திருடர்கள் மிக மோசமானவர்கள்.
நான் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திற்கு 1997 இல் இணைந்தேன். ஹோர்டன் சமவெளி உதவிப் பணிப்பாளராக 2000ஆண்டு வரை கடமையாற்றினேன். கிழக்கு வலயத்தில் உதவிப் பணிப்பாளராக 2002ஆண்டு வரையும்மத்திய வலயத்தில் உதவிப் பணிப்பாளராக 2003ஆண்டிலும் கடமை புரிந்தேன்.2024 ஜனவரி மாதத்தில் இடமாற்றமொன்று பெற்று பொலன்னறுவை வலய பணிப்பாளராக வந்தேன்.
நான் மேலதிகமாக கவனம் செலுத்தியதுவனவிலங்குக் குற்றங்களுக்கேயாகும். பொலன்னறுவை வலயத்தில் வனவிலங்குக் குற்றங்கள் அதிகமாகும். இரத்தினக்கல் அகழ்தல், மண் எடுக்கின்றனர், மணல் தோண்டி கரைப்படுத்துதல், விலங்குகளை வேட்டையாடுதல்.
நான் மிக விரைவான சுற்றி வளைப்பு பரிவொன்றை உருவாக்கினேன்.குற்றமொன்று இடம்பெறும் இடத்துக்கு குழுவொன்றை அனுப்புவேன். குழுவின் உறுப்பினர்களை அடிக்கடி மாற்றினேன்.
நான் வெள்ளச் சமவெளி தேசிய பூங்காவில்மணல் அகழ்வதனை நிறுத்தினேன். இது தொடர்பாக அப்போது இருந்த அமைச்சரொருவர் என்னைத் திட்டினார்.
இரத்தினக்கல் அகழ்வதைத் தடுப்பதற்கு எனக்குத் தேவையாக இருந்தது. அதிகமான இரத்தினக்கல் அகழிகள் எலஹெர சரணாலயத்தில் காணப்பட்டன. இக்காலத்தில் பிரதான அலுவலகத்திலிருந்து எலஹெர வீதியை சரிசெய்வதற்காக பிரதேசத் தலைவர் அனுமதி கோரியிருந்தார்.
2004ஆண்டு மே 14ஆம் திகதிக்கு கண்காணிப்புப் பயணமொன்றுக்கு நான் திகதியொன்றை வழங்கினேன். நாம் அன்று களப் பயணமொன்றுக்குச் சென்றோம். என்னுடன் சென்றது வட்டார உதவியாளர்உபாலி தீரசிங்ஹ அவர்களும்,வனவிலங்கு காப்பாளர்களான குமாரசிரி விஜயகோன், தனசிரி குருகே, மற்றும் ஏ. எம். ஜயசூரிய என்கவர்களாகும். இவர்கள் சுற்றிவளைப்புப் பிரிவிலேயே இருந்தனர்.
நாம் வாகனத்திலேயே சென்றோம். நாம் அனைவரும் பிரதேச சபைக்குச் சென்றோம்.பிரதேசத் தலைவரைச் சந்திக்கச் சென்று தேவையான தகவல்களை வழங்கினோம். அவர்கள் பகல் உணவுக்கு எம்மை அழைத்தாலும்நாம் நிற்கவில்லை.
எலஹெர சரணாலயத்தில் ‘தென்னை ஓலை வாடி’எனும் இடமொன்று உள்ளது. அங்கே நபர்கள் இரத்தினக்கல் அகழ்கின்றனர். நாம் வாகனத்தில் அதற்கு அருகே சென்றோம். வாகனத்தில் இருந்த அதிகாரிகள் எனக்குக் கூறினர்.
“சார், ‘கிரிஓயா’அலுவலகத்தில் இருக்கும் நாம்சென்று பார்த்துவிட்டு வருகின்றோம்”என்று.
நான் கிரிஓயா பீட்டு அலுவலகத்துகுச் சென்றேன். ஏனைய அதிகாரிகள்உள்ளே தென்னை ஓலை வாடி பக்கத்துக்கு நடந்து சென்றனர். வரும் போதுபகல் இரண்டு மணி பதினைந்து நிமிடங்கள் போல் இருக்கும்.
நான் பீட்டு அலுவலகத்தில் இருந்து எமது நபர்கள் வரும் வரை பார்த்துக் கொண்டிருந்தேன். மிகவும் தாமதமாகி விட்டது. நேரம் சுமார் மாலை நான்காகி விட்டது. எனினும் எமது நபர்கள் வரவில்லை.அங்கிருந்து ஆற்றினூடாக பீட்டு அலுவலகத்துக்கு வருவதாயின் சுமார் 2 கி. மீ. தூரம் உள்ளது.அவர்களுக்குக் கதைப்பதற்கு கைத்தொலைபேசி இருக்கவில்லை.
கிரிஓயா பீட்டு அலுவலகம் இருப்பது பிரதான வீதிலிருந்து சுமார் 500 மீற்றர் உள்ளேயாகும். நான் பார்த்துக் கொண்டு இருந்து விட்டு முடியாமையினால் சாரதியுடன் கிரிஓயா பீட்டு அலுவலகத்திலிருந்துசுமார் 2 கி. மீ. தூரத்துக்கு உள்ளேவாகனத்தில் தென்னை ஓலை வாடி பக்கத்துக்குச் சென்றேன். தென்னை ஓலை வாடி பக்கத்தில் பெரிய குழுவொன்று இருப்பதனை நான் தூரத்தில் கண்டேன். அவர்கள் குழப்பம் விளைவிக்கும் விதத்தில் நடந்து கொள்வது போன்று தெரிந்தது.
“சார்பிரச்சினையொன்று போல் தெரிகிறது. முன்னே செல்வது நல்லது அல்ல. வாகனத்தைத் திருப்புவோம்” என சாரதி கூறினார்.
நாம் வாகனத்தைத் திருப்பினோம். .
எமது வாகனத்தைத் திருப்பும் போதுஒரு சிலர் டிபர் வாகனமொன்னுறக்கு ஏறுவதனை நாம் கண்டோம். அவர்கள் ஹோர்ன் அடித்தடித்து எமது பின்னால் வந்தனர்.சாரதி‘விரைவாகப் பொலிஸுக்குச் செல்வோம்’என வாகனத்தை வேகமாகச் செலுத்தினார்.
இவ்வீதியில் எல்லா இடங்களிலும் குழிகள்.வாகனம் குழிகளுக்குள் விழுகின்றது.வாகனம் குழிக்குள் விழும் போதேபொனட் திறந்தது. பொனட்டை மூடுவதற்கு இறங்க முடியாது. வாகனத்தை எடுக்கவும் முடியாது.எவ்வாறாவது வாகனத்தைச் செலுத்துமாறு நான் சாரதிக்குக் கூறினேன்சோரதி வாகனத்தை மேலே எடுத்தார். மீண்டும் வாகனம் செல்லும் போது இன்னுமொரு குழிக்குள் விழுந்தது. அதனுடனேயே பொனட்டும் மூடிவிட்டது.
எவ்வாறாவது நாம் லக்கல பொலிஸுக்குச் சென்றோம். நிலையப் பொறுப்பாளருக்கு சம்பவத்தைக் கூறினேன்.எனினும் நடந்தது எதிர்பாராத ஒன்றாகும்.
நிலையப் பொறுப்பாளர் ‘நீங்கள் மக்களுக்கு பிரச்சினை ஏற்படுத்துகிறீர்கள்’ என எனக்கு உரத்துப் பேசினார்.
‘ எமது கடமை வனவிலங்கு குற்றங்களை நிறுத்துவது’என நான் கூறினேன்.
எனினும் நிலையப் பொறுப்பாளரிடமிருந்து எமக்கு உதவி இல்லை எனவும் அவர் இரத்தினக்கல் அகழ்கின்றவர்களுடன் இருக்கிறார் என எனக்கு விளங்கிற்று.
நான் பொலிஸிலிருந்து வெளியானேன். பின்னால் வந்தவர்கள்நான் பொலிஸுக்குச் செல்வதனைக் கண்டு சென்றிருந்தனர்.எலஹெர பக்கத்தினால் செல்ல முடியாது. வஸ்கமுவைக்கும் செல்ல முடியாது. மாத்தளை பக்கத்தினால்தான் செல்ல வேண்டும் என நான்யோசித்தேன்.
நான் மாத்தளைக்குச் சென்று உதவிப் பணிப்பாளர் அலுவலகத்துக்கு தொலைபேசி அழைப்பொன்றை எடுத்தேன். யாரும்பதிலளிக்கவில்லை. கிரிதலை பயிற்சி நிலையத்துக்குப் பேசினேன். பொலிஸுக்குச் சென்ற நிலையப் பொறுப்பாளரைச் சந்தித்துதென்னை ஓலை வாடிக்குச் செல்லுமாறு அங்கே கூறினர். நான் பிரதான அலுவலகத்துக்கு அறிவித்து மீண்டும் பொலன்னறுவைக்குச் செல்வதற்காகப் புறப்பட்டேன். தம்புள்ளைக்கு வந்து நாம் கிரிஓயா அலுவலகத்துக்குக் கதைத்தேன்.
‘சார் கூட்டிச் சென்ற நபர்களுக்கு மக்கள் நன்றாக அடித்துள்ளனர். நான்கு பேரில் ஒருவர் இறந்துள்ளார். ஏனையவர்களுக்கும் எழும்ப முடியாது. அவர்களை டிராக்டர் ஒன்றில் ஏற்றி சந்திக்கு எடுத்து வந்து டிபர் செய்துள்ளனர்.’என அங்கிருந்து கூறினர். எமது நபர்கள் எலஹெர பொலிஸாருடன் அங்கே சென்றிருந்தனர். பொலிஸார் இறந்தவரயும் காயப்பட்டவர்களையும் எலஹெரவுக்கு எடுத்துச் சென்று வைத்தியசாலயில் சேர்த்திருந்தனர் எனவும் அறிந்து கொண்டேன்.
பின்னர் சம்பவத்தை நன்றாக அறிந்து கொண்டேன். எமது நபர்கள் செல்லும் போது வீதியில் உளவு பார்க்கும் ஒருவர் அகப்பட்டுள்ளார். அவருக்கு இறப்பர் தோட்டாவினால் வெடி வைத்துள்ளனர். அவர் ஓடிச் சென்று தென்னை ஓலைகளுக்கு வாடியில் இருப்பவர்களிடம் ‘வனவிலங்கு ஒருவர் வந்து வெடி வைக்கிறார்’ எனஇவ்வாறு கூறியிருக்கிறார். தென்னை ஓலைகளுக்கு வாடியில் இருப்பவர்கள் ஊர் மக்களே. அவர்களுக்கு மிகவும் கோபம் வந்து விட்டது. எமது நபர்களுக்கு அடித்து டிராக்டர் ஒன்றில் ஏற்றி டிபர் செய்திருப்பது அதனாலேயாகும்.
அன்று அந்நேரத்தில் இறந்தது வனவிலங்கு காப்பாளர் தனசிரி குருகே அவர்களேயாகும்.
அந்நேரத்தில் அங்கிருந்தவர்களுக்கு என்னைக் கொன்று சுடுவதற்கேதேவையாக இருந்தது. பின்னால் வாகனத்தினை செலுத்தியிருப்பதும் என்னை எவ்வாறாவது பிடிப்பதற்காகவேயாகும்.
தற்போது இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கொன்று விசாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
திரு. யூ. எல். தௌபீக் அவர்கள்
திரு. யூ. எல். தௌபீக் அவர்கள் சிறீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பட்டதாரியொருவர் என்பதோடு இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டத்தையும் நிறைவு செய்துளார்.
1997செப்டெம்பர் 01ஆம் திகதி இலங்கை விஞ்ஞான சேவையிலிருந்துதெரிவு செய்யப்பட்டு ஹோர்டன் சமவெளி தேசிய பூங்காவில் உதவிப் பணிப்பாளரொருவராக நியமனம் பெற்றார். அதன் பின்னர் கிழக்கு வலயத்தில் உதவிப் பணிப்பாளரொருவராகவும் மத்திய வலயத்தில் உதவிப் பணிப்பாளரொருவராகவும் சேவையாற்றி 2004ஆண்டில் பொலன்னறுவை வலயத்தில் உதவிப் பணிப்பாளரொருவராக சேவையாற்றிக் கொண்டிருக்கிறார். தற்போது தௌபீக் அவர்கள்இலங்கை விஞ்ஞான சேவையில் முதலாவது தரத்தின் அதிகாரியொருவராவார்.
திரு. யூ. எல். தௌபீக் அவர்களின் மனைவி மனைவி மாக்கான் மாக்கார் (BA/BC/MackanMakar)தேசிய பாடசாலையின் ஆசிரியரொருவராவார். அவர்களுக்கு மகளொருவரும் மகன்மார்கள் இருவரும் உள்ளனர். மகள், டீ. பாத்திமா ஷாபா யாழ்ப்பாணம் மருத்துவ பல்கலைக்கழகத்தில் நான்காவது ஆண்டில் கல்விகற்கும் மாணவியொருவராவார். மூத்த மகன், டீ. அதீப் அஹமட் ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் மருத்துவ மாணவரொருவராவார். இளைய மகன், டீ. அஹமட் அனூப் அலிகார் தேசிய பாடசாலையில் 9 ஆம் தரத்தில் கல்வி கற்கின்றார்.
திரு. யூ. எல். தௌபீக் அவர்களின் முகவரி 38/1, பழைய மார்கட் வீதி, ஏறாவூர்.
அவரின் தொலைபேசி இலக்கம்0718489219 ஆகும்.
எலஹெர–கிரிதலை சரணாலயம்
வனவிலங்குகளைப் பாதுகாப்பது பற்றிய பெருமிதமானவரலாறொன்று இலங்கைக்கு உள்ளது. உலகில் முதலாவது சரணாலயமாக தேவாநம்பிய திஸ்ஸ மன்னனால் மிகிந்தலை பிரதேசம் உருவாக்கப்பட்டதெனவும் பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மன்னர்கள் அனுராதபுர நகரத்திலிருந்து 7 யோடன்களைஉள்ளடக்கப்படுகின்ற நிலப் பிரதேசத்தில் விலங்குகளைக் கொலை செய்வதனைத் தடை செய்து அரச கட்டளையொன்றைபிறப்பித்ததெனவும் மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு படிப்படியாக பாதுகாப்பு செயன்முறைகள் விருத்தி செய்யப்பட்டதனால் இன்றைய காலப்பகுதியில் இலங்கையில் உருவாக்கப்பட்ட ஒதுக்க வகைகள் பலவாகும்.அதி இயற்கை ஒதுக்கம், தேசிய பூங்காக்கள், இயற்கை ஒதுக்கங்கள், காட்டு நுழைவாயில்கள், மற்றும் சரணாலயங்களாக அவற்றை வகைப்படுத்த முடியும். இதற்கு மேலதிகமாக சமுத்திர ஒதுக்கங்கள் மற்றும் காட்டு யானைகளை முகாமை செகின்ற பிரதேசங்கள் என்றவாறு புதிய ஒதுக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் மூலமும் வன பாதுகாப்பு திணைக்களத்தின் மூலமும் நிர்வகிக்கப்படுகின்றன. உலகச் சொத்துக்களாக பெயரிடப்பட்டசிங்கராஜ மற்றும் ஒதுக்கக் காடொன்றான நகள்ஸ் ஒதுக்கப் பிரதேசமும் வன பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன.
சரணாலயம்(Sanctuaries) என்பது,வனவிலங்குகளுக்குப் பாதுகாப்பினை வழங்கும் அதேவேளை மனித நடவடிக்கைகளும் இடம்பெற முடியுமான நிலப் பிரதேசம் ஆகும். இந் நிலங்கள்வனவிலங்கு மற்றும் தாவர கட்டளைச் சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன. இலங்கையில் அவ்வாறான சரணாலயங்கள் சுமார்68உள்ளதோடுபொலன்னறுவை சரணாலயம் அவற்றுள் ஒன்றாகும்.இவ்வனவிலங்கு ஒதுக்கம்பொலன்னறுவை சரணாலயம்இன்றுடன்82 வருடங்களுக்கு முன்னர், அதாவது 1938 மே27 ஆம் திகதிபிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது1521.6 ஹெக்டயார் விசாலமானதாகும்.இச்சரணாலயம் உட்படபொலன்னறுவை மாவட்டத்தினுள்எலஹெர- கிரிதலை, மின்னேரியா- கிரிதலை போன்ற சரணாலயங்களும் உள்ளன.
2000 ஜனவரி 13ஆம் திகதிவர்த்தமானி இலக்கம் 1114/15 இன் கீழ்பிரகடனப்படுத்தப்பட்டஎலஹெர- கிரிதலை சரணாலயம்வடமத்திய மாகாணத்தில் பொலன்னறுவை மாவட்டத்தில் எலஹெர பிரதேச செயலகப் பிரிவில்கோந்துருவாவ, அத்தனகடவல, பகமூண, எலஹெர, அத்தரகல்லேவஎனும் கிராம அதிகாரிப் பிரிவுகளுக்குள்மாத்தளை மாவட்டத்துக்கு இணைந்து அமைந்துள்ளசுமார் 54.2 வர்க்க அடியிலான எல்லைக்குள் அமைந்துள்ள நிலமாகும். அதாவது 14035.2 ஹெக்டயாரானஅளவினைக் கொண்ட நிலப் பகுதியொன்றாகும்.
ஆற்று நீரினை இலங்கையின் குளங்களுக்கு திருப்பி அனுப்புவதுமுதற் தடவையாகஇடம்பெற்றதெனக் கருதப்படுகின்ற எலஹெர கால்வாயின் ஆரம்பம் இடம்பெறுவது அம்பன் கங்கையினூடாக அணையுடன் அதாவது எலஹெரவை தளர்வாகக் கட்டியமையினாலாகும். இலங்கையின் மன்னர்களினால் கட்டப்பட்ட எலஹெர வேல்ல நீர்ப்பாசனம், பொறியியலாளர்கள் மற்றும் புவியியல் விஞ்ஞானம் பற்றிய பண்டைய இலங்கையின் நிபுணத்துவத்தை வெளிப்படுத்துகின்றது. வசப மன்னனினால் இப்பாரிய நீர்ப்பாசன கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதோடுபின்னர் மகாசேன மன்னனின் கீழ்விருத்தி செய்தல் மேற்கொள்ளப்பட்டதெனவும் பின்னர் ஆட்சி செய்த மன்னர்களினாலும்அடிக்கடி மாற்றங்களும்மேற்கொள்ளப்பட்டதெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 1942 இல் டீ. எஸ். சேனானாயக்க அவர்களின் வழிகாட்டலின் கீழ், மேலும் இது விருத்தி செய்யப்பட்டது. அவ்வாறே எலஹெர கால்வாயின் வலது கரைப் பக்கமாக அமைந்துள்ள கோந்துருவாவ மலைத்தொடரில் இருந்து பாய்கின்ற கோன்கெட ஓயா, ஹீரடி ஓயா, பகமூனன்கே எல,கோட்டபிடிய ஓயா, அத்தனகடவல ஓயா போன்ற நீர் மூலாதாரங்களின் மூலம் கொண்டு வரப்படுகின்ற மேலதிக நீரினால் எலஹெர கால்வாய் மேலும் போசிக்கப்படுகின்றது. இவ்ஓயாக்கள் கால்வாயுடன்ஒன்றிணையும் இடங்களில்உறுதியான கல் அத்திவாரம் மற்றும் கல் அணைக்கட்டு இடப்பட்டு வேகமாகப் பாய்ந்து வருகின்ற அந்நீர்ப் பாய்ச்சலினால் கால்வாயின் அணைக்கட்டுக்களுக்கு ஏற்படும் பாதிப்பு தடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறேபாரிய நீர்நிலையொன்று உட்படுகின்ற இடங்களில்நீர் நிரம்பி வழயும் பொருட்டு சுமார் 50அடி அகலமான கல்ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன. வயல்களுக்கு நீரினை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட மதகுகளும் கல்லினால் அமைக்கப்பட்டதாகும்.
எலஹெர – கிரிதலை சரணாலயம்இலங்கையின் வரண்ட வலயத்தில் வரண்ட பசுமையான காடுகளை பிரதிநிதித்துவப்படுத்துவதோடுவஸ்கமுவை,மின்னேரியா,மாதுறு ஓயா என்னும் வரண்ட வலயத்துக்குரிய தேசிய பூங்காக்களின் பொதுவான குணாதிசயங்களைக் கண்டுகொள்ள முடியும். அங்கு தாவரங்களாக முதிரை,பாலை, கருங்காலி, காட்டநொச்சி, வீரை மற்றும் சவண்டலை போன்ற தாவரங்களாகும்.
அவ்வாறே இச்சூழற் தொகுதிக்க தொடர்புடையவிலங்கினங்கள் பலவற்றையும் காணக் கிடைக்கின்றன. பாலூட்டி இனங்கள், ஊர்வன இனங்கள், ஈரூடக வாழினங்கள், வண்ணத்துப்பூச்சி இனங்கள் மற்றும் பூச்சிகளின்பல்வகைமையும் சிறந்த முறையில் பரந்திருப்பதனைக்காணக்கூடியதாக உள்ளது. இலங்கைக்கு உரித்தான சுள்ளிய சாம்பல் குரங்கு மற்றும்செங்குரங்கு, செந்நரிகள்,தேவாங்கு, ஆசிய யானை,காட்டுப் பன்றி,புல்நிலங்களை மேயும்எருமைமற்றும் புள்ளி மான்கள்,மரை,முள்ளம்பன்றி,காட்டுப் பூனை போன்றே தேன் கரடிஅரிதாகக் கண்டுகொள்ள முடிகின்றது. அவ்வாறே பொதுவாக ஓணான் இனங்கள் மற்றும்விசப் பாம்புகளாக நாகங்கள், புடையன் இனங்களும் இங்கு வாழ்கின்றன.
பூங்காவில் இலங்கையின் பறவையினங்களைப் பெருமளவில் கண்டுகொள்ள முடிவதோடு ஆற்றினை அண்டய பகுதியில் காணக் கிடைக்கின்றசெம்முகப் பூங்குயில், இலங்கை காட்டுக் கோழி, சிறுத்த பெருநாரை,குக்குறுவான்,தீக்காக்கை,சின்னக் காட்டுக் கோழி,இலங்கை சாம்பல் இருவாய்ச்சி,மலபார் கறுப்பு வெள்ளை இருவாய்ச்சிபோன்றவை இவற்றுள் விசேடமான இடத்தைப் பிடிக்கின்றன.
குக்குறுவான்
தீக்காக்கை
விலங்கு கால்நடைகளுக்கு,தாவரங்களுக்குவாழிடத்தை வழங்கி உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளின் மனதைத் திருப்திப்படுத்துகின்ற இப்பெறுமதி மிக்க சரணாலயம் இன்று பல்வேறுபட்ட அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளதோடு அவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக இத்தேசிய பூங்காவில் வனவிலங்கு அதிகாரிகள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ඇලහැර – ගිරිතලේ අභය භූමියපිළිබඳව විස්තරයේ ඇති සතුන්ගේ නම් ලැයිස්තුව
எலஹெர – கிரிதலை சரணாலயம்தொடர்பான விளக்கத்தில் காணப்படும் விலங்குகளின் பெயர்ப் பட்டியல்
List of animals in the Elhera-GirithaleSantuary
Sinhala | Tamil Names | English | Botanical Name |
මහ වදුරා | சுள்ளிய சாம்பல் குரங்கு | Southern purple-faced langur | Semnopithecussenex |
රිළවා | செங்குரங்கு | Toque | Macacasinica |
හිවලුන් | செந்நரிகள் | Golden | Canisaureus |
උනහපුලුවා | தேவாங்கு | Gray Slender Loris | Loris lydekkerrianus |
අලියා | ஆசிய யானை | Asian elephant | Elephasmaximus |
වල් ඌරා | காட்டுப் பன்றி | Wild Boar | Susscrofa |
තණ බිම් උලා කමින් | புல்நிலங்களை மேயும்எருமை | Water buffalo | Bubalusbubalis |
තිත් මුවන් | புள்ளி மான்கள் | Spotted deer | Axis axisceylonensis |
ගෝනා | மரை | Sambar | Rusa unicolor |
ඉත්තෑවා | முள்ளம்பன்றி | Porcupine | Hystrixindica |
වල් බළලා | காட்டுப் பூனை | Small cat | Felischaus |
වලසා | தேன் கரடி | Sloth bear | Melursusursinus |
වතුරතු මල්කොහා | செம்முகப் பூங்குயில் | Red-faced malkoha | Phaenicophaeuspyrrhocephalus |
වලි කුකුළා | இலங்கை காட்டுக் கோழி | Sri lankajunglefowl | Gallus lafayettii |
බහුරුමානාවා | சிறுத்த பெருநாரை | Lesser adjutant | Leptoptilosjavanicus |
රන් නළල් කොට්ටෝරුවා | குக்குறுவான் | Yellow-fronted barbet | Megalaimaflavifrons |
ශ්රී ලංකා සිළු මහාකවුඩා | தீக்காக்கை | Sri Lanka Trogon | Harpactesfasciatus |
හබන් කුකුලා | சின்னக் காட்டுக் கோழி | Sri LankaSpurfowl | Galloperdixbicalcarata |
අළු කෑදැත්තා | இலங்கை சாம்பல் இருவாய்ச்சி | Sri Lanka greyhornbill | Ocycerosgingalensis |
පොරෝ දෑකැත්තා | மலபார் கறுப்பு வெள்ளை இருவாய்ச்சி | Malabar pied hornbill | Anthracoceroscoronatus |
ඇලහැර – ගිරිතලේ අභය භූමියපිළිබඳව විස්තරයේ ඇති වෘක්ෂයන්ගේ නම් ලැයිස්තුව
எலஹெர – கிரிதலை சரணாலயம்தொடர்பான விளக்கத்தில் காணப்படும் தாவரங்களின்பெயர்ப் பட்டியல்
List of trees in the Elahera – GirithaleSantuary
Sinhala Name | Tamil Name | English Name | Scientific Name |
බුරුත | முதிரை | Satin | Chloroxylonswietenia |
පලු | பாலை | Palu | Manilkarahexandra |
කළුවර | கருங்காலி | Ebony | Diospyrosebenum |
මිල්ල | காட்டு நொச்சி | Milla | Vitexaltissma |
වීර | வீரை மற்றும் | Weera | Drypetessepiaria |
හල්මිල්ල | சவண்டலை | Halmilla | Berryacordifolia |
தொகுப்பாளர்-தம்மிகாமல்சிங்ஹ, மேலதிக செயலாளர், வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள்
பாதுகாப்பு அமைச்சு பகுதி, விவசாய மற்றும் வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சு
பூங்கா பற்றிய தகவல்களைத் தொகுத்தவர்– ஹஸினி சரத்சந்திர, பிரதம உத்தியோகத்தர், வன பாதுகாப்புத் திணைக்களம்
மஹேக்ஷா சதுராணி பெரேரா(பட்டதாரி பயிற்சியாளர்),வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம்
தமிழ் மொழிபெயர்ப்பு– ஏ.ஆர்.எப். றிப்னா, அபிவிருத்தி உத்தியோகத்தர், (விவ. வனஜீ.வன. வள. பா. அ)
ஆங்கில மொழிபெயர்ப்பு– அசோக பலிஹவடன, மொழிபெயர்ப்பாளர்,(விவ. வனஜீ.வன. வள. பா. அ)
இணைய வடிவமைப்பு–சீ. ஏ. டீ. டீ. ஏ.கொல்லுரே, முகாமைத்துவ சேவைஉத்தியோகத்தர், (விவ. வனஜீ.வன. வள. பா. அ)
படங்கள்– ரோஹித குணவர்தன, வ. பா. தி.
Cookie | Duration | Description |
---|---|---|
cookielawinfo-checkbox-analytics | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". |
cookielawinfo-checkbox-functional | 11 months | The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". |
cookielawinfo-checkbox-necessary | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". |
cookielawinfo-checkbox-others | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. |
cookielawinfo-checkbox-performance | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". |
viewed_cookie_policy | 11 months | The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. |