கினங்கள் அதிகமாக இருப்பதாகும். சோமாவதிய தேசிய பூங்காவில் யானைகள் 100-150 வரையான அளவில் வாழ்வதோடு அவை சிறிய குழுக்களாகவும்  மூன்று நான்காகவும் நடமாடுவதைக் காண முடிகின்றது.  ஏனைய தெ ளிவகக் காட்டுகின்ற பாலூட்டி விலங்குகளிடத்தில் செந்நரிகள், மீன்பிடிப்பூனை,  துரும்பன் பூனை, காட்டுப் பன்றி, மரைகள், எருமை, புள்ளி மான்கள் உள்ளடங்குகின்றன. 


அறியயானை          

புள்ளி மான்

புலம்பெயர் பறவையினங்கள் சுமார் 75 சதுப்பு நிலங்கள் சார்ந்து காணக் கிடைக்கின்றன. பொதுவான புலம்பெயர்பவைகளுக்கு சீலச் சிறகி, சின்ன பச்சைக்காலி, பொரி உள்ளான்,  ஊசி வால் கோரை உள்ளான்,  கருவால் மூக்கன் என்பன உள்ளடங்குகின்றன. தங்குகின்ற  பறவைகளிடையே  மஞ்சள் மூக்கு நாரை,  நத்தை குத்தி நாரை,  சின்னக் கொக்கு,  காட்டுக்கோழி,  சின்ன நீர்க்காகம்,  உண்ணிக் கொக்கு,  இந்திய வெள்ளை அரிவாள் மூக்கன் மற்றும்  நெடுங்கால் உள்ளான்,  இலங்கை குக்குறுவான்,  மலபார் கறுப்பு வெள்ளை இருவாய்ச்சி ஆகும். வெள்ளச்  சமவெளி தேசிய பூங்கா மற்றும் சோமாவதிய தேசிய பூங்கா ஆகிய இரண்டும்  புலம்பெயர் மற்றும் தங்கும் நீர்ப் பறவைகளுக்கான மிக முக்கியமான பூங்காக்களாகும். 

மகாவலி வலயத்தினுள் ஒதுக்கப் பிரதேசங்களுக்காக மொத்த தொகுதி திட்டமொன்று செயற்பட்டாலும் அப்பிரதேசம் மகாவலி சூழற் கருத்திட்டத்துக்கு உள்ளடக்கப்படும் வரை பாரிய அளவில் முகாமையின்றியும் பாதுகாப்பின்றியும் இருந்தது.  மக்கள் தமது கால்நடைகளுடன் புலம்பெயர்ந்ததுடன் பிரதேசத்தில் காட்டுப் பகுதி பயிர்செய்வதற்காக சுத்திகரிக்கப்பட்டன.  1970 களின்  நடுப்பகுதியிலிருந்து காடழிப்பு மிகப் பரந்தளவில் காணப்பட்டது.  பூங்கா பிரகடனப்படுத்தப்பட்டதுடன் சட்ட விரோதமாக மரங்களை வெட்டல், புகையிலைப் பயிர்ச்செய்கை மற்றும் கால்நடைகளின் வருகை படிப்படியாகக் குறையத் தொடங்கின.

 

சோமாவதிய பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களுக்கு யானைகளினால் ஏற்படும் சேதம் இன்று வரையும் காணப்படுகின்றது. அதற்கு காரணமொன்றாக இருப்பது யாத்திரிகளினால் மீதப்படுத்தப்பட்ட கழிவு உணவுகளைத் தேடிய விலங்குகளின் வருகையாகும்.

සෝමාවතීජාතිකඋද්‍යානයපිළිබඳව විස්තරයේ ඇති සතුන්ගේ නම් ලැයිස්තුව

சோமாவதிய தேசிய பூங்காதொடர்பான விளக்கத்தில் காணப்படும் விலங்குகளின் பெயர்ப் பட்டியல்

List of animals in the Somavatiya National Park

Sinhala Names

Tamil Names

English Names

Botanical Name

හිවලා

செந்நரி

Golden jackal

Canisaureus

හදුන්දිවියා

மீன்பிடிப்பூனை

Fishing Cat

Prionailurusviverrinus

කොළදිවියා

துரும்பன் பூனை

Rusty- spotted cat

Felisrubginosa

වල්ඌරා

காட்டுப் பன்றி

Wild Boar

Susscrofa

ගෝනා

மரை

Sambar

Rusa unicolor

මීහරකා

எருமை

Water buffalo

Bubalusbubalis

තිත්මුවා

புள்ளி மான்

Spotted deer 

Axis axisceylonensis

බැමසුදුසේරුවා

சீலச் சிறகி

Garganey

Anasquerquedula

වගුරුසිලිබිල්ලා

சின்ன பச்சைக்காலி

Marsh sandpiper

Tringastagnatilis

වනසිලිබිල්ලා

பொரி உள்ளான்

Wood sandpiper

Tringaglareola

උල්-පෙඳකෙස්වටුවා

ஊசி வால் கோரை உள்ளான்

Pintailed snipe

Gallinagostenura

කළු-පෙඳගොහුදුවිත්තා

கருவால் மூக்கன்

Black-tailed godwit

Limosalimosa

ලතුවැකියා

மஞ்சள் மூக்கு நாரை

Painted stork

Mycterialeucocephala

ආසියානුවිවරතුඩුවා

நத்தை குத்தி நாரை

Openbill Stork

Anastomusoscitans

පුංචිඇලිකොකා

சின்னக் கொக்கு

Little Egret

Egrettagarzetta

වළිකුකුලා

காட்டுக்கோழி

Sri lankajunglefowl

Gallus lafayetill

දියකාවා

சின்ன நீர்க்காகம்

Little Cormorant

Phalacrocoraxniger

ගවකොකා

உண்ணிக் கொக்கு

Cattle egret

Bubulcus ibis

හිසකළුදෑකැත්තා

இந்திய வெள்ளை அரிவாள் மூக்கன்

Black Headed Ibis

Threskiornismelanocephalus

කළුපියාපත්සහිතකලපුකිරලා

நெடுங்கால் உள்ளான்

Black – wined stilt

HimantopusHimantopus

රත්මුහුණුකොට්ටෝරුවා

இலங்கை குக்குறுவான்

Crimson – Fronted Barbet

Psilopogonrubricapillus

පෝරැකෑඳැත්තා

மலபார் கறுப்பு வெள்ளை இருவாய்ச்சி ஆகும்

Malabar pied hornbill

Anthracoceroscoronatus

 

සෝමාවතී ජාතිකඋද්‍යානයපිළිබඳව විස්තරයේ ඇති වෘක්ෂයන්ගේ නම් ලැයිස්තුව

சோமாவதிய தேசிய பூங்காதொடர்பான விளக்கத்தில் காணப்படும் தாவரங்களின் பெயர்ப் பட்டியல்

List of trees in the Somavatiya National Park

Sinhala Name

Tamil Name

English Name

Scientific Name

මුකුණුවැන්න

பொன்னாங்காணி

Mukunuwenna

Alternantherasessilis

කංකුං

கங்குங்

Kankun

Ipomoea aquatica

දියහබරල

கருங்குவளை

Diyahabarala/Jabara

Monochoriahastata

දියතණ

எருமைப்புல்

Diya-thna-kola

Brachiariamutica

පස්පැලුම්තණ

கடற்குதிரை பஸ்பம்

Seahorse Paspalum

Paspalumvaginatum

හාතණ

அரிசிப் புல்

Yellow water crown grass

Paspalidiumflavidum

නිල් මානෙල්

நீல அல்லி

Blue water lily

Nymphaeastellata

කුඹුක්

வெண்மருது

Kumbuk

Terminaliaarjuna

මී

இலுப்பை

Mee

Madhucalongifolia

දිය මැඬිල්ල

அரட்டம்

Diya-midella

Barringtoniaasiatica

හැළඹ

நீர்க்கடம்ப மரம்

Halamba

Mitragynaparvifolia

එරබදු

முள்முருக்கு

Erabadu

Erythrina variegate

தொகுப்பாளர்-தம்மிகாமல்சிங்ஹ, மேலதிக செயலாளர், வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள்

பாதுகாப்பு அமைச்சு பகுதி, விவசாய மற்றும் வனஜீவராசிகள் மற்றும் வன   வளங்கள் பாதுகாப்பு அமைச்சு

பூங்கா பற்றிய தகவல்களைத் தொகுத்தவர்ஹஸினி சரத்சந்திர, பிரதம உத்தியோகத்தர், வன பாதுகாப்புத் திணைக்களம்

மஹேக்ஷா சதுராணி பெரேரா(பட்டதாரி பயிற்சியாளர்),வனஜீவராசிகள்  பாதுகாப்புத் திணைக்களம்

 

தமிழ் மொழிபெயர்ப்புஏ.ஆர்.எப். றிப்னா, அபிவிருத்தி  உத்தியோகத்தர், (விவ. வனஜீ.வன. வள. பா. அ)

ஆங்கில மொழிபெயர்ப்புஅசோக பலிஹவடன, மொழிபெயர்ப்பாளர்,(விவ. வனஜீ.வன. வள. பா. அ)

இணைய வடிவமைப்புசீ. ஏ. டீ. டீ. ஏ.கொல்லுரே, முகாமைத்துவ சேவைஉத்தியோகத்தர், (விவ. வனஜீ.வன. வள. பா. அ)

படங்கள்ரோஹித குணவர்தன,  வ.  பா. தி.