简体中文 ZH-CN English EN Français FR Deutsch DE Italiano IT Português PT සිංහල SI தமிழ் TA
Ministry of Wildlife and Forest Resources Conservation

அத்தியாயம் 14 – லுணுகம்வெஹெர தேசிய பூங்கா

Content Image

ஒருவாறு உயிர் பிழைத்தது​

நான் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு இணைந்தது 1999 ஆம் ஆண்டிலாகும்.ஹோட்டன் சமவெளியில் சிறிது காலம் கடமையாற்றி விட்டு லுணுகம்வெஹெர தேசிய பூங்காவிற்கு கடமைக்காகச் சென்றேன். அப்போது எனக்குஉத்தியோக வாழ்க்கையில் பெரிய அனுபவமொன்று இருக்கவில்லை.  லுணுகம்வெஹெரவிற்குச் சென்றது 2002 ஆம் ஆண்டிலாகும்.

லுணுகம்வெஹெரவிற்கு அண்மித்துயால தேசிய பூங்காவும் அடுத்த பக்கத்தில் உடவளவை தேசிய பூங்காவும் காணப்படுகின்றன. இவ்விரண்டு பூங்காக்களிலும்  யானைகள் அதிகமாகக் காணப்படுகின்றன. அதனால் லுணுகம்வெஹெரதேசிய பூங்காவில் எப்போதும் யானைகள் நடமாடுகின்றன.

விலங்குகளின் உணவு, நீர், கனியுப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள உதவி செய்வதும் வனஜீவராசிகளான எமது கடமைப் பொறுப்புகளாகும். இவ்யானைகளுக்குகனியுப்பினை வழங்குவதற்கு நாம் செயற்பட்டோம். குழிகளை வெட்டி ஹம்பாந்தோட்டை உப்பு ஆலைகளிலிருந்து  இலிருந்து உப்பினை எடுத்து வந்து நிரப்பி உப்பு வைப்புக்களை உருவாக்கினோம். இந்த ஒரு குழி சாதாரணமாக அடி4X அடி4Xஅடி4 அளவிலாகும். உப்பு வைப்புக்களினால் யானைகள் பயன்களைப் பெறுகின்றனவா என்பதனை, மீள் பரிசீலனை செய்து பார்க்க வேண்டும். நாம் எப்போதும் அந்நடவடிக்கையை மேற்கொள்கின்றோம்.

ஒரு நாள் நான பொல்ஹிந்தகல எனும் பிரதேசத்தில் காப்புப் பணிக்குச் சென்றேன். எமது நபர்களுடன் வாகனமொன்றில் லுணுகம்வெஹெர தேசிய பூங்காவிற்கு உள்நுழைவது தனமல்வில கறுப்புப் பாலம் இருக்கும் இடத்திலாகும் இடத்தினூடாகவே​ ஆகும். அன்று..காப்புப் பணிசெய்து விட்டு மீண்டும் அலுவலகத்துக்கு வரும் போது அதற்கு அண்மையில் இருந்த உப்பு வைப்புக்கள் பலவற்றை பார்வையிட நினைத்தோம். வாகனத்தை நிறுத்தி வைத்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு நான் இறங்கி உப்பு வைப்புக்கள் இருக்கும் இடத்துக்குச் சென்றேன்.

இந்த உப்பு வைப்புக்கள் இருந்தது நான் இறங்கிய இடத்தலிருந்து 20 m ஆன தூரத்தில் ஆகும். ஆரம்பத்தில் இருப்பது மரங்கள் குறைந்த மைதானம் போன்ற பிரதேசமாகும். அடுத்து உப்பு வைப்புக்கள். அதன் பின்னர் காடு.

உப்பு வைப்புக்களை விலங்குகள் சாப்பிட்டுள்ளனவா என நான் பார்த்தேன். அங்கு யானைகளின் எச்சங்கள் காணப்பட்டன. யானைகள் உப்பு வைப்புக்களை பயன்படுத்தியுள்ளன என்பது நன்றாகத் தெரிந்தது. நான் உப்பு வைப்புக்களைபரிசீலனை செய்து கொண்டிருந்தேன்.  ஒரேயடியாக சத்தமொன்று கேட்டு பார்க்கும் போது எனக்கு அருகில் பெரிய யானையொன்று.  அதன் சத்தத்தினால் நான் அந்தப் பக்கம் பார்த்தேன். நம் இருவருக்கும் இடையில் சுமார் 5 அடிகள் தூரம் இருந்தது. எனது திடுக்கத்தினால் உடம்பில் உரோமங்கள் மேலெழுந்தன . தொண்டை வாய் வறண்டு போனது. மரண பயம் ஏற்பட்டது. அடுத்த நிமிடத்தில் நான் செயற்படுத்திய ரொபோ  ஒன்று போல் மிக வேகமாக அடுத்த பக்கத்துக்கு திரும்பி ஓட ஆரம்பித்தேன். எனது கால்களுக்கு ஆச்சரியமான உயிர் கிடைத்தது. நான் வாகனத்தை நிறுத்திய பக்கத்துக்கே பின்னே திரும்பிக்கூடப் பார்க்காது ஒரே விதமாக ஓடினேன். யானை எனது பின்னால் மிக அருகிலேயே வருவதனை என்னால் உணர முடிந்தது.

எமது நபர்கள் வாகனத்தின் ஒரு கதவைத் திறந்து யானைக்கு சத்தமிட்டனர். அச்சத்துக்கு யானையின் தீவிரம் குறைந்தது. எனக்கு வாகனத்துக்கு ஏறிக் கொள்ள முடிந்தது. அதனுடனே நாம் வாகனத்தை வேகமாக முன்னே எடுத்துச் சென்றோம்.

காட்டில் செல்லும் போது விலங்குகளைப் பற்றிய சிறந்த அறிவொன்றுடன் செல்ல வேண்டும் என்பதனை அன்று நான் கற்றுக் கொண்டேன். அச்சம்பவம் எனது வாழ்க்கைக்கு சிறந்த அனுபவம் ஆயிற்று.

அன்று உணர்ந்த வாழ்க்கைப் பயம் இன்று போல் எனக்கு ஞாபகமிருக்கின்றது.

திரு. ஆர். பீ. எஸ். உடுபோருவ அவர்கள்

 

திரு. ஆர். பீ. எஸ். உடுபோருவ அவர்கள் வனவிலங்கு தள பாதுகாவலரொருவராக வனஜீவராசிகள் திணைக்களத்துக்குத் தொழிலுக்கு வந்தது 1999 ஆம் ஆண்டு ஜூன் மாதம்  01 ஆம் திகதியாகும்.

சுமார் தமது 22 வருட கால சேவைக் காலத்திற்குள் அவர் ஹோட்டன் சமவெளி மற்றும் வில்பத்து தேசிய பூங்காவிற்குள், முதுராஜவெல, விக்டோரியா, ரன்தெனிகல, ரன்தெம்பே சரணாலயங்களிலும் சேவையாற்றி தற்போது அங்கம்மெடில்ல தேசிய பூங்காவின் பூங்காப் பொறுப்பாளராக சேவையாற்றுகிறார்.

உடுபோருவ அவர்கள் தள பாதுகாவலர்களுக்காக  வனஜீவராசிகள் பாதுகாப்புத்  திணைக்களத்தினூடாக வழங்கப்படும் வனஜீவராசிகள் முகாமைத்துவம் பற்றிய டிப்ளோமா பாடநெறியையும் நிறைவு செய்துள்ளார்.

உடுபோருவ அவர்களின் அன்பு மனைவி ஆசிரியர் என்பதோடு அவர் அரநாயக்க ரீஸத் தேசிய பாடசாலையில் சேவையாற்றுகிறார்.  அவர்  அன்பான இரண்டு மகள்களின் தந்தையாவார்.

அவர்கள் வசிப்பது மாவனல்லை பிரதேசத்திலாகும்.

லுணுகம்வெஹெர தேசிய பூங்கா

எமது நாட்டின் மாகாணப் பெயரிடலின்படி உயிர்ப் பல்வகைத் தன்மையினால் சிறப்பான ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள விலைமதிப்பொன்றான காடொன்றான லுணுகம்வெஹெர தேசிய பூங்கா தனமல்வில, வெல்லவாய, கதிர்காமம் மற்றும் புத்தல மொனராகலை மாவட்டங்களில் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் லுணுகம்வெஹெர ஹம்பாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் உரித்தாக அமைந்துள்ளன.  இத்தேசிய பூங்கா பறவைகளுக்கும் யானைகளுக்கும் முக்கியமான வாழிடமொன்றாகும். யாலவிலிருந்து உடவளவை தேசிய பூங்காவுக்கு பயணிக்கும் யானைகளுக்கு தாழ்வாதாரமாகவும் செயற்படுகின்ற இது காட்டு யானைகளின் பாதுகாப்புக்காக ​23,498ஹெக்கடயாரான பரப்பினைக் கொண்டு 1995 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் திகதி லுணுகம்வெஹெர தேசிய பூங்காவாக நிறுவப்பட்டது.

தேசிய பூங்கா கொழும்பிலிருந்து தென்மேற்குத் திசையிலிருந்து 261 km தூரத்தில் அமைந்துள்ள லுணுகம்வெஹெர இலங்கையில் வறண்ட வலயத்தில் அமநைதுள்ள வருடாந்த வரட்சிக்கு உட்படுகிளன்ற பூங்காவொன்றாகும். பூங்காவின் உயரம் 91 மீற்றர் (299 அடி) ஆகும். மொத்த நில அளவில் நூற்றுக்கு 14 ஆன, அதாவது 3283 ஹெக்கடயார் ஆனவை நீருக்குக் கீழுள்ள நிலமாவதோடு பூங்காவில் கவனிக்கப்படக்கூடிய பகுதியொன்று லுணுகம்வெஹெர நீர்த்தேக்கத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. லுணுகம்வெஹெர சாதாரண வருடாந்த வெப்பநிலை 30 °C (86 °F) ஆவதோடு இதன்படி பூங்காவின் மொத்த வரண்ட பகுதி 20,156.8ஹெக்கடயார் ஆகும். மென்மையான  சிற்றலைகள் அற்ற சமவெளிகள் மற்றும் பாறை அடுக்குகளின் ஆதிக்கத்தினைக் கொண்ட இவ்வரண்ட வலய பூங்கா வருடாந்த வரண்டுக்கு முகம் கொடுக்கின்றது.

வரலாற்றுடன் பிணைந்த முக்கியத்துவம் கொண்டுள்ளதென நீலகிரி தாதுகோபம் மற்றும் சிதைவடைந்த விகாரையொன்றின் இடிபாடுகளும் கிடைத்ததனால் தெரிகிறது. அவ்வாறே விகாரமகாதேவி திருமணம் செய்த இடம் என கருதப்படுகின்ற மகுல் மகா விகாரையும் அதற்கருகில் உள்ளது. அவ்விகாரையினுள் கட்டப்பட்ட மகுல் போரவ ஒன்றின் இடிபாடுகள் மற்றும் ஆசியாவினுள் இதுவரை கிடைக்கப்பட்டுள்ள யானைப் பாகன்கள் நான்கு பேர்களினைக் கொண்ட ஒரே சந்திரவட்டக்கல் இன்றும் உங்களுக்கு பார்வையிட முடியுமாக உள்ளது.

லுணுகம்வெஹெர தேசிய பூங்காவின் காடுகள் பல அடுக்குகளைக் கொண்டவை. பற்றைக்காடுகள்மற்றும்புல்நிலங்களைக்கொண்டவீரை, பாலை, கரிமரம், உழுவிந்தை, தெப்பாடி, பூக்கம் போன்றே தேக்கு மற்றும் யூக்கலிப்டஸ் செய்கைகள் உட்பட பாரிய புல்நிலங்களான மயுர புல், இலுக், கினியா புல், குரங்கு வெற்றிலை போன்ற புல்நிலங்கள் மற்றும் பற்றைக் காடுகளைக் கொண்டுள்ளதோடு தேசிய பூங்காவின் தாவரங்களின் இவ்வாறான பல்வகைத்தன்மையினால் இங்கு வாழும் விலங்குகளுக்கு உணவு, நிழல் மற்றும் பாதுகாப்பு குறையாது கிடைக்கின்றது.

இப்பிரதேசத்தின் சூழல் நிலைமைக்கு ஈடுகொடுக்கும்மாறு சிறு எறும்பு முதல் நிலத்தில் பெரியவையான யானைகள் பரம்பரை வரையிலான விலங்குப் பிரதிநிதிகளைக் காண முடிகின்றது. கால்களற்ற, இரு கால்களை உடைய, நான்கு கால்களை உடைய மற்றும் பல கால்களைக் கொண்ட காட்டு பிள்ளைகளின் நடவடிக்கைகளினால் நிறைந்த இங்கு மீனினங்கள் 21 உம்,  ஈரூடக வாழிகள் 12 உம், ஊர்வன வகைகள் 33 உம், பறவை வகைகள் 183 உம் பாலூட்டி வகைகள் 43 இனையும் கண்டு கொள்ள முடியும்.

சிறுத்தை
புள்ளி மான்

உயிர்ப் பல்வகைத் தன்மையில் உயர்ந்த இப்பூங்காவில் ஆசிய யானைகள், எருமை, காட்டுப் பன்றி, இந்திய சாம்பல் கீரிப்பிள்ளை, பழுப்பு மலை அணில், கரடி, பொதுவான தோட்டப்பல்லி,சிவப்பு உதட்டுப் பல்லி, நட்சத்திர ஆமைகள், மலைப்பாம்பு போன்ற அதிகமான விலங்குகளுக்கு சாதகமான வாழிடமொன்றாகும். லாகுகலவிற்கு அண்மையில் யானைகளின் விருப்பமான உணவொன்றான பெரு புல்வெளி இருப்பதன் காரணத்தினால் யானைகள் அடிக்கடி அங்கு நடமாடுவதைக் காண முடியும்.  இப்பிரதேசம் யானைகளின் தானியக் களஞ்சியம் எனவும் அறிமுகப்படுத்தப்படுகின்றது. 

லுணுகம்வெஹெர நீர்த்தேக்கம் மற்றும் பூங்காவின் ஏனைய ஆயிரக்கணக்கான நீர்நிலைகள் நீர்ப்பறவைகளின் வசிப்பிடமாகும். உள்நாட்டு மற்றும் புலம்பெயர் வகைகள் 200 இனை அண்டிய அளவிலானவையின் இனப்பெருக்கம் செய்யும் நிலமாகவும் அமைந்துள்ளது. இங்கு காணக் கிடைக்கின்ற பறவை வகைகளில் காட்டுக்கோழி, சிலோன் வுட்ஷ்ரைக், நீல முகச் செண்பகம், பழுப்பு நிற மூடிய புழுணி, சாம்பல் கூழைக்கடா, ​இலங்கை சாம்பல் இருவாய்ச்சி போன்ற பறவைகளாகும். லுணுகம்வெஹெர தேசிய பூங்கா இலங்கையில் பல்வேறு பறவைகளுக்கான வாழிடமொன்றாவதனால் பறவைகளைப் பார்வையிடுவதற்கு விருப்பம் தெரிவிப்போருக்கு மிகப் பொருத்தமான பூங்காவொன்றாகும்.

இந்திய நெடுங்கிளாத்தி
மலபார் கறுப்பு வெள்ளை இருவாய்ச்சி

பூங்காவின் தலைமை அலுவலகத்துக்கு நுழைய முடியுமான பிரதான வழிகள் இரண்டாக கொழும்பிலிருந்து இரத்தினபுரி ஊடாக உடவளவை, தனமல்வில ​ஊடாகலுணுகம்வெஹெரவிற்கு அண்மித்ததாக  231km ஆவதோடு கொழும்பிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக திஸ்ஸமகாராம, தனமல்விலவிலிருந்து லுணுகம்வெஹெரவிற்கு அண்மித்ததாக  265km ஆகும். ஊவா மாகாணத்தின் மொனராகலை மாவட்டத்தில் அமைந்துள்ள லுணுகம்வெஹெரகொழும்பிலிருந்து261 கிலோமீற்றர் தூரத்தில்  அமைந்துள்ளதோடு தென் மாகாணத்தில் திஸ்ஸமகாராமவினூடாக அல்லது சப்ரகமுவ மாகாணத்தில் கலவான ஊடாக உள்நுழைய முடியும்.

வரண்ட வலய காடொன்றான பூங்கா ஒவ்வொரு வருடமும் நவம்வர் மற்றும் ஜனவரியிடையில் மழையுடன் 30 சென்டிகிரேட் பாகையை அண்டிய வெப்பநிலையைப் பதிவு செய்வதனால் வருடம் பூராகவும் பூங்காவைப் பார்வையிடுவதற்கு இரண்டு நுழைவாயில்கள் உள்ளன. ​​லுணுகம்வெஹெரஎன்பது குறைவான சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட பூங்காவொன்று என்பதனால்   உங்களுக்கு நிம்மதியாக வனவிலங்குகளை இரசிப்பதற்கு பூங்காவுக்குள் நுழைவதற்குஹம்பாந்தோட்டை- வெல்லவாய வழியில் தனமல்விலவிற்கு அண்மையில் ஒரு நுழைவாயில்  அமைந்துள்ளதோடுஅடுத்தநுழைவாயில்செல்லகதிர்காமம் – புத்தலவழியில்கல்கே திசையில் அமைந்துள்ளது. அதிகளவானோர் இப்பூங்காவை விட இதற்கு அண்மையில்  அமைந்துள்ள யால தேசிய பூங்காவிற்கு அதிக விருப்பத்தைக் காட்டுவதனால் லுணுகம்வெஹெர தேசிய பூங்காவின்  நுழைவாயிலில் மிகக் குறைவான வாகன நெரிசலைக் கண்டு கொள்ள முடிந்தாலும் இத்தேசிய பூங்காவும் வன விலங்குகளின் எண்ணிக்கையைப் பார்வையிடுவதற்குப் பொருத்தமான பிரதேசமொன்றாகும்.

புதிய நுழைவாயில்

தகவல்கள்-

இலங்கையின் தேசிய பூங்கா (பீ. எம்.சேனாரத்ன)

இலங்கையின் காடுகள், பூங்காக்கள் மற்றும் வன பாதுகாப்புச் சட்டங்கள் (பீரிஸ் ரணசிங்ஹ)

Wildlife tour srilanka

Wikipedia

ecoteam

reddottours

லுணுகம்வெஹெர தேசிய பூங்காதொடர்பான விளக்கத்தில் காணப்படும் விலங்குகளின் பெயர்ப் பட்டியல்

Sinhala Name

Tamil Name

English Name

Scientific name

අලියා

ஆசிய யானை

Asian elephant

Elephas maximus

දිවියා

சிறுத்தை

Leopard

Panthera pardus kotiya

වලහා

தேன் கரடி

Sloth bear

Ursus ursinus

වල් ඌරා

காட்டுப் பன்றி

Wild Boar

Sus scrofa

තිත් මුවා 

புள்ளி மான்

Spotted deer

Axis axis ceylonensis

මී හරකා 

எருமை

Water buffalo

Bubalus bubalis

මුගටියා

இந்திய சாம்பல் கீரிப்பிள்ளை

Common Mongoose

Herpestes edwardsi

දඬු ලේනා 

பழுப்பு மலை அணில்

Giant squirrel

Ratufa macroura

ගරා කටුස්සා

பொதுவான தோட்டப்பல்லி

Common agamid Lizard

Calotes versicolor

තොල විසිතුරු කටුස්සා

சிவப்பு உதட்டுப் பல்லி

Red lipped lizard

Calotes ceylonensis

තාරකා ඉබ්බන්நட்சத்திர ஆமைகள்Star tortoiseTestudo elegans

පිඹුරා

மலைப்பாம்பு

Python

Python molurus

වලි කුකුළා

இலங்கைக் காட்டுக் கோழி

Sri lankajunglefowl

Gallus lafayettii

වන සැරටිත්තා

சிலோன் வுட்ஷ்ரைக்

Sri Lanka Woodshrike

Tephrodornis affinis

ලංකා දුඹුරු දෙමලිච්චා

பழுப்பு நிற மூடிய புழுணி

Sri Lanka Brown capped Babbler

Pellorneum fuscocapillus

අළු කෑදැත්තාஇலங்கை சாம்பல் இருவாய்ச்சிSri lanka Grey HornbillOcyceros gingalensis

වත නිල් මල් කොහා

நீல முகச் செண்பகம்

Blue – faced malkoha

Phaenicophaeus viridirostis

පැස්තුඩුවන්

சாம்பல் கூழைக்கடா

Spot-Billed pelican

Pelecanus philippensis

පොරෝ කෑදැත්තා

மலபார் கறுப்பு வெள்ளை இருவாய்ச்சி

Malabar pied horn bill

Anthracoceros coronatus

රෑන කාවා

இந்திய நெடுங்கிளாத்தி

Indian darter

Anhinga melanogaster

லுணுகம்வெஹெரதேசியபூங்காதொடர்பான விளக்கத்தில் காணப்படும் மரங்களின் பெயர்ப் பட்டியல்

 Sinhala Names

Tamil Names

English Names

Botanical Name

පලු

பாலை

Palu

Manilkara hexandra

වීර

வீரை

Hedge Box wood

Drypetes sepiaria

කුණුමැල්ල

கரிமரம்

Kunumella

Diospyros ovalifolia

උල්කෙන්ද

உழுவிந்தை

Ulkenda

Polyalthia korinti

කැප්පෙට්ටියා

தெப்பாடி

Kappetiya

Croton lacciferus

කෝන්

பூக்கம்

Kon

Schleichera oleosa

තේක්ක

தேக்கு

Teak

Tectona grandis

යුකැලිප්ටස්யூக்கலிப்டஸ்Eucalyptus species 

මයුරතණ

மயுரபுல்

Mayaurathana

Chloris montana

ඉලුක්இலுக்IllukImperata cylindrical

ගිණියාතණ

கினியாபுல்

Guinea tana

Panicum maximum

හීන්තඹල

குரங்குவெற்றிலை

Hinthambala

Carmona microphylla

தொகுப்பாளர்- தம்மிகாமல்சிங்ஹ, மேலதிக செயலாளர், வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு

பூங்கா பற்றிய தகவல்களைத் தொகுத்தவர்- ஹஸினி சரத்சந்திர, பிரதம உத்தியோகத்தர், வன பாதுகாப்புத் திணைக்களம்

மஹேக்ஷா சதுராணி பெரேரா(பட்டதாரி பயிற்சியாளர்),வனஜீவராசிகள்  பாதுகாப்புத் திணைக்களம்

தமிழ் மொழிபெயர்ப்பு- ஏ.ஆர்.எப். றிப்னா, அபிவிருத்தி  உத்தியோகத்தர், வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு

ஆங்கில மொழிபெயர்ப்பு- அசோக பலிஹவடன, மொழிபெயர்ப்பாளர், வனஜீவராசிகள் மற்றும் வனபாதுகாப்பு அமைச்சு

இணைய வடிவமைப்பு-சீ. ஏ. டீ. டீ. ஏ.கொல்லுரே, முகாமைத்துவ சேவை​உத்தியோகத்தர், வனஜீவராசிகள் மற்றும் வனபாதுகாப்பு அமைச்சு

படங்கள்- ரோஹித குணவர்தன, வனஜீவராசிகள்பாதுகாப்புத் திணைக்களம்