மஹய்யாவ வாவியின் அழகைப் பார்த்தது போதும்
நான் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்துக்கு 2007 ஜனவரி பத்தாம் திகதி விலங்கு பாதுகாவலொருவராக இணைந்தேன். அங்கம்மெடில்ல தேசிய பூங்காவில் வனவிலங்கு வட்டார உதவியாளரொருவராக 2022 ஆண்டில் பெப்ரவரி முதலாம் திகதியிலிருந்து கடமையாற்றினேன்.
பதினேழு வருட சேவைக் காலத்தினுள் நான் வனவிலங்கு பாதுகாப்பு பற்றிய அறிவு மற்றும் பேசுவதற்கு முடியாதமரங்கள் மற்றும் விலங்குகள் கால்நடைகளைப் பாதுகாப்பதற்காக அளவிட முடியாதவாறு பாடுபட்டு வேலை செய்தேன். அவ்வாறே அங்கம்மெடில்ல தேசிய பூங்காவின் தலைமையகத்தில் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் மிகக் குறைந்த பணிக்குழுவினருடனேயே கடமைகளில் ஈடுபட்டிருந்தேன்.
அதற்கிடைப்பட்ட காலத்தில் நான் 2022.04.30 ஆம் திகதி பூங்காப் பொறுப்பாளரின்அறிவுறுத்தலின் பிரகாரம் காவல் பயணமொன்றுக்காக கால்நடை மூலம் சுமார் காலை 6.45 க்கு புறப்பட்டோம். என்னுடன்கள உதவியாளர் சம்பத் கீத் ரணவீர, ஆர். என். எம். எஸ். சந்தன மற்றும் கே. பீ. சுமித்சம்பத் எனும் ஏனைய அதிகாரிகளும் இருந்தனர். நாம் துப்பாக்கியொன்றையும் எடுத்துச் சென்றோம். நாம் பூங்காவின் பாதையினூடாக சட்ட விரோதமாக பூங்காவுக்குள் நுழைகின்ற வேட்டையாடுபவர்கள் மற்றும் மீன்களை அழிப்பவர்களைப் பற்றிய தகவல்களைத் தேடிப் பார்ப்பதற்காக மஹய்யாவ வாவிக்கு அருகிற்கு கால்நடையாகப் புறப்பட்டோம்.
உரிய மஹய்யாவ இடத்தினை நெருங்கும் போது நேரம்பகல் சுமார் 11.15 ஆகிற்று. காலையிலேயே பயணத்தை ஆரம்பித்ததன் காரணமாக எமக்கு சோர்வு களைப்பு விளங்கவில்லை. மஹய்யாவ வாவியினூடாக வீசும் காற்று எமது களைப்பினைத் தணித்து விட்டது. நாம் அனைவரும்மஹய்யாவ வாவிக்கு அருகில் ஓய்வெடுப்பதற்குஇடமொன்றைத் தேடிக் கொண்டு அவ்விடத்தில் பகல் உணவை எடுத்தோம்.திரும்பும் போது பறவைகளின சத்தம்காடு முழுவதிலும் மௌனத்தினால் பரந்திருந்தது. மஹய்யாவ வாவி பிரதேசத்தில் மேலும் தங்கியிருக்கும் போது மஹய்யாவ வாவிக்கு அருந்துவதற்கு நீரைத் தேடி வருகின்ற பெரிய யானையொன்றை நாம் கண்டோம். இயற்கையின் அழகை அனுபவித்துக் கொண்டே நாம் இவ்யானையைப் பார்த்துக் கொண்டிருந்தோம். மகிமையுள்ள யானையானது நீரருந்தி விட்டு குளிக்கும் விதம் மிக அழகான காட்சியொன்றாகும். நாம் அனைவரும் மேலும் சுற்றுப் பகுதியைக் பரீட்சித்துப் பார்த்தாலும் சந்தேகப்படும் நடவடிக்கைகள் எதனையும் காணக் கிடைக்கவில்லை. அன்று மஹய்யாவ வாவியின் அணைக்கட்டின் மீது இரவுக்காக தயார் செய்திருந்த பாணுடன் சேர்த்து தேங்காய் சம்பலைச் சாப்பிட்ட விட்டு அவ்விடத்திலேயே இரவு தங்கினோம்.
நாம் அடுத்த நாள் காலையில் மீண்டும் சேவை இடத்துக்கு பயணத்தை ஆரம்பித்தோம்.மஹய்யாவ வாவிக்கு அண்மையிலிருந்து சுமார் இரண்டு கிலோ மீற்றர் சென்ற பின்னர் மரங்களில் கோட்டினை உடைக்கும் சத்தமொன்று எமக்குக் கேட்டது . அதனைப் பற்றி நன்றாக சோதித்துக் கொண்டிருந்த நாம் அங்கு காட்டு யானையொன்று இருப்பதனைப் புரிந்து கொண்டோம். நாம் அனைவரும் அந்த யானையைத் தவிர்த்து வேறொரு வழியினால் பயணம் செய்தாலும் மீண்டும் நம் முன்னிலையில் ஒரேயடியாக காட்டு யானையொன்று தென்பட்டது.ஓடுவதற்கு எமக்கு நேரம் இருக்கவில்லை. பயத்தினால் உறைந்திருந்தாலும்நாம் உடனே மறுபக்கம் திரும்பி ஓடுவதற்கு ஆரம்பித்தோம்.அச்சந்தர்ப்பத்தில் நான் முன்னே பயணித்தேன்.எனது கையிலேயே துப்பாக்கி இருந்தது.ஏனைய அதிகாரிகள் எனக்குப் பின்னே இருந்தனர்.பின்னே திரும்பிப் பார்க்கும் போது யானை பின்னால் துரத்தி வருகின்றது. எம்மிருவருக்கு இடையிலும் அதிக இடம் இருக்கவில்லை. அன்று ஓடிய ஓட்டத்திற்கேற்ப ஓட்டப் போட்டிக்குச் சென்றால் வெற்றியீட்ட முடியும் என நினைக்கிறேன். எனக்கு ஒரேயடியாக துப்பாக்கி நினைவுக்கு வந்தது. சற்று ஓட்டத்தைக் குறைத்து நான் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு வைத்தேன்.பயந்த யானைகாட்டிற்குள் ஓடு விட்டது. அதன் பின்னர் நான் ஏனையவர்களைத் தேடினேன்.ஒருவர் மரத்திற்கு மேல்ஏறியிருந்தார்.அடுத்த இருவரைத் தேடினாலும்அவ்விருவரையும் தேடிக் கொள்வதற்கு முடியாமல் போய்விட்டது. அவ்விருவருக்கும்யானையினால் தாக்கம் ஏற்பட்டதா எனும்பயத்தினால் அவர்களுக்கு தொலைபேசி அழைப்பொன்றை ஏற்படுத்தினேன். எனினும் அவர்களிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை. நாம் அவர்களைப் பற்றிய பயத்தினால்அவர்களைத் தேடி அடிக்கடி கூச்சலிட்டு சுமார் ஒரு மணித்தியாலயம் காட்டிற்குள் தங்கியிருந்தோம். பின்னர் எமக்கு அவர்களின் கூச்சல் சத்தத்தினால் பதில் கிடைத்தது. கூச்சல் சத்தத்தினூடாகப் பயணித்து நீண்ட நேரத்தின் பின்னர் எமக்கு அவ்வதிகாரிகள் இருவரும் கிடைத்தனர். அங்கு அதிகாரியொருவரின் இடது பாதத்தில் சுளுக்கு ஏற்பட்டிருந்தது. ஏனைய அதிகாரியும் அவ்விடத்திலேயேஅவருக்கு உதவுவதற்காகத் தங்கியிருந்தார். நாம் பாதம் சுளுக்கு ஏற்பட்டிருந்த அதிகாரியைத் தூக்கிக் கொண்டு பூங்காவின் வழிக்கு வந்தோம்.உயர்ந்த மரமொன்றிற்கு ஏறி தொலைபேசியினால் சாரதிக்குப் பேசினோம்.சம்பவத்தை விவரித்துவாகனத்தை அவ்விடத்திற்கே வரவழைத்துக் கொண்டோம். காட்டு யானை விரட்டியதனால் பாதத்தில் சுளுக்கு ஏற்பட்ட அதிகாரியைத் தூக்கிவாகனத்துக்குள்ளேயே போட்டுக் கொண்டு நாம் பூங்காவின் தலைமையகத்தினூடாக சேவை இடத்திற்கு காலை 7 க்குவந்தோம்.
இது சுமார்பதினேழு வருட வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தில் சேவைக் காலத்தினுள் நான் பெற்ற பயங்கரமான அனுபவமொன்றாகும்.
எவ்வாறாயினும் யானைக்கும் எமக்கும் ஆபத்து இல்லாமல் சம்பவம் முடிவடைந்த்தைப் பற்றி எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
திரு. எம். எம். துசித தம்மிக பண்டார அவர்கள்
துசித தம்மிக பண்டார அவர்கள்2007 ஆம் ஆண்டில் இலங்கை வனவிலங்கு பாதுகாவலொருவராக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தில் இணைந்தார்.அவர்2022 ஆண்டிலிருந்து வனவிலங்கு வட்டார உதவியாளரொருவராகஅங்கம்மெடில்ல தேசிய பூங்காவில் கடமைகளை நிறைவேற்றினார்.
துசித தம்மிக பண்டார அவர்கள்பொலன்னறுவை பராக்கிரம சமுத்திர மகா வித்தியாலயத்தில் சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்து பலுகஸ்தமன மகா வித்தியாலயத்தில் உயர் தரம் வரை கல்வியைக் கற்றார்.
அவர் 2009ஆண்டில் வனவிலங்கு முகாமைத்துவ கனிஷ்ட சான்றிதழ் பத்திர பாடநெறியையும் பூர்த்தி செய்துள்ளதோடு இதுவரை வேறு அரச பயிற்சி நிகழ்ச்சிகளுக்கும் கலந்து கொண்டுள்ளார்.
துசித தம்மிக பண்டார அவர்கள்குடும்பத்தில் ஒரே பிள்ளை ஆவதோடு அவர்திருமணமானவர்.
அவருடைய முகவரி இலக்கம் 233, அகுணு எல,பராக்கிரம சமுத்திரம், பொலன்னறுவை ஆகும்.
அவருடைய தொலைபேசி இலக்கம் 0718378737ஆகும்.
அங்கங்மெடில்ல தேசிய பூங்கா
வட மத்திய மாகாணத்தில் பொலன்னறுவை மாவட்டத்தில் எலஹெர பிரதேச செயலகப் பிரிவிற்குரிய பராக்கிரம சமுத்திரத்தின் நீரேந்துப் பிரதேசத்தில் அமைந்துள்ள அங்கம்மெடில்ல 2006 ஜூன் 06 ஆம் திகதி தேசிய பூங்காவொன்றாக உத்தியோகபூர்வமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
நீண்ட கொம்புகளையுடையகாட்டெருமைகள் வாழ்கின்ற பிரதேசமொன்றாக இது பிரபல்யமானது. தமது கூட்டத்தின் தலைவர் எனும் அப்பிரிவின் உரிமையாளர் யாரென்பதனைத் தெரிவு செய்து கொள்வதற்காக தமது பெரிய கொம்புகளைமோதிக் கொண்டு சண்டை சச்சரவுகள் அவைகளுக்கிடையில் ஏற்படுவதோடு, அதில் வெற்றியீட்டும் காளை கூட்டத்தின் தலைவனாக கருதப்படும். இதற்காக தமது கொம்புகளைக் கூர்மையாக்கிக் கொள்வதற்காக அவைகளின் கொம்புகளை அடிக்கடி மரங்களில் தேய்த்துக் கொள்ளும். ‘கொம்புகளைத் தேய்க்கும் ஊரின் லிய மடுல்ல’அங்கம்மடுல்ல எனவும் அது பிற்காலத்தில் அங்கம்மெடில்லஉருவாக்கப்பட்டுள்ளதென புராணக் கதைகளின்படி குறிப்பிடப்படுகின்றது.
காட்டெருமை
இத்தேசிய பூங்காவை அமைப்பதன் பிரதான நோக்கமாக அமைந்தது பராக்கிரம சமுத்திரத்தில் நீரேந்துப் பிரதேசஙகைள் நிர்மாணிக்கப்பட்டுள்ள அங்கம்மெடில்ல தேசிய பூங்காவின் மூலாதாரத்தைப் பாதுகாத்தல், மண் சேதமடைதைத் தடுத்தல், வஸ்கமுவ மற்றும் மின்னேரியா எனும் தேசிய பூங்காவுகளுக்கிடையில் யானைகள் பயணப் பாதையொன்றை அமைத்தல், பராக்கிரம சமுத்திரத்திற்கு நீரை வழங்குகின்ற யோத கால்வாயின் பாதையைச் சுற்றியுள்ள சூழலைப் பாதுகாத்தல் போன்ற விடயங்களாகும்.
இப்பிரதேசத்துக்கு ஜூன்-செப்டெம்பர் காலத்தில் மழைவீழ்ச்சி கிடைப்பதில்லை என்பதோடு செப்டெம்பர்– ஜனவரி மாதங்களில் பருவ மழை கிடைக்கின்றது.வருடாந்த மழைவீழ்ச்சியை 1500-2000 மி. மீ. களுக்கிடையில் கண்டுகொள்ள முடிகின்றது.வருடாந்த வெப்பநிலை 27 -29 செல்சியஸ் பாகை எல்லைக்குள் உள்ளது.இத்தேசிய பூங்காவினுள் இடிபாடுகளாக உள்ளவெஹெர விகாரை மற்றும்கற்றூண்களின் மூலம்பொலன்னறுவை காலத்தில் இப்பிரதேசம்மிகவும் விருத்தியடைந்த நீர்ப்பாசன நாகரிகமொன்றுக்கு உரிமை கூறியது என்பதற்கு சாட்சி பகர்கின்றது.
பூங்காவினுள் ஈர மற்றும் வரண்ட காலநிலையைக் கண்டுகொள்ள முடிவதோடு ஈர வலயத்தில் போன்றே வரண்ட வலயத்திலும் கலப்புக் காடுளைக் காணக் கிடைக்கின்றது. நீர்த்தேக்கம் மற்றும் யோத கால்வாயைச் சார்ந்து செயற்கை ஈரநிலமொன்று உருவாகியிருப்பதனால் இவ்ஈர நிலக் காடுகளின் குணாதிசயங்களையும் காண முடிகின்றது. இங்கு விதானத்தைக் கொண்ட தாவரங்களைக் கண்டு கொள்ள முடியுமாகும்.அவ்வாறே இங்குவற்றாத ஊற்று நீரைக் கண்டுகொள்ள முடியும்.அது வரண்ட காலத்திலும் கூடவற்றாது இருக்கும்.அதனால் இங்குவரண்ட என்றும் பசுமையானகாடுகளில் கண்டுகொள்ள முடியுமான தாவரங்களைக் கொண்ட காடுகளும் காணப்படுகின்றன.அவ்வாறு வரண்ட வலயத்துக்கே உரியவீரை, பாலை, வெண் மருது, கணைப்பிரண்டை, தம்பனை, கருங்காலி, பதுரங்கலி, புளிய மரம், காட்டுநொச்சி, சவண்டலை, உதிய மரம் போன்ற தாவர இனங்களைப் போன்றேசிறுநெல்லி, கொன்றை போன்ற தாவர இனங்களையும் கண்டு கொள்ள முடிகின்றது.
இத்தேசிய பூங்காவில் விலங்குகளின் பல்வகைத்தன்மை பற்றி குறிப்பிடுவதில் பெரும் நீரேந்துப் பிரதேசமொன்று என்பதனால் பராக்கிரம சமுத்திரத்தின் நீர்த்தொட்டிகள் புட் பற்றைகளினால் கொண்டமைந்ததாகும். அவ்வாறே இத்தேசியப் பூங்காவினூடாக விழுந்துள்ள யானைகளின் பயணப் பாதையைக் காரணமாகக் கொண்டுஇங்குகாட்டு யானைகள் பெருமளவில் வசிக்கின்றன.யானைகளுக்கு மேலதிகமாகசிறுத்தை,தேன் கரடி,காட்டெருமை, புள்ளி மான், மரை,துரும்பன் பூனை,செந்நரி, கீரிப்பிள்ளைபோன்ற பாலூட்டி விலங்குகளும், விசேடமாகசாம்பல் தேவாங்கும், நாகம்,கண்ணாடி விரியன், எண்ணை விரியன், திமில்மூக்கு குழிவிரியன், மற்றும் மலைப்பாம்புபோன்ற பாம்பினங்களும், நட்சத்திர ஆமைகள், கறுப்பு ஆமைகள்,பால் ஆமைகள் போன்றவைகளும் இதனைத் தமது வாழிடமாக அமைத்துக் கொண்டுள்ளன.
யானைகள்
புள்ளி மான்
விசேடமாக பராக்கிரம சமுத்திரத்தை அண்மித்த பிரதேசத்தில் கூடுகளை அமைக்க வருகின்ற உள்நாட்டுப் பறவைகளைப் போன்றேபுலம்பெயர் பறவைகள் பலவற்றையும் இலகுவாகக் கண்டுகொள்ள முடியுமாக உள்ளது. காட்டுக்கோழி, பொன்னாங் கழுகு, பருந்துபோன்றே ஆந்தைகள், கொக்குகள், குள்ளத்தாராக்கள்மற்றும்நீர்க்காகங்கள் போன்ற நீர்வாழ் பறவைகளையும் இங்கு பெரும்பாலும் கண்டுகொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கின்றது.
வனப் பூங்காவில் அமைந்துள்ள பெறுமதி வாய்ந்ததொலபொருளியல் இடமாகக்கருதப்படுவதுபுராதன அமுன எனும் நீர்ப்பாசன இடமாகும். பூங்கா பிரகடனப்படுத்தப்படுவதற்கு முன்னரும் பார்வையாளர்கள் இப்புராதனநீர்ப்பாசன சாகசத்தைக் கண்டுகொள்வதற்கு இவ்விடத்துக்கு வருகை தந்தனர். புராதன அமுனவைச் சுற்றி மரங்கள் அதிகம் என்பதனால் அதனை கிராம மக்கள்அரச மதில் என்று அழைக்கின்றனர்.
இவ்வழகான வன இல்லத்துக்கு நுழைவதற்கு நுழைவதற்காக கொழும்பு, குருனாகல், உடுமுல்லவிலிருந்து ஹபரணவிற்கு வந்து ஹபரணவிலிருந்து பொலன்னறுவை பாதையில் அங்கம்மெடில்லதேசிய பூங்காவுக்கு வர முடியும்.கொழும்பிலிருந்து இத்தேசிய பூங்காவிற்கான தூரம் 225 கி.மீ. ஆகும். அவ்வாறே இத்தேசிய பூங்காமு.ப.6.00 இலிருந்து பி.ப.6.00 வரை திறந்துள்ளது.
இங்கு கலஹகல வனவிலங்கு தலைமை அலுவலகத்திலிருந்து பாத யாத்திரையாக, உயிர்ப் பல்வகைத்தன்மையினைக் கொண்ட வெள்ளை மலையை ஏறுவதற்கும், அம்பன் கங்கையினூடாக அரச மதில் அமைந்துள்ள வரலாற்று இடத்துக்கு நெருங்குவதற்கும், ரந்தவிகே ஓயாவினூடாக வெள்ளை மலையினூடாகமீண்டும்கலஹகல பூங்காவின் தலைமையகத்திற்கு சூழலின் ஆரோக்கியமான வெளிச்சத்தை அனுபவித்துக் கொண்டு அடைய முடியும். விசேடமாக இச்சுற்றுப் பயணத்தின் நடுவே கிடைக்கின்ற தாவர மற்றும் விலங்கு சமூகத்தைப் போன்றே அரச மதிலையும் உங்களால் கண்டு கொள்ள முடியுமாக உள்ளது.
வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் சுற்றுப் பயண வழிகாட்டி அதிகாரியொருவரின் உதவியையும் தொடர்ந்து பெற்றுக் கொள்ளவும் முடியுமாக உள்ளது.
අංගංමැඩිල්ලජාතිකඋද්යානයපිළිබඳව විස්තරයේ ඇති සතුන්ගේ නම් ලැයිස්තුව
சோமாவதிய தேசிய பூங்காதொடர்பான விளக்கத்தில் காணப்படும் விலங்குகளின் பெயர்ப் பட்டியல்
List of animals in the Anganmadilla National Park
Sinhala Names | Tamil Names | English Names | Botanical Name |
අලින් | யானைகள் | Asian elephants | Elephasmaximus |
දිවියා | சிறுத்தை | Leopard | Pantheraparduskotiya |
වළහා | தேன் கரடி | Sloth bear | Melursusursinus |
කුළු හරකා | காட்டெருமை | Wild buffalo | Bubalusarnee |
තිත් මුවා | புள்ளி மான் | Spotted dear | Axis axisceylonensis |
ගෝනා | மரை | Sambar | Rusa unicolor |
කොළ දිවියා | துரும்பன் பூனை | Rusty- spotted cat | Felisrubginosa |
නරියා | செந்நரி | Sri Lanka Jackal | Canisaureus |
මුගටියා | கீரிப்பிள்ளை | MangooseSps. | HerpestesSps |
අළු උණ හපුළුවා | சாம்பல் தேவாங்கு | Grey slender loris | Loris lydekkerianus |
නයා | நாகம் | Cobra | Najanaja |
තිත් පොළඟා | கண்ணாடி விரியன் | Russell’s viper | Viperarusselli |
කරවලා | எண்ணை விரியன் | Ceylon krait | Bungarusceylonicus |
කුණ කටුවා | திமில் மூக்கு குழிவிரியன் | Hump nosed viper | Hypnalehypnale |
පිඹුරා | மலைப்பாம்பு | Python | Python molurus |
තාරකා ඉබ්බන් | நட்சத்திர ஆமைகள் | Star tortoise | Geocheloneelegans |
ගල් ඉබ්බන් | கறுப்பு ஆமைகள் | Hard shelled terrapin | Melanochelystrijuga |
කිරි ඉබ්බන් | பால் ஆமைகள் | Soft shelled terrapin | Lissemyspunctata |
වලි කුකුළා | காட்டுக்கோழி | Sri lankajunglefowl | Gallus lafayetill |
රාජාලියා | பொன்னாங் கழுகு | Eagle Sps., |
|
උකුස්සා | பருந்து | Kite Sps. |
|
බකමූණන් | ஆந்தைகள் | Owl Sps. |
|
කොක්කු | கொக்குகள் | Egret Sps. |
|
සේරු | குள்ளத்தாராக்கள் | Teal Sps. |
|
දිය කාවන් | நீர்க்காகங்கள் | Indian Cormorant | Phalacrocoraxfuscicollis |
අංගංමැඩිල්ලජාතිකඋද්යානයපිළිබඳව විස්තරයේ ඇති වෘක්ෂයන්ගේ නම් ලැයිස්තුව
சோமாவதிய தேசிய பூங்காதொடர்பான விளக்கத்தில் காணப்படும் தாவரங்களின் பெயர்ப் பட்டியல்
List of trees in the Anganmadilla National Park
Sinhala Name | Tamil Name | English Name | Scientific Name |
වීර | வீரை | Hedge boxwood | Drypetessepiaria
|
පලු | பாலை | Ceylon iron wood | Drypetessepiaria |
කුඹුක් | வெண் மருது | Kumbuk | TerminaliaArjuna |
වෑවරණ | கணைப்பிரண்டை | Nelthare | Alseodaphnesemecarpifolia |
තම්මැන්නා | தம்பனை | Thammanna | Mischodonzeylanicus |
කළුවර | கருங்காலி | Ebony | Drypetessepiaria |
කළු මැදිරිය | பதுரங்கலி | Kalumadiriya | Diospyrosquaesita |
සියඹලා | புளிய மரம் | Tamarind | Tamarindusindica |
මිල්ල | காட்டுநொச்சி | Milla | Vitexaltissima |
හල්මිල්ල | சவண்டலை | Halmilla | Berryacordifolia |
හික් | உதிய மரம் | Indian ash tree | Lanneacoromandelica |
කුරටිය | சிறுநெல்லி | Kuratiya | PhyllantusPolyphyllus |
ඇහැළ | கொன்றை | Golden shower | Cassia fistula |
தொகுப்பாளர்-தம்மிகாமல்சிங்ஹ, மேலதிக செயலாளர், வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள்
பாதுகாப்பு அமைச்சு பகுதி, விவசாய மற்றும் வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சு
பூங்கா பற்றிய தகவல்களைத் தொகுத்தவர்– ஹஸினி சரத்சந்திர, பிரதம உத்தியோகத்தர், வன பாதுகாப்புத் திணைக்களம்
மஹேக்ஷா சதுராணி பெரேரா(பட்டதாரி பயிற்சியாளர்),வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம்
தமிழ் மொழிபெயர்ப்பு– ஏ.ஆர்.எப். றிப்னா, அபிவிருத்தி உத்தியோகத்தர், (விவ. வனஜீ.வன. வள. பா. அ)
ஆங்கில மொழிபெயர்ப்பு– அசோக பலிஹவடன, மொழிபெயர்ப்பாளர்,(விவ. வனஜீ.வன. வள. பா. அ)
இணைய வடிவமைப்பு–சீ. ஏ. டீ. டீ. ஏ.கொல்லுரே, முகாமைத்துவ சேவைஉத்தியோகத்தர், (விவ. வனஜீ.வன. வள. பா. அ)
படங்கள்– ரோஹித குணவர்தன, வ. பா. தி.
Cookie | Duration | Description |
---|---|---|
cookielawinfo-checkbox-analytics | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". |
cookielawinfo-checkbox-functional | 11 months | The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". |
cookielawinfo-checkbox-necessary | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". |
cookielawinfo-checkbox-others | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. |
cookielawinfo-checkbox-performance | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". |
viewed_cookie_policy | 11 months | The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. |