简体中文 ZH-CN English EN Français FR Deutsch DE Italiano IT Português PT සිංහල SI தமிழ் TA
Ministry of Wildlife and Forest Resources Conservation

அத்தியாயம் 38 – விக்டோரியா, ரன்தெனிகல, ரன்தெம்பெ சரணாலயம்

Content Image

கடமைக்கு உறுதியான கரமொன்று

 

நான் 1997 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் இலங்கை விஞ்ஞான சேவையின் உதவிப் பணிப்பாளரொருவராக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திற்கு வந்தேன். முதலில் இந்தியாவுக்குச் சென்று உத்தரகந்தில் டெஹெராதுன் நிறுவனத்தில் 09 மாத பயிற்சிப் பாடநெறியொன்றை நிறைவு செய்தேன். அதன் பின்னர் நான் கிரிதலை வனவிலங்கு பயிற்சி மையத்துக்கு இணைக்கப்பட்டேன். அங்கு அப்பயிற்சி மையத்துக்குப் பொறுப்பாக இருப்பதும் வனவிலங்கு அதிகாரிகளுக்கானபயிற்றுவிப்பாளராக செயலாற்றுவதும் எனது பணிகளாக இருந்தன.

சுமார் 05 வருடங்களின் பின்னர் என்னை மத்திய மாகாணத்தின் உதவிப் பணிப்பாளராக சேவைக்கு நியமிக்கப்பட்டேன்.அங்கு அம்மாகாணத்துக்கு உரித்தான விக்டோரியா- ரன்தெனிகலை, ரன்தெம்பெ சரணாலயம் எனக்கு அனுபவங்கள் பலவற்றைப் பெற்றுத் தந்தது. காடுகளைச் சார்ந்த சூழற் தொகுதியொன்றுதொடர்ந்து இருக்கின்றது. அதாவது காடுகளாக உருவாகி சில காலத்தின் பின்னர் நிலையான அடர்த்தியான காடொன்றாக மாறும். பொதுவாக உள்ள காடொன்று ஏதாவதொரு காரணத்தினால் சிதைவடைந்து சென்றதன் பின்னர்காடு மீண்டும் உருவாகி காலப்போக்கில் நிலையாகின்றது.  எனினும் வனவிலங்குகளுக்கு வாழ்வதற்கு அடர்த்தியான காட்டினை விட தொடர்ச்சியாக உள்ள காடே பொருத்தமானது. அதனால்வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் என்ற வகையில் நாம் காடொன்றை மீண்டும் மீளுருவாக்கும் போது ஆரம்ப நிலைப்பாட்டினைக் கடந்து செல்லாமல் இருக்க முயற்சி செய்கிறோம்.

இந்தவிக்டோரியா- ரன்தெனிகலை, ரன்தெம்பெ சரணாலயதில் மீளுவாக்கக் கூடிய காட்டுப் பகுதி காணப்பட்டது. அபிவிருத்திச் செயற்திட்டங்களுக்காகச் சுத்திகரிக்கப்பட்ட,மீண்டும் காடுகளாக உருவாகக்கூடிய நிலங்கள்ஆகும்.நாம் களத்தில் நடமாடும் போது அங்கு இருக்கும் மான்கள், மரைகள் போன்ற விலங்குகளுக்கு வாழ்வதற்குள்ளசூழல் தரம் குறைந்தது என்பதனைக் கண்டோம்.அத்தருணத்தில்சரணாலயத்துக்கு உள்ளே இருந்த சில வயல்களிலிருந்து சுமார் மூன்று ஏக்கர் வயலை நானும் அதிகாரிகளும் இணைந்து தெரிவு செய்துவிலங்குகளுக்குப் பொருத்தமான உணவென்ற வகையில் பஜரியை அறுவடை செய்ய முடிவு செய்தோம்​.பஜரி விதையைத் தேடிக் கொண்டோம். சிறு முதலீடொன்றைச் செய்து பஜரி நடுவதற்கு எம்மால் முடிந்தது.பஜரியை நட்டு சுமார் ஒரு வரை விலங்குகளிடமிருந்து பயிர்ச்செய்கையை நாம் பாதுகாத்தோம்.  சுமார் ஒரு கிழமையின் பின்னர் பாதுகாப்பு நிறுத்தப்பட்டதுடன் விலங்குகளின் பிரச்சாரம் மிகவும் வெற்றிகரமானது. 2-3 நாட்கள் செல்லும் போது மூன்று ஏக்கரையும் மேய்ந்து சாப்பிட்டன.

இவ்வொதுக்கப் பிரதேசத்துக்கு உள்ளே அதிகாரிகள் பணியாற்றுகின்றனர். அனுபவங்களுக்கு மேலதிகமாக முரண்பாடுகளை இணங்கண்டு கொள்ளும்தொழிநுட்பத் திறன்ஒரு அதிகாரியிடமிருந்து இன்னொரு அதிகாரிக்கு வேறுபடுகின்றது. ஒரு முறை களத்தில் பயணம் செய்யும் போது அதிகாரியொருவர்பிரகாசமானநிறத்தைக் கொண்ட ஆடையொன்றை அணிந்தார். இவ்வாடை பொருத்தமாக இல்லை.வேறொன்றை அணிந்து கொள்ளுமாறு நாம் கூறினோம். ‘நாம் எவ்வளவு தடவைகள் காட்டிற்குள் சென்றிருக்கிறோம். பிரச்சினையில்லை’என ஏற்றுக்கொள்ளாது கூறினார். வழியில் யானைக் கூட்டமொன்றைச் சந்தித்தோம். அவைகளின் பிரதான இலக்காக இவ்வதிகாரியாகவே இருந்தது. அவர் ஓடிச் சென்றுகல் ஓடொன்றுக்குமத்தியில் குதித்து உயிரைக் காப்பாற்றிக் கொண்டார்.எனினும் சத்திர சிகிச்சையொன்றின் மூலம்மண்டையோட்டின் துண்டொன்றைஅகற்றவேண்டியேற்பட்டது.

இன்னொரு முறை இச்சரணாலயத்தில் விசாலமான பகுதியொன்றில் பனைதாவரம் பரவுவதனை நாம் கண்டோம். இப்பரம்பலுடன் மரைகளின் தொகையும் அதிகரித்தது. அதே நேரத்தில் வேட்டைக்காரர்களும் அதிகரித்தனர். எமது சுற்றிவளைப்பும் அதிகரித்தது. தேவையற்ற விதத்தில் தாவரங்களின் பரம்பலை எம்மால் கட்டுப்படுத்த வேண்டி ஏற்பட்டது.

அவ்வாறே சூழல் அங்கு வாழும் விலங்குகளின் நடமாட்டத்துக்குப் பொருத்தமாக இருக்க வேண்டும். ஒரு முறை நன்றாக நடமாட முடியுமான மரையொன்று கீழே விழுந்து எலும்புகள் உடைந்திருப்பதனை நாம் கண்டோம். விலங்குகளுக்குப் பொருத்தமானவாறு ஒதுக்கப் பிரதேசங்களை முகாமை செய்ய வேண்டும் எனும் பாடத்தை நாம் விலங்குகளுக்குப் பொருத்தமானவாறு ஒதுக்கப் பிரதேசத்தை முகாமை செய்ய வேண்டும் என்னும் பாடத்தை அனுபவித்தோம்.

இன்னொரு காலத்தில்அப்பிரதேசத்தில் நீர்ப் பற்றாக்குறையொன்று ஏற்பட்டது. நாம் திரிந்து நீரூற்றொன்றைத் தேடிக் கொண்டோம்.  அந்நீரூற்றிலிருந்து கிராமத்துக்கும் நீரை வழங்குவதற்கு எம்மால் முடிந்தது.

விக்டோரியா- ரன்தெனிகலை- ரன்தெம்பெ சரணாலயம் பெரும் வளமொன்றாகும். சிக்கலான சூழல் தொகுதியொன்றாகும். உயிர்ப் பல்வகைத்தன்மை மற்றும்சூழல் பாதுகாப்பைப் பற்றியஅறிவுச் செல்வமாகும். சூழல் புகழிடமொன்றாகும்.உயிர்ப் பல்வகைத்தன்மையைப் பற்றிப் பேசும் போது அங்கு கலாச்சாரவேறுபாட்டைப் பற்றியும் பேச வேண்டும். மகாவலிகங்கையை கேந்திரமாகக் கொண்டு விக்டோரியா- ரன்தெனிகலை- ரன்தெம்பெ நீர்த்தேக்கங்கள் 1980 ஆண்டில் துரித மகாவலி வியாபாரத்தின் கீழ் மூன்று மாவட்டங்களில் அமைக்கப்பட்டது. விக்டோரியாநீர்த்தேக்கம் கண்டி மாவட்டத்திலும்ரன்தெனிகலைநீர்த்தேக்கம் நுவரெலியா மாவட்டத்திலும் ரன்தெம்பெ நீர்த்தேக்கம்பதுளை மாவட்டத்திலும் அமைந்துள்ளது.இம்மாவட்டங்களில் வாழ்கின்ற மக்களின் கலாச்சாரம் மாறுபட்டது.தமது சூழல், நிலத்தைப் பயன்படுத்தும் முறை வேறுபட்டது. அதனால் சரணாலய கட்டுப்பாட்டில் கலாச்சார வேறுபாடுகள் பலவற்றையும் அனுபவிக்கவும் எம்மால் முடிந்தது.

எனது தொழில் வாழ்க்கைக்கு சிறந்த ஆரம்பமொன்றினை விக்டோரியா- ரன்தெனிகலை- ரன்தெம்பெ சரணாலயம் பெற்றுத் தந்தது  என்று கூறினால் பிழையில்லை . 

திரு. சந்தன சூரியபண்டார அவர்கள்

திரு. சந்தனசூரியபண்டாரஅவர்கள்வனஜீவாசிகள் பாதுகாப்பு திணைக்களத்திற்கு 1997 இலங்கை விஞ்ஞான சேவையில் உதவிப் பணிப்பாளரொருவராக போட்டிப் பரீட்சையொன்றினால் சித்தியடைந்ததனூடாக இணைந்தார். ஆரம்பத்திலேயே உத்தரகாந்த் பிரதேசத்தில் டெஹெராதுன் வனவிலங்கு நிறுவனத்தில் 09 மாத பயிற்சியைப் பெற்ற அவர்  இரண்டாவது கிரிதலை பயிற்சி நிலையத்திலும் மூன்றாவது மத்திய வலயப் பொறுப்பாளராகவும் சேவையாற்றினார். பின்னர் கொழும்பு அலுவலகத்துக்கு இணைக்கப்பட்ட சூரியபண்டார அவர்கள் தமது கடமைகளுக்கு மேலதிகமாக திட்டமிடல் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழிநுட்பப் பிரிவில் பிரதிப் பணிப்பாளரின் கடமைகளை பதில் கடமையாற்றுவதற்கும் அதனுடனேயே சுற்றுலா வசதிகள் முகமெ மற்றும் சூழல் சுற்றுலா பிரிவின் பிரதிப் பணிப்பாளராகவும் கடமைகளை நிறைவேற்றினார்.

பின்னர் அவர் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பிரிவின் பிரதிப் பணிப்பாளராக பதவியுயர்வு பெற்றார். பின்னர் ஒதுக்கப் பிரதேச முகாமை பொறுப்புப் பணிப்பாளராக பதவியுயர்வு பெற்ற சந்தன சூரியபண்டார அவர்கள் 2017 ஜூலை 24 ஆம் திகதிவனஜீவாசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டார். இன்று வரையும் அவர் அப்பதவியில் கட மயாற்றுகிறார்.

சந்தன சூரியபண்டார அவர்கள் கொழும்பு பல்கலைக்கழகத்தில் தாவரவியல் விஞ்ஞான விசேட பட்டதாரியொருவராவார். அவர் பேராதனை பல்கலைகழகத்துக்கு இணைந்த முதுமாணிப் பட்ட வான நிறுவனத்தில் (Postgraduate Institute of Science – PGIS) உயிர்ப் பல்வகைத்தன்மை பாதுகாப்பு தொடர்பாக முதுமாணிப் பட்டத்தை நிறைவு செய்துள்ளார்.

சந்தன சூரியபண்டார அவர்களின் தந்தை ஆசிரியரொருவராவார். தாய் வீட்டிலிருந்தார்.  தந்தைக்குத் தொழிலில் கிடைத்த இடமாற்றம் காரணமாக அவருக்குப் பல பாடசாலைகளில் கற்பதற்கு நேரிட்டது. இறுதியாக அவர் கற்ற பாடசாலை சந்தலங்காவில் சந்தலங்கா மத்திய மகா வித்தியாலயமாகும். அவரின் குடும்பம் இரு மகன்களையும் மகளொருவரையும் கொண்டமைந்தது. சுகார சூரியபண்டார மற்றும் இஷார சூரியபண்டார ஆகிய மகன்மார் இருவரும் திம்பிரிகஸ்வெவ  மாரிஸ்டெலாவித்தியாலயத்தில்க.பொ.த (உ.த)பரீட்சையின்பெறுபேறுகளை எதிர்பார்த்துக் கொண்டுள்ளதோடு மகள் அமாஷா சூரியபண்டார போலவலான ஆவே மரியா பாடசாலையில் கல்வி கற்கிறார். சூரியபண்டார அவர்களின் அன்பு மனைவி திருமதி சமந்தா பிரிட்ரோஅவர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தரொருவராவார்.

அவரின் முகவரி ‘சேசத”, இரபடகம, சந்தலங்கா ஆகும்.

 

விக்டோரியா, ரன்தெனிகல, ரன்தெம்பெ சரணாலயம்

இலங்கையில் அமைந்துள்ள பாரிய சரணாலயங்களுள் ஒன்றாகும். அது இலங்கையில் நீர்மின்னை வழங்குகின்ற முதன்மையான நீர்த்தேக்கங்களான விக்டோரியா, ரன்தெனிகல, ரன்தெம்பெஎனும் நீர்த்தேக்கங்களைச் சார்ந்து அமைந்துள்ளது. நாட்டின் முக்கியமான நீர்மின் சக்தி ஆதாரங்களான இந்நீர்த்தேக்கங்கள் மூன்றினதும் நீர் போசணை நிலை இச்சரணாலயத்தினால் பாதுகாக்கப்படுகின்றது. நீர்த்தேக்கங்கள் மூன்றினையும் சுற்றி அமைந்திருப்பதனால் ஒதுக்கப் பிரதேசம்விக்டோரியா, ரன்தெனிகல, ரன்தெம்பெசரணாலயமாகக் கருதப்படுவதற்கு அது காரணமாகியுள்ளது.1987ஆண்டு ஜனவரி மாதம்30ஆம் திகதி வனவிலங்கு மற்றும் தாவர பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் சரணாலயமொன்றாக வர்த்தமானி இலக்கம்438/16 இன் கீழ்பிரகடனப்படுத்தப்பட்டுள்ளவிக்டோரியா, ரன்தெனிகல, ரன்தெம்பெசரணாலயம் கண்டியை அண்மித்ததிலிருந்து மினிப்பே கால்வாய் வரை மகாவலி கங்கைக் கரை பூராகவும் பரவியுள்ளது.

சுருக்கமாகவீ.ஆர்.ஆர் (V.R.R) சரணாலயமாகவும் அழைக்கப்படுகின்ற இங்கு முழு நிலத்தின் அளவு42,087.03ஹெக்டயார் ஆகும். மத்திய மாகாணத்தில் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கும் ஊவா மாகாணத்தில்பதுளை மாவட்டத்துக்கும் உரித்தாக அமைந்துள்ள இச்சரணாலயம் கீழைத்தேய ஈர வலயம், வரண்ட வலயம் மற்றும்மலைநாட்டு வலய காலநிலைக் குணாதிசயங்களினைக் கொண்டமைந்த  ஆற்றங்கரையைச் சார்ந்த காடொன்றாகக் கருத முடிகின்றது. கடல் மட்டத்திலிருந்து650மீற்றரிலிருந்து1200மீற்றர் வரைமாறுபடுகின்ற உயரமான மலையுச்சிகள் சமவெளிகள் பலவும் இச்சரணாலயத்துக்கு உரித்தானதாகும். வருடாந்த மழைவீழ்ச்சி சுமார் 2000மில்லிமீற்றர் ஆவதோடு செப்டம்பர், பெப்ரவரி எனும் மாதங்களில் வடகீழ் பருவ மழை கிடைக்கின்றது. ஏப்ரலிலிருந்து ஆகஸ்ட் வரை வரண்ட காலநிலையொன்றுஇச்சரணாலயதினுள் நிலவுகின்றது.

இலங்கையில் பாரிய பல்நோக்கு நீர்த்தேக்கமான விக்டோரியா நீர்த்தேக்கத்தின் அணை  இலங்கையின் உயர்ந்த அணைக்கட்டாக கருதப்படுவதோடு 400அடி உயரமாகும்,அதாவது 122மீற்றர் ஆகும்.ரன்தெனிகலஅணையின்உயரம்332அடியாகும்.இது அண்மைக் காலத்தில்புனர்நிர்மாணம் செய்யப்பட்டுபாரியஅளவிலானஈரநிலங்களைப் போசணை செய்யும் நீர்த்தேக்கமாகும் .இதற்கு மேலதிகமாக உமா ஓயா நீர்த்தேக்கத்திலிருந்தும் போசணை கிடைக்கின்ற ரன்தெம்பெ அணையின் உயரம்30அடியாகும்.

உயிர்ப் பல்வகைத்தன்மையினால் உயர்ந்த நாடுகளில் முதல் இடத்தைப் பெற்றுக் கொள்வதற்கு இலங்கைக்கு முடியுமாக இருப்பதுநாடு பூராகவும் பரந்துள்ள பல்வேறான சூழல் காலநிலைஅறிகுறிகளைக் கொண்ட காட்டுத் தொகுதியின் காரணத்திலாகும்.விக்டோரியா, ரன்தெனிகல, ரன்தெம்பெசரணாலயம்அதன் அளவுடன் கருதப்படும் போதுமிகப் பாரிய உயிர்ப் பல்வகைத்தன்மையொன்றுக்கு உரிமை கூறுகின்றது.பூகோள ரீதியாகஈர வலயத்தின்உச்சியில் அமைந்திருந்தாலும்சாதாரண வரண்ட வலய காலநிலையைக் காட்டுகின்ற இங்கு வரண்ட ஈரநில வலயங்களில்காணக் கிடைக்கின்ற தாவர இனங்களைப் பெரும்பாலும்காணக் கிடைக்கின்றது. வீரை, பாலை,காட்டுநொச்சி, முதிரை, வெண்ணங்கு, கருவாலி, காரை அலம்ப மரம், காரை,சிறுநாவல், கீன, நாய்வேளை, பன்னம்,மஹோகனி,பலா போன்ற தாவர இனங்களும்சவானா புல்நிலத்தை சார்ந்தகடுக்காய், தான்றி,நெல்லி போன்ற தாவர இனங்களும் முதன்மையாகக் காணப்படுகின்றன.அவ்வாறே சரணாலயத்தினுள்ஆக்கிரமிப்புத் தாவரங்கள் சிலவும் மிக வேகமாகப் பரந்திருப்பதன் காரணத்தினால்இவ்வொதுக்கத்தில் வளர்கின்ற உள்நாட்டு மற்றும் உரித்தான தாவரங்கள் பலவற்றின் நிலை ஆபத்துக்கு உள்ளாகியுள்ளது.

பறவையினங்கள் பலவற்றுக்கு இப்பிரதேசம் பொருத்தமானதாக இருப்பதுகாடு சார்ந்த மலைகளும் பள்ளத்தாக்குகளும்பாரிய நீர்த்தேக்கங்களும் நதிகளும் அமைந்திருப்பதனாலாகும். பம்பிய மலையுச்சிக்குச் செல்லும் பயணம் மிகப் பிரபல்யமான சுற்றுலாப் பயணம் என்பதோடு அங்கிருந்து ரன்தெனிகல நீர்த்தேக்கத்தின் அழகான காட்சிகளைக் கண்டு கொள்வதற்குமுடியுமாக உள்ளது. செங்குரங்குக் கூட்டங்களும்யானைகளின் தொகையும்  சரணாலயத்தில்பெருமளவுசஞ்சரிப்பதோடுபெரும்பாலும் மாலை நேரத்தில் அவைகளை நீர்த்தேக்கத்தின் ஓரங்களில் கண்டுகொள்ள முடியும்.

விலங்குகளின் பல்வகைமைகளின்அடிப்படையில்இங்கு ஆசிய யானை, மரை, புளடளிமான்,செந்நரி, காட்டுப்பன்றி, சிறுத்தை,  இந்திய குழிமுயல்,போன்றபாலூட்டி இனங்களும் பதியப்படுகின்றன. இச்சரணாலயத்தினுள்வாழ்கின்ற ஊர்வனவைகளுள்மலைப்பாம்பு, நாகம், எட்டடி விரியன்,திமில் மூக்கு குழிவிரியன் போன்ற பாம்பு இனங்களும், சதுப்பு நில முதலையுமாகும்.

இந்திய குழிமுயல்  

சிவப்புநீலன்

உயர் வானத்தை அழகுபடுத்துகின்ற பல்வேறுபட்ட பறவையினங்களில் இலங்கையில் பதியப்படுகின்ற பறவையினங்கள் சுமார் 160 இச்சரணாலயத்தில் பதிவாகின்றது.மஞ்சள் காது புல்புல்,இலங்கை சுண்டங்கோழி,குக்குறுவான்,இலங்கை காட்டுக்கோழி,இலங்கை சாம்பல் இருவாய்ச்சி, இலங்கை தொங்கும் கிளி,இலங்கை மரப் புறா,பச்சை நிறக்கூவல் மற்றும்வழி மரிச்சான் குருவி போன்ற இலங்கைக்கே உரித்தான பறவைகளுள் அடங்கும்.இச்சரணாலயத்தைச் சார்ந்து வண்ணத்துப்பூச்சியினங்கள் சுமார் 70உம் பதியப்பட்டுள்ளது.

இச்சரணாலயத்தினுள் வாழ்கின்றஈரூடக வாழினங்களுள் பல்வகைத்தன்மையைக் காண முடிகின்றது. இலங்கைக்கே உரித்தான பாரியளவு அழிந்து செல்லக்கூடிய அச்சுறுத்தலுக்கு உரித்தானஇலங்கை தவளைவாயன்,இலங்கை கூடு புதர் தவளை மற்றும்இலங்கையின் மணிக்கூண்டுத்தவளை என்ம் ஈரூடக வாழினங்களும் இதனுள் அடங்குகின்றன.

நன்னீர் மீனினங்களுள்இலங்கைக்கு உரித்தான அழிந்து செல்லும் அச்சுறுத்தலுக்குஉள்ளாகியுள்ளகொல்லிமீன்(Aplocheiluswerneri)ஆக உடஹந்தயா,இரி ஹந்தயா என்பவற்றைசரணாலயத்தினூடாகப்பாய்ந்து செல்லும் மகாவலி கங்கையிலும் அதனைச் சார்ந்த கிளையாறுகள் பலவற்றிலிருந்தும் பதிவாகின்றன.

இவ்வாறான விலைமதிப்பற்ற வளங்களைக் கொண்ட இந்நிலம் தற்காலத்தில் பல்வேறுபட்ட மனித செயற்பாடுகளினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. சரணாலயத்தைச் சுற்றி அமைந்துள்ள குடியேற்றங்களைக் கட்டியெழுப்புவதன் அடிப்படையில் இங்குள்ள  மரத் தாவரங்கள் பல்வேறுபட்ட காரணங்களின் அடிப்படையில் வெட்டப்படுவதனால் காடுகள் அகற்றப்படுவது அடிக்கடி இடம்பெறுகின்றது. அவ்வாறேஇச்சரணாலயத்தினூடாக ஓடுகின்ற மகாவலி கங்கையை ஆதாரமாகக் கொண்டு நீர் சார்ந்த பிரதேசங்களில் மணல் அகழ்தல் மூலம் கரைகள் சேதமடைவதும், மீன்களின் இனப்பெருக்க இடங்கள் சிதைவடைவதும் நிகழ்கின்றது. மேலும் இந்நீரேந்துப் பிரதேசங்களுக்கு குப்பை கூளங்களை அகற்றுவதும், தொழிற்சாலைகளின் இரசாயனப் பதார்த்தங்களை நீர்த்தேக்கங்களுக்கு வெளியேற்றுவதும் நிலைமை மேலும் தீவிரமடைவதற்குக் காரணமாகியுள்ளது.

வீட்டு எருமைகள் மற்றும் மாடுகளை சரணாலயத்திற்குள் உட்படுத்துவதனால் இங்கு வாழ்கின்ற பாலூட்டிகளுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்படுவதும்,காளைகளும் புல்லை மேய்வதனால் மண் கழுவிச் செல்லப்பட்டு பாழடைந்து நீரின் நிறமாற்றம் ஏற்படுதல் போன்ற  நீர் மாசடைதல் ஏற்படுவதும் மண்ணரிப்பு பெருமளவில் ஏற்படுவதற்கும் இந்த சட்ட விரோதமான செயற்பாடுகள் காரணமாக உள்ளன. மேலும் உணவுப் பற்றாக்குறை காரணமாக யானை மனித மோதலும் இப்பிரதேசத்தில் அடிக்கடி ஏற்படுவதும் அதனாலேயாகும்.விலங்குகளை வேட்டையாடுவதும் இங்கு அடிக்கடி காணக் கிடைக்கின்ற ஒன்றாகி உள்ளது.

சூழல் சட்டதிட்டங்களைமீறி மேற்கொள்ளப்படுகின்ற இந்த வகையிலான பல்வேறு வகையான செயற்பாடுகளை காரணமாகக் கொண்டு இச்சரணாலயத்தினுள் மேற்கொள்ளப்படுகின்றசூழல் சேதங்கள்எதிர்காலத்தில் இங்கு இடம்பெறுவதற்குஉறுதியாகத் தாக்கம் செலுத்த முடியும். விவசாய ஏனையமுக்கியமானமகாவலி வலயத்தில் போன்றேவரண்ட வலயத்திலும் நீரின் பாதுகாப்பு முழுமையாக இணைந்திருப்பதும் சரணாலயத்திலுள்ள காடுகளின் மீதாகும்.

வனவிலங்கு மற்றும் தாவர பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் பிரகடனப்படுத்தப்படுகின்ற சரணாலயமொன்றிற்குள் அரசாங்கக் காணிகளைப் போன்றே தனியார் காணிகளும் அமைந்திருக்க முடியும். எனினும் அத்தனியார் காணிகளினுள் நிர்மாணிப்புக்களோ ஏதாவதொரு அபிவிருத்திச் செயற்பாடொன்றையோ மேற்கொள்வதாயின் அதற்கு வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். வனவிலங்கு மற்றும் தாவர பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் சரணாலயமொன்றில் இடம்பெறுகின்ற சேதம் விளைவிக்கின்ற நடவடிக்கைகளை நிறுத்துவதற்குள்ள அதிகாரத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் இங்கு இடம்பெறுகின்ற அனைத்து சேதத்தை விளைவிக்கின்ற சட்ட விரோத நடவடிக்கைகளையும் நிறுத்தும் திறன் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்துக்கு உள்ளது. எதிர்கால சந்ததியினரை நோக்காகக் கொண்டுஇவ்வாறான இயற்கையாகக் கிடைக்கப் பெற்ற கொடைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்கு அனைவரும் ஆர்வம் காட்ட வேண்டும்.

கொழும்பு–கேகாலை–கண்டி–தென்னங்கும்புர பாலம்–ஊடாக சரணாலயத்தை அடைய முடியும்.

වික්ටෝරියා, රන්දෙණිගල, රන්ටැඹේ අභය භුමියපිළිබඳව විස්තරයේ ඇති සතුන්ගේ නම් ලැයිස්තුව

விக்டோரியா, ரன்தெனிகல, ரன்தெம்பெ சரணாலயம்தொடர்பான விளக்கத்தில் காணப்படும் விலங்குகளின் பெயர்ப் பட்டியல்

List of animals in the Victoria-Randenigala-Rantambe Sanctuary

Sinhala Names

Tamil Names

English Names

Botanical Name

අලියා

ஆசிய யானை

Asian elephant

Elephasmaximus

ගෝනා

மரை

Sambar

Rusa unicolor

තිත්මුවා

புள்ளிமான்

Spotted deer 

Axis axisceylonensis

හිවලා

செந்நரி

Golden jackal

Canisaureus

වල් ඌරා

காட்டுப்பன்றி

Wild Boar

Susscrofa

කොටියා

சிறுத்தை

Leopard

Pantheraparduskotiya

හාවා

இந்திய குழிமுயல்

Indian hare

Lepusnigricollis

පිඹුරා

மலைப்பாம்பு

Python

Python molurus

නාගයා

நாகம்

Cobra

Najanaja

මුදුකරවලා

எட்டடி விரியன்

Ceylon krait

Bungarusceylonicus

කුණකටුවා

திமில் மூக்கு குழிவிரியன்

Hump nosed viper

Hypnalehypnale

හැල කිඹුලා

சதுப்பு நில முதலை

Mugger crocodile

Crocodyluspalustris

ශ්‍රී ලංකා කහකන් කොන්ඩයා

மஞ்சள் காது புல்புல்

Sri Lanka Yellow-eared Bulbul

Pycnonotuspenicillatus

හබන් කුකුළා

இலங்கை சுண்டங்கோழி

Sri lankaspurfowl

Galloperdixbicalcarata

ශ්‍රි ලංකා රන් මුහුණත් කොට්ටෝරුවා

குக்குறுவான்

Yellow-fronted barbet

Megalaimaflavifrons

ලංකා වළි කුකුළා

இலங்கை காட்டுக்கோழி

Sri lankajunglefowl

Gallus lafayettii

ශ්‍රීලංකාඅළුකෑදැත්තා

இலங்கை சாம்பல் இருவாய்ச்சி

Sri Lanka grey hornbill

Ocycerosgingalensis

ලංකා ගිරා මලිත්තා

இலங்கை தொங்கும் கிளி

Sri Lanka Hanging Parrot

Loriculusberyllinus

ශ්‍රී ලංකා මයිලගොයා

இலங்கை மரப் புறா

Sri Lanka wood pigeon

Columba torringtoniae

ලංකා බට ඇටිකුකුළා

பச்சை நிறக்கூவல்

Sri Lanka Green Billed Coucal

Centropuschlororhynchos

ලංකා අඳුරු නිල් මී මැසි මාරා

வழி மரிச்சான் குருவி

Sri Lanka Dull-blue Flycatcher

Eumyiassordidus

ලංකා කඳුකර මැඩියා

இலங்கை தவளைவாயன்

Sri Lanka frog

Fejervaryagreeni

පලා පඳුරු මැඩියා

இலங்கை கூடு புதர் தவளை

Leaf-nesting shrub frog

Philautusfemoralis

කඳුකර ගස්‌ ගෙම්බා

இலங்கையின் மணிக்கூண்டுத்

தவளை

Montane Hourglass Tree Frog

Tarugaeques

රතු කෝනංගියා

சிவப்புநீலன்

Red Pierot

Talicadanyseus

වික්ටෝරියා, රන්දෙණිගල, රන්ටැඹේ අභය භුමිය පිළිබඳව විස්තරයේ ඇති වෘක්ෂයන්ගේ නම් ලැයිස්තුව

சோமாவதிய தேசிய பூங்காதொடர்பான விளக்கத்தில் காணப்படும் தாவரங்களின் பெயர்ப் பட்டியல்

List of trees in theVictoria-Randenigala-Rantambe Sanctuary

Sinhala Name

Tamil Name

English Name

Scientific Name

වීර

வீரை

Hedge boxwood

Drypetessepiaria

පලු

பாலை

Ceylon iron wood

(Manilkarahexandra)

මිල්ල

காட்டுநொச்சி

Peacock chaste tree

(Vitexaltissima)

බුරුත

முதிரை

Ceylon satin wood

(Chloroxylonswietenia)

වෙලන්

வெண்ணங்கு

Fishing rod tree

(Pterospermumsuberifolium)

කිරිකෝන්

கருவாலி

Ceylon oak tree

(Schleicheraoleosa)

කර

காரை அலம்ப மரம்

Coromandel Boxwood

(Canthiumcoromandelicum)

වෙරළු

உலங்காரை

Ceylon Olive tree

(Elaeocarpusserratus)

දං

சிறுநாவல்

South indian plum

(Syzygiumcaryophyllatum)

කීන

புன்னை மரம்

Kina

(Calophyllum walker)

නෙලූ

நாய்வேளை

Nelu

(Strobilanthesviscosa)

පිහිඹිය

பன்னம்

Fern leaf tree

(Filiciumdecipiens)

මහෝගනී

மஹோகனி

Mahogany

(Swietenia macrophylla)

කොස්‌

பலா

Jack fruit

(Artocarpusheterophyllus)

අරළු

கடுக்காய்

Aralu

(TerminaliaChebula‌)

බුළු

தான்றி

Bulu

(Terminaliabellirica)

නෙල්ලි

நெல்லி

Amla

(Phyllanthusemblica)

தொகுப்பாளர்-தம்மிகாமல்சிங்ஹ, மேலதிக செயலாளர், வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள்

பாதுகாப்பு அமைச்சு பகுதி, விவசாய மற்றும் வனஜீவராசிகள் மற்றும் வன   வளங்கள் பாதுகாப்பு அமைச்சு

பூங்கா பற்றிய தகவல்களைத் தொகுத்தவர்ஹஸினி சரத்சந்திர, பிரதம உத்தியோகத்தர், வன பாதுகாப்புத் திணைக்களம்

மஹேக்ஷா சதுராணி பெரேரா(பட்டதாரி பயிற்சியாளர்),வனஜீவராசிகள்  பாதுகாப்புத் திணைக்களம்

 

தமிழ் மொழிபெயர்ப்புஏ.ஆர்.எப். றிப்னா, அபிவிருத்தி  உத்தியோகத்தர், (விவ. வனஜீ.வன. வள. பா. அ)

ஆங்கில மொழிபெயர்ப்புஅசோக பலிஹவடன, மொழிபெயர்ப்பாளர்,(விவ. வனஜீ.வன. வள. பா. அ)

இணைய வடிவமைப்புசீ. ஏ. டீ. டீ. ஏ.கொல்லுரே, முகாமைத்துவ சேவை​உத்தியோகத்தர், (விவ. வனஜீ.வன. வள. பா. அ)

படங்கள்ரோஹித குணவர்தன,  வ.  பா. தி.