简体中文 ZH-CN English EN Français FR Deutsch DE Italiano IT Português PT සිංහල SI தமிழ் TA
Ministry of Wildlife and Forest Resources Conservation

அத்தியாயம் 40 – ரெகவ சரணாலயம்

Content Image

களைப்புமிக்க அழகான ஓர் நாள்

 

நான்2020 ஆகஸ்ட் 11 ஆம் திகதி இலங்கை விஞ்ஞான சேவையில் உதவிபணிப்பாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டார். எனக்கு ஆரம்பத்தில் சேவைக்காக  சுற்றுலாப் பிரிவு கிடைத்தது. எனினும் அந்நேரத்தில்நான்குழந்தையொன்றைப் பெற்றெடுப்பதற்கு ஆயத்தமாக இருந்தேன்.8 மாதங்கள். அதனால் குழந்தையைப் பெறுவதற்காக எனக்கு விடுமுறை எடுக்க வேண்டி ஏற்பட்டது. அதனுடனேயே கொரோனா தொற்றுநோயும் வந்தது. அதனால் விடுமுறை நிறைவடைந்து எனக்கு மீண்டும் 2020 ஒக்டோபர் 10 ஆம் திகதி கடமைக்கு சமூகமளிக்கக் கிடைத்தது.

பின்னர் எனக்கு சமுத்திரப் பிரிவு கிடைத்தது. நான் பட்டப்படிப்புக்கு உயிரியல் விஞ்ஞானப் பாதுகாப்பினை நிறைவு செய்தாலும் சமுத்திரப் பிரிவு தொடர்பாக எனக்குப் போதிய அறிவு இருக்கவில்லை. அதனால் படித்துக் கொண்டே கடமையை நிறைவேற்றினேன்.

ஒரு நாள் பணிப்பாளர் நாயகம் என்னை அழைத்து ரெகவ சரணாலயத்துக்கு முகாமைத்துவத் திட்டமொன்றை மூன்று நாட்களுக்குள் தயாரித்து வேண்டும் எனக் கூறினார்.

திகதியொன்றை நிர்ணயித்துக் கொள்வதற்காக நான் கள அதிகாரிகளை உடனடியாக அழைத்தேன். ​இரண்டு நாட்களில் நாம் கலமெடிய அலுவலகத்தில் சந்தித்தோம். ரெகவ நிர்வாக நடவடிக்கைகள் கலமெடிய அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டன.

கலமெடிய அலுவலகத்தில் கலந்துரையாடல் சுற்றொன்றை மேற்கொண்டு விட்டு மாலை ஆறு மணியளவில் நாம் ரெகவ சரணாலயத்துக்குச் சென்றோம். என்னுடன் தள பாதுகாவலர் ரவீந்திர குமார, சமுத்திரப் பிரிவின் தள பாதுகாவலர் பிரியந்த, சமுத்திரப் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் வாசனா மற்றும் தள உதவியாளர் தொடம்கொட என்பவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

நாம் கபுஹேன்வலவில், கடலாமை வளர்ப்புக்  கூடத்திற்குச் சென்றோம். அங்கு வளர்ப்புக்கூடங்கள் இரண்டு உள்ளன. இயற்கையாக நிலத்தில் வெற்றி வாய்ப்புக் குறைவாக உள்ள கடலாமை முட்டைகளை எடுத்து வந்து பாதுகாப்பான பகுதியொன்றுக்குள் செயற்கையாக குழிகளை வெட்டி தக்க வைப்பதே இங்கு பிரதானமாக இடம்பெறுகின்றது.

 இந்த ரெகவகடலோரப் பகுதியானது அடிக்கடி நீரில் மூழ்கின்றன.கடலாமைகள் அதிகமானளவு முட்டைகளை இட்டாலும் முட்டைகள் இட்ட குழியின் மேல்  5 நிமிடங்கள் நீர் இருந்தாலும் முட்டைகள் பழுதடைந்து விடும். அவ்வாறே முட்டைகளைத் திருடுவதற்குப் பழகிய நபர்களும் உள்ளனர்.  அவர்கள் குழிகளைத் தோண்டி முட்டைகளை எடுத்து ஒரு முட்டையை  சுமார் நூறு ரூபாவிற்கு விற்பனை செய்கின்றனர். அவ்வாறே வீட்டு நாய்களும் குழிகளைத் தோண்டி முட்டையை உணவிற்காக எடுக்கின்றன.அதனால் வனஜீவராசிகள் திணைக்களம் குழிகளைத் தோண்டி முட்டைகளைத் தக்க வைத்து பார்த்துக் கொள்கின்றது.

இந்த ரெகவ சரணாலயம் 4.5 கிலோமீற்றர் நீளமானது.  கடல் கீழ் அலையின் எல்லையிலிருந்து  நூறு மீற்றர் தூரத்தில் சரணாலயத்தின் எல்லை ஆரம்பித்தது. கரைப் பக்கத்தின் ஐநூறு மீற்றர் தூரம் வரை கடல் பக்கத்துக்கும் நீண்டு செல்கின்றது.

வளர்ப்புக்கூடத்தில் குழியொன்றிலிருந்து குஞ்சுகள் வெளியே வருவதைக் கண்டோம்.குஞ்சுகள் 7-8 வந்தன. கடல் பக்கத்துக்கு வேகமாகச் சென்று நீருடன் சேர்ந்தன. அவை அளவில் ஒரு கைப்பிடியளவு பெரியவை.  அப்போது நேரம் மாலை7.30 போல் இருக்கும்.

நாம் கபுஹேன்வலவில் இருந்து தாஸ்துன சந்தி  வரை கடற்கரையோரமாக கால்நடையாகப் பயணித்தோம். சந்திர ஒளி நன்றாக விழுந்திருந்தது. நேரம்  இரவு பன்னிரண்டு மணியைத் தாண்டும் வரையும் நாம் நடந்தோம். இவ்வாறு நடந்து செல்லும் போது முட்டையிட வந்த சுமார் பத்து கடலாமைகளைக் கண்டோம். எமக்குத் தென்பட்டவாறுஇவைகள் பத்தாக இருந்தாலும் இன்னும் எவ்வளவு இருந்திருக்கலாம் எனத் தோன்றியது.

வாழ்வில் ஒருபோதும் கடலாமையொன்று முட்டையிடுவதை நான்கண்டிருக்கவில்லை. கடலாமைகள் குழி தோண்டும் போது  நெருங்கக் கூடாது. கடலாமைகள் முட்டையிடும் போது நாம் நெருங்கிப் பார்த்தோம். ஒரு பிராணி நூறு முட்டைகளை விடவும் அதிகமாக இட்டது.

வனவிலங்கு அதிகாரிகளுக்கு இளைப்பாறுவதற்கான இடமொன்று தாஸ்துன சந்தியில் இருக்கின்றது.கபுஹேன்வலவில் இருந்து நாம் தாஸ்துன சந்திக்கு நடந்து வந்து நாம் அவ்விடத்தில் ஓய்வெடுத்தோம். 

அன்று இரவு நாம் கலமெடியாவ அலுவலகத்திலிருந்து திட்டத்தைத் தயாரித்தோம். தூங்கவில்லை. ரவீந்திர அவர்கள் தேநீர் தயாரித்துத் தந்தார்கள்.  திட்டத்தில்  செய்ய  வேண்டியிருப்பது என்னவென்றால் பணிப்பாளர் நாயகம் தயாரித்த திட்டத்திற்கு  (Format)தரவுகளை இடுவதேயாகும்.  எம்மால் சரியாகத் தரவுகளை இடுவதற்கு முடிந்தது.

மறுநாள் காலை நாம் ரெகவமுழு முகாமைத்துவ திட்டத்தின் வரைபினை பணிப்பாளர் நாயகத்தின் கைக்குவழங்கக் கிடைத்தது.

தற்போது முகாமைத்துவ திட்டத்தை விருத்தி செய்துISBNஇலக்கத்தைப் பெற்றுக் கொள்வதற்கான கோரிக்கைகள் செயற்பாட்டில் உள்ளன.

 

திருமதி ரேகா சஞ்ஜீவனீ அவர்கள்

 

திருமதி ரேகா சஞ்ஜீவனீராஜசிங்ஹ அவர்கள்2020 ஆகஸ்ட் 11 ஆம் திகதி இலங்கை விஞ்ஞான சேவையில் உதவிப் பணிப்பாளரொருவராக வனஜீவராசிகள் திணைக்களத்தில் இணைந்தார். ஆரம்பத்தில் அவர் சுற்றுலா சேவைகள்முகாமைத்துவப் பிரிவுக்கு இணைக்கப்பட்டார். எனினும் அவர் விஞ்ஞான சேவைக்கு உட்படும் போது8 மாத கர்ப்பிணித் தாயாக இருந்தாலும்குழங்தையைப் பெற்றெடுப்பதற்கு விடுமுறை எடுக்க வேண்டி ஏற்பட்டது. பின்னர் நாட்டில் ஏற்பட்ட கொவிட் தொற்றுநிலையுடன்மீண்டும் அவருக்கு கடமையைப் பொறுப்பேற்பதற்கு 2021ஆம் ஆண்டிலேயே முடிந்தது. பின்னர் அவர் சமுத்திரப் பிரிவுக்கு இணைக்கப்பட்டார்.

அவர் இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் விசேட விஞ்ஞான பட்டதாரியொருவராவார். உயிர்ப் பல்வகைத்தன்மை மற்றும் பாதுகாப்பு எனும் விசேட பட்டத்தை ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் பயன்பாட்டு விஞ்ஞான பீடத்தில் நிறைவு செய்வதற்கு அவரால் முடிந்தது. பட்டத்தில் இரண்டாம் நிலை சிறப்புத் தேர்ச்சியைப் பெற்ற திருமதி ரேகா சஞ்ஜீவனீராஜசிங்ஹ அவர்கள் ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்குள் துணைவேந்தராக சிறிது காலம் சேவையாற்றியதன் பின்னர் எட்னா சாக்லட் நிறுவனத்தில் நுண்ணுயிரியல் நிபுணரொருவராக சேவையாற்றினார். பின்னர் அரசாங்கத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தரொருவராக  சுகாதார மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சுகளில்7வருடங்கள் சேவையாற்றினார்.

திருமதி ரேகா சஞ்ஜீவனீ அவர்கள்ஆரம்பக் கல்வியை புத்தளம் மாவட்டத்தில் ஆணைமடுவ மத்திய மகா விம்மியாலயத்தில் கற்றார்.  தற்போது அவர் மாலைத்தீவு, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் தமது தொழில் வாழ்வுக்காக குறுகிய கால பயிற்சியைப் பெற்றுள்ளார்.  அவ்வாறே வனஜீவராசிகள் திணைக்களத்தில் சமுத்திரப் பிரிவுக்கு மேலதிகமாக அவர் சுற்றுலா சேவைகள் முகாமைத்துவப் பிரிவுக்குப் பொறுப்பாளரான பணிப்பாளராகவும் சேவையாற்றுகிறார்.தாம் வந்த பாதை கடினமானதெனவும் எனினும் பயனுள்ளதெனவும் சஞ்ஜீவனீ அவர்கள் ஆத்ம திருப்தியுடன் நினைவு கூறுகின்றார்.

அவர் தாய், தந்தை, அக்கா மற்றும் தம்பியுடன்  ஆணைமடுவ பிரதேசத்தில் வாழ்ந்தாலும் திருமணத்தின் பின்னர் கணவர் மற்றும் பிள்ளைகளுடன் ஹோமாகமை பிரதேசத்தில் வசிக்கிறார். சிவில் பொறியியல் டிப்ளோமாதாரியொருவரான கணவர் எரந்த டிகிரி ஹென்னகே  அமெரிக்க நிறுவனமொன்றின் கீழ் தொலைதூர முறையொன்றுக்கு சேவையாற்றுகிறார். இன்னும் வயது நான்கு வருடங்களான மகன் சஸ்மித நிர்வான் பாலர் பாடசாலையில் கல்வி கற்கிறார்.

ரெகவ சரணாலயம்

நாட்டில் தங்கமான கடற்கரைகளுள் சிறப்பு மிக்க கடற்கரையொன்றாக ரெகவ கடற்கரையை எமக்கு இனங்காட்ட முடியும். அது இவ்வாறு சிறப்பு மிக்கதாக இருப்பது அங்குள்ள அழகினால் மாத்திரமின்றி,ரெகவ கடற்கரைக்கு இரவு நேரத்துக்கு வருகின்ற விசேட விருந்தினர்களினால் ரெகவ கடற்கரை சுற்றுலாகளினால் ரெகவ கடற்கரை சுற்றுலா கவர்ச்சியை வென்ற இடமொன்றாக தற்காலத்தில் இவ்விருந்தினர்களினால்ரெகவசுற்றுலா கவர்ச்சியை வெற்றி கொண்ட இடமொன்றாக தற்காலத்தில் உள்ளது.

 

இவ்வாறு ரெகவ கடற்கரைக்கு வருகின்ற சிறப்பு விருந்தினர்களாக தற்காலத்தில் அழிவடையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள கடலாமைகளாகும்.  இலங்கை கடற்கரைபலவிதமான கடலாமை இனங்களுக்குகவர்ச்சிகரமான இடமொன்று என்பதனால் அவைகள் அங்கு குழிகளைத் தோண்டி முட்டையிடுவதற்காக இக்கடற்கரையைத் தெரிவு செய்து கொண்டுள்ளன. கடலாமைகளின் வாழிடமாக பிரபல்யமாகவுள்ள ரெகவ கடற்கரை தங்கல்லையிலிருந்து சுமார் மூன்று கிலோமீற்றர்நீளத்தைக் கொண்டுள்ளதோடு கீழ் மட்ட அலையிலிருந்து நூறு மீற்றர் வரை கடற்கரை வரைக்கும் ஐநூறு மீற்றர் வரை கடல் பக்கத்திற்கும் நீண்டு செல்லும் பிரதேசமொன்றாகும்.தங்கல்லையிலிருந்துரெகவ வரையான  இப்பகுதி  கடலாமை சரணாலயத்துக்கு உரியதாகும்.

இச்சரணாலயம் ரெகவையிலிருந்து கஹந்தரமோதர வரை கடலாமை கூடுகளை​(Turtle Nests) கொண்ட கடற்கரையொன்று  என்பதோடுஇப்பிரதேசம்சமுத்திர கடலாமைகளுக்கான உணவு அதிகமாகவுள்ள பிரதேசமொன்றாகும். ஆமைக் கூடொன்று என்பது முட்டையிடுவதற்காக பெண் கடலாமையினால் ஆயத்தமாக்கிக் கொள்ளப்படுகின்ற பிரதேசத்துக்கு அழைக்கப்படும் பெயராகும். பெண் கடலாமை கடற்கரையில் வரண்ட பிரதேசமொன்றுக்குச் சென்று அங்கு இளகிய மணலை தமதுஇறகினால் அகற்றுகின்றன. பின்னர் இறகினால் தோண்டியும்உடலைத் திருப்பியும் தமது உடலுக்கு வளைவான குழியொன்றைத் தயாரித்துக் கொள்கின்றன. அக்குழியானது முழுமையானதன் பின்னர் கோப்பை வடிவிலான பின்பகுதியை துடுப்பு மண்வெட்டியொன்றாகப் பயன்படுத்தி முட்டையிடுவதற்காக துளையொன்றைத் தயாரித்துக் கொள்கின்றன.

இவ்வாறு கடற்கரைக்கு வருகின்ற அரிதான கடலாமைகளைப் பாதுகாக்கும் நோக்குடன்சமுத்திர கடலாமை பாதுகாப்புத் தளமொன்றாக  ரெகவ கடற்கரைஇனங்காணப்பட்டுள்ளது. அழிவடைந்து செல்லும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளகடலாமை இனங்கள் 7 இல் 5ஆனவை இலங்கையின் கடற்கரைக்கு கவர்ச்சியாவதனால், கடலாமை கூடு  அமைக்கும் இடங்களைப் பாதுகாத்தல் மற்றும் அவ்வினங்களின் பாதுகாப்புக்கு ஒத்துழைப்பு வழங்குதல் அத்தியாவசியமான விடயமொன்றாக உள்ளது. இவற்றுள் நாட்டில் ரெகவ கடற்கரைக்கு முட்டையிடுவதற்காக வருகின்ற பிரதான கடலாமைஇனங்களாகபெருந்தலைக் கடலாமை, தோணியாமை,அழுங்காமை,ஒலிவ நிறச் சிற்றாமைமற்றும் பேராமைஆகும்.பேராமை,கடலாமைகளுள் விசாலமான கடலாமையுமாகும்.இக்கடலாமை இனங்களினாலேயே வெளிநாட்டு சுற்றுலாக் கவர்ச்சிஇப்பிரதேசத்துக்கு குறையாது கிடைக்கின்றதெனவும் கூற வேண்டும்.

கடலாமைகள் பொதுவாக தாம் பிறந்த கரைக்கே முட்டையிடுவதற்கு வருவது இதற்கு பலநூறு வருடங்களுக்கு முன்னர் வழமையொன்றாகியது.அதனால் வனஜீவராசிகள் திணைக்களம் இச்சமுத்திர நிலப் பிரதேசத்தின் பெறுமதியை புரிந்து கொண்டமையினால்  2006.05.25  ஆம் திகதி வர்த்தமானி இலக்கம் 1446/27 இன் கீழ் அதன் ஹெக்டயார் 271.20 நில அளவினை சரணாலயமொன்றாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.இது இலங்கையில் முதலாவது கடலாமை சரணாலயமொன்றாக இனம்காட்டப்படுகின்ற இது தற்காலத்தில் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றது.

ரெகவ சரணாலயத்தில் கடலாமை வளர்ப்பு அலகுகள் 2 உம் அமைக்கப்பட்டுள்ளன. வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தைப் போன்று தனியார் நிறுவனங்களில ஒதுக்கீட்டின் அடிப்படையில் இலங்கை கடற்கரையைச் சார்ந்து நடத்திச் செல்லப்படுகின்ற கடலாமை வளர்ப்பு அலகுகள் சுமார் 12உள்ளதோடு ரெகவ கடற்கரையும் அவற்றில் ஒன்றாகும்.இவ்வளர்ப்பு அலகு கடலாமைகள் முட்டையிடுகின்ற இடங்களைப் பாதுகாத்தல் மற்றும் முட்டைகளினால் பாதுகாப்பாக குஞ்சுகளைப் பெற முடியும் என்பதனை உறுதிப்படுத்துவதை நோக்காகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.அவற்றின் குஞ்சுகளைப் பெறுவதற்கு ஆயத்தமாகும் வரைபாதுகாப்பு நிலையத்தில்பாதுகாக்கப்பட்ட எல்லைகளுக்குள் வைக்கப்படுகின்றன.கடலாமைகளைப் பாதுகாத்துக் கொள்வது சார்ந்த சுற்றுலாக் கைத்தொழிலை உருவாக்குவதற்காக பொருத்தமான சூழ்நிலையொன்றுள்ள பிரதேசமொன்றாகவும் இக்கரையோரம் இனங்காணப்பட்டுள்ளது.அதன்படி சுற்றுலாப் பயணிகளுக்குகடலாமைகள் முட்டையிடும் சந்தர்ப்பங்களை நேரடியாக அவதானித்தல், பாதுகாக்கப்பட்ட கடலாமைக் குஞ்சுகளை கடலுக்கு விடுவித்தல், இரவு நேரக் கடற்கரையில் பயணிப்பதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்தல் மற்றும் முகாம்நிலங்களை ஏற்படுத்துவதற்காக எதிர்காலத்தில் சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

 

வருடத்தில் கடலாமைகள் முட்டையிடும் காலம் ஏப்ரலிலிருந்து ஜூலை வரை என்பதனால் கடலாமை பாதுகாப்பு நிலையத்தைப் பார்வையிடுவதற்காக சிறந்த காலம் அதுவாகும். இக்காலத்தினுள் ஓர் இரவில் சுமார்15 கடலாமைகள் ரெகவ கடற்கரைக்கு முட்டையிடுவதற்காகவருகின்றன. ஒக்டோபரிலிருந்து ஜனவரி வரையான மாதங்களில், இரவில் சுமார் இரு கடலாமைகளைக் கண்டுகொள்ள முடியும் என்றாலும் அதுவும் அரிதாகும். கடற்கரைக்கு வருகின்ற கடலாமைகளின் அளவினைத் தீர்மானிப்பதற்கு கடற்கரையில் உள்ள அதிக ஒலி அல்லது ஒளி மாசு போன்ற பல்வேறான காரணிகள் அடிப்படையாக உள்ளன. வனஜீவராசிகள் திணைக்களத்தின் மூலம்விதிக்கப்பட்டுள்ளபொதுவான சட்டதிட்டங்களுக்கு இணங்கி கடலாமைகளைப் பார்வையிடுவதற்கு முடிவதோடு அதற்கான நுழைவுக் கட்டணம் இல்லை.

ரெகவ சமுத்திர சரணாலயம் இலங்கையை பூகோள ரீதியாக ஏற்றுக் கொள்ளப்படுவது கடலாமைகளின் இயற்கை வாழிடமொன்றாகஅவதானிக்க முடியுமான பல இடங்களுள் ஒன்று என்றவாறாகும்.

 

රැකව අභය භූමියපිළිබඳව විස්තරයේ ඇති සතුන්ගේ නම් ලැයිස්තුව

சோமாவதிய தேசிய பூங்காதொடர்பான விளக்கத்தில் காணப்படும் விலங்குகளின் பெயர்ப் பட்டியல்

List of animals in the Rekawa Sanctuary

Sinhala Names

Tamil Names

English Names

Botanical Name

ඔලුගෙඩි කැස්බෑවා

பெருந்தலைக் கடலாமை

Loggerhead Turtle

Carettacaretta

ගල් කැස්බෑවා

தோணியாமை

Green Turtle

Cheloniamydas

පොතු කැස්බෑවා

அழுங்காமை

Hawksbill Turtle

Eretmochelys imbricate

බටු කැස්බෑවා

ஒலிவ நிறச் சிற்றாமை

Olive Ridley Turtle

Lepidochelysolivacea

දාර කැස්බෑවා

பேராமை

Leatherback Turtle

Dermochelyscoriacea

தொகுப்பாளர்-தம்மிகாமல்சிங்ஹ, மேலதிக செயலாளர், வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள்

பாதுகாப்பு அமைச்சு பகுதி, விவசாய மற்றும் வனஜீவராசிகள் மற்றும் வன   வளங்கள் பாதுகாப்பு அமைச்சு

பூங்கா பற்றிய தகவல்களைத் தொகுத்தவர்ஹஸினி சரத்சந்திர, பிரதம உத்தியோகத்தர், வன பாதுகாப்புத் திணைக்களம்

மஹேக்ஷா சதுராணி பெரேரா(பட்டதாரி பயிற்சியாளர்),வனஜீவராசிகள்  பாதுகாப்புத் திணைக்களம்

 

தமிழ் மொழிபெயர்ப்புஏ.ஆர்.எப். றிப்னா, அபிவிருத்தி  உத்தியோகத்தர், (விவ. வனஜீ.வன. வள. பா. அ)

ஆங்கில மொழிபெயர்ப்புஅசோக பலிஹவடன, மொழிபெயர்ப்பாளர்,(விவ. வனஜீ.வன. வள. பா. அ)

இணைய வடிவமைப்புசீ. ஏ. டீ. டீ. ஏ.கொல்லுரே, முகாமைத்துவ சேவை​உத்தியோகத்தர், (விவ. வனஜீ.வன. வள. பா. அ)

படங்கள்புபுது பிரசன்ன,  வ.  பா. தி.